Sunday, 10 April 2016

வெற்றிக்கனியைப் பறிப்போம்!

#
தேமுதிக மக்கள் நலக்கூட்டணியுடன் தமாகா இணைந்தது! தேமுதிக 104; மதிமுக 29; தமாகா 26; சிபிஎம் 25; சிபிஐ 25; விசிக 25 என அதிகாரப்பூர்வ பங்கீடு சற்று முன் அறிவிப்பு! வெற்றி கூட்டணி அமைந்தது! வெற்றிக் கனியை பறிக்க களபணியை ஆற்றுவோம் கண் துஞ்சாது!
#this time 4 mnk
-----\\\\
கனவு நனவானது! 

கூட்டணிக் கனவு நனவானது;
இதுபோல்- 
கூட்டணி ஆட்சி கனவும் நனவாகும்!" 
 -திருமா 
#this time 4 mnk
----\\\\
"வேடதாரியைவீட்டுக்கு அனுப்பு..!"

"முதலில் மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும்; கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்; பின்னர் பார்கள் மூடப்படும்!"

அம்மா தாயே... இதத்தான அன்னிக்கு கேட்டோம்! என்னா வெங்காயத்திற்கு சசிபெருமாள் உயிரை குடிச்சே! எங்க உயிரை வதச்சே! சொல்லு தாயி..! சொல்லு..! 
இந்த வேடதாரியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்தினால் மட்டுமே தமிழகம் தலை நிமிர்ந்து, தல்லாட்டம் இல்லாமல் நடைபோடும்!
#this time 4 mnk
-----\\\\
"ஓட்டு போட்டாச்சி..!" 
"ஓட்டு போட்டாச்சி..!" 
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி ஜெயிச்சாச்சி..!
ஆம், 
தமாகா... 
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது... வெற்றியை கட்டியம் கூறிய வரலாற்று நிகழ்வு..! அல்லவா?! அந்நாளில் ஓட்டு போட்டாச்சி; யாருக்கு போட்டேன் என்பதையும் பாத்தாச்சி..! தேமுதிக மக்கள் நலக் கூட்டணி ஜெயிச்சாச்சி..! 

இதுமாதிரி... 
தமிழகத்தில் 25 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டுப் போடும் இயந்திரங்கள் வைக்கப் படுகிறது! நேற்று 9.4.16 அன்று... சேலம் வடக்கு தொகுதியில்... 
ஓட்டு போடும் செய்முறை பயிற்சியில், சிபிஎம் சேலம் மாவட்டக்குழுச் செயலாளர் பி.தங்கவேலு மற்றும் தோழர்களும்... பொதுமக்களும்... சேலம் ராகிருஷ்ணாபார்க்..!
#this time 4 mnk
---\\\
தரம் இருந்தால்தானே..!
தரக்குறைவாக பேசுவது திராவிட கலாச்சாரத்தின் அடிப்படை! 

எதற்கு பேச வேண்டும்; பிறகு மன்னிப்பு கேட்க வேண்டும்? வெட்டிபுட்டு கட்டிப்புடிச்சி அழுவது வீண்!

தனிநபர் விமர்சனம் தமிழகத்தில் இன்று நேற்றல்ல; 50ஆண்டுகளாகவே! 

தரம் இருந்தால்தானே தாழ்ந்து போவதற்கு!?

போதையில் இருப்பவர் யேசினால்- ஒதுங்கி  போவதும்,  வயதானவரை யேசினால்- பச்சாதாபம் கொள்வதும் சமூகத்தின் பலவீனம்! 

கம்யூனிஸ்ட்கள் எங்காவது யாரையாவது இவ்வாறு பேசி இருக்கிறார்களா? நமக்கு தேவை கம்யூனிச கலாசாரமே! அதாவது சமத்துவக் கலாசாரம்!
----\\\
கருவேப்பிலைத்தான்..!
இதுநாள் வரை- இடதுசாரி கட்சிகளை தவிர மற்ற வளரும் கட்சிகள் சீட்டுக்காகவே பெரிய கட்சிகளுடன் கூட்டு சேருகின்றன!

