Tuesday 22 November 2016

"அஞ்சுக்கும் பத்துக்கும் ஆப்பு வச்சிட்ட..!" 

என்னய்யா மோடி  இந்தியா -இப்ப தலைகீழாக சுத்துதே நியாயமா?

ஏழை பாழையெல்லாம்
ஏடிஎம்ல நிக்குது
நாளு கணக்கா வெய்யில கெடக்குது
சோறு தண்ணியின்றி செத்து மடியுது

என்னய்யா மோடி  இந்தியா -இப்ப தலைகீழாக சுத்துதே நியாயமா?

கள்ளப்பணத்த பிடிக்கிறேன் ங்கிற
கருப்புப்பணத்த ஒழிக்கிறேன் ங்கிற
அம்பானி அதானி ஜெட்லிய எல்லாம்
ஏசி அறையில தூங்க சொல்ற

என்னய்யா மோடி  இந்தியா -இப்ப தலைகீழாக சுத்துதே நியாயமா?

வெள்ள பணத்த
கருப்பு பணம் ங்கிற
கருப்புபணத்த
தள்ளுபடி செய்யற

என்னய்யா மோடி  இந்தியா -இப்ப தலைகீழாக சுத்துதே நியாயமா?

பதினஞ்சி லட்சம் தரமின்னு சொன்ன
பாமர மக்களின் பணத்தப்புடுங்கிற

என்னய்யா மோடி  இந்தியா -இப்ப தலைகீழாக சுத்துதே நியாயமா?

ஆப் கி இந்தியா இதுதா இன்ன
அஞ்சிக்கும் பத்துக்கும்
ஆப்பு வச்சிட்ட

என்னய்யா மோடி  இந்தியா -இப்ப தலைகீழாக சுத்துதே நியாயமா?

கோட்டுக்கும் சூட்டுக்கும்
சலாம் போடுற
நீலிகண்ணீர்ல கூப்பாடு போடுற
நீ உலக மகா நடிகனா யிட்ட

என்னய்யா மோடி  இந்தியா -இப்ப தலைகீழாக சுத்துதே நியாயமா?

தற்கொலை தீயில தள்ளி விட்டிட்டு
உயிரோடு எரிக்க போறாங்கிற
குளுகுளு கோவாவுல கூவுற

என்னய்யா மோடி  இந்தியா -இப்ப தலைகீழாக சுத்துதே நியாயமா?

நெருங்கி வந்திருச்சி நேரம் உமக்கு
முடிய போகுது மோடி தர்பாரு
சூரியக்கதிரா எரிக்க போகுது சூத்திரர்களின் கோபக்கனலு

என்னய்யா மோடி  இந்தியா -இப்ப தலைகீழாக சுத்துதே நியாயமா?

அவுல நெனச்சி உரல இடிக்கிற
அன்னா கயிறையும் அறுத்துவிடற
ஆகாயத்துல பறந்தே போற
அடிக்கும் காத்துல காணாம போவ

என்னய்யா மோடி  இந்தியா -இப்ப தலைகீழாக சுத்துதே நியாயமா?

-தாரைப்பிதா 
#
குறிப்பு:
என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தலைகீழாக சுத்துதே நியாயமா?
பாடல் மெட்டில் வடிவமைப்பு.
                    
குறிப்பு: 22.11.16 தீக்கதிரில் எடிட் செய்யப்பட்டு பிரசுரமாகி உள்ளது. நன்றி!       ---\\\
அறம் மீறிய சீற்றம்
சட்டப்படியான நடவடிக்கையே இல்லை இது. பாஜக அரசின் அறம் மீறிய சீற்றம்.

சட்டத்தை அமலாக்கும் பொறுப்பு நீதிதுறையையே சாரும்! மத்திய, மாநில அரசுகளின் எல்லை சட்டம் இயற்றுவதோடு நின்றுவிடுகிறது.

ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகங்களின்... தொலைக்காட்சிகளின்... குரல்வளையை நசுக்கும் மத்திய அரசின் சட்டமீறல் செயலே இது.

இது சர்வாதிகாரத்தை நோக்கிய பாஜக அரசின் பாசிச பயணமே!

எல்லைமீறல் செய்திருப்பது பாஜக மத்திய அரசே என்பதை இத்தடை உணர்த்துகிறது.

ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் மற்றும் ஒரு தாக்குதலே இது.

பாஜக தனது மதவாத அரசியல் ஆதாயத்திற்காக எந்த எல்லைக்குமே போகும் என்பதன் அறிகுறியே இது.

என்டிடிவி ஆங்கில சேனலை விட்டுவிட்டு இந்தி சேனசலை தடை செய்வதன் மர்மம் என்ன?

இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவின் தகிடுதத்தங்களை, மதவாத அரசியலை அம்பலப்படுத்தியதாலே இந்த பழிவாங்கும் செயல்.

இன்று என்டிடிவிக்கு... நாளை...?! எல்லா டிவிக்களின் குரல்வளை நெறிக்கப்படும்.

எழுத்துலகமும், ஊடக உலகமும் எதிர்த்தால் மட்டும் போதாது, ஒட்டு மொத்த ஜனநாயக சக்திகளும் ஓரணியில் பாஜகவின் பாசிச போக்குக்கு எதிராக திரள வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு உள்ளது.
----\\\\

கம்யூனிஸ்ட்  சொல்கிறது என்பதாலேயே...
கம்யூனிஸ்ட் அரசாங்கம் சொல்கிறது என்பதாலேயே தேவஸ்தானம் எதிர்க்கிறதா?

பாஜக அரசாகவோ, அல்லது வேறு கட்சிகள் அரசோ கொண்டு வந்தால் எதிர்ப்பார்களா? ஆதரிப்பார்களா?

பெண்ணுக்கு சம உரிமை கோரும் இந்துத்துவா வாதிகளும் பாஜகவும் குறிப்பாக பிரதமரும் ஆதரிக்கலாம் அல்லவா? இஸ்லாம் பெண்களுக்கு கண்ணீர் சிந்துவதில் ஒரு துளியை இந்து பெண்களுக்கும் சிந்தலாமே.

இந்துமதத்திலும் பெண்களுக்கு சமவழிபாட்டு உரிமை இல்லை என்பதற்கு இதுவே நல்சான்று.

சபரிக்கு ஒரு நீதி..!
முருகனுக்கு ஒரு நீதி..!
இதுதான் மநுநீதி..!

கேரள சிபிஐஎம் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின்... ஆணுக்கு நிகர் பெண் என்கிற இந்த துணிச்சலான புரட்சிகர முடிவை அனைத்து ஜனநாயக மதசார்பற்ற சக்திகளும் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்.

உச்சநீதி மன்றமும் சட்டத்தின் முன் எந்த மதமாக இருந்தாலும் ஆணும், பெண்ணும் சமம் என்பதை உணர்த்தி, உத்திரவிட வேண்டும்.
#
விவாதத்தில்... பாஜக, ஆர்எஸ்எஸ் (பெண்களும் இருக்கிறார்களாம்) பேசியவர்கள் பெண்களுக்கு சம உரிமை தந்தே வருகிறதாம் இந்துமதமும் இந்த சமூகமும். கோயாபல்ஸ் என்றால் என்ன என்பதை அந்த பேச்சை கேட்டாலே தெரிந்திடலாம். பாலபாரதி, விஜயதரணி வெளுத்து வாங்கினர்      
எஸ்ஏஆர் ஈரோடு: 👌👌👏💐
----\\\\                                                                                              
மத்திய அரசும், மாநில அரசும்தான்!
தொடரும் மீனவ பிரச்சனைக்கு மத்திய அரசும், மாநில அரசும்தான், மீனவர்கள் அல்ல. அதோடு இலங்கை அரசும் காரணம் இல்லையென ஒதுக்கிவிட முடியாது.

சேது கால்வாய் திட்டத்தை நிறுத்த முடிந்த அன்றைய இன்றைய (அதிமுக பாஜக) அரசுகளுக்கு இதை ஏன் தீர்க்க முடியவில்லை?

பாஜகவோ அதிமுகவோ மீனவர் பிரச்சனையில் இரட்டைவேடம் போடுகின்றன.

அரசியல் ஆதாயம் கருதாமல், மீனவர் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு இரு நாட்டு அரசுகளும் பேசி தீர்வுக்கு வித்திடுவது தான் ஒரே வழி.

மறைந்த இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஆலோசனைபடி வார நாட்களில் இரு நாட்டு மீனவர்களும் பங்கீடு செய்து மீன் பிடித்திடவும் முயற்சிக்கலாம்.                      
-----\\\\
துக்ளக் தர்பார் ஆரம்பங்கோ..! 
8.11.16 இன்று ராத்திரி 12 மணியில் இருந்து ரூ500, ரூ1000 பணம் எல்லாம் செல்லாதுங்கோ.
துக்ளக் தர்பார் ஆரம்பங்கோ..!
கறுப்பு பணத்த அம்பானி ஜியோ புகழ் ஏஜண்ட் மோடி புடிக்கிறாராங்கோ..! தீவிரவாதிகளை புடிக்கிறாராங்கோ..!
கேட்கிறவங்க கேனையன்னா... கேழ்வரகில் நெய் வடியுதும்பாங்களே... அதுதான் இதுங்கோ... அதுக்கு பதிலா புதிய ரூ500, ரூ2000 வருதாங்கோ... ரெண்டு நாள் ஏடிஎம் இருக்காதாங்கோ... பேங்க் நாளைக்கு இருக்காதாங்கோ...
டும்..... டும்..... டும்.....                                                                      
வெள்ளக்காக்கா பறக்க போகிறது நாளையில் இருந்து...!
மோடி அதிரடி..!
-----\\\\\                                                                      
ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை.
யார் வென்றாலும், வீழந்தாலும் இந்தியாவை அடிமைப்படுத்தும் அதன் நிலையில் இருந்து ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை.

அமெரிக்காவில் இடதுசாரிகள் ஆதரவில் ஒரு அரசு அமையாத வரையில் இந்தியா போன்ற நாடுகளுக்கு எந்தவித பயனோ, பலனோ கிடையாது.

அமெரிக்காவின் உலக ஆதிக்கக் கொள்ளையில்... கொள்கையில் இரு கட்சிகளும் ஒன்றே.

உலகம்... அமைதி நிலை அடைய, சமநிலை அடைய, சுரண்டல் ஒழிய இவ்விரு கட்சிகளிடமும் அப்படிப்பட்ட எந்த கொள்கையும் இல்லை. இரு கட்சி உலக ஆதிக்க கட்சிகளே... சக்திகளே..!

தற்போதைய திமுக அதிமுகவுக்கு என்ன வித்தியாசமோ... அப்படித்தான் அவ்விரு கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்.

தமிழ் ஊடகங்கள் நம்மூர் தேர்தலுக்குக் கூட இந்தளவுக்கு உழைத்திருக்காது என்றே தோன்றுகிறது.

நம்மூர் ஊடகங்கள் யார் ஜெய்த்தால் பரவாயில்லை என அமெரிக்க தமிழர்களிடம் ஓடோடி பேட்டி எடுத்து மகிழ்கின்றன?

இந்த விவாதத்தில் நெறியாளரின் நெறியாளுகை எந்த பக்கமாக இருக்கும்? ஜனநாயக கட்சிக்கா? குடியரசு கட்சிக்கா?

யார் வர வேண்டும் என விவாதங்களை கிளறி பேசப் போகிறார்? கிளாரிக்கா, ட்ரம்ப்க்கா? அய்யோ..! அய்யோ..!                                              
----\\\\
வாழ்க உபி தேர்தல்!

கறுப்பு பணத்தை ஒழிக்கிறோமென முன்னொரு காலத்தில்
பெரிய பணத்தை ஒழிச்சாங்க..!
அது காங்கிரஸ்..!

இப்பொழுது..?!

பெரிய பணத்திற்கு (ரூ1000) பதிலாக மிகசிறியதாக (ரூ2000) அதை மாற்றி இருக்கிறார் மிகபெரிய கில்லாடி மோடி..!? அம்பானிக்கும்,
அதனிக்கும்தான் வெளிச்சம்!

