Saturday, 10 October 2015

தமிழக காவல்துறை... 
இனி மினிஸ்டர் ஒயிட் போட்டுக் கொள்ளலாம்!

இன்று 10.10.15 PTTV நேர்பட பேசுவில் கோகுல்ராஜ் கொலைக்குற்றவாளி யுவராஜ், ஓய்வு ஐஜி திலகவதி, அதிமுக சரஸ்வதி, காங்கிரஸ் கீதா, திக ஓவியா... இவர்களுடன் கார்த்திகைச்செல்வன்..

முதல்கரடி: 01 யுவராஜ்க்கும் கோகுல்ராஜ் கொலைக்கும் சம்மந்தமில்லை யாம்; ஆனால் நாளைக்கு 11.10.15 சரன்டராக போகிறாராம். 

கரடி 02: அதிமுக விஷ்ணுப்பிரியா இரங்கல் தெரிக்கனுமின்னு அவசியமில்லை; இதெற்கெல்லாம் இரங்கல் தெரிவிக்கிறதாம் அதிமுக வேலையா? என்கிறார் சரஸ்வதி.

கரடி 03: விஷ்ணுப்பிரியா மரணம் குறித்து மவுனம் நிலவுதாம்; திக ஓவியா கருத்து; சிபிஐஎம் பொதுச்செயலாளர் யெச்சூரி  விஷ்ணுப்பிரியா மரணத்திற்கு சிபிஐ விசாரனை கோரியது; வீட்டு சென்று ஆறுதல் சொன்னது எதுவும் இவங்களுக்கும், நெறியாளருக்கும்கூட தெரியல; ஆனால் நேற்று இவர் திமுகவுக்கு ஆதரவாக, கம்யூனிஸ்ட்க்கு எதிராக பாய்ன்டுகளை எடுத்து எடுத்து கொடுத்தார்.


கரடி 04: காங்கிரஸ் முதன்முதலில் சிபிஐ விசாரனை கேட்டதாம்; பிரியா உடல் சேலம் ஜிஎச் இருக்கும்போது, சிபிஐஎம், விசிக, பகுஜன் போன்றவை சேலத்தில் சிபிஐ விசாரனை கேட்டு மறியல் செய்தது இவருக்கு தெரியாது போலும் கீதாவுக்கு.

கரடி 05: பெண்கள் அமைப்பு வீரியமாக போராடவில்லையாம் பிரியா விசயத்தில்; சரி, அஇஜமாதர் சங்கம் இவருக்கு தெரியாதது சோகமே; இவரினியாது தெருவில் இறங்கி, மகேஸ்வரி போல் போராட வருவார?

கரடி 06: தமிழக காவல்துறை காக்கிச்சட்டையை கலட்டிவிட்டு, யுவராஜ் போல் மினிஸ்டர் ஒயிட் போட்டுக் கொள்ளலாம்.

கசிய விடுவது தமிழக காவல்துறைதான்!.

விஷ்ணுப்பிரியா சந்தேக மரணம் குறித்த தனிப்பட்ட விசியங்களை கசிய விடுவது தமிழக காவல்துறைதான். வேறு யாரு? விஷ்ணுப்பிரியா இறந்த தகவல் கிடைத்ததும், பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே போய் " அனைத்து ஆவணங்களை" கைப்பற்றியது காவல்துறைதானே! அவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் உள்பட முதலில் தந்ததும் காவல்துறைதானே! 

பெண்கள் மட்டுமல்ல தலித் மக்கள் பிரச்சனைகளை அணுகுவதில் குறைபாடு உள்ளது. சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதில் அரசியல் எல்லாம் கிடையாது. மரணம் நிகழ்ந்த காவல்துறை அதிகாரிகளே விசாரித்தால் நிச்சயம் நியாயம் கிடைப்பது மட்டுமல்ல உண்மை வெளியவே வராது. 

