பருப்பு குழம்பு இனி...
ஏழைகள் வீட்டில் கறிக்குழம்பே!
பருப்பு குழம்பு இனி ஏழைகள் வீட்டில் கறிக்குழம்பே! பருப்பு விலை உயர்வுக்கு பாஜக அரசின் கொள்கையே! ஊக வணிகத்திற்கு ஊக்கம் தருகிறது முந்தைய காங்கிரஸ் அரசுபோல் பாஜக அரசும்! ஊக வணிகம் பிடியில் பிரதமர் மோடி!
ஆம்! இந்திய மக்களின் 40% பயன்பாட்டிற்கு தேவையான 40 லட்சம் டன் பருப்பு வகைகளை அதானி வகையறா பதுக்கி வைத்திருப்பதே காரணம் என்றும் புள்ளி விபரங்களும், தகவல்களும் தெரிவிக்கின்றன.
மோடியை எப்படி தன் சட்டைப் பையில் அதானி பதுக்கி வைத்திருக்கிறாரோ அதுபோல் பருப்பையும் தன் சட்டைப்பையில் பதுக்கி வைத்திருக்கிறார். இவருக்கு எதிராக தன் சுண்டு விரலைக்கூட அசைக்க மறுத்து வருகிறார் மோடியார்!
----\\\\
படிப்பும் போராட்டமும் வேறு வேறு அல்ல!
படிப்பும் போராட்டமும் வேறு வேறு அல்ல; இரண்டும் ஒன்றுதான்! மனித சமுதாயத்தின் வரலாறுகள் எல்லாம் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே!
வரலாற்றில், சமுதாயத்தில் மாணவர் பருவம் பிரதானமானது; இளமை வளமை கொண்டது! இளமையில் கல் என்பது வெறும் படிப்பு மட்டுமல்ல;
சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்பாட்டுக்கு, எதிர்கால வாழ்க்கை உத்திரவாதத்திற்கு போராடித்தான் ஆக வேண்டுமென்றால்... அதை செய்துதான் ஆகவேண்டும்!
இதன் ஒருபகுதி இன்று 12.10.15 PTTV மக்கள் மேடையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\\
பீகாரிலும் இடதுசாரிகளே மாற்று!
பீகார் சட்டமன்ற தேர்தலில் சாதி, மத வாதமற்ற, இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிற இடதுசாரி கட்சிகள் அணி வரலாற்றில் முதன் முறையாக அனைத்து தொகுதியிலும் போட்டி இடுகின்றன.
இது சாதி மதம் ஊழல் அற்ற ஆட்சி அமைந்திட விழைவோருக்கு ஒரு வரபிரசாதமாக இத் தேர்தலில் அமைந்துள்ளது. இதன் வெற்றி வாய்ப்பைப் பொறுத்தே மேற்கண்ட வாதங்களின் ஆபத்தில் இருந்து அதாவது சாதி, மத வாதம் மற்றும் ஊழலில் இருந்து பீகாரை பாதுக்காக்க முடியும்.
பாஜக -லல்லு கூட்டணிகளை பீகார் மக்கள் நிராகரிக்க வேண்டும்; இடதுசாரி அணியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதே நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளின் கனவாக இருக்கிறது.
இன்று 12.10.15 PTTV நேர்பட பேசு வில் இது முழுவதும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நன்றி
-----\\\\
விருதை துறப்பது தேச நலனே!
சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் தேசபக்த போராட்டம் மிக நியாயமானதே!
ஒரு பாசிச பாணி ஆட்சியைத்தான் பாஜக வினால் தரமுடியுமென இடதுசாரிகளும், ஜனநாயகம் விரும்பிகளும், மதச்சார்ப்பற்ற சக்திகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தது, இதன்மூலம் நிருபணமாகி உள்ளது.