வாழ்க உபி சட்டமன்ற தேர்தல்!
மசூதி இடிப்பை மிஞ்சிடுமா இந்த கறுப்புபணம் ஒழிப்பு அதிரடி?                       -------\\\\
மிகுந்த இடைவெளிக்குப் பின்... 
மீண்டும் சிபிஎம் தலைவர்கள் pttv விவாதங்களில் தோழர்கள்...
நேற்று... க.கனகராஜ்,
இன்று... அருணன்.

நடந்தென்ன..?
இனியாவது தடையின்றி தொடருமா..?
தொடர வேண்டும் என்பதே அவா!

"கள்ளப்பணத்தைக் பிடிக்க இது உதவலாம்..! ஆனால், வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கறுப்பணத்தைப் பிடிக்க மோடியின் அதிரடியும், அமிர்ஷாவின் கறுப்புபணத்தின் மீதான துல்லியத்தாக்குதலும் உதவுமா?"

என

'துல்லியமான கேள்விகளாக'
தோழர்கள் அருணன் விவாதம் இன்று 9.11.16 புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியிலும், நேற்று நேர்பட நிகழ்ச்சியில் க.கனகராஜ் விவாதமும் இருந்தது எனலாம்.

இன்று சுமன் சி ராமன் விவாதமும், நேற்று பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன் விவாதமும் இதை ஒட்டியே இருந்தது எனலாம்.                           ----\\\
சாமான்ய மக்களுக்கு பாதிப்புதான் அதிகம்!
சாமான்ய மக்களுக்கு பாதிப்புதான் அதிகம். பயன் ஏதுமில்லை.

வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணங்களை கைப்பற்றுமா?  தற்போதைய அதிரடி நடவடிக்கை?
இது ஒரு வெறும் வெற்று வேட்டு!

மக்களை அச்சத்திலும் அலைக்கழிப்பிலும் தான் இந்த அதிரடி தள்ளிவிட்டு உள்ளது.

காவிரி பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, பொது சிவில் சட்டம், முன்னாள் ராணுவவீரர் தற்கொலை, ஜெஎன்யூ மாணவர் மாயம், முஸ்லீம் உள்ளிட்டு சிறுபான்மை மக்கள், தலித் மக்கள் மீதான பாஜக அரசு தாக்குதல்
உள்ளிட்ட பிரச்சனைகளில்...

மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாட்டை மூடி மறைத்து, உபி சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பு சதியே இந்த அதிரடி?!

"துல்லியத்தாக்குதல்" இது என பாஜக தேசிய தலைவர் அமிர்ஷா கூறியதிலிருந்தே... இதொரு திட்டமிட்ட நாடகம் என்றுதான் தெரிகிறது.                                                                      
----\\\
காந்திய காணம். கண்ணாடி தான் இருக்குது.  அப்புறம்... கண்ணாடியும் போயிறும். கோட்சே வந்துடும். அப்படித்தானே காவீஸ்..?                      
----\\\
இனிமேல் ₹2000 கள்ள நோட்டுகளும் உலாவும்!
பொருளாதார ஏற்றம் ஒன்றும் வந்துவிடாது. இனிமேல் ₹2000 கள்ள நோட்டுகளும் உலாவும்.

அரசின் அடிப்படை கொள்கை மாறணுமே ஒழிய இதனால் கள்ள பணத்தையும் தடுக்க முடியாது. கருப்பு பணத்தையும் ஒழிக்க முடியாது.

இதெல்லாம் அப்பட்டமான நாடகம்.

அரசின் இந்த அதிரடியை ஆதரித்த நடிகர்களும், நாடாளுபவர்களும் எத்தனைபேர் வந்து இன்று வங்கி முன் வரிசையில் நின்றார்கள்?

இது மக்களை திசைத்திருப்பும் மக்கள் மீதான "துல்லியத்தாக்குதல்".

விலைவாசி உயர்வு,  வேலையின்மை, கல்வி காவியம், காவிரி துரோகம், முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை, விவசாயிகள் தற்கொலை, சிறுபான்மை மற்றும் தலித் உள்ளிட்ட முற்போக்கு மற்றும் இடதுசாரிகள் மீது தாக்குதல், நவரத்ன பொதுதுறைகள் தனியாருக்கு விற்பனை, ஆதார் அவஸ்தை, பொதுசிவில் சட்டம், இப்படியான பிரச்னைகளில் மக்களை திசைத்திருப்பலே இது.

இதிலும் ஆர்எஸ்எஸ் சித்துவிளையாட்டு உள்ளது. காந்தி படம் காணவில்லை. கண்ணாடி தான் இருக்கிறது. அடுத்தது கோட்சே படத்தை எதிர்ப்பார்க்கலாமா?

காந்தி நினைவு மக்கள் மனங்களில் இருக்கும் வரை இந்துமதவெறிக்கு மவுசு குறைவுதான் என்பதை உணர்ந்தே சதிசெயலில் பாஜக அரசு இறங்கி உள்ளது.

₹15லட்சம் இதனால் மக்களுக்கு கிடைக்குமா? எப்பொழுது கிடைக்கும். பிரதமர் உறுதி தருவாரா?

ரூபாய் மதிப்பு குறையும். அதை இதனால் தடுக்கவே முடியாது. அதுதான் முதலாளித்துவ பொருளாதாரத்தின் மகிமை. விலைவாசி மென்மேலும் உயரும்.

₹2000 புழக்கத்தில் வருவதால் கருப்புபணம் கள்ளப்பணம் புழக்கத்தில் அதிகமாகும். அதனால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட வாழ்க்கை சுமைகளும், நெருக்கடிகளும் அதிகரிக்கவே செய்யும்.

இங்கே நாம் அல்லோலப்படுகிறோம். வழக்கம்போல் ஏறிவிட்டார் ஏரோப்பிளான் பிரதமர்.                      
----\\\\
₹32,500 அபராதமா?
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு...
தமிழ்மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடு...என

இடதுசாரி விவசாயிகள், தொழிலாளர்கள், மாதர்-வாலிபர்கள் மற்றும் மக்கள் நலக் கூட்டணி சார்பில்
சேலத்தில் இரயில் மறியலில் ஈடுப்பட்ட
13  aiyf தோழர்களுக்கு ₹32,500 அபராதமா?
#
18.10.16 சேலம் ரயில் நிலையத்தில் நடந்த மறியலில் காவல் துறையினரின் தாக்குதலில் சிபிஐ சேலம் மாவட்ட செயலாளர் தோழர் ஏ.மோகன் அவர்களின் கால் முறிவு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாதர் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவர் ஐ.ஞானசௌந்தரியை காவல்துறையினர் இழிவாக பேசினர்.

காவல்துனையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஐ மாநிலச் செயலாளர்  இரா.முத்தரசன் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் 24.10.16 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

குதிரை கீழே தள்ளியதல்லாமல் குழியும் பறித்த கதையாக... காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக,  மக்களுக்காக போராடிய 13 aiyf தோழர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தது. 10.11.16 அன்று ரயில்வே சிறப்பு நீதிமன்றம் இரயிலை மறித்த குற்றத்திற்காக தலா ரூ.2500 வீதம் ரூ. 32,500 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றமும்-காவல்துறையும்,
காவிரி தமிழ்நாட்டு வேண்டாம் என நினைக்கிறதா?

இவ்விரு துறைகளும் ஆளும் வர்க்கத்தின் எடுபுடிகள் என்பதை நிருபித்துள்ளன என்றால் மிகையா?

மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, காவிரி விரோத, காவல்துறை- நீதித்துறை செயலை வன்மையாக சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழு கண்டிக்கிறது.
#
தமிழக அரசே, சேலம் மாவட்ட நிர்வாகமே!

மக்கள் போராளிகள் மீது தாக்குதல் நடத்தி, ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசிய காவல்துறை மீது நடவடிக்கை எங்கே?

ரயிலில் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க துப்பில்லாமல், வக்கில்லாமல் இன்னும் 'காவிரி தண்ணீர்' குடித்து கொண்டிருக்கும் உங்களின் "வீரம்" "தேசபக்தி" அப்பாவி மக்கள் மீது தானா?
----\\\\                                              
மிகுந்த சோகமே
திருநங்கை தாரா மரணம் மிகுந்த சோகமே. கேள்வி கேட்க யாருமில்லை என்பதுதான்.

காவல்துறை என்றாலே அதுமீறல்தான். அதுதான் அதன் பிறவிகுணம்.

திருநங்கைகளை குற்றப்பரம்பரையாக பார்க்கும் மனநிலை மாறவேண்டும். அல்லது மாறப்பட வேண்டும்

திருநங்கை என திருநாமம் மட்டும் போதாது. அவர்களை சகமனிதர்களாக மதிக்கப்படும் நிலை சமுதாயத்தில் உருவாக்க வேண்டும்.

திருநங்கைகளுக்கான கல்வி, வேலை போன்ற வாழ்வாதாரங்களை அரசும், சமூகமும் உறுதிபடுத்தினால், அவர்கள் குற்றச்செயலில் எதற்கு ஈடுபட போகிறார்கள்?

திருநங்கை அவலநிலைக்கு அரசும், சமூகமுமே பொறுப்பு.

திருநங்கை தாரா மரணத்திற்கு காரணமானவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் திருநங்கைகளின் உயிருக்கு பாதுகாப்பு இருக்கும்.

திருநங்கைகள் வாழ்வு வளம் பெற அரசுகளின் சிறப்பு திட்டம் போதுமானதாக இல்லை.                                                                      
----\\\\
                                                                                             
தீரவில்லை சில்லரை பிரச்சனை... 
நோட்டு வந்தாலும் தீரவில்லை சில்லரை பிரச்சனை... இது 'சில்லரை' பிரச்சனை 'ரொக்க' (பெரும்) பிரச்சனை.

என்று தீருமென்று சாதாரண மக்களிடம் கேட்டால்... என்ன சொல்வார்கள்? பாவம்!

பாஜகவின் 'சமூக ஆர்வலர்'கள், 'வலதுசாரி சிந்தனை'யாளர்கள், மற்றும் 'அறிவுஜீவி'களை அழைத்து பேசுங்கள்.

அவர்கள், அவர்களின் கறுப்பு பணம் ஒழிப்பின் 'துல்லியத் தாக்குதல்' குறித்து, தங்களின் சூதுகளை 'மேலோக'த்தில் இருந்து வந்தவர்களைப் போல் 'விளக்குவார்கள்'.

அனேகமாக இதை திசைத்திருப்ப ஏதாவது ஒரு 'பிட்டு' தயாரித்துக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ்.

பழைய காலம் போல் 'பண்டம் மாற்றம்' முறையை கொண்டு வந்துவிட்டலாம்.

'சில்லரை' பிரச்சனையும் இருக்காது, 'ரொக்க' பிரச்சனையும் இருக்காது. 'சிக்கல்' தீர்ந்துவிடும்.

இன்று 12.11.16 pttv நேர்படபேசுவில் இதன் ஒரு பகுதி பதிவேற்றமாகி உள்ளது.     ----\\\\                  
சிபிஐஎம்நெல்லை பிளீனம்!
சிபிஐஎம் தமிழ்மாநில சிறப்பு மாநாடு-12,13,14 நவம்பர் 2016-நெல்லை.

சேலம், தர்மபுரி மாவட்ட பிரதிநிதி தோழர்கள் மாநாட்டில் பங்கேற்க, இன்று (11.11.16) சேலத்தில் இரவு 10 மணிக்கு புறப்பட்ட அரசு விரைவு பேருந்தில் சென்று கொண்டிருக்கிறோம் நாமக்கல் தாண்டி..!

கம்யூனிச இயக்க வரலாற்றில் மைல் கல்லாக திருப்புமுனையாக அமையப்போகும் இம்மாநாட்டில் பங்கேற்பது பெருமை மட்டுமல்ல, பாக்கியமும்கூட!