இந்த தேர்தலில் தான்- முதல் முறையாக வளரும் ஜனநாயக கட்சிகளும் (விசிக, மதிமுக), இடதுசாரி கட்சிகளும் (சிபிஎம், சிபிஐ) கொள்கை அடிப்படை மக்கள் நலக் கூட்டணி உருவாகி உள்ளது!

ஆம்! சிறிய கட்சிகளை திமுக அதிமுக கருவேப்பிலையாகத்தான் பயன்படுத்துகின்றன!

இன்று 7.4.16 news 7 ?கேள்வி நேரம்!
----\\\\
"நன்றி..! ராமுக்கும் ஞாநிக்கும்..!"
#
* பாவம் மனுஷ்..! திருமா தெளிவாக சொன்னார்- 'கூட்டணி' என்றால், திமுகவை ஆதரிக்க தயக்கமில்லை என ஆயிரம் தடவை சொல்லியும், திமுக ஏற்காததால் தான் "மக்கள் நலக் கூட்டணி" உருவாகி, அடிப்படை வர்க்கங்களான தலித்துகளும், மார்க்சிஸ்ட்களும் கைகோர்க்கிற நிலை தமிழகத்தில் உருவானது! அதற்காக திமுகவுக்கு நன்றி கூறுவோம்!


* 'இடதுசாரிகள் அதிமுகவையோ, திமுகவையோ ஆதரித்தால் கொள்கை சார்ந்தது; அதை எதிர்த்தால் ஆதாயம் சார்ந்ததா?' என ஜென்ராம், ஞாநி கேள்விக்கு மனுஷ் பதில் தராமல் போய் விட்டார்! ஆம், இடதுசாரிகள் ஆதாய அரசியல் செய்பவர்களே! 'உழைப்பாளி மக்களுக்கு என்ன ஆதாயம்' என்று பார்க்கும் சுயநலம் அன்றும் இன்றும் என்றும் இருக்கும்!  திமுக அதிமுக வைபோல் உழைப்பாளிகளை சுரண்டும் கும்பலுக்கும் (அதோடு தனக்கும், தன்னை சார்ந்தோருக்கும்) என்ன ஆதாயம்  அரசியல் ஒருபோதும் இருக்காது!
வேறு வார்த்தையில் சொன்னால், 'சுட்டு' போட்டாலும்  அரசியல் காய் களை நகர்த்தாது; அதற்காக சாதிய மதவாத அமைப்புகளோடும் சமரசம்- திமுக அதிமுக வைபோல் செய்யாது! 

* இதற்கு அழகாக ஜென்ராமும், ஞானியும் சொன்னார்கள்- 'தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக ஆதரவு நிலையை பொறுத்தே இடதுசாரிகள் நிலை இருந்தது என்று ஜென்ராமும், மேற்கு வங்கத்தில் பாஜக வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவே தற்போது இடதுசாரிகளின் நிலை இருக்கிறது என்று ஞாநி யும் ஆணி அடித்தார் போல் மனுஷ் க்கு பதிலடி கொடுத்தது அருமை!

* அதைவிட ஒரு செக் 'டாப்'- ஆதாயம் என்பது எது? பணமா? பெற்றது யார்? சிபிஐயா? சிபிஎம்மா? யார்?யார்? யார்? என கேள்வி கனைகள் உயரவே  'என்னை கார்னர் பன்னாதீங்க' என திணறியது பரிதாபம்! ஆம், மனுஷ் சின் வேடம் களைந்தது! அம்பலம் ஆனது!மனுஷ்சின் நாடகமும்தான்! 

* ஆயிரம் நன்றிகள் ராமுக்கும் ஞாநிக்கும்!
----\\\\
நடத்தினால் நன்று!

நியாயமான தேர்தல் தமிழகத்தில் நடந்தால், நடத்தினால் நன்று! 

பணபட்டுவாடாவைத் தடுப்பது தேர்தல் கமிசனுக்கு சவால் மிக்கது! 