இனியாவது மதசார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு பாஜக அரசின் ஆர்எஸ்எஸ் இந்துத்துவா போக்குக்கு எதிராக குரல் ஓங்கி ஒலித்து, நாட்டு மக்களின் ஒற்றுமையை, பாதுகாப்பை உறுதிபடுத்திட, மத்திய அரசுக்கு நிர்பந்தத்தை தந்திட வேண்டும்!
மேலும் இந்துத்துவாவின் கோரக் கொடூரத்தை அம்பலப்படுத்த வேண்டும்.
இன்று 13.10.15 PTTV மக்கள் மேடைக்கு!
-----\\\\
தேச நலனின் எதிர்வினையே!
அடுத்தடுத்து விருதுகளை திருப்பித் தருவது நோக்கம் கொண்டதல்ல. சாகித்திய அகடாமி விருது உயரிய விருது. இது அவர்களுக்கு பெருமை தருவது.
இதையே திருப்பித் தருகிறார்கள் என்றால், அந்தளவுக்கு எழுத்தாளர்களுக்கும், மத சார்பற்ற அறிவுவார்ந்த மக்க்களுக்கும், பாஜக ஆட்சி ஆதரவாளர்களால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதாலேயே இதுமாதிரி எதிர்வினை ஆற்றுகிறார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தில் வெளுத்து வாங்கும் பிரதமர் ஒரே ஒரு வார்த்தை உறுதியாக பேச மறுப்பதேன். பிரதமரின் செய்கைதான் அரசியலே தவிர, எழுத்தாளர்களின் எதிர்வினை அல்ல!
வைரமுத்து உள்ளிட்டு தமிழக சாகித்திய அகாடமி விருது பெற்ற அனைவரும் சேர்ந்து கண்டன அறிக்கை விட்டிருப்தில் இருந்தே தெரிகிறது இதில் அரசியல் விளையாட்டு ஏதுமில்லை என்று!
இன்று 13.10.15 PTTV நேர்படபேசுக்கு!
-----\\\\
பாமக பாலு 'வெலவெலத்து'ப் போனார்!
இன்று 14.10.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் பாமக பாலு; பாஜக வானதி; இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்..!
விசித்திரமான விவாதமாக இருந்தது. 'இப்ப இருப்பதுபோல் தான் பொதுசிவில் சட்டம் வந்தாலும் எல்லாரின் உரிமையும் இருக்குமாம்; அச்சம் வேண்டாமாம்!' இப்படி சொல்வது வானதி. (அப்புறம் என்னா வெங்காயத்துக்கு பொதுசிவில் சட்டம்? இருக்கிற சட்டமே இருந்துட்டு போவுது!)
இதுக்கு மேல ஒன்னு சொன்னார் பாருங்க... 'தமிழகத்தில் வடமாவட்டங்களில் நடக்கும் தலித் மீதான தாக்குதலுக்கு பாமக காரணமில்லையாம்!'
ஆம், அப்படி சொல்லவில்லை என்றால் மேற்கு மாவட்டங்களில் நடைபெறும் தலித் மீதான தாக்குதலுக்கு 'கொங்கு' காரணம் இல்லையா? என்று பாலு கேட்டால் 'வம்பு' வந்து சேர்ந்துவிடும் என பவ்வியமாக வானதி பாமக க்கு 'அப்படி பாமகவை சொல்ல முடியாது' என்ற அர்த்தத்தில் சொல்லி... 'சர்டிபிகேட்' கொடுத்து, ஜாதி விவகாரத்தில் "அடக்கி வாசித்து"க் கொண்டார்கள் இருவரும்!
மத நல்லிணக்கம் கெடுவதற்கு பாஜக காரணம் என்றால், சாதி நல்லிணக்கம் கெடுவதற்கு, குறிப்பாக தலித் மீதான தாக்குதலுக்கு பாமக வின் பிரச்சாரம் காரணம் இல்லாயா? என்ற கேள்விக்கு , "திருடனுக்கு தேள் கொட்டியது" போல் பாமக பாலு 'வெலவெலத்து'ப் போனார். சபாஷ்! ஜென்ராம் அவர்களே!
