Wednesday, 30 December 2015

#பூலோகம்#
🙆🙏🙆 
பூலோகம், ஆறுமுகம் என இரு "பாக்ஸிங்" (குத்துச்சண்டை) வீரர்கள். இவர்களின் வீரத்தை தனியார் (பியூச்சர்) தொலைக்காட்சி ஒன்று எப்படி சுரண்டி கொளுக்கிறது என்பதே கதை. 

இந்த கதைக்கு வசனம் தான் அனல் பறக்கிறது; திரை அரங்கம் அதிர்கிறது; அந்தளவுக்கு வசனக்கர்த்தா எஸ்பி.ஜனநாதன் விளாசி இருக்கிறார்! 

இன்றைய பூலோகத்தில் பன்னாட்டு நிறுவனங்களும், அதன் ஊடகங்களும் சாதாரண உழைப்பாளிகளின் உழைப்பை, குறிப்பாக விளையாட்டை வினையாக்கி, விலையாக்கும், வெறியேற்றும் விதத்தை கண்முன்னே நிறுத்தி, கண்களில் கோபம் கொப்பளிக்க செய்திருக்கிறது "பூலோகம்!"

கதை, திரைக்கதை, இயக்கம் கல்யாணக்கிருஷ்ணன் அறிமுக இயக்குனராகவே தெரியவில்லை! அபரமாக இயக்கி உள்ளார். அமெரிக்க (சைக்கோ) பாக்ஸிங் வீரர், ஸ்டீபன் ஜார்ஜ் இங்கே வரும் போது, நம் நாட்டு பாரம்பரிய இசைக்கு அவரை ஒருவிதமாக ஆட வைத்திருப்பது, பாக்ஸிங்கைவிட சூப்பர்! 

"தனிமனிதனாக நிற்க்காமல், நமக்குள் போட்டி பொறாமை கொண்டு பிரிந்து கிடக்காமல், ஒன்றுபட்டு நின்று, எதிரியை இனம் கண்டு வீழ்த்த வேண்டும்!" என்பதை மிக அருமையான பூலோகம் போதிக்கிறது! 

இது... தமிழகத்தில் இடதுசாரி அமைப்புகளுக்கு உதவும் உந்துசக்தியாக இருக்கும்!

அதுபோல் விளையாட்டுக்கள் சூதாட்டங்களாக,  லாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றப்பட்டுள்ளதை நிர்வாணமாக 'ஆபாசம்' இன்றி காட்டி, ஆக்ரோசத்தை கிளப்பி விடுகிறது! 

நமது "பூ" போன்ற உலகம், குரங்குகள் கையில் (பன்னாட்டு சுரண்டல்வாதி களிடம்) சிக்கி, எப்படி கொள்ளையிடப் படுகிறது என்பதை சிறிதும் சமரசம் இல்லாமல் "நெற்றிப்பொட்டில்" அறைந்தாற்போல் பூலோகத்திற்கு உணர்த்துகிறது "பூலோகம்!" 

ஜெயம் ரவி கதாப்பாத்திரத்தின் அய்க்கான் (icon) 'தேசபக்தர்களின் குறிப்பாக பன்னாட்டு பகாசூர சுரண்டலை ஒழிக்க, ஓயாது குரல் கொடுத்து வரும் இடதுசாரிகளின் அரும்பாடுகளை அடையாளப் படுத்துவது' போல் அமைக்கப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது!

பூலோகமாக ஜெயம் ரவி, இவரின் இணையாக திரிஷா, தொலைக்காட்சி ஓனராக பிரகாஷ்ராஜ் மற்றும் அனைத்து கலைஞர்களும் அருமையாக நடித்துள்ளனர். 

ஜெயம் ரவி சூரத்தனத்திலும், பிரகாஷ்ராஜ் வில்லத்தனத்திலும், பொன்வண்ணன் மற்றும் சண்முகராஜா குணசித்திரத்திலும் வெளுத்து வாங்கி இருக்கிறார்கள்! ஸ்ரீகாந்த் தேவா வின் இசைக்கோர்ப்பு, மாயான கொள்ளை பாடல் பூலோகம் விறுவிறுப்பைக் கூட்டுகிறது!

விளையாட்டுகளிலும் விரசத்தைப் பரப்பிடும் விபரீதம் முதல் இன்றைய பன்னாட்டு கம்பெனிகளின் சுரண்டல் கேடயமாகவும், சுரண்டல்வாதியாகவுமே ஊடகங்கள் வினையாற்றுவது வரை உறித்த கோழியாக தொங்கவிட்டுள்ளது பூலோகம்! பூலோகம் புரையோடிபோய் இருக்கும் பன்னாட்டு சுரண்டலை (புட்டுப்புட்டு வைக்கிற) "தீண்டுகிற" "பூநாகம்!"
----\\\
உண்மையாக சொன்னீங்க மாமா தோழர் அவர்களே....!
உண்மை உரக்க சொல்லும் நிகழ் கால நிஜப் படம். வசனக் கர்த்தாவின் வசனங்கள் மக்களை சுரண்டிக் கொண்டிருக்கும் சுரண்டல்வாதிகளுக்கான சட்டை அடி.இன்று பல்வேறு பிரபல தொழிலதிபர்கள் விளையாட்டை சூதாட்டமாக்கும் சூதாட்டர்களின் உண்மை நிலையை  தெளிவுப்படுத்தியதால் மூன்று ஆண்டு சிறைக்கு பின்னார் திரைக்கு வந்த "பூலோகம்....!
-----\\\\
உண்மையிலேயே நடுநிலை 
ஆய்வாக இருந்திருந்தால்,,,
இன்று 20.12.15 மதியம் தந்தி டிவியில் தற்செயலாக "மக்கள் யார் பக்கம்" என்ற நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அதில் அதிமுக ஆதரவு செகு.தமிழரசன், தமிழ்நாடு முஸ்லீம் கழகம் (தொண்டு நிறுவனமாம்?!) ஹதர்அலி, சமூக ஆரவலரா? பத்திரிக்கையாளரா? தெரியவில்லை பெருமாள்மணி... இவர்களுடன் நிகழ்ச்சி தொகுப்பாளர்... ரங்கநாத்பாண்டே..

மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் (சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர்) 4 தொகுதிகளில் 4 பேரைப் பிடித்து பேட்டி... அவர்களும் கட்சிகள் எதும் வரவில்லை; தொண்டு நிறுவனங்கள் தான் வந்தன; என்று பேசினர். ஹதர்அலி உச்சி குளிர்ந்து போனார். பெருமாள்மணியும்தான்.

இப்பத்தான் கிளைமாக்ஸ்... எதோ ஒரு நிறுவனத்துடன் இணைந்து, நேற்றும், இன்றும் கருத்து கணிப்பு நடத்தினார்களாம்!? மொத்தம் 5 கேள்விகள்...

1. அரசின் உதவி கிடைத்தது... உடனடியாக 21%; தாமதம் 59%; இல்லை 20%. 2.எதிர் கொள்ள தடையா... ஆம் 8%; இல்லை 83%; சொல்ல இயலாது 9%. 3. எதிர் கட்சிகள் செயல்பட்டதா... ஆம் 12%; இல்லை 84%; சொல்ல இயலாது 4%. 4. தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா... ஆம் 57%; இல்லை 16%; சொல்ல இயலாது 26%. 5. அரசு செயல்பாடு... மிகமோசம் 35%; மோசம் 28%; சராசரி 22%; நன்று 5%; மிகநன்று 10%.

எதற்கு இப்படி ஒரு கருத்து கேள்வி? என்று யாரும் கேட்டு விடாதீர்கள். அது, அந்த டிவியின் நேர்மையை, நடுநிலையை சந்தேகப்பட்டதாக அமைந்துவிடும். தேவையில்லாமல் அவர்களின் சீற்றத்திற்கு ஆளாக நேரிடும். 

இதிலே முதல் மற்றும் கடைசி கேள்வியை பாருங்கள் ஆளும் கட்சிக்கும், அரசுக்கும் எதிராக இருக்கும். 2வது கேள்வி எனக்கு புரியவில்லை; என்னால் அதை பின்தொடருவதில் சிரமம் இருந்தது. மூன்றாவது கேள்வி 

எதிர்கட்சிகளுக்கு எதிராக இருக்கும். நான்காவது கேள்வி எதிர்கட்சிகளுக்கு ஆதரவாக இருப்பதுபோல் இருக்கும். ஆனால் கூட்டிக்கழித்து, 

பெருக்கிப்பார்த்தால், கட்சிகள் மோசம் என்பதுபோல் ஒரு ஆய்வு செய்து, அதன்மூலம் ஆளும் கட்சியை உஷார் படுத்தும் 'எலும்புத்துண்டு' வேலை நடந்திருப்பது தெரியவரும். 

ஆம்! இன்று இந்த ரிப்போர்ட் டும் வெளியாகிறது. அதோடு அதிமுக பொதுக்குழு, செயற்குழு க்களும் இரண்டொரு நாட்களில் இரண்டொரு நொடிகள் கூடிட இருக்கிறதாக அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

உண்மையிலேயே நடுநிலை ஆய்வாக இருந்திருந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் சார்பு அமைப்புகளும், மக்கள் நலக் கூட்டணியும் ஆற்றிய களப்பணி அபாரமானது. அதையும் கணக்கில் கண்டுக்கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, தொண்டு நிறுவனங்களைத் தூக்கி வைத்து ஆடிய இந்த ஊடகம், அது குறித்து ஏன் கருத்து கணிப்பு நடத்தவில்லை? என்ற கேள்வி எழுவதை யாரும் தடுக்க முடியாதல்லவா?

அதாவது எதிர்கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 'மொக்கையடி' கொடுத்துவிட்டு, ஆளும் கட்சியை 'உச்சி முகரும்' சித்து வேலையை சிறப்பாக செய்திருக்கிறது 'நடுநிலை தந்தி டிவி!' சபாஷ்!
----\\\
அதிமுக., ஆகமவிதி.. க்கு ஆதரவாக..
இன்று 20.12.15 தந்தி டிவிவில், "கேள்விக்கு என்ன பதில்?" நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு.தொல்.திருமாவளவன்.... கேள்வியாளர் திரு.ரங்கநாத் பாண்டே... "மற்ற மற்ற மாநிலங்களில் ஆயிரம் கணக்கில் இதுபோன்ற மழை வெள்ளம் சீற்றங்களின் போது இறந்திருக்கிற போது, தமிழகத்தில் நானூறு பேர்தானே இறந்திருக்கிறார்கள்; இது அரசின் முன்னெச்சரிக்கை, அல்லது உரிய முறையில் செயல்பட்டதால்தானே..
.

உயிரிழப்பு குறைந்திருக்கிறது என்றும், இதை யெல்லாம் கணக்கில் கொள்ளாமல், முதல்வர் ராஜினாமா செய்ய சொல்கிறீர்களே இது உங்களுக்கு ஓவராக தெரியவில்லையா?" என்றார். அதற்கு திருமா நெத்தியடி கொடுத்தார் பாருங்கள்... "நாங்கள் கோருவதற்கு முன்பே அவரே ராஜினாமா செய்திருந்தால், அவரின் மதிப்பும், மரியாதையும் கூடியிருக்கும்"  என்று. பாண்டே பதிலின்றி பரந்துவிட்டார் அடுத்த கேள்விக்கு.

