Wednesday, 30 September 2015

மக்களின் "பிரஷர்" இன்றைய தேவை!

விஷ்ணுப்பிரியா மரணத்தில் வக்கில் மாளவியா என்பவர், அர்ச்சகர் விஜயராகவன் என்பவர்களிடம் சிபிசிஐடி விசாரித்ததாக இன்று 30.9.15 செய்திகளும், சம்மந்தப்பட்டவர்களின் பேட்டிகளும் வெளியாகி உள்ளது.

இதில் அர்ச்சகர் விசாரனை திருப்தி(?!) என்கிறார். வக்கில், "விஷ்ணுப்பிரியாவை காதலித்ததாக ஒத்துக்கொள்; எங்களுக்கு மேலிடத்திலிருந்து 'பிரஷர்' வருகிறது" என்று நிர்பந்தித்தார்கள் என்கிறார்; 

இருவருகிட்டேயும் 6 மணிநேரம், 7 மணி நேரம் என 'விசாரணை' நடந்திருக்கிறது; அதுவும் வக்கில்க்கிட்ட 200 கேள்வி கேட்டாங்களாம்; செல்ஃபோன், அதில் வந்த குறுந்தகவல் போன்றவை எல்லாம் கேட்டார்களாம்; இவர்கள் கொஞ்சம் 'மேட்டுக்குடி' என்பதால்,  வக்கில், அர்ச்சகர் என்பதால், 'கேட்டு' இருக்கிறார்கள்; இல்லையென்றால் அவர்களின் 'அர்ச்சனை' வேறுவிதமாக இருந்திருக்கும்! 

"பிரஷரோ, பிரஷர் குக்கரோ" மொத்தத்தில் சிபிசிஐடி விசாரணை கோணம் விஷ்ணுப்பிரியா மரணத்திற்கு 'காதல் தோல்வி' என  "மூடிட முடிவு செய்துவிட்டு" விசாரணை துவங்கியுள்ளதென்பது தெளிவு! சிபிஐ விசாரணையே தேவை என்பதன் முக்கியத்துவம் குறித்த "பிரஷர்" மக்கள் தர வேண்டும்! அதுவே இன்றைய தேவை.

-----\\\\\

கொலைக்குற்றவாளி தியாகியாக நீலிக்கண்ணீரா?

"தியாகி" யுவராஜ் (தலித் மாணவன் கோகுல்ராஜ்ஐ படுகொலைச் செய்த கொலையாளி) வாட்ஸ்அப் புகழ் (?!) இன்றும் 50 நிமிடம் ஓடக்கூடிய ஒன்றை வெளியிட்டு, "சாதனை" (ஸ்காட்லாந்து போலீசைக்கு சவால் விடும், தமிழக போலீசுக்கு) சவால் விட்டுள்ளான். 

இதிலே கொடுமை என்னவென்றால், டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாக்கு குடம் குடமாக "கண்ணீர்" விட்டுள்ளான்! அதாவது விஷ்ணுப்பிரியா மரணத்திற்கு இவன் காரணம் இல்லை; போலீசுதான் காரணம் என்பதற்கு "முக்கி, முக்கி" பேசியுள்ளான். 

அதற்கு இவனும், டிஎஸ்பி தொலைபேசி உரையாடலை  நரித்தனமாக பயன்படுத்தி, தன்னை ஒரு தியாகி போல் உருவகம் செய்துள்ளான். இவனின் பேச்சு, ஆதார உரையாடலில் இருந்தே, இவனும் விஷ்ணுப்பிரியா மரணத்திற்கு காரணம் என்பதை லாவகமாக மறைத்துள்ளான். காவல்துறைக்கு (சிபிசிஐடிக்கு) குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க, சிலரது பெயரை குறிப்பிட்டு, அவர்கள்மீது, "விஷ்ணுப்பிரியாவை இவர்கள்தான் கொன்றார்கள்" என்று  வழக்கைப் பதிவு செய்ய "உத்திரவு" இட்டுள்ளான்! 

இது ஒன்றே போதும் "அம்மா"வின் ஆட்சியை அதன் லட்சணத்தை, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை காண்பதற்கு; த்தூத்த்த்த் இன்னேறம் போலீஸ் அமைச்சர், உப்புப்போட்டு தின்பவராக இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு போய்விடலாம்! 