மார்க்சீயம் ஒன்றே மனிதகுலத்தின் விடிவெள்ளி! வெல்லட்டும் நெல்லை சிறப்பு மாநாடு!                      

# சிபிஐஎம் தமிழ்மாநில சிறப்பு மாநாடு இன்று 12.11.16 காலை 10 மணிக்கு கொடியேற்றலுடன் எழுச்சியுடன் துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

மோடிக்கு... இந்திய மக்கள் முத்தலாக் கொடுப்பது உறுதியாகி விட்டது. முதல் தலாக்... புதுதில்லி தேர்தல், 2வது தலாக்... பிகார் தேர்தல், 3வது தலாக் உபி தேர்தல்... உபி தேர்தலுக்காக தான் 500, 1000 ரூபாய் நோட்டுகளையும் செல்லாக் காசாக்கி உள்ளார். இவரின் இந்த நாடகங்களை உபி மக்கள் புரிந்தே வைத்து உள்ளனர்.

நிச்சயம் உபி மக்களும், இந்திய மக்களும் பாஜகவையும், மோடியையும் முத்தலாக் செய்வர். செல்லாக் காசாக்குவர்.

# திருநெல்வேலி...
13.11.16 சிபிஐஎம் தமிழ் மாநில 3 நாள் நேற்று துவங்கி நடந்து வருகிறது. நாளை நிறைவுற உள்ளது. இந்த சிறப்பு மாநாடு அமைப்புத் துறையில் மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டம் குறித்து விவாதம் நடத்தி வருகிறது.

2ஆம் நாள் நிகழ்வில்...
சேலம் மாவட்டம் சார்பில் தோழர் கே.ராஜாத்தி விவாதத்தில் பங்கேற்றார். சேலம் மாவட்டம் உள்ளிட்டு பங்கேற்ற பிரதிநிதிகளின் ஒரு பகுதி..!                                                                                              
# திருநெல்வேலி
சிபிஐஎம் தமிழ் மாநில மாநாட்டில் சேலம் மாவட்ட பிரதிநிதிகள்..!*                      
# திருநெல்வேலி
சிபிஐஎம்
12-14 நவ 2016., மூன்று நாள் சிறப்பு மாநாட்டின் நிறைவுரை ஆற்றுகிறார் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிரகாஷ்காரத்..!

தமிழகத்தில் அமைப்பு ரீதியில் கொல்கத்தா பிளீனம் வெளிச்சத்தில் தமிழகத்தின் "நெல்லை பிளீனம்"
(சிறப்பு மாநாடு) ஒரு மைல் கல்.

நெல்லை பிளீனம்... நிச்சயம் வெல்லும்!
தமிழக சிபிஐஎம் புதுபொழிவு காணும்!

நன்றி! நெல்லை தோழர்களே... நன்றி!                                                                                                                    
----\\\\
பாதிப்பது சாதாரண மக்களே!
தற்போதைய கறுப்பண வேட்டையில் பாதிப்பது சாதாரண மக்களே! இம் மக்களின் எதிர்ப்பு எல்லாம் பிரதமர் உயிருக்கு ஆபத்து தராது.

யாரால் பிரதமர் உயிருக்கு ஆபத்து என்பதை வெளிப்படையாக சொல்லி, அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு இப்படி நாலாந்தர அரசியல் வெட்கமில்லா நாடகம்.

இதுவரை எத்தனையோ நடவடிக்கை மக்களுக்காக எடுத்திருப்பதாக கூறும் பிரதமர் மோடி இதற்கு மட்டும் இதுபோல் பிதற்றுவதேன்? ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவில் உள்ள முதலாளிகள் மற்றும் பன்னாட்டு கறுப்புபண முதலைகளின் மிரட்டலே என்றுதான் தெரிகிறது.

உயிருக்கு ஆபத்தென்பது சுத்தப்பொய். மக்களின் அதிருப்தியையும் அறுவடை செய்யும் ஆர்எஸ்எஸ் அரசியல் புத்தியே மோடியின் புலம்பல்.

பிரதமர் தன் உயிருக்கு ஆபத்து என்பதில் இருந்தே இவரின் இந்த நடவடிக்கை பெரும்பான்மை மக்களுக்கு விரோதமானது என்பது புலனாகிறதல்லவா?                      
-----\\\\
நிம்மதியான தூக்கத்தில் ஊழல்வாதிகளே!
நிம்மதியை இழந்தவர்கள் சாமான்யரே! நிம்மதியான தூக்கத்தில் ஊழல்வாதிகளே!

பிரதமரின் பேச்சு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவு ஊழல்வாதிகளின் மிரட்டலின் வெளிப்பாடே!

பிரதமர் உயிருக்கு பயந்தவர் என்பதை நிருபித்துவிட்டார் பேச்சுமூலம்!

செல்லாக்காசு விவகாரத்தில் மோடியின் முகமூடி கிழிந்தது.

இவர் சாமான்யர்களின் வெளிப்படையான எதிர்ப்பைக் கண்டு பிரதமர் அலறவில்லை.

மறைமுறைமாக பிரதமரை மிரட்டும் பன்நாட்டு, இந்நாட்டு ஊழல் பெருச்சாலிகளின், முதலைகளின் மிரட்டலுக்கே அலறுகிறார்.

ரயில் பயணத்தில்... 14.11.16 pttv நேர்படபேசுக்கு..!
----\\\\
போதிய மை இருப்பதால்...
ஒரே நபர் மீண்டும் மீண்டும் வங்கியில் பணம் எடுப்பதை தடுக்கவே மை வைக்கப்படுகிறது. மத்திய அரசிடம் போதிய மை இருப்பதால் யாரும் கவலைப்பட தேவையில்லை!?                                              
----\\\\
விரல் மை உலர்வதற்குள் ஒழிந்துவிடும்!?
விரலிலே மை வைக்கிறது. இனி கள்ளப்பணம், கறுப்புப்பணம் விரல் மை உலர்வதற்குள் ஒழிந்துவிடும்!?.

துக்ளக் தர்பாரை மிஞ்சிவிட்டது மோடி தர்பார்!

அதுபோல் ஹிட்லரையும் மிஞ்சிவிடக்கூடும் மோடி ராஜ்ஜியம்.

விரைவில் மோடி ஆட்சிக்கு கிடைக்கப்போகிறது பூஜ்ஜியம்.

உப்பு இல்லை, தங்கம் இல்லை, அது இல்லை, இது இல்லை என மக்களை நன்றாக நாய், பேயாக அலைய வைக்கிறது.

தடாலடி முடிவால் தவிக்க மட்டும் விடவில்லை, தற்கொலையில் விட்டுள்ளது.

இதுவரை பணத்திற்கு உயிர்விட்டனர். தற்போது மோடி ஆட்சியில் பணத்தால் உயிர்விடுகின்றனர்.

பசிக்கு தற்கொலை என்பது போய், பணத்திற்கு தற்கொலை என மோடி ஆட்சி உலக சாதனை நிகழ்த்திவிட்டது.

மைய் வாங்கலியோ மைய். இனி வெற்றிலையில் கொல்லிமலை மை வைத்து பிடிக்கப்போகிறது மோடி ஆட்சி கருப்பு பணத்தை.

கறுப்பு மையில் 'கருப்பு'மை இனி உலாவப் போகிறது.

ஊழலின் ஊற்றுக் கண்ணை அடைக்காமல், இனி கோடி மோடிகள் வந்தாலும் கருப்புபணத்தைப் பிடிக்க முடியாது.

அதானி அம்பானி களை அருகில் வைத்துக் கொண்டு கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்பது கடைந்தெடுத்தப் பித்தலாட்டம்.                                              
----\\\
வீண் வேலை...
விரலிலே மை வைப்பது வீண் வேலை.

விரலில் வைக்கப்படும் மை உலர்வதற்குள் கள்ளப்பணமும், கறுப்புப்பணமும் பிடிபட்டால் மகிழ்ச்சி. விரல் மை உலர்வதற்குள் மோடி ஆட்சி உதிர்ந்திடலாம்.

துக்ளக் தர்பாரையே மிஞ்சிவிட்டது மோடி தர்பார் என்றால் மிகையல்ல.

ஹிட்லரையும் மிஞ்சிவிடும் மோடி ராஜ்ஜியம். மோடி ஆட்சி விரைவில் பூஜ்ஜியம் ஆகிவிடும் அறிகுறி தெரிய ஆரபித்துவிட்டது.

உப்பு இல்லை, தங்கம் இல்லை, அது இல்லை, இது இல்லை என மக்களை அலைய வைத்து சுகம் காண்கிறது மோடி ஆட்சி.

தடாலடி முடிவால், மக்களை தவிக்க விடுவதோடு, தற்கொலையிலும் தள்ளி விட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் பணத்திற்கு உயிர்விட்டனர். தற்போதைய மோடி ஆட்சியில் பணத்தால் உயிர்விடுகின்றனர்.

பசிக்கு தற்கொலை என்பது போய், பணத்திற்கு தற்கொலை என மோடி ஆட்சி உலக சாதனை நிகழ்த்திவிட்டது.

கொல்லிமலை மை வைத்து கருப்பு பணத்தை பிடிக்கப்போகிறது மோடி ஆட்சி. கேவலம்.

'கறுப்பு' மையால்... இனி 'கருப்பு'மையும் உலாவும்.

ஊழலின் ஊற்றுக் கண்ணை அடைக்காமல், கோடி மோடிகள் வந்தாலும், கருப்புபணத்தைப் பிடிக்க முடியாது.

அதானி அம்பானிகளை அருகில் வைத்துக் கொண்டு கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்பது கடைந்தெடுத்த மோசடி.                      
----\\\\
கருப்புபண புகழ் மோடி தர்பாரைக் கண்டித்தும்...
துக்ளக் தர்பாரையே தூக்கி சாப்பிட்டுவிட்ட
கள்ளப்பண, கருப்புபண புகழ் மோடி தர்பாரைக் கண்டித்தும்...

சாதாரண ஏழை எளியோரைக் கொல்லாதே என்றும்...
இன்று 16.11.16 சேலம் தலைமை தபால் நிலையம் முன் சிபிஐஎம் ஆர்ப்பாட்டம்.

தலைமை: ஆர்.வெங்கடபதி மாவட்டச்செயற்குழு...
கண்டன உரை:
பி.தங்கவேலு மாவட்டச்செயலாளர், கே.ஜோதிலட்சுமி மாநிலக்குழு...                   ----\\\\
மோடிக்கு முத்தலாக் ரெடி!

*மோடியின் துக்ளக் தர்ப்பாரைக் கண்டித்தும்...
*கருப்பு பண வேட்டை என்கிற பெயரால்...
*ஏழை எளியோரை கொல்லாதே என்றும், *நல்ல நோட்டு வரும் வரை உள்ள நோட்டை அனுமதி என்றும்...
*விரலில் மை வைத்து மக்களை அவமதிக்காதே என்றும்...

சிபிஐஎம் 16.11.16 இல் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தியது..!

சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகரம், ஓமலூர், கல்வராயண்மலை, சங்ககிரி, கெங்கவல்லி ஆகிய இடங்களில் நடந்ததில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மோடிக்கு முத்தலாக் ரெடி!

சேலம் மாநகரத்தில் ஆர்.வெங்கடபதி மாவட்ட செயற்குழு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி, மாநிலக்குழு உறுப்பினரும், மாவட்டக்குழு செயலாளருமான பி.தங்கவேலு ஆகியோர் உரை நிகழ்த்தினர்.                                                                      
----\\\\
அட அந்த கெழவிய புடிங்கய்யா..!

மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்சு கடன் 1,201 கோடி சேர்த்து...
மொத்தம் 63 பேரின் வாராக்கடன் 7,016 கோடியை தள்ளுபடி செய்தது ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியா..!

அதவிடுங்கயா இங்க ஒரு கிழவி நோட்ட மாத்திட்டு மை வைக்காம போதுபாருங்கயா..! புடிங்கயா..!

