இது கேளிக்கையல்ல; மக்களின் கோரிக்கை!
வைகோ கூற்று மிகமிக சரியே! திமுக அதிமுக ஊழல் கட்சிகளே என்ற விமர்சனம் சத்திய வார்த்தைகள். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கிறபோது 5 கட்சிகளின், 'மக்கள் நலக் கூட்டியக்கம்' தமிழகத்தில் ஏன் பிடிக்க முடியாது. நிச்சயம் முடியும். இது கேளிக்கையல்ல. மக்களின் கோரிக்கை.
அதிமுக திமுக மீது மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. சரியான மாற்று இடதுசாரிகள் உள்ளிட்டு மதிமுக, விசிக, மமக ஆகிய கட்சிகளே! ஜெயலலிதா எதிர்த்து போட்டியிட்டு சிபிஐ வாங்கி 10 ஆயிரம் ஒவ்வொரு வாக்கும் ஓராயிரத்திற்கு சமம்!
இதன் ஒருபகுதின் இன்று 3.10.15 PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
-----\\\\\
மண்ணிற்கேற்ற நடைமுறையே தேவை!
எதிர்வினை: கிருஷ்ணசாமி திண்டுக்கல்:
தோழர்களே! வைகோ கருத்துமட்டுமல்ல தேசத்தின்மீது அக்கரை கொண்ட அனைவர் கருத்தும் அதுதான். அதற்கு நாம் ஒவ்வொருக்கும் பொறுப்பு உண்டு. விதைக்கிற நாள் விருந்துக்கு போய்விட்டு அறுக்கிற நாளன்று மட்டும் வயலுக்கு போனால் நெல் நமக்குச் சொந்தமாகுமா?
எனவே விதைக்கும் நேரம் இது. இந்தநேரம் ஐம்பெரும் கூட்டனியான மக்கள் நலக்கூட்டணி சக்தியுள்ள அனைத்து இடங்களிலும் உட்கடை கிராமம் முதல் ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி வரை அனைத்து இடங்களிலும் மக்கள் புரியும்படியான அரசியலை வீடுவீடாக கொண்டு செல்லவேண்டும். மக்களைச்சென்றடையும் நேரத்தையும் கலை வடிவங்களையும் கண்டு பிடித்துக்கொண்டு செல்லவேண்டும் ஒரே மாதிரியான வடிவம் எல்லா இடத்திற்கும் பொருந்தாது.
மண்ணிற்கேற்ற நடைமுறை என்பதை புரிந்து கொண்டு இடத்திற்கேற்ற நடைமுறையை பின்பற்றி முன்னேறினால் வெற்றி நிச்சயமாகும். முடிவெடுக்கும் இடத்திற்கு இந்த கருத்து போக வழியேதுமுண்டா? என்பதுதான் தெரியவில்லை.
(சிபிஐஎம் வரும் தேர்தலில் அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக தவிர்த்த அணிக்கு தானே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது; தற்போது மமக இந்த அணியில் இல்லை. முடிவுதான் எடுத்தாகி விட்டதே! தமிழகத்தில் 64 தொகுதியில் சிபிஐஎம் போட்டியிடுவதென்று!)
----\\\\\
ரிசர்வ் வங்கி வேறு; மத்திய அரசு வேறோ?
சமீபத்தில் தான் மத்திய அரசு பயிர் கடன் வட்டி 4% இல் இருந்து 7 முதல் 12.5% க்கு உயர்த்தியது; கல்விக் கடன் வட்டி 12.25% ஆக நீடிக்கிறது! ஏற்கனவே சில தனியார் வங்கிகள் வாகணக்கடன் வட்டி 0% என்று இருக்கிறது; தேசிய வங்கிகளில் வாகணக் கடனே கிடையாது; வீட்டுக்கடன் தற்போது 30 லட்சத்திற்குள் வட்டி 10.25%; 30 லட்சத்திற்கு மேல் வட்டி 12 முதல் 13% % இருக்கிறது.
மொத்தத்தில்... வட்டியில்லாமல்கூட கடன் எவ்வளவு கொடுத்தாலும்,
'டாக்குமெண்ட் ஃபார்மாலிட்டி' யில் இருக்கும் கெடுபிடிகளைக் (கடன் பெறுவதில் உள்ள சட்டத்திட்டங்களின் கடுமையை) குறைத்தாலே ஒழிய சாதாரண மக்கள் வங்கிகள் பக்கம் தலைகூட வைத்து படுக்க முடியாது!
அதனால் ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஏட்டில் மட்டுமே இருக்கும்; ஏற்கனவே ஏற்றம் பெற்றவர்களே பலன் அடைவார்கள்; பாவப்பட்டவர்கள் ஏமாந்தே போவார்கள்!