இது இங்கு நடக்காது  என்பது வேறு விசியம். ஆனால் இனியாவது பிடிக்குமா காவல்துறை? இன்னும் ஒருவாரம் கெடு வேறு விதித்துள்ளான். ஆனால் உறுதியாக தெரிகிறது இவனது ஜாதிவெறிக்கு தூபம் போடுவதற்கு காவல்துறையில் கறுப்பாடுகள் இருக்கிறதென்பது! ஐஜி திலகவதி ஓய்வு சொன்னது எவ்வளவு உண்மை என்பது நிருபணமாகி விட்டது அல்லவா? ஓய்வு எஸ்பிகள் சித்தண்ணன், கருணாநிதிகளே ... துப்பறியும் நாய்களே என்றால் தப்பாகிவிடும், எருமைகளே இதற்கென்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

குறிப்பு: இக்கருத்து 28.9.15 தீக்கதிரில் பிரசுரமானது.

-----\\\\
 சரியான பாதையில் செல்லவில்லை!
டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மர்ம மரணம் வழக்கு சரியான பாதையில் போவதாக கருத முடியவில்லை. ஊடகங்களில் இருந்து வரும் செய்திகளை பார்க்கிறபோது, சிபிசிஐடி யும், காதல் கத்தரிகாய் கோணத்தில் ஊத்திமூட பார்க்கிறது! 


விஷ்ணுப்பிரியா இறப்புக்கு முக்கிய காரணமான (கோகுல்ராஜ் கொலைவழக்கில் கொலைக்குற்றவாளி யுவராஜ் சரணடையாததும்  டிஎஸ்பி மரணத்திற்கு முக்கிய காரணம்) யுவராஜ் தற்போது டிஎஸ்பி இறப்புக்கு 'குடம், குடமாக' கண்ணீர் வடித்து, அவர் ஒருபக்கம் உயர் காவல் அதிகாரிகள் மீது பழியைப் போட்டு திசைத்திருப்பி, தியாகியாக பார்க்கிறார்! 

இதில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்கிற தமிழக போலீஸ் அமைச்சரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதாவுக்கே  "எல்லாப்புகழும்!" 

(சித்தண்ணன் ஓய்வு எஸ்பிக்கு இதொரு சின்ன விசியமாம்; அடப்பாவி..! டிஎஸ்பி மர்ம மரணமே சின்ன விசியமா? இவர் மாதிரிதான் சிபிசிஐடி இருக்கும் என்பதற்கு இவரின் ஈவு இறக்கமற்ற வாதமே சாட்சி! சிபிஐ விசாரணை அவசியம் என்பது நிருபணமாகிவிட்டது) 

இன்று 28.9.15 PTTV மக்கள் மேடையில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

----\\\\
மோடி வெளிநாடு பயடத்தால் பயன் யாருக்கு?

இன்று 28.9.15 PTTV நேர்பட பேசுவில், "காங்கிரஸ் பாஜக பரஸ்பரம் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? மோடியார் வெளிநாட்டு பயணத்தால் கிடைத்தது என்ன?" என்பது அடிப்படையில் விவாதம் துவங்கப் பட்டது. பாஜக ஆதரவு நித்தியானந்தன் (அவர் எதுக்கு வராருன்னு தெரியல; பாவம்); பானுகோம்ஸ் (?!); காங்கிரஸ் ஜோதிமணி; சிபிஐஎம் கே.கனகராஜ் இவர்களுடன் நெறியாளர் குணசேகரன்..!

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் ஊழல் என்று கூச்சல் போட்ட (பானு, ஹாசாரே) போன்றோர் எங்கே? என்பன உள்ளிட்டு பொரிந்து தள்ளினார் ஜோதிமணி... வளர்ச்சி என்றவர் ஆட்சியில் எங்கே, யாருக்கு வளர்ச்சி; டிஜிட்டல் இந்தியா பற்றி பேசும் பிரதமர் பட்டினி சாவு இந்தியா பற்றி பேசாததேன்;  (அப்படி என்றால் மோடிக்கு கூட்டம் கூடுதே என்று நெறியாளர் கேட்க, 'நயன்தாரா திரிஷா' கூட கூட்டம் கூடுது என்றதும், பிரதமராக மோடி தேர்வு தவறோ என்றதும் நெறியாளர் ஒரு நொடி திகைத்து போனார். (தனிநபர் சார்ந்து பேசுகிறீரே; கொள்கை சார்நதல்லவா பேசுவீர்என்று கேட்டும் விட்டார்!)