"ஆகம விதி என்பது ஒரு விதி. அந்த விதிப்படி சில கோவில் மட்டுமே தமிழகத்தில் இருக்கிறது; அதில் பிராமணர்கள் எல்லோரும் அதில் அர்ச்சனை செய்ய முடியாது தெரியுமா?" என்று மடக்கி விட்டதாக கேட்ட கேள்விக்கு, திருமா கூறினார்... "அப்படியென்றால், அந்த பிராமணருக்காக நான் குரல் கொடுக்கிறேன்" என்றார். உடனே தாவினார்... "இந்து, முஸ்லீம் கோவில்களில் அர்ச்சகர் ஆக கேட்பீர்களா?" என்று புத்திசாலித் தனமாக கேட்பதுபோல் கேட்டார். அதற்கு," பிரச்சனை அதுவல்ல; இந்துகள் இந்துக்கோவில்களில் அர்ச்சகர் ஆக முடியவில்லை என்பதுதான் பிரச்சனையே ஒழிய நீங்கள் சொல்வதல்ல" என்றார். கட்சியில் உறுப்பினர் என்றால், அவர் தலைவராக வர முடியுமா?  என்று பாண்டே கேட்டதுதான் கொஞ்சமும் ஒட்டவில்லை.

"மக்கள் நலக் கூட்டணியில் வைகோ, ராமகிருஷ்ணன் ஆகியோர் அதிமுக, திமுக வை விமர்சிப்பதைப்போல் நீங்கள் விமர்சிப்பது இல்லையே என ஒரு பிட்" போட்டார். "அவர்கள் சொன்னால், நானும் சொன்னதாக தான் அர்த்தம்" என்றார் நச் என்று. விஜயகாந்த், வாசன் ஆகியோரை அழைப்பது. உங்களுக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில்லை; பலவீனமாக இருக்கிறது என்றா?" என்ற கேள்விக்கு, "அப்படியல்ல; வந்தால் அவர்களுக்கும், எங்களுக்கும், மக்களுக்கும் நன்மை என தான் சொல்கிறோம். 

மற்றபடி எங்களுக்கு நம்பிக்கை இருக்கு; நீங்கள் 15% ஓட்டு என்பதுதான் இருக்கிறது என்று சொல்வதைப்போல், 1967இல் தனது சொந்தப் பலத்தில் மட்டுமே வெற்றி பெறவில்லை; மக்கள் நலக் கூட்டணியும் தற்சமயம் அப்படித்தான்; அன்றுபோல் தற்பொழுது பொதுவாக திமுக, அதிமுக வுக்கு எதிரான எண்ணம் மக்களிடம் இருக்கிறது; அது எங்களுக்கு வெற்றியை இட்டுத்தரும் " என்று ஆணித்தரமாக வாதிட்டது மிகஅருமை!

மொத்தத்தில் இதிலும் அதிமுகவுக்கு ஆதரவாகவும், ஆகம விதிகளுக்கு ஆதரவாகவுமே கேள்விகளை தொடுத்து, தான் யார் என்பதை நன்றாக அடையாளம் காட்டிக் கொண்டார் பாண்டே!
----\\\\
இன்று 20.12.15 இரவு 7.30 மணிக்கு புதிய தலைமுறை டிவில் "உரக்கச் சொல்லுங்கள் " நிகழ்ச்சி கொஞ்சமே பார்க்க முடிந்தது. அதிலேயே நெஞ்சம் கண்ணீரால் கரைந்துவிட்டது. எத்தனை எத்தனை சோகம், வெளிச்சத்திற்கு வந்தது, இதுபோன்று ஒன்றிரண்டு தான்! இன்னும் இதுபோல் எவ்வளவு சோகங்கள் இருட்டில் கிடக்கிறதோ? உரக்கச் சொல்லுங்கள்... உருக வைத்தன! ஆட்சியாளர்களை உருள செய்யுங்கள் என்றே எனக்கு கூற தோன்றுகிறது.
----\\\
 "சகாயத்திற்கு செய்யும் சகாயம் அல்ல இது!"
🙈🙉🙊 
சகாயத்திற்கு "சகாயம்" செய்வதாக நினைத்துக் கொண்டு தேவையில்லாத சங்கடங்களையும், சர்சைகளையும் வளர்ப்பதன் நோக்கம் என்னவோ?  தெரியவில்லை!  

ஆனால் ஒன்று... 
"அவுலை (கெஜ்ரிவாலை) நினைத்துக் கொண்டு ஒரலை (சகாயத்தை) இடிக்க வேண்டாம்" என்பதே பணிவான வேண்டுகோள்! 

உண்மையிலேயே தமிழகத்தில் அதிமுக, திமுக வுக்கு மாற்று வேண்டும் என்போருக்கு... அப்பழுக்கற்ற இடதுசாரிகள்- அம்பேத்கரிய- பெரியாரிய வாதிகள் கூட்டணியாம்.. "மக்கள் நலக் கூட்டணி" யை தைரியமாக ஆதரிக்கலாம்! 

இது இன்றைய சூழலில் பொருத்தமான அணி; கூட்டணி! இதுவே இன்றைய தமிழகத்தின் "பிணி"யைத் தீர்க்கும் ஒரே "அணி!"
----\\\\
சோனியா-ராகுல் மீதான 
நேசனல் ஹெரால்டு வழக்கு ஜாமீன்... 

காழ்ப்புணர்ச்சியாக தொடரப்பட்ட வழக்கு என்பதில் இருவேறு கருத்தில்லை; ஆனால் காங்கிரஸ் ஒன்றும் முற்றும் துறந்த முனிவருமல்ல; (ஊழலற்ற கட்சியல்ல) பாஜக ஒன்றும் படித்தாண்டா பத்தினியும் அல்ல! பாஜக வும், காங்கிரஸும் ஊழலில் ஊறிப்போனவர்களே! 