இன்று 30.9.15 PTTV மக்கள் மேடைக்கு!
----\\\\
வண்டவாளம் தண்டவாளத்தில்!
மின்சாரம், போக்குவரத்தில் ரூ13 ஆயிரம் கோடி இழப்பு அல்லது நட்டம் என சிஏஜி கூறி இருப்பது...
சம்பரதாயமாக தெரிந்தாலும், நிச்சயம் இது தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும்; இது ஆளும் அரசுகளின் 'வண்டவாளத்தைத் தண்டவாளத்தில்' ஏற்றிட உதவுகிறது அல்லவா?
நம் தமிழ்நாடு மக்களின் "பேதமற்ற" டாஸ்மாக் வருமானமும் இல்லாமல் இருந்திருந்தால் 'அம்மா' திட்டங்கள் எல்லாம் 'கம்மா' கரையில் அடித்து செல்லப்பட்டு இருக்கும் போல் தெரிகிறது.
அரசு துறை இழப்புக்கு ஆளும் கட்சிகளின் கொள்கைதான் காரணம்; அதிகாரிகள் ஒரு நபர்கூட ஆளும் கட்சி அமைச்சர்கள் கிழிக்கும் கோட்டை தாண்டுவதில்லை; அப்படி தாண்டினால், அவர் கெதி "அதோ கெதிதான்!"
நிலைமை தமிழகத்தில் இவ்வாறு இருக்கும்போது, அதிகாரிகள் எப்படி பொறுப்பாக முடியும்?
இன்று 30.9.15 PTTV நேர்பட பேசுக்கு!
----\\\
முதலில் மோடியை மீட்க வேண்டும்!
கறுப்பு பணத்தை மீட்பதாக சொன்ன மோடியை வெளிநாட்டில் இருந்து மீட்க வேண்டிள்ளது.
சிபிஐஎம் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி சாடல்!
ஆணவக்கொலை எதிர்ப்பு கடலூர் சிறப்பு மாநாட்டில் உரைவீச்சு...!
(நன்றி: 01.10.15 தமிழ் இந்து)
----\\\\
'அந்த' ராமர வரச்சொல்;
கெளம்பிட்டாங்கய்யா...!
கெளம்பிட்டாங்க..!
வாழும் 'ராமர்'கள் குழாய்க்குள் குடியிருக்கிறார்.
வாழ்ந்ததாக கூறும் 'ராமர்' க்கு இப்ப வீடு இல்லீன்னா 'குடி' யா மூழ்கிப்போய்டும்?
'அந்த' ராமர வரச்சொல்; இந்த ராமர்களோடு வாழச்சொல்!
-----\\\\\
கருணாநிதி உலறுவது வீண்! ஏன்?
அதிமுக அப்படித்தான் நினைக்கும்! ஆடுகள் எல்லாம் தனித்தனியாக இருந்தால் ஓநாய்க்கு லாபம்தான்!
அதிமுக இப்பொழுது மேயும் ஆடு; திமுக ஏற்கனவே அதிமுகபோல் தனியே மேய்ந்த ஆடு! சிவப்பு ஆடுகளை தவிர சில ஆடுகள் மேய்வது உமக்கு மட்டும் பட்டாவா? எங்களுக்கு பங்கு வேண்டாமா? என உரிமை கொண்டாடுகின்றன; "பங்கு கொடுக்கிறேன்" என பெருந்தன்மையின்றி இப்படி கருணாநிதி உலறுவது வீண்.
ஆனால் தற்போது மேய்வது (ஆளுவது) ஆடல்ல; ஆடு தோலணிந்த ஓநாய்! திமுக ஆடா? ஓநாயா? அதை பொறுத்தே அணியமையும்! பந்து கருணாநிதி கையிலே!
முயல் ஆமை கதை தெரியுமா? அதிமுக, திமுக இரண்டுக்கும் மாற்றாக தற்போது 'மக்கள் நலக்கூட்டியக்கம்' சத்தமில்லாமல் வளர்ந்து வருகிறது.
ஒரு பிரபல நாளிதழ் கருத்து கணிப்பில் சிபிஐஎம், சிபிஐ, மதிமுக, விசிக, மமக அணிக்கு தற்போதே 31% வாக்குபலம் இருக்கிறதென்று சொல்லி இருக்கிறது. ஆகவே ஆட்சி அமைக்க போவது 2016 இல் 'மக்கள் நலக் கூட்டியக்கமே!
இன்று 01.10.15 PTTV மக்கள் மேடைக்கு!
-----\\\\\
தும்சம் செய்தது அமெரிக்கா!
இந்தியா ஒத்துழைக்குமா?