ஆனால் வேறு வழியே இல்லை; இந்த மாதிரி பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தை மோடி உருவாக்கி விட்டார் என்றேதான் தனது விவாதத்தை துவங்கினார். ஆனால் ஒன்று ஜோதிமணி, கனகராஜ், குணா உள்ளிட்டு எழுப்பிய கேள்விக்கு நித்தி, பானு ஆகியோரிடம் இருந்து வரவில்லை. விவசாயம் டிஜிட்டல் வளர்ச்சியோடு வளர்ந்து விடும் என்ற பானுவின் விவாதம் அபத்தமே!

இப்படிப்பட்ட எல்லா கேள்விகளோடும் சேர்த்து குணா (நெறியாளர்) கேள்விதான் ஆயிரம் அர்த்தம் பொதிந்ததாக எனக்கு தோன்றியது..  இதோ அந்த கேள்வி... " முன்பெல்லாம் வெளிநாடு பயணம் என்றால்.. கலாசாரக்குழு, அறிஞர்கள் குழு போன்ற அர்த்தமுள்ள பயணமாக இருக்கும்; கடந்த 15 ஆண்டகளாக வர்த்தகம் சார்ந்த பயணமாக இருக்கிறதே;  நம் வெளிநாட்டு கொள்கை வர்த்தகம் சார்ந்தது மட்டும்தானா? 

ஒரு மாநில முதல் அமைச்சரால் 2.44 லட்சம் கோடி ரூ திரட்டிவிட்டதாக, இங்கே இருந்து கொண்டு செய்துள்ளார்; 16 மாதங்களில் 29 நாடுகளுக்குச் சென்று 1 லட்சம் கோடிதான் பிரதமரால் திரட்ட முடிந்ததென்றால், அந்த பயணத்தால் என்ன பயன்?" என்ற அர்த்தமுள்ள  கேள்விக்கு நித்தியிடமிருந்து உலறல் மட்டுமே பதிலாக இருந்து. சபாஷ்  குணா..! வாழ்த்துக்கள்!

----\\\\
அராஜகம்-ஆக்ரோசம்!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளும் கட்சி அராஜகமாகவும், மக்கள் பிரச்சனைகளை பேசமுடியவில்லையே எதிர்கட்சிகள் என ஆக்ரோசமாகவும் நடந்துக் கொண்டன.

அதே சமயத்தில் இடதுசாரிகள் ஆக்கப்பூர்வாக கிடைக்கும் வாய்ப்பு பயன்படுத்தி, மக்களின் பிரச்சனைகளை மன்றத்தில் முன்வைக்க தவரவில்லை என்றே தோன்றுகிறது.

இன்று 29.9.15 PTTV மக்கள் மேடைக்கு!

----\\\\

இடதுசாரிகளே..! 
மக்கள் பிரச்சனையை முன்வைத்தன!

110இன்கீழ் 181 முறை அறிவித்த திட்டங்களின் தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியுமா? 

அனேகமாக 2.44 கோடியாக இருக்கும். அதனால்தான் உலக முதலீட்டாளர்கள் அவ்வளவு தொகையை தருவதாக கூறியுள்ளார்கள் போலும்!?

முக்கிய பிரச்சனைகளில் ஆளும் கட்சி அறிவிப்புகள் மட்டுமே செய்தது.  மற்ற எதிர்கட்சிகளை விட சிபிஐஎம், சிபிஐ, மமக, விசிக மற்றும் தேமுதிக கட்சிகள் வாய்ப்புகளை பயன்படுத்தி மக்கள் மன்றத்தில் முன் வைத்தன. 