-----\\\\
மின்வாரிய அதிகாரி அத்துமீறலைக் கண்டித்து
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
***** ***** ****** ******
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் செக்காரப்பட்டியில், வேலாசாமி செட்டியார் ஸ்கூல் அறக்கட்டளை நில குத்தகை விவசாயிகளுக்கு எதிராக, ரியல் எஸ்டேட் பேர்வழிக்கு ஆதரவாக செயல்பட்ட மின்வாரிய வெள்ளாப்பட்டி இளநிலை பொறியாளரைக் கண்டித்தும்,
இனிமேலும் சட்டத்துக்கு விரோதமாக செயல்படக் கூடாது என்றும் இன்று 14.10.15 கருப்பூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இனிமேலும் சட்டத்துக்கு விரோதமாக செயல்படக் கூடாது என்றும் இன்று 14.10.15 கருப்பூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை:
பி.அரியாக்கவுண்டர் (வட்டத்தலைவர்)
கண்டன உரை:
பி.தங்கவேலு (சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழுச் செயலாளர்), எஸ்பி.தங்கவேல் (மாவட்டச்செயலாளர் விச),
விகே.வெங்கடாசலம் (விதொச மாவட்டத்தலைவர்),
கே.ராஜாத்தி (மாதர் சங்க மாவட்டச் செயலாளர்).
எம்.தங்கராஜ், எம்.சின்ராஜ், ஒய்.பார்வதி, பி.மணி, என்.ஈஸ்வரன், மணியன், பி.குருநாதன், வி.கிருஷ்ணன், எஸ்.ரகுபதி, ஆர்.வெங்கட், ஆர்.முத்துசாமி, எம்.மோகன் உளளிட்டு ஏராளமானோர் பங்கேற்றனர்.
----\\\\
----\\\\
அப்துல் கலாம் கனவு நனவாவதென்பதும் கனவே!
2020இல் இந்தியா வல்லரசு ஆவதென்ற கனவை, பன்னாட்டு முதலாளிகளின் பொற்பாதங்களில் மத்திய அரசு சமர்பித்துவிட்டதில் இருந்து இது தெரிகிறது.
எங்கும், எதிலும் இந்தியாவில் பன்னாட்டு மூலதனம் நுழைந்துவிட்ட சூழலில், சொந்த பலத்தை இழந்துவிட்ட சூழலில் எப்படி இந்தியா வல்லரசு ஆகமுடியும்?
முதலில் நல்லரசுக்கே வழியில்லாமல், மதவாத அரசாக மாறி வருகிறது சகிப்புத்தன்மையின்றி! ஆகவேதான் கலாமின் கனவு கனவாகவே போய்விடுமென்று தெரிகிறது!வேண்டுமென்றால் தபால் தலை வெளியிடலாம் ; அவ்வளவே!
இன்று 14.10.15 PTTV மக்கள் மேடையில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\\
பிரதமர் வேதனை தெரிவிக்க இத்தனை நாட்களா?
தாத்ரி படுகொலை செய்யப்பட்டு, எத்தனை நாட்கள் ஆகின்றன; பிரதமர் வேதனை தெரிவிக்க இத்தனை நாட்களா?
டுவிட்டர் பிரதமருக்கு டூர் போகவே நேரம் சரியாக இருக்கிறது; இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை இவ்வளவு பெரிய நாட்டில், எதிர்கட்சிகள்தான் அரசியல் ஆக்குகின்றன என்று இதுவரை கூவி வந்தவர்கள், இப்பொழுது என்ன சொல்லப்போகிறார்கள்?
அப்படியென்றால் பிரதமர் சொல்வதுதான் "வேதவாக்கா?". ஆக நரேந்திர மோடி ஆட்சி வேதனை மிகுந்த ஆட்சி என்று பிரதமர் மோடி சொல்லிவிட்டார் என்று அர்த்தம் கொள்ளலாமா?அல்லது வேற்றுமையில் ஒற்றுமையை சகிக்க முடியாத ஆட்சி மோடி ஆட்சி என்று அர்த்தம் கொண்டால் தவறாகுமா?
