Tuesday, 21 July 2015

நினைவஞ்சலி!

கும்பகோணத்தில் கருக்கிய மொட்டுகளுக்கு
இன்று 16.7.15 பதினோறாம் நினைவு நாள்..!

சேலம் கலைக்கல்லூரியின் முன் 
இந்திய மாணவர் சங்கம்
நினைவஞ்சலி!

கலை மகள் விலை மகள் ஆவதையோ,
காவி மகள் ஆவதையோ அனுமதியோம்
என  சூளுரை!
========================================================================

இன்று 16.7.15 திருசெங்கோட்டில்,
தமிழிநாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில்...

கவுரவம் என்கிற பெயரில் நடக்கும் "ஆணவக்கொலை"யைத் தடுக்கத் தனிச்சட்டம் கொண்டு வா!

கோகுல்ராஜ்ஐ கொலைச்செய்த யுவராஜ்ஐ கைது செய்! 
என...
ஆவேச ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டத்தைக் கூட அனுமதிக்காத காவல்துறையின்
அடக்குமுறை அட்டகாசம்!
ஐநூறு பேர் கைது!

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்
திருசெங்கோடு ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் அத்துமீறலைக் கண்டித்து...
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆபீசு முன்...
16.7.15 மாலை 6 மணி...
கண்டன ஆர்ப்பாட்டம்!






========================================================================

இன்று ஆடி 01 (17.07.15)
நிலமீட்பு போராளி (நங்கவள்ளி) சோரகை தியாகி பெருமாள் 
67 வது நினைவுநாள் கொடியேற்றல்!

தலைமை: ஏ.வெங்கடாசலம்
இடம்: பெருமானூர்

நினைவு உரை:
பி.தங்கவேலு சிபிஐஎம் மாவட்டக்குழுசெயலாளர்,
எஸ்பி.தங்கவேல் தவிச மாவட்டச்செயலாளர்,
பழ.ஜீவானந்தம் ஊராட்சி ஒன்றிய சேர்மேன்,
கே.ராஜாத்தி மாதர்சங்கம் மாவட்ட செயலாளர்,
எஸ்வி.வேம்பன் விச ஒன்றிய செயலாளர்
மற்றும் சிலர்...

"தியாகிகளே நீங்கள் புதைக்கப்பட வில்லை; 
விதைக்கப்பட்ட வீரிய வித்துக்கள்! உங்களுக்கு எங்கள் வீரவணக்கம்!"
========================================================================

கட்சி காங்கிரஸ்-
மாநில மாநாடு முடிவுகள்-

மாவட்ட செயல்திட்டம் 
விளக்க பேரவை 
18.07.15., சேலம்.

தலைமை: கே.ஜோதிலட்சுமி மாவட்ட செயற்குழு.,

விளக்கம்: கே.தங்கவேல்
மாநிலச் செயற்குழு.,
எஸ்.முத்துக்கண்ணன் 
மாநிலக்குழு.,
பி.தங்கவேலு 
மாவட்டக்குழு செயலாளர்.

பங்கேற்பு:
இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச்செயலாளர், 
மாவட்ட உபகுழு உறுப்பினர்கள்...!

========================================================================

அறிவியல் மக்களுக்கே!

அறிவியல் நாட்டிற்கே!
அறிவியல் சுயச்சார்புக்கே!

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
சேலம் மாவட்ட 12வது மாநாடு-19.07.15.

சேலம் உருக்காலை மனமகிழ் மன்றத்தில் தற்போது நடைபெற்றது!

மாநில செயலாளர் பேரா சுப்ரமணி துவக்கி வைத்து உரை...  அருகில்
மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்டத் தலைவர் இளங்கோ, 
பொருளாளர் பாலச்சரவணன் மற்றும் சஹஸ், சிவக்குமார் ஆகியோர்...

========================================================================

இன்று 20.07.15 சேலத்தில்...
இடதுசாரிக்கட்சிகள் சிபிஐஎம், சிபிஐ, சிபிஐஎம்எல், எஸ்யூசிஐசி ...
ஊழல் எதிர்ப்புத்தினம் ஆர்ப்பாட்டம்!


தலைமை: ஏ.மோகன் 
சிபிஐ மாவட்டச்செயலாளர்.

கண்டன உரை:
பி.தங்கவேலு 
சிபிஎம் மாவட்டக்குழுச்செயலாளர்,
கே.ஜோதிலட்சுமி 
சிபிஎம் மாநிலக்குழு
முனுசாமி
சிபிஐ மாவட்ட துணைச்செயலாளர்,
சந்திரமோகன் சிபிஐஎம்எல்,
மோகன் எஸ்யூசிஐசி
மாவட்ட பொறுப்பாளர்,
மோகனசுந்தரம் சிபிஐஎம்எல் மாவட்டச்செயலாளர்
உள்ளிட்டோர்... 500க்கும் மேலானோர் ஊழல்எதிர்ப்பு முழக்கமிட்டனர்!
ஊழலற்ற சமுதாயம் அமைக்க இடதுசாரி கட்சிகளால் மட்டுமே முடியும்
என விண்ணதிர முழங்கினர்!