இடதுசாரி கட்சிகள் சட்டமன்றத்தில் முன் வைத்த பிரச்சனைகளை மக்கள் மன்றத்திலும் முன்வைத்து போராடின என்பது குறிப்பிடதக்கது.

இன்று 29.9.15 PTTV நேர்படபேசுக்கு!

----\\\\

எருமை: எஜமானுக்காக சினை ஆகவில்லை!

எங்கள் கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு... "எருமை பண்ணாடிக்காக (எசமான்) செனை (தாய்மை அடைதல்) ஆகவில்லை" என்று.

5 லட்சம் இந்தியக் கிராமங்களில் அகண்ட அலைவரிசை வசதி என நம்ம பிரதமர் (இதுவரை இந்திய பிரதமர் செல்லாத ஊருக்கு, அமெரிக்க சிலிகான் வேலி,  30 ஆண்டுக்கு பின் சென்ற பெருமை வேறு பெற்றுக்கொண்டாராம்!) அறிவித்துள்ளார்!

நான் சொன்ன பழமொழியாடு, இந்த வரிகளை ஒப்பிட்டு பாருங்கள்.. "இந்த சேவையை அரசின் நிறுவனங்களும், 'வர்த்தக நிறுவனங்களும்' பயன்படுத்திக் கொள்ளலாம்"

நான் சொன்ன பழமொழி சரியா? தவறா?

அடுத்து இன்னொரு சந்தேகம் மோடியார் ' உலக பிரதமரா? இந்திய பிரதமரா?' ஏன் இந்திய மக்களவையில் பேச மறுக்கிறார்; அமெரிக்காவில் "வாங்கு, வாங்கு"ன்னு வாங்குகிறார்?

ஒரு கொசுறு: பிகார் சட்டமன்ற தேர்தலில் 20 பொதுக்கூட்டங்களில் பேச உள்ளாராம்; அமெரிக்காவில் பேசிய மாதிரி ஒரே ஆரவாரம்  உண்டு!

சிபிஐஎம் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கூறியதே சாலப்பொருத்தம்... "இன்னும் பிரதமர் தேர்தல் மனநிலையில் இருந்து விலகவில்லை போலும்!"

----\\\\
பகத்சிங் 108வது பிறந்த நாள்:
 மரக்கன்று நடுதல்-ரத்த தானம்..!

சேலத்தில் பகத்சிங் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு, DYFI சேலம் மாநகரம் வடக்கு இடைக்குழு சார்பில் 108 மரக்கன்று நடப்பட்டது; இதை சேலம் மாநகர பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் திரு வின்சென்ட் துவக்கி வைத்தார்.

அவருக்கு சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு நினைவு பரிசாக "பகத்சிங் வாழ்க்கை வரலாறு" நூல் அளித்தார். அருகில் ததீஒமு மாவட்டச்செயலாளர் ஆர்.குழந்தைவேல் மற்றும் வாலிபர் சங்க மாநகர நிர்வாகிகள்..! 

அதுபோல் அயோத்தியாப்பட்டிணம் வீராணம் DYFI கிளையில் சேலம் மாநகரம் அம்மாப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.நாகராஜ் துவக்கி வைக்க, மாவட்டச்செயலாளர் என்.பிரவீன்குமார் உரையாற்றுகிறார்..!

மேலும் சேலம் மாநகரம் வடக்கு DYFI சார்பில் "108 இளைஞர்கள் ரத்த தானம்" வழங்கினர். அஇஜமாதர் சங்க மாநிலச்செயலாளரும், சிபிஐஎம் மாநிலக்குழு உறுப்பினருமான கே.ஜோதிலட்சுமி துவக்கி வைத்தார்..!

-----\\\\\



இந்த 'பச்சோந்தித்தனம்' எதற்கு?

இன்று 30.9.15 PTTV புதுப்புது அர்த்தம் நிகழ்ச்சியில் மதிமுக அந்திததாஸ், நேற்றுவரை பாஜக ஆதரவாளர், இன்று 'அரசியல் விமர்சகர்' நித்தியானந்தன் இவர்களுடன் நெறியாளர் கார்த்திகேயன்..!

நிகழ்ச்சியைப் பற்றி ஏதும் சொல்லவில்லை! 