யுவராஜ் சரணடைந்தாலோ, உயிரோடு பிடிக்கப்பட்டாலோ தான் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முன்னேற்றம் கிடைக்கும். ஆனால்  வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். சிபிசிஐடி விசாரனையில் முன்னேற்றம் கிடைக்காது.

இன்று 10.10.15 PTTV நேர்படபேசுவில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொலைக்காட்சியில்...
 'காட்சியும், பேச்சியும்' தந்துவிட்டான்.

ஒரு வழியாக பொறியாளர் தலித் மாணவன் கொலைக் குற்றவாளி யுவராஜ் இன்று 04.10.15 காலை 08 மணி செய்தியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 'காட்சியும், பேச்சியும்' தந்துவிட்டான்.

ஸ்காலாந்து போலீஸ்க்கு மீறிய தகுதி படைத்த தமிழக போலீஸ்,  அதுவும், சிபிஐ யை எடுத்து சாப்பிட்டுவிடும் தமிழக சிபிசிஐடி போலீஸ் 3 படை, சொறி, சிரங்கு அமைத்து இரவு பகலாக தேடி வருகிறது.


சேலத்தில் தினம் தினம் யாரையாவது பிடித்து விசாரி விசாரின்னு 8 மணி நேரம் 10 மணி நேரமுன்னு விசாரித்து தள்ளுகிறது. அனேகமாக இந்நேரம் 10,000 பக்கம் விசாரனை அறிக்கை தயாரித்து இருப்பர். அம்மா போலீஸ் சும்மா இருக்குமா?

வீரப்பனுக்கு மோருல விஷம் கொடுத்து பொணத்த சுட்டு புடித்த அம்மாவின் டீம் அடிவருடி  வெள்ளதொற கம்யூனிஸ்ட் உள்ளிட்டோர் நடத்திடும் ஜனநாயக போராட்டத்தையே சகிக்காமல் உள்ளே போடுங்கன்னு ஓப்பன் ஓயர்லஸ் ஓங்காரமிட்டானே, இப்ப என்னா பண்ணுவீங்க? மீசைய முறுக்கிட்டு பேட்டி கொடுக்கிறானே கொலைக்குற்றவாளி!


ஊடக தர்மம் வாழ்க! ஊடக உரிமை ஓங்குக! ஆமாம்..! அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவுக்கு ஓடிப்போனது யாரு? தமிழ்நாட்டு போலீசா? திருட்டு பயல்களா? யாரு?

தமிழகத்தில் கிரிமினல்கள் ஆட்சித்தான் நடக்கிறது என்பதற்கு வேறு சாட்சி வேண்டுமா?

இன்னும் எத்தனை கோகுல்ராஜ்களை, விஷ்ணுப்பிரியாக்களை தமிழகம் காவுக் கொடுக்க வேண்டுமோ தெரியவில்லை; தமிழகத்தின் ஆதிக்க ஜாதிகளின் ஜாதிவெறி கொலைகளைத் தடுக்க! தலித் மக்களின் சம உரிமைகளை நிலைநாட்ட?

இன்னேரம், தமிழகத்தில் நான் போலீசு மந்திரியாக இருந்திருந்தால் ராஜினாமா செய்திருப்பேன்; டிஐஜி யாக இருந்திருந்தால்....  .... அதற்காக டிஎஸ்பி போல் தூக்கில் தொங்கிருக்க மாட்டேன்; ராஜினாமா செய்திருப்பேன்; குறைந்தபட்சம் தமிழக மக்களிடம் மன்னிப்பாவது கேட்டு இருப்பேன்! 

இது எதும் நடக்காது இந்த ஆட்சியில்!ஆனால் 2016இல் சட்டபேரவை தேர்தலில் முடிவு கட்டவில்லையென்றால், தமிழத்தை கிரிமினல்கள் தான் ஆளுவார்கள்! ஆம் மக்கள் நலக் கூட்டியக்கம் தமிழகத்தை ஆளுவதுதான் இதற்கு ஒரே தீர்வு!

No comments:

Post a Comment