========================================================================

சேலம் மாநகரம் கிழக்கு அம்மாபேட்டையில்... 
இன்று  20.07.2015  
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 

தெருமுனைக்கூட்டம்!

ஊழலற்ற சமுதாயம் இடதுசாரி கட்சிகள் மட்டுமே படைக்க முடியும்! வாருங்கள்! ஊழல் ஒழிப்பு போரில் கரம் கோருங்கள்..! 
என...

கே.பச்சமுத்து தலைமையில் நடந்த தெருமுனைக்கூட்டத்தில்...

சிபிஐஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, 
மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி, 
மாநகர கிழக்கு செயலாளர் வழக்குரைஞர் பொன்.ரமணி,
மாநகரக்குழு உறுப்பினர்கள்... ஜி.சுல்தான், டி.சாவித்திரி, சி.சம்பத்
 உள்ளிட்டோர் உரையாற்றினர்!



Wednesday, 8 July 2015

கருமலைக்கூடல் காவல் நிலையத்தில்...
அப்பாவி இளைஞன் அடித்து கொலை! 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 
கடும் கண்டனம்! 
கொலை செய்த காவல் அதிகாரிகளை... 
கொலை வழக்கில் கைது செய்!

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கருமலைக்கூடலில்  05.07.15 மாலை ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது. அது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கருமலைக்கூடலில் குடியிருக்கும் நடேசன் மகன் கோகுல்கண்ணன் (21) என்பவரை நேற்று இரவு 12 மணி அளவில் அவரது வீட்டில் சென்று பிடித்து வந்துள்ளனர். கூடவே கோகுல்கண்ணின் அப்பாவும், அம்மாவும் வந்துள்ளனர். அவர்களை காவல் நிலையத்திற்கு வெளியே நிற்க சொல்லிவிட்டு, கோகுலகண்ணை உள்ளே அழைத்து சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் கோகுல்கண்ணின் அழுகுரல் கேட்டு, வெளியே இருந்த அவரது பெற்றோர் உள்ளே சென்று, “எங்கள் மகனை அடிக்காதீர்கள்; அவன் அப்படி பட்டவன் அல்ல” என்று போலீஸ்காரர்கள் காலில் விழுந்த கெஞ்சி கதறி உள்ளனர். அவர்களை, “நீங்கள் இங்கே வரக்கூடாது; உங்க பையனை அடிக்கவில்லை; கத்துபவன் வேறொருவன்” என்று சொல்லி விரட்டியுள்ளனர். ஆனாலும் விடிய விடிய காவல் நிலையத்தின் வெளியே ரோட்டில் கோகுல்கண்ணன் பெற்றோர் கிடந்துள்ளனர்.

இன்று 6.7.15 காலை 7 மணி அளவில், “உன் மகன் செத்துவிட்டான்; பாடி சேலம் ஆஸ்பத்திரியில் இருக்கிறது; போய் வாங்கிக்கொள்” என்று கோகுல்கண்ணன் அப்பா நடேசனிடம் கூறி உள்ளனர். அதன்பின் தகவல் அறிந்ததும் மக்கள் கூடி மறியல் உள்ளிட்டு செய்தார்கள். சேலம், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் அங்கே முகாம் இட்டு, கட்டபஞ்சாய்த்து செய்து வருவதாக தெரிகிறது.

விசாரனைக்காக பிடித்து வந்த கோகுல்கண்ணன் என்ற 21 வயது இளைஞனை கருமலைக்கூடல்  காவல் நிலையத்தில் அடித்தே கொலைச் செய்துள்ள கருமலைக்கூடல் காவல்துறையின் காட்டுமிராண்டித் தனத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் கோகுல்கண்ணை அடித்தே கொலை செய்த கொலைகாரக் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோரை கொலை வழக்கில் கைது செய்திட வேண்டும் என்றும், கோகுல்கண்ணன் குடும்பத்தாருக்கு ரூ50 லட்சம் நட்ட ஈடு வழங்கிட வேண்டும்  என்றும், கொலையை மறைக்க கட்ட பஞ்சாய்த்தில் ஈடுப்பட்டுள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசைக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்டக்குழு கேட்டுக் கொள்கிறது


-பி.தங்கவேலு, சேலம் மாவட்டக்குழுச்செயலாளர்.