(வாட்ஸ் அப் பில் புடிச்சதய்யா..)                                                                                              
----\\\\
புறக்கணித்துவிட்டால்...!? 
ரத்து செய்தாலும் மீண்டும் தேர்தல் வரும்... ஆதலால் ஒட்டு மொத்தமாக மக்கள் இத்தேர்தலைப் புறக்கணித்துவிட்டால்...!?

அப்பொழுதாவது ஆட்சியாளர்களுக்குப் புத்தி வருமா..? என்று பார்க்கலாம் அல்லவா?

முதலாளித்துவ அரசியல் கட்சிகளின், பெருமுதலாளிகளின் கருப்பு பணத்தை பிடித்துவிட்டால், தேர்தலில் கள்ளப்பணம் விளையாடாது.

அதற்கு பதிலாக மோடி சாமானியன் வாழ்க்கைத்தான் தற்போது சீர்குலைத்து வருகிறார்.

அதுசரி... உப்பு, மிளகாய், காய்கறி வாங்கவே கஷ்டப்படுகிறபோது, இவர்கள் தேர்தல் திருவிழாவை எப்படி நடத்துகிறார்? எப்படி நல்லப்பணம் கிடைத்தது லட்சக்கணக்கில் செலவிட..?

வாக்கு ஆயுதத்தை மக்கள் மனப்போக்கில் பயன்படுத்தவா விடுகிறார்கள் பணம் படைத்த ஊழல்கட்சிகள்?

இடைத்தேர்தல் என்பது கேலிக்கூத்தாகி வெகுநாட்கள் ஆகிவிட்டது.

அதனால்தான் மக்கள் நலக் கூட்டணி இத்தேர்தலை புறக்கணிக்கிறது.

ஆம், புறக்கணித்தல் கூடாதென்றுதான் இடதுசாரி கட்சிகள் ஆர்கேநகர், ஶ்ரீரங்கம் உள்ளிட்டு போட்டியிட்டனர்.

ஆனால்... பண முதலைகளிடம் மக்கள் மூச்சு திணறி போனதுதான் மிச்சம்.

பணம் படையெடுப்பின்றி, சாதி, மத பாகுபாடின்றி நடைபெறும் தேர்தல்தான் உண்மையான மக்கள் தீர்ப்பாக இருக்கும்.

அதுவரை ரத்து செய்வதும், புறக்கணிப்பதும் இடைத்தேர்தலில் நடந்துக் கொண்டுதான் இருக்கும்.

பணம், சாதி, மதம் பார்க்காமல் மக்கள் வாக்களிக்கும் வகையிலான தேர்தல் நடைபெறும் வரை தேர்தல் என்கிற பெயரில் கேலிக்கூத்துக்கள் தான் அரங்கேறிக் கொண்டு இருக்கும்.                                              
----\\\\
செல்லாக்காசு விவகாரம் ...
செல்லாக்காசு விவகாரம் சாமானியனைத்தான் முதலில் பாதிக்கும் என்பதற்கு நேரடி சாட்சியே கிராமபுற கூட்டுறவு வங்கி மூடல்.

கிராமபுற வங்கி மூடலுக்கு காரணம் மோடி அரசின் கண்மூடித்தனமான கள்ள பண முதலாளிகள் மீதான பாசமே .

மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர எதிர்கட்சி மீது லாவணி நடத்தக்கூடாது.

மத்திய அரசின் மீது மாநில அரசு குற்றம் சாட்டுவதே உண்மையாக தெரிகிறது.

கருப்பு பணம் கள்ளப்பணம் பிடிக்கிறோமென கிராம மக்களை கூட்டுறவு வங்கி பக்கம் வராமல் செய்ததுதான் கண்டபலன்.

திமுக மாநில அரசின் மீது குற்றம் சாட்டுவது ஏன் என்று விளங்கவில்லை.

மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர எதிர்கட்சி மீது லாவணி நடத்தக்கூடாது.                                                                                               --------\\\
மோடியின் கொளக்கட்ட 
வாயில இருந்திருக்குமா..?!

ஒருவழியாக நேத்து என் மனைவி தன்னிடம் இருந்த கருப்புபணம் 8 ₹1000 நோட்டுக்கல காலையில இருந்து மத்தியானம் வர ஒரு வரிசையில் நின்று பேங்கிங் போட்டு புட்டு, மத்தியானத்துக்கு மேல இன்னொரு வரிசையில நின்னு 4 ₹2000 வெள்ளப்பணத்த வாங்கியாச்சி.

இதுக்கு ஒரு நாளு பூரா சோறு தண்ணி இல்லாம செய்ததுதா மிச்சம். அப்பவே ₹100 ₹50 ₹20 ₹10 ₹5 ₹2 ₹1ன்னு எதாவது கலந்து குடிங்கன்னு கேட்டதுக்கு மேலயும் கீழும் பார்த்து பேசியது மொறச்ச மொறயல டூய்ன்னு ஒடியாந்துட்டாங்களாம்.

இன்னிக்கு ₹2000 கொண்டுக்கிட்டு, காய்கட மளிககட ன்னு அழைஞ்சிட்டு அப்படீன்னு வீட்டுல வந்து வுளுந்தாச்சி ஆளு. இப்ப நாங்க என்னா பண்றது?  தெரிஞ்சவங்க சொல்லுங்க.

டிவி தொழில் ஆலோசகர் வெங்கட்ராமன் சொல்றரு... "மோடி மந்திரம் பலிக்க ஆரம்பித்து விட்டது. விலைவாசி குறைய ஆரம்பித்து விட்டது..." என்றார்.

அதற்கு சிபிஐஎம் கண்ணன் சொன்னார்... "நீங்க தொழில் ஆலோசகர். இப்படி பேசுறீங்க. ஜனங்க கையில பணமே இல்ல. பணம் முடங்கி பெரும்பகுதி மக்கள் வாழ்வையே சீர்குலைந்து கிடக்குது. நீங்க விலைவாசி குறைந்துவிட்டதிங்றீங்க" என்றார்.

இதெல்லாம் மோடி ஜோடிகளுக்கு... ஜாடிகளுக்கு...  உறைக்கவா போகிறது?.

மேலும் தோழர் கண்ணன் சொன்னார்...
"நேற்று பாஜக தலைவர் முன்னாள் கர்னாடக அமைச்சர் ஜெனார்த்தன ரெட்டி தன் மகளுக்கு ₹650 கோடி செலவளித்துள்ளாரே... அது என்ன பணம் கள்ளப்பணமா? கருப்பு பணமா? வெள்ளப் பணமா?"

தொழில் ஆலோசகர் வெங்கட்ராமன் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வரல..! மோடியின் கொளக்கட்ட வாயில இருந்திருக்குமா..?!                        0:27                      
----\\\\
ஏழைகள் மீது ஏவுகணை!
மோடி முகமூடி கிழிந்தது!                      

திட்டமிட்ட நடவடிக்கைதான்! பல்வேறு மக்கள் விரோத செயல்களில் இருந்து மக்களைத் திசைத்திருப்பும் திருபணியே இது.

இதனால் எள் முனை அளவுகூட பெரு முதலாளிகள் பாதித்ததாக தெரியவில்லை.

31 ஏழை எளியோரை இதுவரை மோடியின் இந்த திட்டமிட்ட துல்லியத் தாக்குதலில் மாண்டுள்ளனர். இன்னும் எவ்வளவு ஏழைகளின் உயிர் போகுமோ தெரியவில்லை.

கோடான கோடிபேர்கள் சொல்லொன்னா துயரில் பரிதவித்து வருகின்றனர்.

இது ஏழை மீது ஏவுகணை தாக்குதல் அல்லவா? மோடியின் முகமூடி கிழிந்துவிட்டதையே இது காட்டுகிறது.

₹7000 கோடி 60 முதலாளிகளின் வாராக்கடன் இந்த சமயத்தில் தள்ளுபடி செய்தது எதைக் காட்டுகிறது. இது வெந்த புண்ணில் வேல் பாய்வதல்லவா?

நேற்று பாஜக கர்னாடக முன்னாள் அமைச்சர் ₹650 கோடி செலவில் தன் மகள் திருமணத்தை நடத்தியதே... முதலாளிகளின் ஒரு முடியைக்கூட உதிர வைக்கவில்லை மோடியின் இந்த பக்தச்செயல்.

மோடி அரசின் வீழ்ச்சி ஆரம்பம்.

நந்தவனத்தில் ஒரு ஆண்டி. நாளாறு மாயமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தானொரு தோண்டி. அதை கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி.

குரங்கு கையில் தந்த பூமாலைபோல் இன்று நாட்டை ஆக்கிவிட்டது மோடி அரசு.                                              
----\\\\
பெரும் பெரும் அதிர்வுகளை...
விவசாயிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் சிறு சிறு தளர்வுகளைத் தரவில்லை...
பெரும் பெரும் அதிர்வுகளைத் தான் மத்திய மோடி அரசு தந்தது.

படிப்படியாக தருவதாக செல்லப்படும் எந்த விதிவிலக்குகளும் இந்த நிமிடம் வரை சாமானியர்களைச் சென்றடையவில்லை.

விதிவிலக்கு தருவதாக கூறப்படுவது மத்திய அரசின் தவறான, முன்னேற்பாடற்ற, முரட்டுத்தனமான துக்ளக் தர்ப்பாரையே காட்டுகிறது.

மேலும்...
இது இந்நாட்டு பன்னாட்டு பெரும் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவான, ஏழை எளிய மக்களுக்கு எதிரான நடவடிக்கை (துல்லியத் தாக்குதல்) என்பதையே காட்டுகிறது.

பாஜக ஆர்எஸ்எஸ் க்குள் நடக்கும் குத்துவெட்டையே இந்த படிப்படியான விதிவிலக்கு காட்டுகிறது. அதைத்தான் சுப்ரமணிசாமியின் உளறல் தெரிவிக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வலுவான எதிர்ப்பே மத்திய அரசின் படிப்படியான விதிவிலக்கு காட்டுகிறது.                                                                      
----\\\\
செயல்பாடின்மை
துப்பாக்கி சத்தம் கேட்பதற்கு மத்திய மாநில அரசுகளின் செயல்பாடின்மை.

இந்திய பிரதமர் கருப்புபணம் பிடிக்கிறேன் என்று வெள்ளை பணத்தின் மீது வலைவீசி வருகிறார்.

தமிழக அமைச்சரவையோ இடைத்தேர்தலில் வாக்குக்கு வலைவீசி வருகிறது.

வாழ்வாதாரத்திற்கு வலைவீசும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெறுவதை தடுக்க, வாழ்வாதாரத்தை பாதுகாக்க இவ்வரசுகளுக்கு வக்கில்லை.

இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு வன்மையாக கண்டிக்கத்தக்கதே!                      
-----\\\\
வெகுண்டெழ வேண்டும்!
அரசாங்கம் உண்மை நிலையை வெளியிட வேண்டுமானால்... மக்கள் வெகுண்டெழ வேண்டும்.

அரசாங்கம் செயல்பாடு ஒரு கண்ணுக்கு வெண்ணெய் இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பு வைப்பது போலிருக்கிறது.

பணநெருக்கடி விரைவில் தீரும் என்ற நம்பிக்கை சாதாரண மக்களிடம் சிறிதுமில்லை.

மனம் உடைந்து, வாழ்வு இழந்த கையறு நிலையில்தான் பெரும்பான்மை மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

34 உயிர் 10 நாளில் போனது உலக வரலாற்றில் கிடையாது. ஆனால் மோடி அரசும் பாஜக தலைவர்களும் அதுபற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

அதிகபட்சமாக 20% மக்களே நிம்மதியாக இருக்க கூடும். 80% மக்கள் நிம்மதி இழந்து தூக்கம் இழந்து நடைபிணமாகி விட்டனர்.