அதே சமயத்தில் எதிர்கட்சிகள் மீது ஆளும் கட்சியாக வருபவர்கள் இதுமாதிரி... தோண்டி, துருவி எதையாவது கண்டுபிடித்து, மீண்டும் "பிரேத பரிசோதனை" செய்வதும், வழக்குப் போடுவதும், நெருக்கடிக் கொடுப்பதும் இவர்களின் வாடிக்கை! 

இதன்மூலம் ஆளும்கட்சி தன், மக்கள் விரோத நடவடிக்கைகளை, லாவகமாக திசைத்திருப்பிக் கொள்வர்; அதோடு தனக்கு சாதகமாக எதிர்கட்சிகளை வளைத்து போட்டும் கொள்வர்; இடதுசாரிகளைத் தவிர!

இன்று 19.12.15 PTTV நேர்படபேசு! இதன்ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
-----\\\
தண்டனையே இல்லாமல் 
விடுதலை ஆகவில்லை! 
நிர்பயா வழக்கில் சிறார் விடுதலை... குற்றவாளி திருந்த வழி வகுக்கும் என நம்புவோமாக! 

அதுமட்டுமல்ல, 3 ஆண்டு தண்டனையும் அனுபவித்து உள்ளான்! தண்டனையே இல்லாமல் விடுதலை ஆகவில்லை! 

இதுபோன்று சிரார்களையும் விட்டு வைக்காத பன்னாட்டு முதலாளித்துவ சீரழிக்கும் நுகர்வு கலாச்சாரத்திற்கு தீ வைத்து கொளுத்தாமல், இதற்கு ஏது நிரந்தர அல்லது நிம்மதி பெருமூச்சு விடும் தீர்வு? 

இவனை இவ்வண்ணம் குற்றம் புரிய தூண்டியது எது? யாது? இந்த சமுதாய அமைப்பல்லவா? அதை மாற்ற வேண்டாமா? அதற்கு என்ன வழி? 

அதை நோக்கிய பயணமும், பாதையும் வகுக்க வேண்டும்! அதற்கு இடதுவழியே (Keep Left)தீர்வாக இருக்க முடியும்! ஆனால் அது அவ்வளவு எளிதல்ல! 

இன்று 21.12.15 PTTV மக்கள் மேடை!
----\\\
கருணாநிதியின் கனவு ஒருபோதும் பலிக்காது
மக்கள் நலக் கூட்டணி என்ன... தன் நலன், தனது குடும்ப நலனுக்காக... மன்னிக்கனும், "தமிழ் இன" நலனுக்காக... அமெரிக்க கூட்டணியையே கூட கொஞ்சம் ஏமாந்தால்... உடைக்கும், அல்லது உடைப்பார்.... திமுகவும் அதன் ஆயுள் தலைவர் கருணாநிதியும்! 

திமுகவுக்கு தற்போது எதிரி அதிமுக அல்ல; மக்கள் நலக் கூட்டணிதான்! திமுகவின் "பாட்சா" அதிமுகவிடம் பலிக்காது! அதிமுக விடமிருந்து ஒரு உடைந்த செங்கல்லைக் கூட  "பேத்து" எடுக்க  முடியாது!அப்படி முடியுமென்றால்... செய்யச் சொல்லுங்கள் பார்போம்!? 

திமுக யாரை உடைத்தாலும், உடைக்காவிட்டாலும் அதுக்கு... இது, கடைசி தேர்தல் என்பது நிரூபணம் ஆகிவிட்டது என்பதுதான்... திமுகவின் தற்போதைய அசிங்கமான, அருவருக்கத்தக்க நடவடிக்கைகள் காட்டுகிறது!

ஆனாலும், மக்கள் நலக் கூட்டணியை உடைக்கும் திமுகவின் தலைவர் கருணாநிதியின் கனவு ஒருபோதும் பலிக்காது என்பதை தமிழகம் பார்க்கத்தான் போகிறது!

இன்று 21.12.15 News 7 ?கேள்வி நேரம்!
-----\\\\ 
சிரிப்பைத்தான் வர வழைக்கிறது! 
அன்புமணி கூற்று சிரிப்பைத்தான் வர வழைக்கிறது!  அதிமுக, திமுக இப்படி சொன்னால் கூட புரிந்து கொள்ளலாம்! இவர்... துணை முதல் அமைச்சரை விஜய்காந்த் க்கு தருவாரா? அல்லது தமிழிசை (?!) க்கு தருவாரா? யாருக்கு தருவார்?  110 இடங்களில் பாமக வெற்றிபெற போகுதாம்; அப்புறம் எதற்கு கூட்டணி?

தேமுதிக வுக்கு தற்போதைக்கு இருக்கும் ஒரே பாதை... மக்கள் நலக் கூட்டணிதான்! அதை அது நாடாமல் வேறுபாதையை நாடினால், அது... அதுக்கு தற்கொலைப் பாதையே!  இந்த வாய்ப்பையும் தேமுதிக பயன்படுத்தத் தவறினால் அரசியல் வரைபடத்தில் 'வெள்ளமென" அது அடித்து செல்லப்பட்டுவிடும்! 

இன்று 21.12.15 PTTV நேர்படபேசு! 
----\\\\
விவாதத்தில் நெறியாளர் குணாவுடன், மார்க்சிஸ்ட் கே.கனகராஜ், பாமக மோகன்குமார், பாஜக தி.நாராயணன், பத்திரிக்கையாளர் மணி...பாமக முதல்வர் வேட்பாளர் அறிவித்து இருப்பதை நாராயணன் விமர்ச்சித்தார். அதற்கு பாமக மோகன்குமார், "நீங்க மட்டும் மோடிய அறிவிக்கலாமா? 

நீங்க யாரை கேட்டு அறிவித்தீங்க; உங்களுக்கு ஒரு நியாயம்; மற்றவங்களுக்கு ஒரு நியாயமா?" என்றார். அதற்கு நாராயணன் என்ன சொல்லி இருப்பார்? உங்களால் யூகிக்க முடியுமா? முடியவே முடியாது! மோடிகூட இப்படி சொல்லுவாரா? தெரியாது! 