நான் சொல்வது... எப்படியெல்லாம் இந்த நித்தியானந்தன் நாடகம் ஆடுகிறார்... 

அரசியல் விமர்சகர் என்றால் என்ன அர்த்தம்?  

நெறியாளரும் அவரது பாஜக விடம் கேட்கும் கேள்வியை கேட்கிறார்; இவரும் சிறிதும் கூச்சமின்றி பாஜகவை ஆதரித்து பேசுகிறார்!

என்ன கொடுமை சார் இது? 

இந்த 'பச்சோந்தித்தனம்' எதற்கு? அல்லது முழுதும் நனைந்தவனுக்கு முக்காடு எதற்கு? 

ஓ..! 

இதுதான் ஆர்எஸ்எஸ் ன் வழிக்காட்டுதலோ?

----\\\\

Saturday, 19 September 2015

தலித் இளம் பெண் டீஎஸ்பி 
விஷ்ணுபிரியா சாவின் மர்மம் உடைபடுமா? 
தமிழக பெண் முதல்வர் நியாயம் வழங்குவாரா? 
சாதீயத்தின் கோரவடிவமே சாவுக்குக் காரணமா?
????!!!!?????!!!!?????!!!!!?????!!!!?????!!

திருச்செங்கோடு டீஎஸ்பி விஷ்ணுபிரியா "தற்கொலை" கடிதத்தில் வரும் மில்லியன் கேள்விகளை எழுப்பும் ஓரிடம்... 

"எனது அதிகாரிகளுக்கும், காவல்துறை நண்பர்களுக்கும் வருத்தத்தை உரித்தாக்குகிறேன்; நீங்கள் சுத்தம் செய்வதற்கான நிறைய குப்பைகளை உங்களுக்கு விட்டு செல்கிறேன் என்று நினைக்கிறேன்" 

யார், எது அந்த குப்பை? 

அது யுவராஜ் என்ற சாதிவெறி கொலையாளியா? 

அவரின் கொலைப்பாதக செயலை ஆதரிக்கும் அர்ஜுன் சம்பத், ராம்தாஸ், ஈஸவரன் போன்ற சனாதனவாதிகளையா? 

யாரை  எதை அவர் குப்பை என்கிறார்!

அல்லது யுவராஜ் பிடிக்க முடியாமல் முட்டுக்கட்டைப் போட்ட காவல் அதிகாரிகளையா? 

அல்லது இந்த கேடுகெட்ட சாதி, மத வெறி பிடித்த, சீழ்வடியும் இந்த சமூகத்தையா? 

மொத்தத்தில் இவரின் சாவில் சந்தேகங்களும், மர்மங்களும் இருக்கவே செய்கிறது!

தமிழ்நாடு முதல் அமைச்சரின் நேர்கீழ் இருக்கும் காவல்துறையில், ஒரு இளம் பெண் காவல் துணைக்கண்காணிப்பாளரின் இந்த இதயதுடிப்பை தானும் ஒரு பெண் என்கிற முறையில் அறிவாரா?

நேர்மையாக செயல்பட்ட பெண் காவல் அதிகாரியின் சாவுக்குக் காரணமான கயவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவாரா?

இதுதான் பத்திரிக்கை தர்மமா?
??????////////////?????????????/////

இன்று 20.9.15 காலை தினமணி, காலைக்கதிர், தி இந்து (தமிழ்) ஆகிய பத்திரிக்கைகளை புரட்டினேன். டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம், அவரது தோழி டிஎஸ்பி பேட்டி எல்லாம் போட்டிருக்கின்றன. 

காலைக்கதிர் விஷ்ணுபிரியா ஆங்கில கடிதம் ஒன்றின் 2 பக்கங்களை வெளியிட்டு உள்ளது!

மேற்காணும் பத்திரிக்கை எல்லாமே கடிதத்தை தமிழாக்கம் செய்து 'தங்களுக்குத் தோதானதையே' வெளியிட்டு உள்ளன. பத்திரிக்கை தர்மம் என்ன? வெளியிட்டால் (தமிழில்) அனைத்தும் வெளியிட வேண்டும்; அல்லது விட்டிட வேண்டும் அல்லவா?