பணபட்டுவாடாவைத் துணிவுடன் தடுத்தால், 'மக்கள் நல அரசு' அமைவது உறுதியிலும் உறுதி!
#this time 4 mnk dmdk
----\\\\
"எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக..!"
#
முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி... "தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்டு, தேர்தல் விதிமுறைகளை காலில் போட்டு மிதிக்கப்படுவதற்கு, திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே காரணம்; இங்குபோல் நாட்டில் வேறெங்கும் இல்லை; திருமங்கலம் பார்முலா என கூறப்படுவதே இதற்கு காரணம்!" என இன்று 8.4.16 புதிய தலைமுறை தொலைக்காட்சி  விவாதத்தில் நெத்தியடி கொடுத்தார்! 

திமுக கண்ணதாசனும், அதிமுக சமரசமும் 'திருடனுக்கு தேள் கொட்டியதைப்போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்! 
'உங்க சண்டையில் எங்கிட்ட வாங்குன ஆயிரம் ரூபாய மறந்திடாதிங்கப்பா' என்பதுபோல் பாமக பாலு  யோக்கிய சிகாமணி தனக்குத்தானே புகழாரம் சூட்டிக் கொண்டார்! பாமக பென்னாகரம் இடைத்தேர்தல் பவுன் கொடுத்ததும்,  கொடுக்க முடியாமல் தவித்ததும் பென்னாகரம் வாக்காளர்கள் அறிவார்கள்! 

மார்க்சிஸ்ட் பாக்யம் 'திருடனாய் பார்த்து திருந்தால் விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதுபோல் துவங்கினாலும், தேர்தல் கமிஷனர் லக்கானி கருத்துக்குப் பின், '30% இளம் வாக்காளர்கள் பணபட்டுவாடாவை தடுக்க வேண்டுமென' நறுக்கு தரித்தாற்போல் கூறினார். நெறியாளர் தியாகச்செம்மல் '30% இளைஞர்களை கட்சிகள் வாக்காளர்களாக பார்த்தாலும், தேர்தல் கமிஷனர் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கிறார்' என முடித்தது சிறப்பு!
#this time 4 mnk dmdk
----\\\
இதுதான்  நாகரிகமா?
"இதுதான்  நாகரிகமா? தேர்தல் கமிஷனும், காவல்துறையும் இருக்கிறதா?" 

ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டம் கூட அனுமதி மறுத்து, வழக்கு போடும் போலீஸ், போராட்டத்திற்கு  தேர்தல் கமிஷனில் (ஆர்ஓ விடம்) அனுமதி வாங்க வேண்டுமென உரும்புகிறது காவல்துறை!  

தற்போது வைகோ,  உருவபொம்மையை எரிப்பதும், செருப்பால் அடிப்பதும் போன்ற 'தேசபக்த' பணியை, 'மிக நாகரிகமான' முறையில் வெறிகொண்டு,  திமுக தமிழகம் முழுவதும்...  அரங்கேற்றி... செயலாற்றி... வருகிறதே என்ன செய்து கொண்டிருக்கிறது காவல் துறையும், தமிழக அரசும்? 

எல்லாவற்றிக்கும் மேலாக 'வானளாவ அதிகாரம்' படைத்திருக்கும் தேர்தல் கமிஷன் கைக்கட்டி... வாய்பொத்தி... வேடிக்கை பார்க்கிறதே நியாயமா?
#this time 4 mnk dmdk
 ----\\\\
"நெருடலே!"
#
காங்கிரஸ் அதிருப்தி ஜோதிமணி, தேமுதிக அதிருப்தி சந்திரக்குமார் போன்றோருக்கு ஊடகங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? குறிப்பாக புதிய தலைமுறை டிவியில் இன்று 9.4.16 ஜோதிமணி குறித்து, புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில்... சந்திரக்குமாரிடம் அக்னிபரிட்சை நிகழ்ச்சியில்... 
அலசல் நெருடலே!
#thistimeformnkdmdk
-----\\\\