"அதும், இதும் ஒன்றா?" என்று கேட்டிருப்பார்; அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு என்கிறீர்களா? ஆம்! அதில் தான் சந்தேகம்...  "பிரதான பிரச்சாரகர் என்றுதான் சொன்னார்களாம்; பிரதமர் வேட்பாளர் என்று சொல்லவில்லையாம்!

" தலைசுத்துதா? அதுதான் ஆர்எஸ்எஸ் வார்ப்பு பாஜக என்பது! ஒன்ரை வருட வரலாற்றையே இப்படி புரட்டுகிறார்களே... நூறு, இருநூறு ஆண்டு வரலாறுகளை எப்படி பேசுவார்கள் என்பதுக்கு இது ஒன்றே போதும் அல்லவா?
-----\\\
திமுகவாவும் அப்படித்தான?
இன்று 22.12.15 PTTV புதுப்புது அர்த்தங்களில் நெறியாளர் ஜென்ராம் வுடன் சிபிஐ லெனின், திமுக மனுஷ்...! 

இந்த அணிச்சேர்க்கை வரும்போதே, கூச்சலுக்கு வாய்ப்பு இருக்கென்று! அதுமாதிரி நடந்தேவிட்டது! நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை! இதுபோன்ற விவாதங்களில் பங்கேற்கும் இடதுசாரி தோழர்கள் பொறுமை காத்து பதில் சொல்லி, நேயர் மனதில் இடம் பிடிக்கலாமே என்பது என் போன்றவர்களின் பணிவான வேண்டுகோளும், ஆசையும்! 

இன்று லெனின் மனுஷ் விவாதம் ஓரளவு இணைந்தே சென்றது! பாஜக வுடன் திமுக மனுஷ் பாணியில் சொன்னால் "உடன்பாடு" செய்ததும், இடதுசாரிகள் அதிமுக வுடன் உடன்பாடு தேர்தலில் செய்ததும் ஒன்றா? உடன்பாடு கொண்டுதான் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ், பாஜக வுடன் இருந்தீர்களா? தயவுசெய்து மனசாட்சியை கலட்டி வைத்துவிட்டு பேசாதீர்! 

இதனால் ஒன்றும் திமுக மதிப்பு ஒன்றும் கூடிவிடப்போவதில்லை  என்பதை என்றுதான் உணர்வீர்களோ? தெரியவில்லை! தேர்தலில் இடதுசாரிகள் தற்போதுதான் தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கி தேர்தலை சந்திக்கின்றன..! 

மே.வங்கம், கேரளா தவிர...! திமுகவாவும் அப்படித்தான? மனுஷ்புத்திரன் அவர்களே..?
----\\\\
தமிழகத்திற்கு பெரும் குடை...!
அருமை...! 
நன்று...! 
நீதி இன்னும் உயர் வாழுகிறது..! 
ஆபாச பாடலை பாடியதும் இல்லாமல், அதற்கு சிம்புவின் சில்லரைத்தனமான வாதம் இருக்கிறதே... அதுதான், அதைவிட ஆபாசம்...! 
அபத்தம்...! 
திமிர்...! 
உயர்நீதி மன்ற தடை...! தமிழகத்திற்கு 
பெரும் குடை...!
----\\\

ஆற்றங்கரை ஆக்கிரமிப்பை அகற்றிட உயர்நீதி மன்றம் தீர்ப்பை சிரமேற்று தமிழக அரசு இனியாவது செயலாற்றிட வேண்டும்! 

இதிலே எந்த செல்வாக்கு மிக்க சக்திகளுக்கும் பணிந்திடாமல், வருங்கால சந்ததிகளுக்கு வளமான தமிழகத்தை வார்த்தெடுத்து தர வேண்டும்! 

ஆற்றேரமிருக்கும் சாதாரண அன்றாடம் காசிகளின் குடியிருப்புகளுக்கு மாற்றிடம் அளித்திடல் வேண்டும்! 

ஏரி, குளம், கண்மாய்களை அவ்வப்போது தூர் எடுத்திடவுடம், வரத்து வாய்க்கால்களைப் பாதுகாத்து பராமரித்திடவும், ஒரு சிறப்பு சட்டத்தை இயற்றிடவும் வேண்டும்! 

வலுத்தவன் வகுத்ததே வாய்க்கால் என்றில்லாமல், வலுவான தமிழகத்தை உருவாக்கிட, எந்தவித வளைந்து கொடுத்தலும் இல்லாமல், ஏரி ஆக்கிரமிப்பையும் அச்சட்டத்தின் மூலம் அகற்றிடல் வேண்டும். செய்யுமா? தமிழக அரசு!

இன்று 22.12.15 News 7 ?கேள்வி நேரம்! இதன் ஒருபகுதி பதிவேற்றம் 
செய்யப்பட்டுள்ளது.
----\\\
"சகாயத்திற்கு செய்யும் "சகாயம்" அல்ல இது!"

சகாயத்திற்கு "சகாயம்" செய்வதாக நினைத்துக் கொண்டு தேவையில்லாத சங்கடங்களையும், சர்சைகளையும் வளர்ப்பதன் நோக்கம் என்னவோ?  தெரியவில்லை!  

தனிமனிதரால் இந்த சமுதாயத்தில், இன்றைய சூழலில் எதுவும் செய்துவிட முடியாது! சகாயமும் அந்த சேற்றில்?! (அரசியல் கட்சியில்) இறங்கித்தான் இவர்கள், இளைஞர்கள் நினைக்கும் "செந்தாமரை"யைப் பறிக்க முடியும்! 

ஆனால் ஒன்று... 
"அவுலை (கெஜ்ரிவாலை) நினைத்துக் கொண்டு ஒரலை (சகாயத்தை) இடிக்க வேண்டாம்" என்பதே பணிவான வேண்டுகோள்! 