 நாடோரே! 
நல்லோரே! சிந்திப்பீர்!
விலை மதிப்பற்ற மனித உயிருக்கு ரூ12 லட்சமா? பிரதான எதிர்கட்சிகள் காவல்துறைக் கொலைக்குத் துணையா? நாட்டோரே! நல்லோரே! சிந்திப்பீர்!

சிபிஐ(எம்) இன்று 08.07.2015 
மேட்டூர் தாசில்தார் ஆபீசு முன் 
ஆர்ப்பாட்டம்! 

கொலைக்கு பிரதான காரணமான உதவி ஆய்வாளர்கள் சந்திரகுமார், கீர்த்திவாசன் தப்பிப்பு! அப்பாவிகள் சஸ்பெண்ட்! மேட்டூர் டிஎஸ்பி கட்டப்பஞ்சாய்து! தேமுதிக, திமுக உடந்தை!

எஸ்ஐ கள் சந்திரக்குமார், கீர்த்திவாசன் உள்ளிட்டு கொலை வழக்கில் கைது செய்!

உயர்மட்ட மருத்துவக்குழு மூலம் மறு பிரேத பரிசோதனை செய்! போலீஸ்க்கு ஆதரவாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடு!

50 லட்சம் நஷ் ஈடு வழங்கு!

கட்டப்பஞ்சாய்த்து மீது நடவடிக்கை எடு! 





காவல்துறையா? 
கொலைத்துறையா?
?????????????????????????

விலைமதிப்பற்ற மனித உயிருக்கு ரூ12 லட்சமா?
பிரதான எதிர்கட்சிகள் காவல்துறைக் கொலைக்குத்துணையா?
நாட்டோரே! நல்லோரே! சிந்திப்பீர்!

சிபிஐ(எம்) இன்று 09.07.2015  

சேலத்தில் ஆர்ப்பாட்டம்!

தலைமை: கே.ஜோதிலட்சுமி (மாநிலக்குழு) 
கண்டன உரை: பி.தங்கவேலு (மாவட்டக்குழுச்செயலாளர்)
பொன்.ரமணி, எம்.முருகேசன், எம்.கனகராஜ், ஏ.சுந்தரம் 
(மாநகர செயலளார்கள்)

கொலைக்கு பிரதான காரணமான உதவி ஆய்வாளர்கள் 
சந்திரகுமார், கீர்த்திவாசன் தப்பிப்பு! 
அப்பாவிகள் சஸ்பெண்ட்! 

மேட்டூர் டிஎஸ்பி உள்ளிட்டு 3 (சேலம், தர்மபுரி, ஈரோடு) 
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கட்டப் பஞ்சாய்த்து! 
தேமுதிக, திமுக உடந்தை!

எஸ்ஐ கள் சந்திரக்குமார், கீர்த்திவாசன் உள்ளிட்டு 
போலீசார் அனைவரையும் கொலைவழக்கில் கைது செய்!

கொலையை மூடிமறைத்த 
சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் மீது நடவடிக்கை எடு!

உயர்மட்ட மருத்துவக்குழு மூலம் மறு பிரேத பரிசோதனை செய்!

50 லட்சம் நஷ் ஈடு வழங்கு!

கட்டப்பஞ்சாய்த்து செய்தஅனைவரும் மீதும் நடவடிக்கை எடு!



Friday, 3 July 2015

சோமம்பட்டி தலித் குடியிருப்பு சூறையாடல்! 
20 வீடுகளுக்கு தீ வைப்பு!
சேலத்திலும் 'நத்தம்பொட்டாய்' ஆக்கும் முயற்சி!

தமிழ்நாடு 
தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம்!
சம்பவ இடம் சென்று ஆறுதல்! 
உரிய நட்ட ஈடு தர கோருதல்!


சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம், வாழப்பாடி ஒன்றியம் சோமம்பட்டி ஆதி திராவிடர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்கு அருகில் விலாரிபாளையம் என்கிற வன்னியர்  குடியிருப்பு உள்ளது; இந்த குடியிருப்பைச் சார்ந்த வன்னியப்பிரியா என்பவரும், மோமம்பட்டி தலித் குடியிருப்பை சார்ந்த  சரவணன் என்பவரும் காதலித்து உள்ளார்கள். 

இரு தரப்பு குடும்பமும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 29.6.15 அன்று திருமணம் செய்து கொண்டனர்.  அன்றைய தினமே சேலம் மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.  