இலங்கை போர் குற்றம் விவகாரத்தில் "ஐநா ஐநா ஐநா" என அங்கலாய்த்து கொண்டன தமிழக கட்சிகள்! ஈராக்கை, ஆப்கனை போன்ற நாடுகளை ஐநா என்ற தடியை வைத்துதான் அடித்து தும்சம் செய்தது அமெரிக்கா என்கிற ஒநாய்! இன்று உலக நாடுகளில் அதன் விஷம் பரவிக் கொண்டுத்தான் இருக்கிறது.
அன்று முதல் இன்று வரை சிபிஐஎம் ஒன்றுதான் அமெரிக்கா புகுந்த நாடும், அமீனா புகுந்த வீடும் உருப்படியானதாக சரித்திரம் இல்லை என்று. ஆனால் அமெரிக்கா இலங்கை பிரச்சனையில் ஐநா வழியே நல்லது செய்யுமென தமிழக கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் நம்பின. ஆனால் புலி பசித்தாலும் புள்ளைத் தின்னாது, அது மாமிசம் தின்னும் என்பதை இப்போதாவது தெரிந்துக் கொண்டால் சரி.
அமெரிக்கா எள்ளு என்றால் எண்ணையாக வரும் பாஜக அரசா, அமெரிக்காவுக்கு உத்தரவு போட போகிறது? காமன்வெல்த் விசாரணையாவது நடக்குமா? அது நடந்தால்கூட பரவாயில்லை என்பதுதான் தற்போதைய நிலை! அதற்கு இந்தியா ஒத்துழைக்குமா?
இன்று 1.10.15 PTTV நேர்படபேசு நிகழ்ச்சியில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\\
"வருமான வரித்துறை 'வருமானம்' தேடி வரும்"
ஊருக்கு இளைத்தவர்கள் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது எங்கள் பகுதி சொலவடை.
பாவம் சினிமா காரர்கள். அதிலும் சூப்பர் ஸ்டார்கள் வீடுகள் எல்லாம் தெரியாது இந்த வருமான வரிதுறைக்கு.
அதுபோல ஆளும் கட்சி தலைவர்கள் வீடுகளும் தெரியாது இந்ததுறைக்கு.
விஜய் ரசிகர்களை இழுக்கும் வேலையிது. தேர்தலுக்குள் இன்னும் எங்கெங்கெல்லாம் போவார்களோ? தெரியவில்லை!
மற்ற "புள்ளிகள்" எல்லாம் ஒழுங்கா போய் ஆளும் கட்சிக்கு தேர்தல்நிதி என்கிற பெயரில் "கப்பம்" கட்டிவிட்டால் தப்பித்தீர்கள். இல்லையென்றால் இந்த "வருமான வரித்துறை 'வருமானம்' தேடி வரும்" துரைமார்களே வரும்! ஜாக்கிரதை!
இன்று 2.10.15.PTTV மக்கள் மேடைக்கு!
------\\\\\
கருணாநிதி மஞ்சள் துண்டின் மகிமை?!
ஸ்டாலின் கோவிலுக்கு போனது இப்பொழுது; ஆனால் கருணாநிதி மஞ்சள் துண்டின் மகிமையை கண்டுபிடித்தது எப்போது?
ராமானுஜம் சீரியல் வருவதெல்லாம் சீரியஸ்சாக எடுத்துக் கொள்ளலாமா? ஈய்யத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை; அதிமுகவுக்கு விமர்சிக்கும் உரிமை இருப்பதாக தெரியவில்லை!
தமிழ் மக்களில் அவர்களின் (அதிமுக) கணக்குபடி ஒன்னரை கோடி குடும்பங்களை, ஜெயலலிதாவை "விடுதலை கோரி, பக்தகோடி" ஆக்கிவிட்டு திமுகவை விமர்ச்சிப்பதில் பொருளில்லை!
அதைவிட கொடுமை என்னவென்றால், திமுக அதிமுக இரண்டுமே "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று அண்ணா சொன்னார் என்று கூறி 'தப்பித்துக்' கொள்வதோடு பழியை, பாவத்தை அண்ணா மீது போட்டுவிட்டு 'சும்மா' இருந்துக் கொள்கிறார்கள்.
ஸ்டாலின் கோவிலுக்கு சென்றது தேர்தல் உத்தி மட்டுமல்ல, பக்தியும்தான்! நமக்கு நாமே பயணம் மக்களையும், கூட்டணிக்கு கட்சிகளையும் கவர்ந்திழுக்கும் உத்தி என்பதைவிட தந்திரம் எனலாம். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் முயற்சி. இது பலிக்காது.
இன்று 2.10.15 PTTV நேர்படபேசு நிகழ்ச்சியில் இதன் ஒரு பகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
-----\\\\\












No comments:
Post a Comment