Thursday, 6 August 2015

சேலத்தில் காவல் துறையின் கண்மூடித் தாக்குதல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!


சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் இடங்கனச்சாலையை சேர்ந்த காந்தியவாதி சசி பெருமாள் மதுவிலக்கு கோரி போராடி உயிர் நீத்தார். அவரின் கும்பத்தாரும் பல்வேறு அமைப்புகளும் அவரின் உயிர் பிரிந்ததற்கு தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்றும், மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு தொடர் போராட்டங்களை, அஞ்சலி கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இன்று 2.8.15 காலை 8 மணி அளவில் சசிபெருமாள் குடும்பத்தினர் சேலம் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களை சேலம் மாநகர காவல் துறையினர் உண்ணாவிரதம் உட்கார்ந்த சில நிமிடங்களில் கைது செய்து விட்டனர். இதனைக் கண்டித்தும், சசிபெருமாள் குடும்பத்தினரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் சேலம் அண்ணா பூங்கா முன் இருந்து ஊர்வலமாக சென்று, சசிபெருமாள் குடும்பத்தினர் கைது செய்து வைத்திருக்கும் மண்டபம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைது செய்வதாக கூறி காவல்துறையினர் வாகணத்தில் ஏற்றிட முற்பட்டனர். அப்பொழுது “இந்த மண்டபத்திலேயே எங்களையும் விட்டு விடுங்களே” என்று கேட்டத்தற்கு காவல்துறை மறுத்தனர். இதனால் வாலிபர் சங்க, மாணவர் சங்க தோழர்களுக்கும் காவல்துறைக்கு வாக்குவாதம் ஏற்பட்டு, வாலிபர்-மாணவர் சங்க தோழர்களை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. 

இந்த தாக்குதலில் மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ராமசந்திரன், வாலிபர் சங்க மாநகர வடக்கு தலைவர் சதீஷ்குமார் ஆகியோரின் மார்பின் மீதும், தோள்கள் மீதும் காவல்துறை பூட்ஸ் காலால் மிதுத்து உள்ளனர். இது என்ன காவல் துறையா? காட்டுமிராண்டித் துறையா? என்று தெரியவில்லை.

வாலிபர்-மாணவர் சங்க தோழர்களை மட்டுமல்ல, மதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தவர்களையும் இதே மாதிரி பலாத்காரம் செய்துள்ளனர். சசி பெருமாள் குடும்பத்தினரையும் கண்மூடித்தனமாக தாக்கித்தான் கைது செய்துள்ளனர். இது ஜனநாயக நடைமுறைகளை காலில் போட்டு மிதிக்கும் போக்காக்காகும். 

இந்த போக்கை மாற்றிக் கொண்டு ஜனநாயக இயக்கங்களை தான்தோண்டித் தனமாக தாக்குவதை சேலம் மாநகர காவல்துறை கைவிட வேண்டும் என்றும், இந்த போக்கை காவல்துறை மாற்றிக் கொள்ளவில்லை யெனில், ஜனநாயக அமைப்புகளைத் திரட்டி வலுவாக போராடுவதை நடத்தவதைத் தவிர வேறுவழியில்லை என்று சேலம் மாநாகர காவல் ஆணையர் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவரை இதன்மூலம் கேட்டுக் கொள்கிறோம். 


அதோடு தமிழக அரசும் தலையிட்டு, வாலிபர்-மாணவர் அமைப்பினர் மற்றும் சசிபெருமாள் குடும்பத்தினர் மீது அத்துமீறி தாக்குதல் தொடுத்த காவல்துறையின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

===

மதுஒழிப்பு போராளி... 
சசிபெருமாள் மறைவுக்கு அஞ்சலி

நாளை 4.8.15  சசிபெருமாள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியும், 
மதுவிலக்கு கோரியும் கடையடைப்பு!
மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு!
"""""" """"""" """"""""""""
இன்று சேலம் மாவட்ட மதிமுக, விசிக, மமக, சிபிஎம்,சிபிஐ, தேமுதிக ஆகிய கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் மதிமுக மாவட்ட செயலாளர் தாமரை கண்ணன் தலைமையில் நடைபெற்றது!

இதில் சிபிஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ.மோகன், விசிக மாவட்ட செயலாளர் நாவரசு, தேமுதிக மாநகர செயலாளர் அண்ணாமலை, மமக மாவட்ட செயலாளர் இமாம் மொதீன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

அதில், "மறைந்த மதுஒழிப்பு போராளி சசிபெருமாள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், மது விலக்கு கோரியும் கடை அடைப்பு போராட்டத்தில் அனைத்து தரப்பிரனரும் ஆதரவு தரவேண்டும்; இந்த அறவழிப்போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்" என முடிவி எடுக்கப்பட்டது.

கூட்டம் முடிவில் சேலம் மத்திய பேருந்து நிலைப்பகுதியில் கடைக்கடையாக சென்று கடையடைப்புக்கு ஆதரவு கோரினர்!
====

கிடைக்கும்..! ஆனாலும் கிடைக்காது!