உண்மையிலேயே தமிழகத்தில் அதிமுக, திமுக வுக்கு மாற்று வேண்டும் என்போருக்கு... அப்பழுக்கற்ற இடதுசாரிகள்- அம்பேத்கரிய- பெரியாரிய வாதிகள் கூட்டணியாம்.. "மக்கள் நலக் கூட்டணி" யை தைரியமாக ஆதரிக்கலாம்! 

இது இன்றைய சூழலில் பொருத்தமான அணி; கூட்டணி! இதுவே இன்றைய தமிழகத்தின் "பிணி"யைத் தீர்க்கும் ஒரே "பணி!"

இன்று 22.12.15 PTTV நேர்படபேசு!
-----\\\\
[12/22/2015, 22:01] Senthan Chennai: Super
[12/22/2015, 22:02] +91 94865 96641: Thanks Comrade!
---\\\
மணி கருத்து மணி மணியாக
இன்று 22.12.15 PTTV மக்கள் மேடை! 
விவாதத்தில் பத்திரிக்கையாளர் மணி கருத்து மணி மணியாக இருந்தது! சபாஷ்! மனிதனை உருவாக்குவது சுற்றுப்புற சூழலே! சட்டம் மட்டும் போதாது சூழல் முக்கியம் என்பதை அருமையாக விவாதித்தார் தைரியமாக!

(21.12.15 PTTV மக்கள் மேடைக்கான மீள்பதிவு..! 

நிர்பயா வழக்கில் சிறார் விடுதலை... குற்றவாளி திருந்த வழி வகுக்கும் என நம்புவோமாக! 

அதுமட்டுமல்ல, 3 ஆண்டு தண்டனையும் அனுபவித்து உள்ளான்! தண்டனையே இல்லாமல் விடுதலை ஆகவில்லை! 

இதுபோன்று சிரார்களையும் விட்டு வைக்காத பன்னாட்டு முதலாளித்துவ சீரழிக்கும் நுகர்வு கலாச்சாரத்திற்கு தீ வைத்து கொளுத்தாமல், இதற்கு ஏது நிரந்தர அல்லது நிம்மதி பெருமூச்சு விடும் தீர்வு? 

இவனை இவ்வண்ணம் குற்றம் புரிய தூண்டியது எது? யாது? இந்த சமுதாய அமைப்பல்லவா? அதை மாற்ற வேண்டாமா? அதற்கு என்ன வழி? 

அதை நோக்கிய பயணமும், பாதையும் வகுக்க வேண்டும்! அதற்கு இடதுவழியே (Keep Left) தீர்வாக இருக்க முடியும்! ஆனால் அது அவ்வளவு எளிதல்ல!)
----\\\\
நூதன பெட்டி(கள்)சன்..!
இதென்ன "சிக்குப்புக்கு ரயில்..?"

சேலம் பேருந்து நிலையத்தில் சுத்தம், சுகாதாரம், பயணிகளுக்கு பாதுகாப்பான உணவு பொருட்கள் கேட்டு..
.

தலைமை: என்.பிரவீண்குமார்  CPIM சேலம் மாவட்டக்குழு உறுப்பினர்...

22.12.2015 
சேலம் மாநகராட்சி மேயரிடம் 

சிபிஐஎம் சின்னேரிவயக்காடு கிளை 4000 பயணிகள் கையெழுத்துடன்...

நூதன பெட்டி(கள்)சன்..!
---\\\
கோபண்ணாவின் கோபம் நியாயமே!
இன்று 23.12.15 PTTV புதுப்புது அர்த்தங்களில் நெறியாளர் ஜென்ராம், பாஜக ராமசுப்ரமணியன், காங்கிரஸ் கோபண்ணா..!

சிறார் சட்டம் குறித்த விவாதத்தில், "சிறார் இப்படி கொடூரமாக செய்வதற்கு நாம் (பெரியவர்) காரணமில்லையா?" என்ற ஜென்ராம் எழுப்பினார் அதற்கு அவர்களிடம் பதில்லை! பெரிவர்கள் மட்டுமல்ல, இந்த சமுதாய சுரண்டல் சீரழிந்த கலாசார அமைப்பும் காரணம் இல்லையா? என்று நாம் கேட்கத் தோன்றுகிறது! 

அருண்ஜெட்லி ஊழல் பற்றி இன்றைய விவாதம்... "திருடரும், திருடரும் (இதன் சரியான வழக்கு சொல் திருடியும், திருடியும் என்பது) சந்தைக்கு போனாங்களாம்!"
என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது கிரிக்கெட் ஊழல் பற்றி காங்கிரஸ், பாஜக பேசியது; பேசியதல்ல கூச்சலிட்டது! NDA அரசுக்கு UPA அரசுதான் வழிக்காட்டியா? என்று ஜென்ராம் கேட்டதற்கு ராமசுப்ரமணின் கண்டு கொள்ளவில்லை!

டெல்லி தலைமை செயலகத்திற்குள் CBI புகுந்து ரெய்டு செய்ததால்தான், ஜெட்லி யின் கிரிக்கெட் ஊழல் ஆம் ஆத்மிக்கு தெரிந்தது என்ற உண்மையையும் சேர்த்தே விவாதித்திருக்கலாம் என்று தோன்றுகிறது! முதல்வர் அலுவலகம் ரெய்டு போல், பிரதமர் அலுவலகம் ரெய்டு  CBI செய்யுமா? என்ற கோபண்ணாவின் கோபம் நியாயமே!
----\\\
சகாயமும், சமஸ்களும்..!
🙏🙏 
இன்று 23.12.15 தி இந்து தமிழ் நாளிதழ் நடுப்பக்கம் கட்டுரையில் பிரபல எழுத்தாளர்  'சமஸ்' சகாயத்தை "வீரதீர புருசராக" உருவகப்படுத்தி உள்ளார்! அதுவரை அவரது எழுத்துரிமை ஓகே! 