சகஜநிலை வரவேண்டுமானால், அரசுக்கு ஒரே வழி...
புதிய நோட்டுக்கள் சகஜமாக கிடைக்கும் வரை பழைய ₹500 ₹1000 நோட்டுக்களை புழக்கத்தில் அனுமதிப்பதுதான் தற்போதைக்கு தீர்வு!

நேற்று இருந்து வங்கிகளில் ₹2000 தருவதாலும், கையிருப்பு போதுமானதாக இல்லாததாலும் குறைவாக இருக்கும் கூட்டத்தைப் பார்த்து பாஜக பீற்றிக்கொள்வது வெந்த புண்ணில் வேல் பாய்வதுபோல் உள்ளது.                      
----\\\\
நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா! 

சேலம் மாவட்டம் ஆத்தூரில் 18.11.16 மாலை 6 மணிக்கு நவம்பர் புரட்சி நூற்றாண்டு தெருமுனை கூட்டம் நடைபெற்றது.  வட்டக்குழு உறுப்பினர் இல. கலைமணி தலைமை தாங்கினார்.

வட்டக்குழு அலுவலகத்தில் செங்கொடி ஏற்றியும், மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். குழந்தைவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினரும், வட்டச் செயலாளருமான பிஆர். மாதேஷ்வரன், மாவட்டக்குழு உறுப்பினர் என். பிரவீன்குமார், வட்டக்குழு உறுப்பினர் க. பெருமா உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.                                                                     ----\\\\
வெள்ளை பணத்தை...
கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு வெள்ளை பணத்தை ஒழித்து வருகிறது பாஜக மோடி அரசு.

ரூபாய் நோட்டு மாற்று விவகாரம் இந்திய பொருளாதாரத்தின் அடுத்த கட்டமல்ல, அழிவுக்கட்டம்.                                              
 ---\\\                                                                                                                                                         -அன்றும், இன்றும், என்றும்...
மக்கள் நலனுக்காகவே வாழ்பவர்..!

இவரை தெரிகிறதா?
அன்றும் (1978) நோட்டுக்களை செல்லாக்காசு  ஆக்கிய போது... ரோட்டிலே போராடியவர்!
இன்றும் (2016) துண்டுகளை செல்லாக்காசு ஆக்கியப்போது...
மக்கள் மன்றத்திலும், மக்களவையிலும் போராடிக் கொண்டிருப்பவர்!

அவர்தான்...
சிபிஐஎம் இன்றைய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம்யெச்சூரி!                                                                                                                                              
----\\\\
வன்கொடுமை எதிர்ப்பு!
பெண்கள் மீதான வன்கொடுமை எதிர்ப்பு பரப்புரை 20.11.16 சேலம் மாநகரத்தில் நடைபெற்றது.

இதை துவக்கி வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அகில இந்திய துணைத்தலைவர் தோழர் உ. வாசுகி உரையாற்றினார்.

இதில் மாநில துணை செயலாளர் தோழர் கே. ஜோதிலட்சுமி, மாவட்டச் செயலாளர் தோழர் கே. ராஜாத்தி, மாவட்டத் தலைவர் தோழர் ஐ. ஞானசௌந்தரி, மாவட்டப் பொருளாளர் என். ஜெயலட்சுமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள்  பங்கேற்றனர்.                      
---\\\
படுகேவலம்!
மோடி அரசின் இச்செயல்...
வன்மையாகக்கண்டிக்கதக்கது.

இன்று 20.11.16 அதிகாலை இந்டோர்-பட்ணா ரயில் விபத்து நடந்து, அதில் 115க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த பெரு விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அவர்களைப் பார்க்க வந்த ரயில்வே அதிகாரிகள், உடனடி செலவுகளுக்கு தலைக்கு ரூ.5000 ரொக்கமாக கொடுத்தனர், ஒன்பது பழைய செல்லாத ரூ.500 தாள்கள், ஐந்து நூறு ரூபாய் தாள்கள். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு உடனடியாக ரொக்கம் செல்லாத பழைய ரூபாய் தாள்களிலேயே வழங்கப்பட்டது.

இதை விட முக்கியம் பணம் பெற்ற அனைவரின் கைகளிலும் உடன் அடையாள “மை” வைக்கப்பட்டது. இதை விட நாட்டின் பிரஜையை  அரசாங்கத்தால் கேவலப்படுத்த இயலாது. எல்லோர் வாயிலும் விஷத்தை ஊற்றி கொன்றிருக்கலாம் மோடி.

JIO MODI, JIO HIND
நன்றி:MuthuKrishnan                                              
----\\\\
மிய்யாவ் மட்டும் இடிச்சிக்கில...
நாமும் நாடும்தான்! இந்த காவி மோடிய தேடித்தேடி உக்கார வச்சதுக்கு..!         ---\\\
தற்கொலை பாதையிருந்து மீட்டிடு..! 
மோடி அரசே..! விவசாயத்தைப் பாதுக்காத்திடு..! விவசாயிகளை தற்கொலை பாதையிருந்து மீட்டிடு..! காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு..! போன்ற 21 அம்ச கோரிக்கைகள் முன்வைத்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் 24.11.16 புதுதில்லியில் பேரணி நடத்திட உள்ளது.

21.11.16 இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க சார்பில் சேலத்தில் இருந்து  விவசாயிகள் புதுதில்லி பயணம் புறப்பட்டனர். தமிழகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க செல்கின்றனர்.

இப்பயணத்தில் சேலம் மாவட்ட தலைவர் ஏ. பொன்னுசாமி, மாவட்ட செயலாளர் எஸ்பி. தங்கவேல், மாவட்ட பொருளாளர் ஆர். குழந்தைவேல் மற்றும் 3 பெண்கள் உள்ளிட்டு 43 விவசாயிகள் செல்கின்றனர்.

இவர்களை சிபிஐஎம் மாவட்டக்குழு செயலாளர் பி. தங்கவேலு, அனைத்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் கே. ஜோதிலட்சுமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் என். பிரவீன்குமார், மாநகர வடக்கு தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்து முழக்கமிட்டு வழியனுப்பி வைத்தனர்.                                              
----\\\\
மறைமுகமாக அல்ல, நேரடியாக..! 
சந்தேகமே வேண்டாம் மாநில அரசு நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுகிறது. மறைமுகமாக அல்ல, நேரடியாக..!

திட்டகமிசன் கலைப்பில் துவங்கி ஜிஎஸ்டி என தொடர்ந்து தற்போது உதய் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டம் வரை நீண்டு கொண்டே போகிறது.

முத்தாய்ப்பாக தற்போது கிராம வங்கிகளுக்கு நோட்டு தர மறுப்பது அப்பட்டமான மீறலும் அராஜகமும் ஆகும்.

சுதந்திர இந்தியா இதுவரை மோடி அரசைப்போல ஒரு சர்வாதிகார மத்திய அரசை கண்டதில்லை.

மாநில அரசுகளை நகராட்சி களைப் போல் ஆக்கிவிடும் போலிருக்கு மோடி அரசின் போக்கும் நோக்கும்.

வணிகர்கள் மட்டும் பாதிக்கப்பட வில்லை, பாதிக்காதவர்களே இல்லை.

கிராமப் பள்ளிகள் முன் இருக்கும் பாட்டி கட்டில் கடை முதல், வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட "மால் கடை" வரை மண்ணைத் தின்று கொண்டு இருக்கின்றன.

அவசரநிலை யை நேரடியாக கண்டதில்லை. அது இதுதான் போலும். கடந்த எட்டாம் தேதி முதல் நாட்டில் "ஏழரை" தான் தாண்டவம் ஆடுகிறது.

உற்பத்தி சதவீதம் மட்டும் குறையவில்லை, சாதாரண மக்கள் வீட்டில், ஓட்டலில் உண்ணும் சதவீதமும் குறைந்துவிட்டது.

மத்திய அரசின் படிப்படியான மாநில அரசின் மீதான அத்தனை தாக்குதல்களையும் ஆரம்பத்தில் எதிர்ப்பதுபோல் காட்டி, அமலாக்கத்திற்கு வரும் போது வாய்மூடி மவுனமாக இருப்பது அதைவிட கொடுமையானது.

செல்லாக்காசு விவகாரத்தில் தமிழக அரசு செல்லாக்காசாகி விட்டது. வாய்கூட இதுவரை திறக்காதது வன்மையாக கண்டிக்கதக்கது.

கேரள இடது ஜனநாயக அரசுதான் திராணி உள்ள அரசாக தென்னிந்தியாவில் இருக்கிறது. அது பாராட்டுக்குரியதே.

நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கும் பாய்வதுபோல் தமிழக அரசு வாளாக இருக்கிறதோ என்னவோ!?                                                                                              
----\\\\
அரசுதான் இதில் அம்பலப்படும்...
பாதிப்பு யாருக்கு என்றால் மக்களுக்குத்தான் என்பதுபோல் மத்திய அரசு காட்டிட முயற்சிக்கும். ஆனால்  அரசுதான் இதில் அம்பலப்படும்.

மக்கள் பாதிப்பைதான் எதிர்கட்சிகள் மக்களவையில் எடுத்து சொல்கின்றன. முடக்கும் நோக்கம் ஏதுமில்லை.

எதிர்கட்சிகளின் குரலுக்கு மதிப்பளித்து, அரசு தன் மக்கள் விரோதப் போக்கைக் கைவிட்டால் அனைவருக்கும் நன்மைதானே.

அரசு அடம்பிடிப்பதே நாடாளுமன்றம் முடக்கத்திற்கு முக்கிய காரணம்.

செல்லாக்காசு விவகாரத்தில் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பது கண்கூடு அல்லவா?

இதை எதிர்கட்சிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைத் அரசு விரும்புகிறதா? அதற்குதான் எதிர்கட்சிகளா?

அரசு விவாதத்திற்கு அழைப்பது எதற்கு? இது வெறும் கண்துடைப்பே. இதில் விவாதிக்க என்ன இருக்கிறது?

அரசு தன் முரட்டுத்தனமான நிலைப்பாட்டை விளக்கி கொள்ள வேண்டும்.

புதிய நோட்டுக்கள் தாராளமாக கிடைக்கும் வரை பழைய நோட்டுகளை அனுமதிப்பதே இப்போதைக்கு ஒரே உடனடி தீர்வு.

கள்ள நோட்டை பிடிப்பதாக கூறிக் கொண்டு நல்ல நோட்டையே கள்ள நோட்டாக்கி வருகிறது அரசு. மக்களை அவமானப்படுத்தி அகம் மகிழ்கிறது.

கள்ள நோட்டுக்களும் கருப்பு நோட்டுகளும் பத்திரமாக சொத்து வடிவில் இருக்கிறது அரசுக்கு தெரியாதா?

தெரிந்திருந்தும் இந்த நாடகத்தின் மையப்புள்ளி எது? அது மற்ற மற்ற மக்கள் விரோத செயல்களில் இருந்து அரசு தப்பிக்கவே. மக்களை திசை திருப்பவே.
#
21.11.16 pttv நேர்படபேசுக்கு!
----\\\\
புறமுதுகு காட்டி...
இனிமே பிரதமரு மாதிரி பாஜக விவாத புலிகள் எல்லாம் புறமுதுகு காட்டி ஓடபோகுது போல தெரியுது.
இன்னும் 50 நாள்ல எல்லாம் கொறைய போகுதாம்! ஆம், மக்கள் தொகையும் தான். இப்பவே செல்லாக்காசால் சாவு 70க்கும் மேலே!                      
----\\\\
பணநாயகம் வென்றது.

ஜனநாயகம் மண் தின்றது.

முடிவு மன்னர்களுக்கானது.

அதனால் தான் தேர்தல் அன்று காலை...

(மன்னர்)  முதல்வர் இட்லி சாப்பிட்டார்...
தனி அறைக்கு மாற்றப்பட்டார்...

என்கிற செய்திகள் ஊடகங்களை தேர்தல் செய்திகளை காட்டிலும் கூடுதலாக அலங்கரித்தன.

வாக்குக்கு பணம், பரிசு பெறுவது... தருவது... இன்றியும், சாதி, மத அடையாளமின்றியும் நடைபெறும் தேர்தலே ஜனநாயக தேர்தல்.