எதிர்கட்சிகள் மதவாதத்தை தூண்டுகிறதென்றால், ஒபாமாவையும் சேர்த்துத்தான் சொல்கிறாரா? ஒபாமா இந்தியா வந்தபொழுது இதைத்தானே சொன்னார்!
மத சம்பிரதாயங்களை அரசியல் ஆக்குவதே பாஜகவும், ஆர்எஸ்எஸ் ம்தான்; எதிர்கட்சிகள் அல்ல!
இன்று 14.10.15 PTTV நேர்பட பேசுவில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\\
பரிகாரம் செய்யாமல், பரிகாசம் செய்வது ஏன்?
இன்று 15.10.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் வெங்கடேஷ், மணி ஆகியோர் ஏறக்குறைய ஒரே நிலைப்பாட்டில் (சாகித்திய அகடாமி எழுத்தாளர் 22 விருதை துறந்தது; பிரதமர் சகவாசமாக வாய்திறந்து, போனா போவுதென்று 'துரதிஷ்டம்' என சொன்னது; நான் அடிக்கிறது போல் அடிக்கிறேன்; நீ அழுவதுபோல் அழுஎன்கிற பாஜக, ஆர்எஸ்எஸ் நாடகத்தை) அம்பலப் படுத்தினர்.
ஆனால் பாஜக நேரடி பேச்சாளர் இல்லாததால், அவர்களின் சார்பில் நெறியாளர் ஜென்ராம் பேசினார். அதைப்பற்றி கூட ஒன்றுமில்லை; ஆனால் அவர் ஒரு போடு போட்டார் பாருங்கள்...
"இடதுசாரி, வலதுசாரி, நடுசாரி" என எதுவும் கிடையாது என்று! ஏன் அப்படி டென்ஷன் ஆனார் என்றே தெரியவில்லை!
திருவாளர்கள் வெங்கடேஷ், மணி ஆகியோர், "பிரச்சனை வந்துள்ளது; அதை பிரச்சனையாக பார்த்து, பரிகாரம் செய்யாமல், பரிகாசம் செய்வது ஏன்?" என்று அருமையாக வாதிட்டனர். நன்று. நன்றி!
-----\\\\
அரசியல் என்பது 'அடல்ஸ் ஒன்லி' அல்ல!
அரசியல் என்பது 'அடல்ஸ் ஒன்லி' அல்ல; அது மனித இனத்திற்கு அவசியமானது இன்றைய சூழலில்!
18 வயதுக்கு ஓட்டுரிமை இருக்கும்போது, தன்னை ஆள தகுதியான அரசை தேர்வு செய்ய வேண்டுமானால், அரசின் செயல்பாடுகளை அதன் நன்மை தீமைகளை தெரிந்து கொள்ளாமல், எப்படி சுயமாக வாக்கு அளிப்பது?
நம்மை ஆளும், ஆள வாக்களித்து அனுப்பும் கட்சி, அதன் ஆட்சி, அதன் கொள்கை போன்றவற்றை தெரிந்து கொள்வதுதான் அரசியல்! இது மாணவர்களுக்கு வேண்டாம் என்றால் யாருக்கு வேண்டும்?
இதே ஸ்டாலின் சிறிது நாள்களுக்கு முன் மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம் என்றவர்தான்! இப்பொழுது 'இப்படி' பேசுவதில் வியப்பேதுமில்லைதான்!
மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம் என்பதும் ஒருவித அரசியலே! அரசியலால் என் படிப்பும், வாழ்வும் வீணாக போய்விட்டதென்று கூறும் ஒருவர் நாட்டில் உண்டா? இது மாணவர்கள் மீதான பற்றல்ல; பயத்தில்தான்!
இன்று 15.10.15 PTTV மக்கள் மேடைக்கு!
----\\\\
2016 தேர்தலில் வலுவான அணி!