தாங்கள் குறிப்பிடுவதுபோல் தீவிரம் எல்லாம் ஒன்றும் கிடையாது. 7000 சொச்சம் கடைகளில் ஆங்காங்கே ஒன்றிரண்டு கடைகளில் சில கலாட்டா நடக்கிறது! அவ்வளவுதான்! 

மது கொள்கையில் கட்சிகள் "தள்ளாடும்"வரை எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை! 

திமுக மீண்டும் ஆட்சி வந்தாலும்,  ஒரு 50, 60 கொத்தாக கள்ளச்சாரம் குடித்து செத்துவிட்டால், உடனே "மனித உயிர்" விலைமதிப்பற்றது என்று ஒரே ஒரு நொடியில் மீண்டும் டாஸ்மாக் வேறு பெயரில் வந்துவிடும். 

காரணம் சாராயம் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய ஆலைமுதலாளியே திமுக டிஆர்பாலு ஆவார்! இதுபோல் அதிமுக சசிகலா குடும்பமும் சாராயம் ஆலை அதிபர்கள் ஆவர்! 

இந்த விசயத்தில் இந்த இரு கட்சிகளில் ஒன்று உறுதியான, இறுதியான முடிவெடுத்து அமலாக்காமல் போனால்.. அதுவரை இந்த மது ஒழிப்பு போராட்டம் கனல்நீரே! 

இதன் ஒருபகுதி இன்று 3.8.15 PTTV மக்கள் மேடையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நன்றி
====

குடிகாரன் பேச்சு பொழுதுவிடிந்தால் போச்சு 

மதுவிலக்கு கோரும் போராட்டம் பரவுவதாக சொல்லுவதில் அர்த்தம் இருக்கிறதா? 7000சொச்சம் கடைகளில் சில இடங்களில் நடக்கிறது! 

அதிமுக, திமுக சார்பு நிலைகளில்தான் (கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர) இருப்பதாக தோன்றுகிறது! அனேகமாக அதிமுக, தமாக ஒரு அணிபோல் தெரிகிறது! 

பாஜக, காங்கிரஸ் (பாமக மதுவை எதிர்க்கிறது), இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள், விசிக-மதிமுக-மமக கட்சிகள் அறிவித்த நாளைய கடையடைப்பை ஆதரிக்கின்றன. 

ஆனால் கட்சிகளுக்கு மதுவிலக்கு கொள்கையில் "தள்ளாட்டம்" இருக்கிறபடியால், மதுஒழிப்பு போராளி சசிபெருமாள் இறப்பு இவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது! 

குடிகாரன் பேச்சு பொழுதுவிடிந்தால் போச்சு என்பதுபோல் சட்டமன்ற தேர்தல் முடிந்துவிட்டால், இந்த கட்சிகள் இருக்கும் இடம் தெரியாது; இடதுசாரி அமைப்புகள் மீண்டும் போராடிக் கொண்டு இருக்கும்!

இது இன்று 3.8.15 PTTV நேர்படபேசுக்கு!

===
அன்று 'டான்சி' ராணி!
இன்று 'டாஸ்மாக்' ராணி!

உப்பு தின்கிறது இந்த உளுத்த அரசு! இது உதிர்வது உறுதியாகி வருகிறது! 

அன்று 'டான்சி' ராணி!
இன்று 'டாஸ்மாக்' ராணி!

போராட்டங்கள் தோற்றதாக வரலாறு  இல்லை டாஸ்மாக் ராணியே! 

உமக்கு 'கவுன்டவுன்' துவங்கிவிட்டது! இன்று 4.8.15 நடைபெற உள்ள கடையடைப்புக்கு சிபிஐஎம் தோழர்கள் மாவட்டக்குழு உறுப்பினர்  என்.பிரவீன்குமார் உள்ளிட்டு ஏராளமானவர்களை இரவோடு இரவாக கைது படலம்! சிறையில் அடைப்பு!

நேற்று ஆர்ப்பாட்டம் செய்த வாலிபர் சங்க சேலம் மாநகர கிழக்கு செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டு 28 பேர் சிறையில் அடைப்பு!

===

கோழிமுட்டைக்கு 'முடி' புடுங்கினார்களா? 

மதுக்கடை அகற்றிட கோரி, அல்லது மதுவிலக்கு கோரி நடக்கும் போராட்டம் வன்முறையா? என்கிறீர்!

மது மக்களை மதி மயக்கும் பாணம்! இது வேண்டாம் என்று போராடுகிறபோது...

அரசு உரிய கவனமிட்டு, செவி சாய்த்திருந்தால், இந்த "வன்முறை" (எது வன்முறை? சசிபெருமாள் கொல்லப்பட்டதா?) நிகழ்ந்திருக்காது அல்லவா? 

ஆக அதற்கு காரணம் தமிழக அரசுதான்! 