பணம் தருவது மன்னர் குணம்... பணம் பெறுவது அடிமை குணம்...
இதுதான் மன்னராட்சி என்பது. அதுதான் 'மக்களாட்சி'யில் அரங்கேறி வருகிறது.

எந்த காரணத்திற்காக தேர்தல் ரத்து செய்யப்பட்டதோ, அந்த காரணம் சிறிதும் நிறைவேற வில்லை.

ஆறு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக வாக்காளர்கள் வாக்குகளை விற்றுள்ளார்கள். அதிக செலவு செய்தவர் / கட்சி 'வெற்றி'. அவ்வளவே!

இந்த வெற்றிதான் 4 தொகுதிகளிலும் நடந்திருக்கிறது.

இந்த தேர்தல் முடிவில் இன்னொரு கவலை தரும் செய்தி...

வாங்கிய வாக்குகளைவிட, "மூன்றாவது இடம்" பாஜக என்பதே.

இது ஒரு ஆபத்தான அறிகுறி. இந்துத்துவா மதவாதம் பெரியார் மண்ணில் 'முளை'விடலாமா..?                                              
22.11.16 சத்தியம் டிவி விவாத நிகழ்ச்சிக்கு...!
-----\\\\

உண்மைதான்...
ஆம். எழுதப்படாத விதியாகி வருகிறது என்பது உண்மைதான்.
ஆனால், பணமும் பரிசும் தராமல் நடத்தி பார்த்தால் தான் தெரியும் அது விதியா? சதியா? என்று.

முழுக்க முழுக்க இடைத்தேர்தலில் பணம் தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது. கூடவே ஆளும் கட்சியின் அத்துமீறலும்.

5 ஆண்டுகளில் செய்யப்படாத சில அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுவதன் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

ஆர்கேநகர் இடைத்தேர்தலில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு கூட அட்மிஷன் பீஸ் உள்ளிட்டு செலுத்தப்பட்டதும் நிஜம்.

தற்போது அந்த தொகுதி பொதுதேர்தலுக்குப் பின்புகூட கேட்பாரற்று கிடப்பதும் நிஜம்.

இந்த நிஜம் மக்கள் மத்தியில் மறந்து போவதுதான் சோகம்.

மக்கள் மீதான படையெடுப்பே இந்த வெற்றிக்கு இன்னொரு காரணம்.

அனைத்து அமைச்சர்களும் இத்தொகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தால் மக்கள் தான் என்ன செய்வார்கள்? பாவம்!

இடைத்தேர்தல்களில் அமைச்சர்கள் எம்எல்ஏகள், எம்பிகள் தேர்தல் பரப்புரை, வாக்கு சேகரிப்பு என்கிற பெயரில் நுழைவதற்கு தடைவிதிக்க வேண்டும்.

குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பே அரசின் திட்டங்கள் அமலாக்கம் நிறுத்தப்பட வேண்டும்.

சாமானியர்களை தங்கள் விருப்படி வாக்களிக்க அனுமதிப்பதில்லை முதலாளித்துவ அரசியல் கட்சிகள் என்பதும், மக்களும் பணத்திற்கும், பரிசுக்கும், சாதி மத வெறி பேச்சுகளுக்கும் இரையாகி விடுகின்றனர் என்பதும் நாணயத்தின் இரு பக்கங்கள்.

தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை கட்டாயம் கொண்டு வந்தாக வேண்டும். அதுவரை இனி அது பணநாயக தேர்தலே!

சாமானியர்களும் சாமானியர்களை பிரதிநிதித்துவ படுத்தும் கட்சிகளும் இந்த பணநாயக தேர்தலில் பார்வையாளர்களே!

மக்கள் பணத்திற்கும், சாதிக்கும், மதத்திற்கும் வாக்களிப்பதைத் தவிர்ப்பதே ஜனநாயகம் வெற்றி பெற ஒரேவழி.

தேர்தலில் பணம்-பரிசு-சாதி-மதம் ஆகியவற்றிக்கு வாக்களித்தல் கூடாது.       ---\\\

Monday 31 October 2016

ஆடு நனையுதே என்று ஒநாய் அழுகிறதா?
மனுநீதியை பொதுசிவில் சட்டம் கட்டுபடுத்துமா?


கடந்த ஒரிரு நாட்களாக நம் நாட்டின் பிரதமரின் உரை கவலை மிக்கதாகவும், ஆர்ப்பரிப்பு மிக்கதாகவும் செய்தித் தாள்களை அலங்கரித்த வண்ணம் இருக்கின்றன. இதைப் படித்த எவரொருவரும் உலகத்திலேயே மிக உயர்ந்த பெண்ணுரிமைப் போராளி நமது பிரதமர்தான் என்று முடிவுக்கு வந்துவிட்டால ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அந்தளவுக்கு வெளுத்து வாங்குகிறார் என்று தான் சொல்ல தோன்றும். ஆம், இதுதான் இவரின் சொந்த முகமா? அல்லது முகமூடி முகமா? மோடி முகம்என்று பார்ப்போமா?

அதாவது தலாக்முறையால் முஸ்லீம் பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகிறார்களாம்; அதை அனுமதிக்க முடியாதாம்; அதோடு பெண்சிசு கொலையையும் அனுமதிக்க முடியாதாம்! அடுத்து பழங்குடி மக்கள் மீதான அடக்குமுறையையும் இந்த அரசு பார்த்துக் கொண்டு இருக்க முடியாதாம். இது இவரின் பேச்சின் சாரம். இது எப்படி இருக்கிறதென்றால், ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதக் கதைபோல் இருக்கிறது அல்லவா?
நமது பிரதமர் பிதற்றுகிறார்

தலாக் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுவும் பெண் சிசுக் கொலையைப் போலவே பெண்களுக்கு எதிரான செயல்பாடுதான். ஜனநாயக நாட்டில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம்என்கிறார். இது காவிரிக்கும், பாகிஸ்தானுக்கும் பொருந்தாது போலும்.
மேலும் தொடர்கிறார்… ‘தலாக் விவகாரத்திலும், மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருக்கிறது. ஆனால் ஒரு சிலரோ அது குறித்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைக்கு வராமல் மக்களை தூண்டி விடும் நடவடிக்கைக்களில் ஈடுபட்டு வருகின்றனர்என எச்சரிக்கும் வகையில் கூறுகிறார். மேலும் கூறுகிறார்… ‘முஸ்லீம் பெண்களின் உரிமைகள் பாதுகாகப்பட வேண்டுமா? அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டுமா? என்பதற்கு நீங்கள்தான் (மக்கள்) பதில் கூற வேண்டும்’. அப்படி என்றால் உபி மக்கள் பாஜக வுக்கு ஒட்டு போட வேண்டும் அல்லவா பிரதமரே?

அடுத்து தொடருகிறார்… ‘தலாக் விவகாரத்தை சில கட்சிகள் அரசியல் ஆக்குக்கின்றனஎன உபி தேர்தல் பிரச்சார தயாரிப்பு கூட்டத்தில் நீட்டி முழங்குகிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு முன் முசாபர் நகரில் மூண்ட கலவரம் போல் மீண்டும் மூள முடிச்சு போடுகிறார்; நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று மக்களைப் பார்த்து கேட்கிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? சீண்டி விடுகிறார் என்றுதானே அர்த்தம்.

இதற்கு மேலும் சொல்கிறார் பாருங்கள்… ‘அற்ப ஆதாயத்திக்காகவும், வாக்குக்காகவும் அக்கட்சிகள் இவ்வாறு நடந்து கொள்கின்றன. ஊடகங்களும் இந்த விவகாரத்தை மதரீதியாக அணுகுகின்றன’. என்னேதேசப்பற்று பாருங்கள். இன்னும் அவர் உதிர்த்த முத்துக்களை கேளுங்கள்… ‘ஹிந்து-முஸ்லீம் பிரச்சனையாகவோ, பாஜக-முஸ்லீம் அமைப்புகளின் பிரச்சனையாகவோ இதை கொண்டு செல்லக் கூடாது; பெண்ணுரிமையைப் பறிக்கும் தலாக் நடைமுறை இருக்கலாமா? வேண்டாமா? என்ற கோணத்தில் விவாதம் நடத்த வேண்டும். தலாக் என்ற பெயரில் முஸ்லீம் சகோதரிகளின் வாழ்க்கையை பாழாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’. அடேய் சாமி..!
இவர் முதல் அமைச்சராக இருந்தபோது 2002இல் நடந்த கலவரத்தில் முஸ்லீம் கற்பினி பெண் வயிற்றை ஒரு பெண்ணைக் கொண்டே சூலாயுதத்தால் கிழித்து, அந்த முஸ்லீம் பெண் வயிற்றில் இருந்த சிசுவையும் எடுத்து நெருப்புக்கு தீணியாக்கியவர்களை, தாய்யையும் சேய்யையும் தீ ஜுவாலைக்கு பலியாக்கியவர்களைத் தண்டிக்காமல், உலா விட்ட உத்தமர்தான் இவ்வாறு பேசுகிறார். அதோடு அந்த கலவரம் முடிந்ததா? 3000க்கும் மேலான முஸ்லீம் ஆண் பெண்களை கொன்று குவித்த ஆட்சியின் முதல்வராக இருந்தவர் அல்லவா இவர்.

ஒருவேளை இவ்வண்ணம் பேச மோடியாருக்கு தகுதி இருக்குமேயானால், அன்று அவர் குறைந்த பட்சம் தனது பதவியை விலக முன் வந்திருந்தால் கூட, ஒரு வாதத்திற்காக இதை பேச்சை ஏற்கலாம். ஆனால் அன்று பிரதமராக இருந்த வாஜ்பாய்தான்இனி எந்த முகத்தைக் கொண்டு நான் வெளிநாடுகளை நான் பார்ப்பேன்என்றார்.

இதற்கு மேலும் இவர் வடிக்கும் நீலிக் கண்ணீரைப் பாருங்கள்… ‘இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் என்று பாலின விகிதம் குறைந்துள்ளது. சமநிலையற்ற இந்த சூழலுக்கு காரணம் பெண் சிசு கொலைதான். இத்தகைய கொடுங்குற்றத்தில் ஈடுபடுபவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். மதத்தின் பார்வையில் இந்த விவகாரத்தை அணுகாமல் கடுமையான நடவடிக்கை மத்திய அரசு எடுத்து வருகிறதுஎன நாகூசாமல் பேசுகிறார்.

அடுத்து ஒருநாள் பேச்சு… ‘வனப்பகுதிகளில் தொன்றுத் தொட்டு வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை அழிக்க நினைக்க கூடாது. பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்அடப்பாவமே..! வன உரிமை சட்டம் 2006ஐ அமலாக்காமல், வனங்களை அன்னிய கம்பெனிகளுக்கு டெண்டர் விட்டுவிட்டு பேசும் பேச்சை பாருங்கள். எப்படி இருக்கிறது பாருங்கள் இவரின் இந்த பேச்சு

இந்த பெண்ணுரிமை போராளியின் குருபீடம்பெண்ணுரிமை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?

ஒரு பெண்ணுக்கு ஏற்கனவே வேறு வர்ணங்களில் இருந்த 10 கணவர்கள் இருந்து அவள் 11 வதாக பிராமணனை மணந்திருந்தால்கூட,  11 வதாக மணந்த பிராமண்ணுக்கே அவள் உரிமையானவள். மற்றவர்களுக்கு அல்ல.’

