Friday, 3 July 2015

சோமம்பட்டி தலித் குடியிருப்பு சூறையாடல்! 
20 வீடுகளுக்கு தீ வைப்பு!
சேலத்திலும் 'நத்தம்பொட்டாய்' ஆக்கும் முயற்சி!

தமிழ்நாடு 
தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம்!
சம்பவ இடம் சென்று ஆறுதல்! 
உரிய நட்ட ஈடு தர கோருதல்!


சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம், வாழப்பாடி ஒன்றியம் சோமம்பட்டி ஆதி திராவிடர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்கு அருகில் விலாரிபாளையம் என்கிற வன்னியர்  குடியிருப்பு உள்ளது; இந்த குடியிருப்பைச் சார்ந்த வன்னியப்பிரியா என்பவரும், மோமம்பட்டி தலித் குடியிருப்பை சார்ந்த  சரவணன் என்பவரும் காதலித்து உள்ளார்கள். 

இரு தரப்பு குடும்பமும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 29.6.15 அன்று திருமணம் செய்து கொண்டனர்.  அன்றைய தினமே சேலம் மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.  

இதை அறிந்த வன்னிய சமூகத்தை சேர்ந்த சமூக விரோத கும்பல் ஒன்று அன்று இரவே சோமம்பட்டி தலித் குடியிருப்புகுள் புகுந்து 20 க்கும் மேற்பட்ட குடிசைகளை சூறையாடி உள்ளனர்; பெட்ரோல் குண்டு உள்ளிட்டு நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளனர்; இதனால் சில தலித் களுக்கு கை-கால் முறிப்பு ஏற்பட்டுள்ளது; சிலருக்கு மண்டை உடைந்துள்ளது; ஆட்டோ உள்ளிட்டு சில வீடுகளுக்கு நெருப்பு வைத்துள்ளனர். 

மொத்தத்தில் மீண்டும் ஒரு தர்மபுரி நத்தம் கொட்டாய்யைப் போல் உடைமைகளை, பொருட்களை அடித்து நொறுக்கி அராஜகம், வன்முறை வெறியாட்டம் நடத்தி உள்ளனர். 

தகவல் கிடைத்தும் சேலத்தில் முகாமிட்டு இருந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் தோழர் கே. சாமுவேல்ராஜ், சேலம் மாவட்டச்செயலாளர் தோழர் ஆர்.குழந்தைவேல், மாவட்ட துணைச் செயலாளர் தோழர் என்.பிரவீன்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலூக்கா செயலாளர் தோழர் வி.பழனிமுத்து உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு 30.6.2015 அன்று சென்று பார்வையிட்டனர்;  பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆறுதல் கூறினர். 

அதோடு- பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்க வேண்டும்; சூறையாடலில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்திட வேண்டும்; புதுமணம் தம்பதிகளுக்கு உரிய பாதுக்காப்பு அளித்திட வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சித்தலைவரையும், தமிழக அரசையும் கேட்டுக்கொண்டுள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  என்றாலும் பதட்டம் நீடித்து வருகிறது.

ஆதிக்க சாதி வெறியர்களின் வன்முறை வெறியாட்டத்தை அனுமதியோம்! 
மக்கள் ஒற்றுமை காப்போம்!

No comments:

Post a Comment