Saturday, 15 August 2015

"பார்"க்குள்ளே நல்ல நாடு நம் தமிழ்நாடு?! 

DYFI SFI AIDWA சார்பில் இன்று தமிழகம் முழுவதும் 200 இடங்களில் 24 மணி நேர உண்ணாநிலை போராட்டம் !

மது இல்லாத தமிழகம் என்கிற கோரிக்கை வைத்து இன்று 10.08.2015ல் சேலம், ஆத்தூர், ஜலகண்டாபுரம் ஆகிய இடங்களில் உண்ணாநிலை போராட்டத்திற்கு முற்படும்போதே கைது! 


மண்டபங்களில் அடைப்பு! 

இருந்தாலும் 24 மணிநேர உண்ணாநிலை போராட்டம் துவங்கி நடந்து வருகிறது!

மது வேண்டாம் என்பவர்களை கைது செய்து சிறையில் அடைப்பு! 

மது வேண்டும் என்பவர்களுக்கு காவல்துறை ஆயிரம் அடுக்கு பாதுகாப்பு! 

"பார்"க்குள்ளே நல்ல நாடு நம் தமிழ்நாடு?! 

மதுவில் "தள்ளாடும்" தமிழக அதிமுக விற்கு சாவுமணி அடிப்போம்! அதுவே மது ஒழிப்பு போராளி சசிபெருமாள் க்கு நாம் செலுத்தும் வீர அஞ்சலி!

சேலம் தலைமை: 
தோழர்கள் ...
எஸ்.முத்துக்கண்ணன் DYFI மாநிலத்தலைவர், 
கே.ஜோதிலட்சுமி 
AIDWA மாநிலச்செயலாளர், 
ராமச்சந்திரன் 
SFI மாவட்டச்செயலாளர் 
உள்ளிட்ட 86 பேர்கள் உண்ணாநிலை போரில்...!

----\
போர் பிரகடனம்!

மது இல்லாத தமிழகம்...
லஞ்சம்-ஊழல் இல்லாத தமிழகம்...
தீண்டாமை இல்லாத தமிழகம்...
சுரண்டலற்ற தமிழகம்...

மக்கள் ஒற்றுமை யுடன் வாழும் தமிழகம்...
பவுடர் பூச்சுக்கும், பகட்டு பேச்சுக்கும் மயங்காத தமிழகம்...
தொழிலாளி- விவசாயி- நடுத்தர மக்கள்நலன் பேணும் தமிழகம்...

13.08.15 வியாழன் மாலை 4 மணி...
ஈரோடு வ உ சி பூங்கா வில் ஊர்வலம்; சத்திரத்தில் ஆர்ப்பாட்டம்!

சிபிஐஎம், சிபிஐ, விசிக, மதிமுக, மமக கட்சிகள் அறைகூவல்..!

உழைப்பாளிகளே திரண்டு வாரீர்!
தறிகெட்டு ஓடும் தமிழகத்தைக் காப்போம்! 
அதிமுக, திமுக வின் அடிமைகளல்ல தமிழகம் என பறைமுழங்குவோம்!

ஈரோடு, தஞ்சை, மதுரை, நெல்லை, சென்னை களில் போர் பிரகடனம்!

-----\

நரேந்திர மோடி ஆட்சியா? 

லலித்மோடி ஆட்சியா? 

நரேந்திர மோடி ஆட்சியா?
லலித்மோடி ஆட்சியா? 
110 மூலம் நமக்கு கிடைத்தது 111னே!
சிபிஐஎம் மத்திக்குழு உறுப்பினர் தோழர் கே.வரதராஜன் சாடல்!
இன்று 13.8.15 ஈரோட்டில் நடந்த...
சிபிஐஎம், சிபிஐ, மதிமுக, விசிக, மமக கட்சிகளின்...
"மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம்" ஆர்ப்பாட்டத்தில் பேச்சு!

No comments:

Post a Comment