நிஷாதனுக்கு விதேகப் பெண்ணிடம் தோல் வேலை செய்கிற கார்வாரன் பிறக்கிறான்

புற்க சாதிப் பெண்ணுடன் சண்டாளன் கூடிப் பெறும் பிள்ளைக்கு சோபகன் என்று பெயர். நீதியின் முன்னிலையில் மரண தண்டனைக்கு உள்ளானவன் உயிரை வாங்கும் கொலைத் தொழில் இவனுடையது

நிகராதப் பெண்ணை சுகித்து சண்டாளன் உற்பத்தி செய்யும் அத்தியாவசாயிக்கு சுடுக்காட்டைக் காத்தல் தொழிலாகிறது

நான் அவளை கட்டிப்பிடிப்பேன். அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்த செய்யுமாறு தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்’ (திருமணத்தில் பிராமணன் சொல்லும் வேதமந்திரம் இது)

பெண்ணானவளின் அந்தரங்க பாகம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. யோனி, மத்யமம், உபஸ்தம் என 3 றாக பிரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது

பெண்ணுக்குக் கல்வி கற்கும் உரிமையில்லை. வீட்டை விட்டு வெளியே செல்லும் உரிமையில்லை. பெண்ணுக்கு திருமணம் என்பது 8 வயதுக்குள்ளேயே நடைபெற வேண்டும். அதற்குள் திருமணம் நடைபெற வில்லையென்றால், அவளது தந்தைபாபவிமோசனத்திற்கானசடங்குகளை செய்ய வேண்டும்

பெண்ணேநீ குழந்தை பருவம் முழுவதும் அப்பன் சொல்வதைக் கேள். வளர்ந்து மணமானதும் கணவன் சொல்வதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்தது முதல் உன் மகன் சொல்வதைக் கேள்
பெண்ணேஉனக்கு இதுதான் கதி. நீ சுதந்திரமாக வாழ தகுதியற்றவள்

இப்படியே போகிறது மனுநீதி. மேலும் மனுநீதியின் வழிவந்தவர்கள் சொல்கிறார்கள்

பெண்களை நம்பாதே. அவர்கள் தங்களது பாவனைகளால், ஆழகால் உன்னை மயக்கப் பார்ப்பார்கள். அவர்களிடம் சிக்கிவிடாதே’ ‘பெண்ணும் ஒரு பொருள்தான். அவளை விற்க-வாங்க எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த ஆணுக்கு உரிமை உண்டு’ –இது ஆதிசங்கர்.

பிராமண ஸ்திரிகளும் சூத்திரர்கள்தான். அவர்களுக்கு மோட்சத்திற்கு போகும் தகுதி கிடையாது. இந்த ஜன்மத்தில் ஆணின் அடிமையாக அவளுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றினால், ஆண்டவன் அனுக்கிரகத்தால் அடுத்த ஜன்மத்தில் பிராமணனாக பிறக்கலாம். பின்னர் சொர்க்கத்திற்கு போகலாம்’ –இது ராமானுஜர்.

சில வேளைகளில் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள வால்மீகியின் ஜாதி சேர்ந்தவர்களுக்கு (ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கலாம் அல்லவா?) ஆன்மீக அனுபவம் கிடைக்கலாம். இந்த பணி சமூகத்தின் மகிழ்ச்சிக்காகவும், கடவுளின் சந்தோஷத்திற்காகவும் செய்யப்பட்டதாகும்’ –இது இன்றைய பிரதமர் நரேந்திரதாஸ் மோடி.

இப்படிப்பட்ட வழியில் வந்த மோடிதான் பெண்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் அவர்களின் உரிமைக்கும் சண்டமாருதம் செய்கிறார். என்ன நடிப்பு பார்த்தீர்களா? எல்லாவற்றிக்கும் உச்சபட்சமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசு தர்பாரில் உள்ள மனு சிலையில் கோல்வார்கர் எழுதி வைத்துள்ளார்… ‘எல்லோரைக் காட்டிலும் மகத்தான உச்சமட்ட ஞானம் நிறைந்த முழுமுதல் மனிதகுல சட்ட நியதிகளை அளித்தவர் மனுஎன்று.

அய்யா நரேந்திரதாஸ் மோடி அவர்களேதாங்கள் கொண்டுவர துடித்துக் கொண்டிருக்கும் பொது சிவில் சட்டம் மனித குல சட்ட நியதிகளை அளித்த மனுவைக் கட்டுபடுத்துமா? அல்லது மனு பொதுசிவில் சட்டத்தைக் கட்டுப்படுத்துமா? எது எதை கட்டுப்படுத்தும்? முஸ்லீம் பெண்களுக்காக குடம் குடமாக அல்லது குளம் குளமாக கண்ணீர் வடிக்கும் பாஜக இதற்கு பதில் அளிக்குமா? இந்து பெண்களுக்கு இதுபோன்ற எண்ணற்ற அடிமைத்தனங்களில் இருந்து பொதுசிவில் சட்டம் விடுதலை பெற்றுத்தருமா?

இதைத்தான் இன்றைய குடியரசு தலைவர் மிக நிதானத்துடன் இவ்வாறு பகிர்கிறார் போலும்… ‘இந்தியாவில் 200 மொழிகள், 1800 எழுத்து வடிவமற்ற மொழிகள், 7 மதங்கள் உள்ளன. இந்த வேற்றுமை இந்திய கலாச்சாரத்தின் வெளிப்பாடு. அதனை இந்தியா கொண்டாட வேண்டுமே தவிர, இது போன்ற வேற்றுமைகளை செயற்கையாக ஒன்றுப்படுத்த முயற்சிக்க கூடாது. அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் சாத்தியமில்லை’.

நரேந்திரதாஸ் மோடியின் ஆரம்ப 11 மாத கால ஆட்சியின் லட்சணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாடும் இவ்வாறு மதிப்பிடுகிறது. அதை இங்கே கவனப்படுத்துவது பொருத்தமாக இருக்கும். அதன்பின்னான இன்றைய நாள் வரை அவரின் ஆட்சியின் லட்சணமும் இதுதான்.

பாஜக வின் தேர்தல் வெற்றியும், மோடி அரசாங்கம் தோன்றியதும் ஒரு வலதுசாரி தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. கார்பரேட் சக்தி மற்றும் இந்துத்துவா எனும் இரட்டை விசைகள் வலதுசாரி நகர்வுக்கு தீணி போட்டுள்ளன’.

பாஜக அரசாங்கம் ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அறிவித்து, பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் அன்னிய முதலீட்டிற்கு இருந்த வரம்புகளை உயர்த்தியது. காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டிற்கு இருந்த வரம்பை 49% உயர்த்தியது. ரியல் எஸ்டேட் வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு இருந்த விதிமுறைகளைத் தளர்த்தியது. இவ்வாறு பாஜக அரசாங்கம் நவீன தாராளமயப் கொள்கைகளை மிகவும் உக்ரமாக தொடர்கிறது. மத்திய பட்ஜெட் 2015-16 ரூ 69,500 கோடி பெறுமான பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனைக்கு வழிவகுத்து உள்ளது’. (சமீபத்தில் சேலம் உருக்காலை உள்ளிட்டு 17 நவரத்தின பொதுதுறை பங்குகளை 51% தனியார் வாங்கிட தளர்த்தி உள்ளது)

இந்துத்துவா அமைப்புகள் முஸ்லீம் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குகின்றன. மறு மதமாற்றம், காதல் புனிதப்போர் போன்ற பிரச்சாரங்கள் முஸ்லீம் சமூகத்திடம் அச்சத்தையும், பாதுகாப்பின்மையும் தோற்றுவிக்கின்றன. கிறித்துவ தேவாலயங்கள் மீது தொடர்ந்த தாக்குதல்களும், வன்முறைகளும் டெல்லி உள்பட நாட்டின் பல பகுதிகளில் நடந்தேறின. முஸ்லீம் மக்களின் சமூக பொருளாதார பின்தங்கிய நிலைமையும், சர்ச்சார் அறிக்கை பரிந்துரைகளும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பின்னுக்குத் தள்ளப்பட்டன. மகாராஷ்ராவில் பாஜக தலைமையிலான அரசு கல்வியில் இஸ்லாமியர்களுக்கு தரப்பட்டு வந்த 5% இட ஒதுக்கீடு ரத்து செய்துவிட்டது. மாட்டுக்கறி உணவு மகாராஷ்ராவிலும், அரியாணாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது’.

இதெல்லாம் ஆட்சிக்கு வந்த சுமார் ஒராண்டில் நடந்தேறியவையே. ஆனால் அதன் பின்னான ஒன்னரை ஆண்டுகளில் மேலே உள்ளதைவிட பன் மடங்கு கொடுமைகள் தலைவிரித்தாடி வருகின்றன.

இதிலிருந்து மக்களை திசைத் திருப்பவே அல்லது இந்தியாவின் இதயமான மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் மீண்டும் காவி ஆட்சியை நிறுவிடவே தற்போது பொது சிவில் சட்டம், தலாக், சிசுக் கொலை, பழங்குடி பாதுகாப்பு, துல்லிய தாக்குதல் என எல்லாவற்றிக்கும் மேலாக மீண்டும் ராமர் கோவில் என பீடிகைப் போட்டு மக்களைத் திசை திருப்பி வருகிறது மத்திய பாஜக அரசு என்றால் அது மிகையல்ல.

மோடியாரின் பாஜகவின் பொதுசிவில் சட்டத்தை ஏற்பதாக வைத்துக் கொள்வோம். அது குறிப்பாக இந்து  மதத்திற்கும், அதன் நீதி-சட்டத் திட்டங்களுக்கும் பொருந்துமா? கட்டுப்படுமா? மோடியார் பூஜிக்கும் மனு நீதியும், அவர்களது தொண்டரடி பொடியாளர்களும் இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்? பெண் சமத்துவத்திற்கு பெண்ணிய போராளி போல் குரல் எழுப்பும் மோடியும் பாஜகவும் இதையும் விவாதிக்க தயாரா? இந்த ஏமாற்று இரட்டைவேடம் இனி எடுபடப்போவதில்லை என்பதை மட்டும் பதிந்திடுவோமாக!

-பி.தங்கவேலு.

(ஆதாரம்: சாதி-மதம்-வர்க்கம்! –கே.வரதராஜன்; மற்றும் சிபிஐஎம் விசாகப்பட்டிணம் அஇமாநாட்டு தீர்மாணம்).
குறிப்பு: தீபாவளிக்கு முன் எழுதியது..! தீக்கதிருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

Friday 28 October 2016

போராட்டங்களை கொச்சைப்படுவதால் மட்டுமே
காவல்துறை மேன்மையடைந்து விடுமா?
தூக்கம் கடிந்து செயல்என்ற தலைப்பில் தமிழகத்தின் முன்னாள் காவல்துறைத் தலைவரும், இந்நாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.நடராஜ் 21.10.16 தினமணியில் ஒரு கட்டுரைத் தீட்டி உள்ளார். கட்டுரையின் முற்பகுதியில் ராணுவம், துணை ராணுவம் ஆகியவற்றின் வீரதீர செயல்களை புகழ்ந்துள்ள இவர், அந்தளவுக்கான பணியில் ஈடுப்பட்டு வரும் காவல்துறைக்கு அந்தளவுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை என பதிவிட்டு உள்ளார். அதைக்கூட புரிந்துக் கொள்ள முடிகிறது. அதை ஏற்பதும் நிராகரிப்பதும் வாசகர்களின் உரிமை.