"நான் நிறைய குப்பைகளை விட்டுவிட்டு போகிறேன் என நினைக்கிறேன்" என்பதை மட்டும் மறைத்துவிட்டன; ஏன்? எதனால்? இதன் மர்மம் என்ன? (காலைக்கதிரில் இதன் ஆங்கில வரிகள் உள்ளது; தமிழில் இல்லை)

அந்த குப்பைகள் யாது? என்பதை புலனாய்வு செய்வது பத்திரிக்கை பணியில்லையா? கடமையில்லையா?

சிபிஐ (மத்திய புலனாய்வு) விசாரனையே தேவை; சரியானது!

இன்று 20.9.15 PTTV புதுப்புது அர்த்தம் நிகழ்ச்சியில்... விசிக ஷாநவாஸ், ஓய்வு காவல் எஸ்பி கருணாநிதி, நெறியாளர் ஜென்ராம்....

டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் குறித்த விவாதத்தில்... கருணாநிதி அவர்கள் 'ஆர்க்கியூமெண்ட்' அபத்தம்! 


இவர் இதன்மூலம் தமிழக முதல்வரின் நேர்முக உதவியாளர் (அதாவது ராமானுஜம் அவர்களுக்கு போட்டியாக) ஆகும் தகுதியை பெற்றுவிட்டார்.

கடைசியாக அவர் உதிர்த்த முத்துக்கள்... "நேர்மையான அதிகாரிகள் தற்கொலை செய்ய மாட்டார்களாம்!" விணுஷ்பிரியா மீது இருந்த 'கடைசி ஒரு பிம்பம்' மீதும் கறியைப் பூசி விட்டார்!

இந்த விவாதத்தில்கூட, "நான் நிறைய குப்பைகளை விட்டுவிட்டு போகிறேன் என நினைக்கிறேன்" என்ற வாசகத்தைக் கண்டுக் கொள்ளாதது வருத்தமே! 

என்ன குப்பைகள்? 

கோகுல்ராஜ் கொலையாளி சாதிவெறியன் யுவராஜ்சா? இவரை கைது செய்யாமல் தடுத்த காவல் உயர் அதிகாரிகளா?

அடுத்து இன்னொரு பெருத்த சந்தேகம் அவரது கடிதம் என்பவற்றில் ஒரு சிறு அடித்தல் திருத்தல் இல்லாமல், தூக்குப்போடும் அந்த நிமிடதுளிகளில் எழுதுவது சாத்தியமா?  இதற்கு முன் இரு முறை தற்கொலைக்கு முயற்சி உண்மை என்றால் கோகுல்ராஜ் கொலைக்கு முன்பா? பின்பா? 

இப்படி ஏராளம் முடிச்சுகள் அவிழ்கப்பட்டு, இவரது மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும்! 

அதற்கு சிபிசிஐடி விசாரணை உதவாது; அது நாய் வாலை அறுத்து நாய்க்கு சூப் போடுவது மாதிரிதான்! ஆகவே சிபிஐ (மத்திய புலனாய்வு) விசாரனையே தேவை; சரியானது!

Thursday, 3 September 2015

வேலைநிறுத்தங்கள் அவசியம்! தேவையே!
#####???????########????????########

"தேவை வேலை; வேலை நிறுத்தமல்ல..! "இப்படி வேதாந்தம் பேசி இருக்கிறது பேசியிருக்கிறது இன்றைய 2.9.15 தினமணி தலையங்கம்!

இன்று 10 தொழிற்சங்கள் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதில் 15 கோடி உழைப்பாளிகள் பங்கேற்ற உள்ளார்கள்!

இதில ஆளும் பாஜக தொழிற்சங்கம் ஆரம்பம் முதல் அனைத்து பணிகளையும் செய்து கடைசி நேரத்தில் கருங்காலிதனம் செய்துவிட்டது! அதிமுக வை பற்றி சொல்ல தேவையில்லை!

வேலைநிறுத்தத்தின் முதன்மை கோரிக்கையே தொழிற்தகராறு சட்டத்தைத் திருத்தக்கூடாது என்பது! இதை திருத்த வேண்டும் என்பது பன்னாட்டு முதலாளிகளின் கோரிக்கை!