இதை அறிந்த வன்னிய சமூகத்தை சேர்ந்த சமூக விரோத கும்பல் ஒன்று அன்று இரவே சோமம்பட்டி தலித் குடியிருப்புகுள் புகுந்து 20 க்கும் மேற்பட்ட குடிசைகளை சூறையாடி உள்ளனர்; பெட்ரோல் குண்டு உள்ளிட்டு நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளனர்; இதனால் சில தலித் களுக்கு கை-கால் முறிப்பு ஏற்பட்டுள்ளது; சிலருக்கு மண்டை உடைந்துள்ளது; ஆட்டோ உள்ளிட்டு சில வீடுகளுக்கு நெருப்பு வைத்துள்ளனர். 

மொத்தத்தில் மீண்டும் ஒரு தர்மபுரி நத்தம் கொட்டாய்யைப் போல் உடைமைகளை, பொருட்களை அடித்து நொறுக்கி அராஜகம், வன்முறை வெறியாட்டம் நடத்தி உள்ளனர். 

தகவல் கிடைத்தும் சேலத்தில் முகாமிட்டு இருந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் தோழர் கே. சாமுவேல்ராஜ், சேலம் மாவட்டச்செயலாளர் தோழர் ஆர்.குழந்தைவேல், மாவட்ட துணைச் செயலாளர் தோழர் என்.பிரவீன்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலூக்கா செயலாளர் தோழர் வி.பழனிமுத்து உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு 30.6.2015 அன்று சென்று பார்வையிட்டனர்;  பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆறுதல் கூறினர். 

அதோடு- பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்க வேண்டும்; சூறையாடலில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்திட வேண்டும்; புதுமணம் தம்பதிகளுக்கு உரிய பாதுக்காப்பு அளித்திட வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சித்தலைவரையும், தமிழக அரசையும் கேட்டுக்கொண்டுள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  என்றாலும் பதட்டம் நீடித்து வருகிறது.

ஆதிக்க சாதி வெறியர்களின் வன்முறை வெறியாட்டத்தை அனுமதியோம்! 
மக்கள் ஒற்றுமை காப்போம்!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

சேலத்தில்.! 
50,000 கையெழுத்து வழங்கல்!
பேரணி-ஆர்ப்பாட்டம்!

மோடி அரசின், 'நிலம் கையகப்படுத்தும் சட்டம்' என்ற 
"நிலம் அபகரிப்பு சட்ட"த்தைத் திரும்ப பெற கோரி... 
நாடு முழுவதும் 5 கோடி கையெழுத்து இயக்கம்!  
அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல்!

30.06.2015 செவ்வாய் மதியம் 12 மணி
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்

தோழர் ஏ.பொன்னுசாமி மாவட்டத்தலைவர் தவிச

திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.தங்கவேல் உரை...

அருகில் சிபிஐஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு,
தவிச மாவட்ட செயலாளர் தோழர் எஸ்பி.தங்கவேல்,
நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தோழர் பழ.ஜீவானந்தம்
மற்றும் பலர்..!

சேலம் மாவட்ட ஆட்சியரிடம் 50,000 விவசாயிகளிடம் பெற்ற கையெழுத்து படிவங்கள் தரப்பட்டது. அதை மத்திய அரசுக்கு அனுப்பிட கோரப்பட்டது.
சிபிஐ(எம்) கண்டனம்! ஆறுதல்!


24.6.15 அன்று படுகொலை செய்யப்பட்ட தலித் பொறியியல் மாணவன் கோகுராஜ் குடும்பத்தார்... மற்றும் விசிக வினர்...
கொலைவழக்காக மாற்ற கோரி...
இரண்டாம் நாளும்,
கோகுல்ராஜ் தாயார் ஐந்தாம் நாளும்
உண்ணாநிலை போராட்டம்!

பி.தங்கவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி., சேலம் மாவட்டக்குழு செயலாளர் 
சாமுவேல்ராஜ், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், 
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர்,
ஆர்.குழந்தைவேல், தீஒமு., மாவட்டச் செயலாளர் 
என்.பிரவீன்குமார் தீஒமு., மாவட்ட துணைச்செயலாளர் 


உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல்! 
இணைந்த கைகளாக போரிட உறுதியளித்தல்!


சிபிஐ(எம்) முற்றுகை-ஆர்ப்பாட்டம்! 

தலித் பொறியாளர் கோகுல்ராஜ் மரணத்தை...
கொலை வழக்கில் பதிவு செய்! 
50 லட்சம் நிவாரணம் வழங்கிடு! 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
29.06.15 மாலை 5 மணி

சேலம் சரக காவல் துணைத்தலைவர் (DIG) அலுவலகம் முன் 
முற்றுகை-ஆர்ப்பாட்டம்! 

10 பெண்கள் உள்ளிட்டு 65 பேர் கைது! 
போலீஸ்சுடன் தள்ளுமுள்ளு!