ஆனால் பிற்பகுதியில் தமிழக காவல்துறையின் அதன் பணிகளை, மன அழுத்தங்களை பதிவு செய்ய முற்படும்போது, நாட்டில் நடக்கும் மக்கள் நலன் காக்கும் போராட்டங்களை அதன் வீச்சுகளை கொச்சைப்படுத்தும், அதனால்தான் காவலர்கள் தற்கொலை நேரிடுகிறது என திசைத்திருப்பும் வேலையிலும் ஈடுபட்டு உள்ளார். அதோடு அதிமுக முதல் அமைச்சரின் புகழ் பாடி தனது அதிமுக மீதான விசுவாசத்தைக் காட்டி உள்ளார். அது அவரது விருப்பம். ஆனால் அதற்காக காவல்துறையின் ஆடர்லி முறைக்கு வக்காலத்து வாங்குவதுபோல் முதல் அமைச்சர் புகழ் பாடுவதேன் என்ற வினா எழுவது ஒருபக்கம். இன்னொரு பக்கம்

எதற்கெடுத்தாலும் போராட்டம். சமீபத்தில் காவிரி பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து பல அரசியல் கட்சிகள் களமிறங்கின. அவர்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க தேர்ந்தெடுத்த இடம் ரயில் தண்டவாளம். தண்டவாளத்தில் இடையே கற்களுக்கு பஞ்சமில்லை. ஒரு பிரச்சனை ஏற்பட்டால் போலீசோடு மோதுவதற்கு கற்கள் தயாராக இருக்கும். அதனால் தான் எக்காரணம் கொண்டும் ரயில் மறியலுக்கு அனுமதி அளிப்பதில்லை. ஆனால் தடையை மீறினால்தான் போராட்டக்காரர்களுக்கு திருப்தி

சட்ட ஒழுங்கு நேர்வுகளில் போராட்டத்திற்கு காரணம் என்னவாக இருந்தாலும் காவல்துறை போராட்டக்கார்களின் எதிர்ப்பைத் தாங்கி கொள்ள வேண்டும். வசவுகளை கேட்டுக்கேட்டே செவி மரத்து விடுகிறது. அதனால் தானோ என்னமோ பொத்தி வைத்த உணர்ச்சிகள் சில சமயம் எரிமலையாக வெடிக்கிறது. மனநிலை தொய்வு அடையும் போது பொறுக்க முடியாமல் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்

காவலர்கள் உறங்காமல் பணி செய்தால் சமுதாயம் அமைதியாக உறங்க முடியும். வீட்டிலுள்ளோர் கண் விழிக்கும் முன்னரே வெளியேறி அவர்கள் கண்ணுறங்கும் வேளையில் வீடு திரும்பும் தமிழக காவல் பணி சுமை நிறைந்தது.’ ‘அடுத்த வேளை உணவு எங்கு கிடைக்கும் என்ற உறுதி இன்றி கிடைத்ததை சாப்பிட்டு, கொடூரங்களையே பார்ப்பதால் வெறுப்புக்கும் கோபத்திற்கும் உள்ளாகி வியாதிகள் தான் எப்போதும் துணை என்று வாழும் காவலர்களின் துயர் துடைக்கும் தாய் தமிழக முதலமைச்சர்

மகாபாரதப் போரில் அதர்மத்தை அழிப்பதற்காக கண்ணன் பழி ஏற்று பாண்டவர் வெற்றிக்கு வழி வகுத்தான். சமுதாயத்தில் நீதியை நிலை நாட்ட பல நேர்வுகளில் காவல்துறை பழியை சுமக்க வேண்டியிருக்கிறது. பழி சுமந்தாலும் அதர்மத்தை அழித்து அமைதி காத்த ஆறுதல்தான் ஒரு காவலர் பணியில் மேலும் பயணிக்க வைக்கும் உந்து சக்தி’ ‘கண்ணன் வஞ்சன் என்றால் காவலனும் வஞ்சன்தான். வஞ்சித்து கயவர்களை அடக்குவதில் காக்கிச் சட்டைக்காரன் ரொம்ப கெடிக்காரன்

மேலே அவர் உதிர்த்துள்ள வார்த்தைகளை பார்த்தீர்களா? எதற்கெடுத்தாலும் போராட்டம் என போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகிறார். போராடுவது நம் நாட்டின் அரசியல் சட்டம் நமக்கு அளித்துள்ள அடிப்படை உரிமை. போராடுபவர்கள் விளையாட்டுக்கு போராடுவதுபோல் கூறுகிறார். இவரே குறிப்பிடுவதுபோல் கடைசி கட்ட ஆயுதமாகத்தான் போராட்டம் செய்ய நேர்கிறதே தவிர போராட்டமே தொழிலாக கொண்டு யாரும் செயல்படுவதில்லை.

18.10.16 அன்றுகூட நானும் கலந்துக் கொண்ட ரயில் மறியல் போராட்டத்தில் தள்ளுமுல்லு ஏற்பட்டது. தடியடி நடந்து. காவல்துறையினரையின் வசவுக்கு பஞ்சமில்லை. சிபிஐ மாவட்டச் செயலாளர் காவல்துறையின் செயல்பாடுகளால் இடதுகால் மணிக்கட்டில் விரிசல் ஏற்பட்டு விழுந்து விட்டார். அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அமைதியாக தான் மறியல் போராட்டம் நடந்தது. மாதர் சங்க மாவட்ட தலைவர் காவலர் வசவுகளால் அர்ச்சிக்கப்பட்டார். தண்டவாளத்தில் அமர்ந்தோம். ரயில் என்ஜின் மீது நின்றோம். இதெல்லாம் ஆசையின் அடிப்படையிலா? .நடராஜன் குறிப்பிடுவதுபோல் தண்டவாளத்தில் கிடக்கும் ஜல்லிகள் எங்களைப் பார்த்து சிரித்தனவே ஒழிய, நாங்கள் அதை சீந்தவே இல்லை.

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது இயற்கையின் விதி. இவர் இதை புரிந்தாரா? தெரியவில்லை. இவர் தற்போது ஒரு அரசியல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என்பதையும் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, இந்த போராட்டத்தில் உள்ள நியாயத்தைப் பார்க்காமல், இந்த போராட்டத்திற்கு யார் காரணம் என்றதையும் குறிப்பிடாமல் போராட்டத்தைக் குறை கூறுகிறார். காவலர்களுக்காக கண்ணீர் சிந்தி, காவிரிக்கு கண்ணீர் சிந்தும் போரை எள்ளி நகையாடுகிறார். காவலர்கள் மீது அனுதாப அலையை உருவாக்க முயற்சிக்கிறார். இறுதியில்அம்மாபுகழ் பாடுகிறார். இது என்ன வகை மகாபாரதம் என தெரியவில்லை.

உச்ச நீதிமன்ற உத்திரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் மத்திய பாஜக அரசு அமைத்திருந்தால், தமிழகத்தில் இந்த போராட்டங்களே நடந்திருக்காது. இதை இவர் வசதியாக மறைத்துவிட்டார். காவிரிக்காக அதிமுக மட்டுமே போராடும் உரிமை பெற்றிருக்கிறது போலும். பெங்களூரு தீர்ப்பை ஒட்டி நடந்த மகாபாரதம்போல் அதிமுக தனது சக்தியை பயன்படுத்தி, தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்திருந்தால் ஒரு நொடியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்திருக்கும். அதை குறை கூற ஆ.நடராஜ்க்கு தைரியம் உண்டா? அதையெல்லாம் விட்டுவிட்டு போராட்டம் நடத்த தேர்ந்தெடுத்த இடம் தண்டவாளம் என கிண்டலடிப்பது எங்ஙனம் நியாயம்? தர்மம்? இதுதான் அதர்மத்திற்கு எதிரான தர்மப்போரா?

நான் மேலே குறிப்பிட்டதைப் போல், அவ்வளவும் நடந்த பிறகும் மக்கள் நலக்கூட்டணி தொண்டர்களுக்கும் தோழர்களுக்கும் தண்டவாளத்தில் கற்கள் கிடப்பது தெரியவே இல்லை. ஒருவேளை இந்த கட்டுரையை முன்னமே எழுதியிருந்தால், அதை படித்திருந்தால் இவரின் ஆசை ஒருவேளை நிறைவேறி இருக்கலாம். ஒரு ஓய்வு பெற்ற உயர் காவல் பொறுப்பில் இருந்த பொறுப்புள்ள காவல் அதிகாரி சொல்லும் சொல்லா இது? எழுதும் எழுத்தா இது? இம்மாதம் 17,18 தேதிகளில் திமுக, மக்கள் நலக் கூட்டணி மற்றும் விவசாயிகள் நடத்திய இந்த 48 மணி நேர மறியல் போராட்டத்தில் எங்காவது இவ்வண்ணம் நடந்திருக்குமா? எதற்காக இப்படி பிதற்றுகிறார்? இதன்மூலம் என்ன சொல்ல விளைகிறார்? ஒருவேளை அவ்வண்ணம் செய்திருக்க வேண்டும் என்கிறாரா?

ஆக மக்கள் நடத்தும் பல போராட்டங்களில் கல் பறப்பது யாரால் என்பதை ஒப்புதல் வாக்குமூலம் தந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரியும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் நமது நன்றியை உரித்தாக்கிக் கொள்வோமாக.

காவலர் பணி கடுமையான பணி என்பதை மறுப்பதற்கில்லை. இருவேறு கருத்தும் இல்லை. நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஜனநாயக உரிமைகளும் இவர்களுக்கு வழங்க வேண்டும். எட்டு மணி நேர வேலை; எட்டுமணி நேர உறக்கம்; எட்டு மணி நேர ஓய்வு இவர்களுக்கு அவசியம் வேண்டும். இந்த உரிமை உலக மாந்தர்களுக்கு சும்மா கிடைத்தா? எந்த போராட்டத்தை இவர் கொச்சைப் படுத்துகிறாரோ அந்த போராட்டத்தின் மூலம் பல்லாயிரம் உயிர் தியாகம் மூலம் உலக மாந்தர்கள் பெற்று உள்ளனர். இன்றைக்கும் உரிமைக்காக குரல் கொடுக்கும் இயக்கம் இருக்கிறதென்றால் அது கம்யூனிச இயக்கமே. அதை மேற்கு வங்கத்தில் சங்கம் அமைத்து கொள்ளும் உரிமை ஆர்டலிக்கு வேட்டு வைத்தது உள்ளிட்டு அனைத்து உரிமையும் வழங்கியதை வரலாறு பேசும்.

காக்கி உடைக்குள் குமுறும் நெஞ்சங்கள் என்று கர்ஜித்தவர் மறைந்த மார்க்சிய போராளி பி.டி. ரணதிவே. தமிழகத்தில் அன்று சங்கம் கேட்டு போராடிய நைனார்தாஸ் உண்ணாவிரதத்தை ஓடோடி ஆதரித்தவரும், சட்டமன்றத்தில் சண்டமாருதம் செய்தவரும் தமிழகத்தின் மார்க்சிய தவப்புதல்வன் ஆர்.உமாநாத். இப்படிப்பட்ட வீர வரலாறுகளை எல்லாம் மறைத்துவிட்டு, அல்லது மங்கவிட்டு தற்போதுஅம்மாபுகழ் பாடி, கெஞ்சி பெறுவதுதான் மகாபாரதமா? அடிமையாக இருப்பதும், ஆர்த்தெழுந்து போரிடுவதும் அவரவர் உரிமை; அதற்காக போராட்டங்களை கொச்சப்படுத்துவதும், அதை கொடூரச்செயலாக சித்தரிப்பதும் என்ன வகை மகாபாராதம்?

பார் புகழும் மகாபாரதம் தொட்டு, மனித சமுதாயம் கடந்து வந்த பாதை முழுவதும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறுகள் என்கிறது மார்க்சியம். மார்க்சீயத்தை மறுதளிக்கும் கூறு இக்கட்டுரை பதிவுகளில் இருப்பது ஏற்க தக்கதல்ல. போராட்டம் மட்டுமே எல்லோருக்கும் புதுவாழ்வை பெற்றுத்தரும் என்பதை மட்டும் இங்கே ஆ.நடராஜ் போன்றோருக்கு பதிவிடுவோம்.

காவல்துறையை ஆளும் கட்சிகள் தங்களது தேவைகளுக்கு பயன்படுத்தி கொண்டதே இல்லையா? லாக்-அப் மரணம் உட்பட காவல்துறையின் மனித உரிமை மீறல்களுக்கு அளவு உண்டா? காவல்துறை குறித்த ஆளும் வர்க்கத்தின் அணுமுறை மாறும் போதுதான், அது உண்மையில் மக்களுக்கான காவல் துறையாக இருக்கும்.

-பி.தங்கவேலு

இது எடிட் செய்யப்பட்டு, 23.01.16 தீக்கதிரில் பிரசுரம் ஆனது. நன்றி தீக்கதிருக்கு..!