அதிமுக, திமுக க்கு மாற்றாக 2016 தேர்தலில் வலுவான அணி அமைவதற்கான பிரகாசமான சூழல் தற்போது கனிந்து வருகிறது.
மக்கள் நல கூட்டியக்கம் இன்னும் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே தெரிகிறது. இதன் குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கும் பணி முடிந்து,
அது அதிகாரப்பூர்வமாக வெளியான பின் நிச்சயம் இந்த அணிபலப்படும் என்பது உறுதி! அதேபோல் திமுக அதிமுக மீது மக்களின் வெறுப்பு மிக அதிகமாகவே உள்ளது;
அதனால் தேமுதிக, தமாக போன்ற ஜனநாயக கட்சிகள் "மக்கள் நல கூட்டியக்க" த்தில் இணைந்திடுதே தமிழக மக்களுக்கு செய்திடும் பெரும் நன்மையாகும்!
இதன் ஒருபகுதி இன்று 15.10.15 PTTV நேர்படபேசு வில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
---\\\\
பாரதிராஜா பேச்சு அபத்தமானது; ஆபத்தானது!
பாரதிராஜா பேச்சு அபத்தமானது; ஆபத்தானது!
தமிழர்தான் நடிகர் சங்கத்திற்கு தலைவர் ஆக வேண்டுமென்றால், அது எவ்வகை நியாயம்?
இவரின் பேச்சில் சுயநலம் கொடிக்கட்டி பறக்கிறது. இவரின் மகன் உள்ளிட்டு நடித்த, நடிக்கிற திரைப்படங்களுக்கு தமிழர் அல்லாத நடிகைகள் வைத்து "காசு" பார்க்கலாம்; ஆனால் அவர்கள் சங்கத்திற்கு நிர்வாகிகளாக வரக்கூடாதா?
இந்த டிஜிட்டல் உலகில் அவரின் இனிய தமிழ் மக்களுக்கு தரும் இந்த "வாய்ஸ்" புறக்கணிக்கத் தக்கது; நிராகரிக்க தக்கது; பாரதிராஜா "பாய்ஷன் ராஜாவாக" மாறாமல் இருப்பதே தமிழகத்திற்கு நன்று; தமிழ் திரை உலகுக்கும் நன்று!
இன்று 16.10.15 PTTV மக்கள் மேடைக்கு!
----\\\\
உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு ஆய்வுக்குரியதே!
"நீதிதுறை ஆணையம் தேவை" என்கிற 'நீதிபதி நியமனம் சட்டத்தை' செல்லாதென உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு ஆய்வுக்குரியதே!
நீதிதுறை ஆணையம் தேவையே; அதன்மூலம் நீதிதுறையில், நீதிபதி நியமனத்தில் ஜனநாயகப் படுத்த இயலும் என்பது கடந்த கால அனுபவமாக இருக்கிறது.
என்றாலும், அதில் பன்னாட்டு முதலாளிகள் நலன், இந்துத்துவா திணித்தல் என்ற இரு அம்சங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ "செல்வாக்கு" செலுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது.
எனவே விழிப்புடன் இருந்து "அவற்றை" அனுமதிக்காமல் பார்த்துக் கொள்வது ஜனநாயக சக்திகளின் முக்கிய கடமையாக இருக்கிறது.
அப்படித்தான் இந்த தீர்ப்பையும் பார்க்க வேண்டி உள்ளது.
இன்று 16.10.15 PTTV நேர்படபேசுவில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\\
இதற்கு பெயர்தான் 'செருப்படியோ?
இன்று 16.10.15 PTTV இல் காலை புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் , சிபிஐஎம் இரா.சிந்தன், திமுக ஜெயராஜ், நெறியாளர் ஜென்ராம்..! இரவு மக்கள் மேடை நிகழ்ச்சியில் சுபவீ., திரைத்துறை கௌதமன், இனியன் சம்பத், நெறியாளர் வேங்கடபிரகாஷ்..!