ஆனால், தனது அதிமேதாவி தனத்தை வரம்புமீறி காட்டி இருப்பதாக உணருகிறேன்! "...இப்படி செய்யுங்கள்; இல்லையேல் வாயை மூடுங்கள்!" என்று எழுதுவதுதான் எழுத்துரிமையா? அல்லது கருத்து சுதந்திரமா? அல்லது அதிமேதாவிதனமா?  எனக்கு அது, அவரின் வரம்பு மீறும் செயலாக தெரிகிறது!

இதுபோல் தான் நேற்று 22.12.15 PTTV நேர்பட பேசு விவாதத்தில்கூட வந்த "சகாயம் 2016" என்ற அடையாளத்தைத் தாங்கி வந்தவரும், வேறு ஒருவரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் தேவசகாயம் உள்ளிட்டு கொஞ்சம் சத்தம் அதிகமாவே போட்டார்கள்! அதிலே கலந்துக் கொண்ட தீபாவும், வேறெருவரும் நிதானமாக பேசியதையே நாமும்  பணிவுடன் சமஸ்க்கும் சமர்பிப்போம்! 

ஊழல் எதிர்ப்பு, நேர்மை மட்டுமே போதாது! பொதுவாழ்வுக்கும், அரசியலுக்கும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும்!அடிப்படை கொள்கை அவசியம்! 

தற்போதுகூட டெல்லி ஆம் ஆத்மி கட்சி தலைவர் ஒருவரின் இருப்பிடமோ, அலுவலகமோ எதிலோ கரண்ஸி நோட்டுகள் கைப்பற்றப் பட்டுள்ளது! ஆம் ஆத்மி கொள்கையும்கூட யாருமறிந்தாரில்லை! 

மீண்டும் பதிவிட விழைகிறோம்... "அவுலை நினைத்துக்கொண்டு உரலைஇடிக்கவேண்டாம்!" அறிவுஜீவி சமஸ் க்குத்தான்!

ஆனால் சகாயம் அவர்கள் இதை எல்லாம்மௌனமாக பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் அர்த்தம்தான் நமக்கு அசைக்க முடியாத சந்தேகத்தை ஏற்படுத்துகிறது!? அரசியலுக்கு யாரும் வரலாம்! வாருங்கள்!
----\\\\
சந்தேகம் வேண்டாம்... 
மக்கள் நலக் கூட்டணி வலுப்பெற்று வருகிறது என்பதில் சந்தேகம் வேண்டாம். 

அதன் விளைவுதான் இந்த  குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் கூடிய அரசியல் மாற்றுக்குப் பதிலாக... அரசியலற்ற மாற்றாக மடைமாற்றம் செய்திட பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) தற்போது... ஊழல் எதிர்ப்பு என்ற ஒற்றை கோஷசத்தை முன்வைத்து சிலரை தூண்டிவிட்டு "சகாய சர்க்கஸ்" நடத்துகின்றன! 

அந்த சாகசத்திற்கு தமிழக இளைஞர்கள் மசிய மாட்டார்கள்! 

விஜய்காந்த் மக்கள் நலக் கூட்டணியில் இணைவதற்கு 'சிக்னல்' கிடைத்த மாதிரிதான் தெரிகிறது! அது ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும்!ஆம்! அதிமுக-திமுக அல்லாத; மக்கள் நலக் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்றே தோன்றுகிறது!

இன்று 23.12.15 PTTV மக்கள் மேடைக்கு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\\
அரிதினும், அரிதான..
சிறார் சட்ட மசோதா சட்டமாகிவிட்டது; குடியரசு தலைவர் கையெழுத்து போடுவதுதான் பாக்கி இருக்கிறது! 

18ஐ 16ஆக மாற்றியதை தவிர இதில் ஒன்றுமில்லை; ஆபத்தானதாகவே தோன்றுகிறது! அரிதினும், அரிதான சம்பவம் நிர்பயா பாலியல்-கொலை! 

அந்த ஒருவனின் குற்றச்செயலுக்கு ஒட்டுமொத்த சட்டம் திருத்தம் அதிகபட்சம்! 

சட்டத்தைத் திருத்துவது என்பது தலையணையை மாற்றினால் தலைவழி போய்விடும் என்பதுபோல் இருக்கிறது! 

இன்றைய அக, புற சூழலே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு, குறிப்பாக சிறார்கள் கெட்டு போவதற்கு காரணம்! 

குறைந்தபட்சம் பாலினம் சமத்துவத்தை போதிக்கும் கல்விமுறையாவது இருக்கிறதா? என்றால், அதுகூட இல்லாத சூழலில் இக்குற்றங்களை எப்படி தடுக்க முடியும்?

அத்தகைய சூழலை மாற்றாமல், இதனால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை! 

இன்று 23.12.15 News 7 ?கேள்வி நேரம்! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\
"சல்லி"க்கட்டு விட, "சபரி"க்கட்டு க்கு தான்!
"சல்லி"க்கட்டு விட, "சபரி"க்கட்டு க்கு தான் இந்த ஆட்சியாளர்களின் (பாஜக-அதிமுக) சாய்மானம் அதிகமாக இருக்கும்! 

ஒற்றைக் கலாச்சாரத்திற்கு ஊளையிடும் இவர்களின் (பாஜக) ஆட்சியில் பன்முக கலாச்சாரத்திற்கு இனி "பாடை"தான்! 

ஜல்லிக்கட்டு உள்ளிட்டு, தமிழக மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளும், பாரம்பரிய பண்டிகைகளும் பாதுகாப்பதே இனி பெரும் போராட்டமாக இருக்கும்! 

இதிலே இவர்களுக்கு (பாஜக-அதிமுக) இரண்டு ஆதாயம்... 