இதை தினமணி ஆதரித்தால் கூட அது அதன் வர்க்கப்புத்தி எனலாம்! 

ஆனால் அதையும் தாண்டி, "திருத்த வேண்டியது தொழிலாளர் நல சட்டத்தை மட்டுமல்ல, தொழிற்சங்கங்களின் அணுகுமுறையும்தான்" என்று மிகதிமிர்வாதம் செய்திருக்கிறது தலையங்கம்! 

ஆம்! தொழிலாளி வர்க்கம் இந்த மாதிரி வக்கிரப்புத்தி புத்திசாலிகளையும் சேர்த்தே திருத்த வேண்டியிருக்கிறது!


தினமணி தலையங்கம் மிகவும் கண்டிக்கத்தக்கத் தலையங்கமே!

இந்த தினமணி தலையங்கம் மாதிரி லட்சம் தலையங்கம் வந்தாலும், லட்சசோப லட்சம் தொழிலாளி வர்க்கம் "கோடிக்கால் பூதமடா! தொழிலாளி வர்க்கமடா!" என் எழுந்து நின்று அடக்குமுறை சட்டங்களை, அதன் அரசுகளை தூள்தூளாக்கும்! அதற்கான ஒத்திகளைகளே இப்படிப்பட்ட வேலைநிறுத்தங்கள்!

உடலை சுத்தம் செய்ய வேண்டுமென்றாலே, அவ்வப்போது உண்ணாவிரதம் என்கிற வேலைநிறுத்தம் தேவைபடுகிறது! இவ்வளவு பெரிய உலகை, அதன் சுரண்டலைத் தடுக்க, சுத்தப்படுத்த வேலைநிறுத்தங்கள் அவசியம்! தேவையே!

உடலை சுத்தப்படுத்த......... உதாரணம் அருமை Sobana: 👍

Praven: Super

செப்-2 சேலத்தில் Dyfi-Aidwa இனைந்து ரயில் போராட்டத்தின் போது ஜெயலலிதா  போலீசாரின் மூர்க்கதனத்தால் தாக்கபட்ட மாதர்சங்க மாவட்ட செயலாளர் ராஜாத்தி, வாலிபர்சங்க தோழர்.வெங்கடேஷ் மருத்துவமனையில் சிகிச்சை...!

----\\\\

கடைசி ஆயுதமே வேலைநிறுத்தம்!

தொழிற்சங்களின் வேலைநிறுத்தம் அவசியமே! அப்போது சில மணி துளிகள் நேரம் ஏற்படும் அசவரிங்களால், அதிருப்தி மக்களிடம் வருவது இயல்பே! 

ஆனால் வேலைநிறுத்தம் என்பது தங்களின் கடைசி ஆயுதமாகவே கையில் எடுக்கப்படுகிறது!  


சுமூக தீர்வுக்கு அரசோ, நிறுவனமோ வராதபோது வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாததாகிறது!  

இன்று நடந்த வேலைநிறுத்தம் விலைவாசி உள்ளிட்டு மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையே! வெறும் பஞ்சப்படி போன்ற கோரிக்கையல்ல! இது மக்களுக்கானதே!

இன்று 2.9.15 இதன் ஒருபகுதி தற்போது PTTV மக்கள் மேடையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

----\\\\ 

ஓரவஞ்சனையே..!

மத்திய அரசின் இந்த முயற்சி... 

ஐநா வில் இந்தியாவின் அடையாளமாக இந்தி மொழிக்கு ரூ270 கோடி செலவிடுவது... 

நிச்சயமாக ஓரவஞ்சனையே! 

தமிழ் உள்ளிட்டு மற்ற இந்திய மொழிகளை மாற்றாந்தாய் மொழியாக்கும் கொடுமையான நிகழ்வு! 

அன்று சமஸ்கிரதத்திற்கு ... தற்போது இந்திக்கு... 

இன்னும் 4 ஆண்டுகளில் என்னென்ன அநியாயங்கள் அரங்கேறப் போகிறதோ?

இன்று 2.9.15 இதன் ஒருபகுதி PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.