கல்வீச்சை (முதலில் மது பாட்டில்கள் கடையில் இருந்து போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்டதாக ஒரு தகவல் இருக்கிறது) இப்படி மிருகத்தனமாக அடித்து "நொறுக்கும்" காவல்துறை, அன்று ஜெயலலிதாவை சிறையில் அடைத்தபோது பேருந்துகள் எல்லாம் ஜூவாலைவிட்டு எரிந்ததே... 

அப்போது கோழிமுட்டைக்கு 'முடி' புடுங்கினார்களா? 

மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் அது பொன்சட்டியா?

இன்று  4.8.15 PTTV மக்கள் மேடைக்கு..!

===


'கவுன்டவுன்' ஆரம்பம்!

ஆம்! சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் அளவைத் தாண்டியே தற்போது போய் உள்ளது! 

ஏறக்குறைய 10,15 ஆண்டுகள் ஆகிறது; போராட்டக்காரர்களை "முன்கைது" செய்வதென்பது! இந்த நேற்று இரவு மட்டும் 3000க்கும் அதிகமானோரை, திருடர்களை பிடிப்பதுபோல் வீடு புகுந்து பிடித்து, உடனே சிறையில் அடைத்து இருக்கிறார்கள் என்றால், அனேகமாக சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் கொதிநிலையை அடைந்திருக்கிறது என்றே தோன்றுகிறது! 

அன்று "டான்சி" ராணி! இன்று "டாஸ்மாக்" ராணி! போராட்டங்கள் தோற்பதில்லை டாஸ்மாக் ராணியே! 

'கவுன்டவுன்' ஆரம்பம்!

இதன் ஒருபகுதி இன்று 4.8.15 PTTV நேர்பட பேசு வில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

====

நின் புகழ் வாழ்க!

மது ஒழிப்பு போராளி சசிபெருமாள் குடும்பத்தாருக்கு... 04.08.2015 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநிலத் தலைவரும், சிபிஐஎம் மாநிலக்குழு உறுப்பினருமான எஸ்.முத்துக்கண்ணன், 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளரும், சிபிஐஎம் மாநிலக்குழு உறுப்பினருமான கே.ஜோதிலட்சுமி நேரில் ஆறுதல்! 

மறைந்த சசிபெருமாள் உருபடத்திற்கு மலரஞ்சலி!


அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்டக்குழுச் செயலாளர் பி.தங்கவேலு, மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ஆர்.குழந்தைவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பழ.ஜீவானந்தம், கே.ராஜாத்தி, ஐ.ஞானசௌந்தரி மற்றும் தோழர்கள்...

சோகமே உருவமாக இருந்த குடும்பத்தாருக்கு என்னதான் ஆறுதல் கூறினாலும்... ஈடு செய்ய யாரால்  முடியும்?

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி அப்துல் கலாம் வார்த்தைகளில் கூறினால்...

"பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!" ஆம்! மது ஒழிப்பு போரில் தனிமனிதனாக போராடி... இன்று நீ சரித்திரமாகி விட்டாய்! நின் புகழ் வாழ்க!

===

டாஸ்மாக் முதலாளியின் கா(ஏ)வல் துறை!

டாஸ்மாக் கடைக்குள் பணியாளர் உயிர் இழப்புக்கு டாஸ்மாக் கடையை நடத்தும் முதலாளியே பொறுப்பு! முதலாளி யார்? தமிழ்நாடு அரசு அல்லவா? 

'கெட்ட காலத்திலும்' நல்ல காலம் என்பர்களே அதுபோல் கடை தீ பிடித்து செத்ததால், செத்தவர் தப்பித்தார்! இல்லையென்றால் 'நெஞ்சுவலி' வந்து செத்தார் என்று 'ஃபைலை' குளோஸ் செய்திருக்கும் டாஸ்மாக் முதலாளியின் கா(ஏ)வல் துறை!

இன்று 05.08.15 PTTV மக்கள் மேடைக்கு!

====

நினைவு மண்டபம் கட்டிட உறுதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர்  ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் வைகோ, திருமா... இன்று 06.08.15 சசிபெருமாள் குடும்பத்திற்கு ஆறுதல்... சசிபெருமாள் உடலை அடக்கம் செய்ய சம்மதம்! நினைவு மண்டபம் கட்டிட உறுதி; மதுவிலக்கு கொள்கையை முன் எடுத்து செல்ல சூளுரை!
நாளை மாலை சொந்த ஊரில் சசிபெருமாள் உடல் அடக்கம்! அதன்பின் தொடர் உண்ணாநிலை போராட்டத்தை திரும்ப பெற முடிவு!

உடன் சிபிஐஎம் சேலம் மாவட்டச் செயலாளர் பி.தங்கவேலு, மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி மற்றும் சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன், மதிமுக மாவட்டச் செயலாளர் தாமரைக்கண்ணன், விசிக மாவட்டச்செயலாளர் நாவலசு, மமக மாவட்டச்செயலாளர் இமாம் மொதீன் உள்ளிட்டோர்...!

No comments:

Post a Comment