தலித் இளம் பெண் டீஎஸ்பி
விஷ்ணுபிரியா சாவின் மர்மம் உடைபடுமா?
தமிழக பெண் முதல்வர் நியாயம் வழங்குவாரா?
சாதீயத்தின் கோரவடிவமே சாவுக்குக் காரணமா?
????!!!!?????!!!!?????!!!!!?????!!!!?????!!
திருச்செங்கோடு டீஎஸ்பி விஷ்ணுபிரியா "தற்கொலை" கடிதத்தில் வரும் மில்லியன் கேள்விகளை எழுப்பும் ஓரிடம்...
"எனது அதிகாரிகளுக்கும், காவல்துறை நண்பர்களுக்கும் வருத்தத்தை உரித்தாக்குகிறேன்; நீங்கள் சுத்தம் செய்வதற்கான நிறைய குப்பைகளை உங்களுக்கு விட்டு செல்கிறேன் என்று நினைக்கிறேன்"
யார், எது அந்த குப்பை?
அது யுவராஜ் என்ற சாதிவெறி கொலையாளியா?
அவரின் கொலைப்பாதக செயலை ஆதரிக்கும் அர்ஜுன் சம்பத், ராம்தாஸ், ஈஸவரன் போன்ற சனாதனவாதிகளையா?
யாரை எதை அவர் குப்பை என்கிறார்!
அல்லது யுவராஜ் பிடிக்க முடியாமல் முட்டுக்கட்டைப் போட்ட காவல் அதிகாரிகளையா?
அல்லது இந்த கேடுகெட்ட சாதி, மத வெறி பிடித்த, சீழ்வடியும் இந்த சமூகத்தையா?
மொத்தத்தில் இவரின் சாவில் சந்தேகங்களும், மர்மங்களும் இருக்கவே செய்கிறது!
தமிழ்நாடு முதல் அமைச்சரின் நேர்கீழ் இருக்கும் காவல்துறையில், ஒரு இளம் பெண் காவல் துணைக்கண்காணிப்பாளரின் இந்த இதயதுடிப்பை தானும் ஒரு பெண் என்கிற முறையில் அறிவாரா?
நேர்மையாக செயல்பட்ட பெண் காவல் அதிகாரியின் சாவுக்குக் காரணமான கயவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவாரா?
இதுதான் பத்திரிக்கை தர்மமா?
??????////////////?????????????/////
இன்று 20.9.15 காலை தினமணி, காலைக்கதிர், தி இந்து (தமிழ்) ஆகிய பத்திரிக்கைகளை புரட்டினேன். டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம், அவரது தோழி டிஎஸ்பி பேட்டி எல்லாம் போட்டிருக்கின்றன.
காலைக்கதிர் விஷ்ணுபிரியா ஆங்கில கடிதம் ஒன்றின் 2 பக்கங்களை வெளியிட்டு உள்ளது!
மேற்காணும் பத்திரிக்கை எல்லாமே கடிதத்தை தமிழாக்கம் செய்து 'தங்களுக்குத் தோதானதையே' வெளியிட்டு உள்ளன. பத்திரிக்கை தர்மம் என்ன? வெளியிட்டால் (தமிழில்) அனைத்தும் வெளியிட வேண்டும்; அல்லது விட்டிட வேண்டும் அல்லவா?
"நான் நிறைய குப்பைகளை விட்டுவிட்டு போகிறேன் என நினைக்கிறேன்" என்பதை மட்டும் மறைத்துவிட்டன; ஏன்? எதனால்? இதன் மர்மம் என்ன? (காலைக்கதிரில் இதன் ஆங்கில வரிகள் உள்ளது; தமிழில் இல்லை)
அந்த குப்பைகள் யாது? என்பதை புலனாய்வு செய்வது பத்திரிக்கை பணியில்லையா? கடமையில்லையா?
சிபிஐ (மத்திய புலனாய்வு) விசாரனையே தேவை; சரியானது!
இன்று 20.9.15 PTTV புதுப்புது அர்த்தம் நிகழ்ச்சியில்... விசிக ஷாநவாஸ், ஓய்வு காவல் எஸ்பி கருணாநிதி, நெறியாளர் ஜென்ராம்....
டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் குறித்த விவாதத்தில்... கருணாநிதி அவர்கள் 'ஆர்க்கியூமெண்ட்' அபத்தம்!
இவர் இதன்மூலம் தமிழக முதல்வரின் நேர்முக உதவியாளர் (அதாவது ராமானுஜம் அவர்களுக்கு போட்டியாக) ஆகும் தகுதியை பெற்றுவிட்டார்.
கடைசியாக அவர் உதிர்த்த முத்துக்கள்... "நேர்மையான அதிகாரிகள் தற்கொலை செய்ய மாட்டார்களாம்!" விணுஷ்பிரியா மீது இருந்த 'கடைசி ஒரு பிம்பம்' மீதும் கறியைப் பூசி விட்டார்!
இந்த விவாதத்தில்கூட, "நான் நிறைய குப்பைகளை விட்டுவிட்டு போகிறேன் என நினைக்கிறேன்" என்ற வாசகத்தைக் கண்டுக் கொள்ளாதது வருத்தமே!
என்ன குப்பைகள்?
கோகுல்ராஜ் கொலையாளி சாதிவெறியன் யுவராஜ்சா? இவரை கைது செய்யாமல் தடுத்த காவல் உயர் அதிகாரிகளா?
அடுத்து இன்னொரு பெருத்த சந்தேகம் அவரது கடிதம் என்பவற்றில் ஒரு சிறு அடித்தல் திருத்தல் இல்லாமல், தூக்குப்போடும் அந்த நிமிடதுளிகளில் எழுதுவது சாத்தியமா? இதற்கு முன் இரு முறை தற்கொலைக்கு முயற்சி உண்மை என்றால் கோகுல்ராஜ் கொலைக்கு முன்பா? பின்பா?
இப்படி ஏராளம் முடிச்சுகள் அவிழ்கப்பட்டு, இவரது மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும்!
அதற்கு சிபிசிஐடி விசாரணை உதவாது; அது நாய் வாலை அறுத்து நாய்க்கு சூப் போடுவது மாதிரிதான்! ஆகவே சிபிஐ (மத்திய புலனாய்வு) விசாரனையே தேவை; சரியானது!




No comments:
Post a Comment