இந்த இரு நிகழ்ச்சியிலும் பொதுவான ஒரு விவாதம் இருந்தது. அதாவது பாரதிராஜாவின் ஒர் அறிக்கை... அதில், "தமிழர் தலைமை வரவேண்டும்!" இதை எதற்காக சொன்னார். நடிகர் சங்க தேர்தலுக்காக கொடுத்த "வாய்ஸ்". இது சரியா? இது சரியல்ல; நோக்கம் சார்ந்தது என்று காலை சிந்தனும், ஜெயராஜ் தெளிவுபட கூறிவிட்டனர்.
ஆனால், இரவு விவாதத்தில் வந்த சுபவீ., இனியன் சம்பத் ஆகியோர், "அதை இப்ப சொல்லியிருக்க வேண்டாம்; சங்கத்தில் நடந்த ஊழலை மறைக்கு உத்தி இது" என்றனர். கௌதமன் எதிர் பார்த்தப்படி பாரதிராஜா பட்டுகுஞ்சம் விரித்தார்.
நெல்லை, திருச்சி, கோவை அரங்கங்களில் இருந்து விவாதித்தவர்களும் ஆதரித்தும், எதிர்த்தும் பேசினர். ஆனால், சுபவீ., அவர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு யாரிடமும் (பாரதிராஜாவை ஆதரிப்பவர்களிடம்) இருந்து எந்த பதிலும் இல்லை; ஒரு பாரதிராஜா இந்த நிகழ்ச்சியை பார்த்தோ, அல்லது யாராவது பார்த்தவர்கள் சொல்லியோ அவர் "என் இனிய தமிழ் மக்களுக்கு" பதில் அளித்தால் நன்றாக இருக்கும்.
"இவ்வளவு பேசினாரே இவரின் ஒரு திரைப்படத்தில் ஒரு தமிழ் பெண்ணைக் கதாநாயகி ஆக்கினாரா? இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு ஆளானபோது, எந்த இனவாதம் தமிழர்களை அழித்து குவித்தோ அந்த சிங்கள இனத்திற்கு சம்மந்தப்பட்ட பெண்ணைத்தானே இங்கே தமிழ்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார்கள்; அப்பொழுது எங்கே போனது தமிழர்பாசம்?"
இதற்கு பெயர்தான் 'செருப்படியோ?'
'காசுபணம்' பார்க்கும் 'பிஸ்னஸ்'சில் தமிழருக்கு கண்ணீர் ஒரு சொட்டுகூட வடியாது போலும்!?. வேண்டாம் துவேசம் பாரதிராஜாவே; வேண்டும் மக்கள் ஒற்றுமை பாரதிராஜாவே!
------\\\\\
"ஆன் லைன் னா?" "அமெரிக்கா லைன் னா?"
அரசு நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை வேண்டும் என்பது புரிகிறது! ஆனால், அரசு நிர்வாகத்தில் 'ஆன்லைன்' முறையை புகுத்தினால், வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும் என்பதும், அரசு நிர்வாகத்தில் ரகசியம் காக்க வேண்டிய அவசியம் இல்லை' என்பதும் புரியவில்லையே!
-பிரதமரின் இந்த பேச்சில் வெளிப்படைத் தன்மை இல்லையென எனக்கு தோன்றுகிறது! ஆம், நம் நாட்டுக்கென்று எந்த ரகசியமும் தேவையில்லை; ஆன்லைன் என்ற பெயரில் "அமெரிக்கா லைன்" ஆக்கிவிடலாமென பிரதமர் சொல்லுவதுபோல் தோன்றுகிறது!
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நம் பிரதமர் வாயே திறக்க மாட்டார்; அப்படி திறந்தால்... ஒன்று பன்னாட்டு செல்வந்தர்கள் நலன் இருக்கும்; இரண்டு இந்துத்துவா நலன் இருக்கும்; இவருக்கும் வெளிப்படை தன்மைக்கும் எந்த ஏணி வைத்தாலும் எட்டாது!
----\\\\


























