Sunday, 9 August 2015


மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து...
சேலம் மாவட்டத்தில் அகில இந்திய பிரச்சார இயக்கம் இன்று துவக்கம்!
மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசும், மாநிலத்தில் ஆளும் ஜெயலலிதா அரசும் தற்போது வரலாறு காணாத வகையில் லஞ்ச-ஊழலிலும், மக்கள் விரோதப் பாதையிலும் சென்றுக்கொண்டிகின்றன.  நாட்டின் கனிமவளம் உள்ளிட்டு அனைத்துச் செல்வங்களையும் இந்திய-அந்நிய முதலாளிகளுக்கு தாரை வார்த்து  வருகின்றன. மொத்தத்தில் மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடிக் கொண்டிருக்கின்றன.
அன்று...! பாஜக வளர்ச்சி, ஊழலற்ற ஆட்சி என்றது; அப்பொழுதே இடதுசாரிகள் சொன்னோம், “இது சைத்தான் வேதம் ஓதுவதுபோல் இருக்கிறதுஎன்று!  அன்று ராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் இருந்து... எடியூரப்பா வரை... ஊழலில் நாறிப்போன கட்சி பாஜக. என்பது தற்போது நடந்துள்ள ரூ1700 கோடி ஊழல் செய்த லலித் மோடி என்கிற பெருச்சாலியை வெளியுறவுத்துறை அமைச்சரும், ராஜஸ்தான் முதல் அமைச்சரும் நேரடியாக களம் இறங்கி காப்பாற்றுவது; மனித மேம்பாட்டு அமைச்சர் பொய்யான கல்வித் தகுதி சான்று தந்துள்ளது; மகாராஷ்ராவில் 2 அமைச்சர்கள் ஊழலில் ஊறித்திளைப்பது வரை... எல்லாவற்றிக்கும் மேலாக 50 உயிர்களை பலி வாங்கியதோடு, பல்லாயிரம் கோடி தொழில்நுட்ப வாரியத்தில் (வியாபம்) ஊழல் வியாபித்து கிடப்பது வரை  பார்க்கிறபோது அன்று கம்யூனிஸ்ட்கள் சொன்னது உண்மையாகி விட்டது!
இப்படி மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்ளைகள் நாட்டை நாசமாக்கி வருகிறது. கருப்பு பணத்தை மீட்டு, வீட்டுக்கு ரூ16 லட்சம் தருவோம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்தது ஒருபக்கம்; இன்னொரு பக்கம் இந்திய விவசாயிகளின் விளைநிலங்களை எல்லாம் கார்பரேட் முதலாளிகளுக்கு அள்ளித் தருவதுதன் மூலம் மோடி அரசின் முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்து வருகிறது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை அடி முதல் நுனி வரை எங்கும் ஊழல்; எதிலும் ஊழல் ஊழல் மயம் என கொடிக்கட்டி பறக்கிறது; அரசு ஊழியர் முத்து குமாரசாமி ரயில் முன் பாய்ந்த உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு ஊழல் புரையோடிக்கிடக்கிறது; மின்சார வாரியத்தில் மட்டும் 1 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது; டாஸ்மாக் (மதுக்கொள்கையில்) போதையில் தள்ளாடி வருகிறது; மது எதிர்ப்பு போராளி சசிபெருமாள் மரணம் தமிழகத்தில் மது எதிர்ப்பு அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசின்  முதல் அமைச்சர் அன்று... டான்சி ராணியாக திகழ்ந்தார்; இன்று டாஸ்மாக் ராணியாக திகழ்வதுதான் வெட்கத்திலும் வெட்கம்! கல்வி-சுகாதாரம்-ரேசன்-முதியோர் பென்சன்-நூறு நாள் வேலை போன்ற அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டிய அரசு, மது விற்பதில் அளவு கடந்த அக்கரையோடு செயலாற்றி வருவததுதான் கொடுமையிலும், கொடுமை!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  2015 ஆகஸ்ட் 01 முதல் 14 முடிய அகில இந்திய அளவில் மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் நடத்துகிறது. மேச்சேரி ஒன்றியம் முழுவதும் தெருமுனைப் பிரச்சாரம் நடத்துகிறது.

அதன் அடிப்படையில் இன்று 9.8.15 அன்று சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தில் பிரச்சார இயக்கம் துவங்கியது. கருமலைக்கூடலில் டி.காவேரிதுரை தலைமையில் தெருமுனைக்கூட்டம் நடந்தது. இதில் பி.தங்கவேலு, மாவட்டக்குழுச் செயலாளர், எஸ்பி.தங்கவேல், மாவட்டசெயற்குழு உறுப்பினர், பழ.ஜீவானந்தம் நங்கவள்ளி ஒன்றிய சேர்மேன், கே.ராஜாத்தி மாவட்டக்குழு உறுப்பினர், லட்சுமிசிதம்பரம் மேட்டூர்-கொளத்தூர் ஒன்றிய செயலாளர், ஏ.அருணாசலம், நா.வேணுகோபால், மாங்குயில் எஸ்.வசந்தி, வி.ஸ்டாலின், பிகே.ராஜேந்திரன் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிறப்புரை ஆற்றினர்.


மேச்சேரியில் தெருமுனை வேன் பிரச்சாரம் ஒன்றிய செயலாளர் எம்.ரத்தினவேல் தலைமையில் துவங்கியது. மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு துவக்கி வைத்தார். காமனேரி, அரங்கனூர், புக்கம்பட்டி, வெள்ளார், சந்துக்காடு, மல்லிகுந்தம், கூணான்டியூர், பழங்கோட்டை உள்ளிட்டு 15 ஊர்களில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் எஸ்பி.தங்கவேல், மாவட்டசெயற்குழு உறுப்பினர், கே.ராஜாத்தி மாவட்டக்குழு உறுப்பினர், ஜி.மணிமுத்து, கே.மாது, எம்.அருனாசலம், சி.ராமநாதன், சி.ராமகிருஷ்ணன், ஏ.முருகேசன், ஆர்.சாந்தி மேச்சேரி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்







----




No comments:

Post a Comment