வேலைநிறுத்தங்கள் அவசியம்! தேவையே!
#####???????########????????########
"தேவை வேலை; வேலை நிறுத்தமல்ல..! "இப்படி வேதாந்தம் பேசி இருக்கிறது பேசியிருக்கிறது இன்றைய 2.9.15 தினமணி தலையங்கம்!
இன்று 10 தொழிற்சங்கள் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதில் 15 கோடி உழைப்பாளிகள் பங்கேற்ற உள்ளார்கள்!
இதில ஆளும் பாஜக தொழிற்சங்கம் ஆரம்பம் முதல் அனைத்து பணிகளையும் செய்து கடைசி நேரத்தில் கருங்காலிதனம் செய்துவிட்டது! அதிமுக வை பற்றி சொல்ல தேவையில்லை!
வேலைநிறுத்தத்தின் முதன்மை கோரிக்கையே தொழிற்தகராறு சட்டத்தைத் திருத்தக்கூடாது என்பது! இதை திருத்த வேண்டும் என்பது பன்னாட்டு முதலாளிகளின் கோரிக்கை!
இதை தினமணி ஆதரித்தால் கூட அது அதன் வர்க்கப்புத்தி எனலாம்!
ஆனால் அதையும் தாண்டி, "திருத்த வேண்டியது தொழிலாளர் நல சட்டத்தை மட்டுமல்ல, தொழிற்சங்கங்களின் அணுகுமுறையும்தான்" என்று மிகதிமிர்வாதம் செய்திருக்கிறது தலையங்கம்!
ஆம்! தொழிலாளி வர்க்கம் இந்த மாதிரி வக்கிரப்புத்தி புத்திசாலிகளையும் சேர்த்தே திருத்த வேண்டியிருக்கிறது!
தினமணி தலையங்கம் மிகவும் கண்டிக்கத்தக்கத் தலையங்கமே!
இந்த தினமணி தலையங்கம் மாதிரி லட்சம் தலையங்கம் வந்தாலும், லட்சசோப லட்சம் தொழிலாளி வர்க்கம் "கோடிக்கால் பூதமடா! தொழிலாளி வர்க்கமடா!" என் எழுந்து நின்று அடக்குமுறை சட்டங்களை, அதன் அரசுகளை தூள்தூளாக்கும்! அதற்கான ஒத்திகளைகளே இப்படிப்பட்ட வேலைநிறுத்தங்கள்!
உடலை சுத்தம் செய்ய வேண்டுமென்றாலே, அவ்வப்போது உண்ணாவிரதம் என்கிற வேலைநிறுத்தம் தேவைபடுகிறது! இவ்வளவு பெரிய உலகை, அதன் சுரண்டலைத் தடுக்க, சுத்தப்படுத்த வேலைநிறுத்தங்கள் அவசியம்! தேவையே!
உடலை சுத்தப்படுத்த......... உதாரணம் அருமை Sobana: 👍
Praven: Super
செப்-2 சேலத்தில் Dyfi-Aidwa இனைந்து ரயில் போராட்டத்தின் போது ஜெயலலிதா போலீசாரின் மூர்க்கதனத்தால் தாக்கபட்ட மாதர்சங்க மாவட்ட செயலாளர் ராஜாத்தி, வாலிபர்சங்க தோழர்.வெங்கடேஷ் மருத்துவமனையில் சிகிச்சை...!
----\\\\
கடைசி ஆயுதமே வேலைநிறுத்தம்!
தொழிற்சங்களின் வேலைநிறுத்தம் அவசியமே! அப்போது சில மணி துளிகள் நேரம் ஏற்படும் அசவரிங்களால், அதிருப்தி மக்களிடம் வருவது இயல்பே!
ஆனால் வேலைநிறுத்தம் என்பது தங்களின் கடைசி ஆயுதமாகவே கையில் எடுக்கப்படுகிறது!
சுமூக தீர்வுக்கு அரசோ, நிறுவனமோ வராதபோது வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாததாகிறது!
இன்று நடந்த வேலைநிறுத்தம் விலைவாசி உள்ளிட்டு மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையே! வெறும் பஞ்சப்படி போன்ற கோரிக்கையல்ல! இது மக்களுக்கானதே!
இன்று 2.9.15 இதன் ஒருபகுதி தற்போது PTTV மக்கள் மேடையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
----\\\\
ஓரவஞ்சனையே..!
மத்திய அரசின் இந்த முயற்சி...
ஐநா வில் இந்தியாவின் அடையாளமாக இந்தி மொழிக்கு ரூ270 கோடி செலவிடுவது...
நிச்சயமாக ஓரவஞ்சனையே!
தமிழ் உள்ளிட்டு மற்ற இந்திய மொழிகளை மாற்றாந்தாய் மொழியாக்கும் கொடுமையான நிகழ்வு!
அன்று சமஸ்கிரதத்திற்கு ... தற்போது இந்திக்கு...
இன்னும் 4 ஆண்டுகளில் என்னென்ன அநியாயங்கள் அரங்கேறப் போகிறதோ?
இன்று 2.9.15 இதன் ஒருபகுதி PTTV நேர்பட பேசுவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.





No comments:
Post a Comment