1. மக்களை அன்றாடம் அல்லாடும் பிரச்சனையில் இருந்து, அரசின்மீதான கோபத்தில் இருந்து, மடைமாற்றம் செய்வது;  (உ-ம்) தற்போது  கன மழை-செயற்கை பேரிடர் திசைத்திருப்பல் குறிப்பிடலாம்! 

2. இந்த சந்தடிச்சாக்கில் மக்கள் விரோத பணிகளை நைசா செய்துக் கொள்வது! 

மொத்தத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரசியல் ஆதாய விளையாட்டாகத்தான் தற்போது ஆகிக் கொண்டிருக்கிறது! ஆம், அதிமுக-திமுக-பாஜக-காங்கிரஸ் கட்சிகளின் அரசியல் விளையாட்டாகிவிட்டது! 

இவர்கள் ஆட்சியில் இருக்கிறபோது ஒருமாதிரியும், ஆட்சியில் இல்லாதபோது ஒருமாதிரியும் விளையாட்டு விளையாடுகிறார்கள்! பாவம் ஜல்லிக்கட்டு விளையாட்டு!

இன்று 23.12.15 PTTV நேர்படபேசு!
----\\\\
தமிழகம்... உஷா குடும்பத்தின் குப்பை மேடா?
👫👫👫 
"தற்போது வெளியாகி உள்ள "பீப்" பாடல் தூக்கி எறியப்பட்ட பாடல்; தொல்லைகள் எங்களுக்கு எதிராக தொடர்ந்தால், தமிழகத்தைவிட்டு வெளியேறுவோம்; எந்த போலீசிலும் என் மகனை ஒப்படைக்க தயார்!" என சிம்பு வின் தாயார் கூறியதாக முக்கிய செய்தியாக தந்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது!

தூக்கி எறிப்படும் குப்பைமேடா, அல்லது குப்பைத் தொட்டியா? தமிழகம்! தமிழ் மக்களை, தமிழ் நாட்டை குப்பை தொட்டியாகிவிட்டு, நீங்க மட்டும் தப்பித்து போய்விடலாமென நினைப்பில் இருக்கிறீர்களோ? 

கோடான கோடி தமிழ் பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைத்துவிட்டு, செய்யுறதையும் செஞ்சிப்புட்டு, இப்ப தமிழ்நாட்டை விட்டு போவோம் என மிரட்டல் வேறா? என்ன கொடுமையடா கோபாலா? பாவம் தமிழ்மக்கள்..!
-----\\\\
பெரியார்: சமூகநீதி; எம்ஜிஆர்: சத்துணவு!
பெரியார்: சமூகநீதி, பாலினம் சமத்துவம், பெண்விடுதலை, மதவெறி எதிர்ப்பு களின் அடையாளம்! 

எம்ஜிஆர்: இவற்றை ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது அமலாக்க முயற்சித்தவர்; அதோடு கல்வியை ஏழை எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்க சத்துணவை கொணர்ந்தவர்!

இன்று 24.12.15 PTTV மக்கள் மேடை!
----\\\
ஆதாய அரசியல் நடத்துவது திமுக... 
மழைவெள்ள பாதிப்பு: எதிர்கட்சிகளில் ஆதாய அரசியல் நடத்துவது திமுக மட்டுமே! அதுபோல் ஆளும் கட்சிகளான அதிமுக-பாஜக வும் ஆதாய அரசியலின் உச்சம்; அதுவும் அதிமுக அம்மா ஸ்டிக்கர் திமுக வாகவே மாறிவிட்டது! 

இதர எதிர்கட்சிகளில் மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் (சிபிஐஎம், மதிமுக, விசிக, சிபிஐ) தான் மக்கள் நலனை முன்நிறுத்தி ஆதாயமின்றி செயல்பட்டன என்பதை பாதிக்கப்பட்ட மக்களே அறிவர்! ஏற்பர்! 

இன்று 24.12.15 PTTV நேர்படபேசு!
------\\\\
ஊழல் பெருச்சாலிகள் நிறைந்தது...
கீர்த்தி வாசன் இடைநீக்கம்: அத்வானி-ஜோதி சந்திப்பு பூசல் போல் தெரிந்தாலும், ஒன்று ஆகாது! ஆர்எஸ்எஸ் எல்லா பூசல்களையும், ஆட்சியில் இருக்கும் வரை சமாளித்துவிடும்! இதெல்லாம் திசைத்திருப்பல்!


அருண்ஜெட்லியை காப்பாற்றும் கார்பரேட் தந்திரமே கீர்த்திவாசன் இடைநீக்கம்! ஆனால், ஒன்று பாஜக இரும்புகோட்டை என்பதெல்லாம் "சும்மா" என்பதும், ஊழல் பெருச்சாலிகள் நிறைந்தது என்பதற்கு இது ஒரு சுடச்சுட உதாரணம்!

இன்று 24.12.15 News 7 ?கேள்வி நேரம்!
------\\\\\
சபாஷ்... சமஸ்..!
🙆🙆🙏🙏 
"உங்கள் கண்களுக்கு நல்லகண்ணு தெரியவில்லையா?" சரியான சாட்டையடி..! செவ்வணக்கம்... சமஸ் அவர்களே..! 

அதுவும் வீர வெணிமணி தினத்தில் தங்களின் கட்டுரை சாலப்பொருத்தம்..! முதல்வர் சகாயம் கட்டுரையைப் பார்த்து விமர்சித்து ஒரு பதிவு போட்டிருந்தேன். 

அப்பொழுதுகூட முகநூல் தோழர் சந்திரமோகன், கோபமும் எரிச்சலும் வேண்டாம் என்று கூட, எனக்கு பதிவு போட்டிருந்தார்! அதில்கூட மீண்டும் நான் எரிச்சல் துளியுமில்லை; ஒருவேளை கோபம்கூட இருக்கலாம்; ஆனால் சமஸின் எழுத்தை ரசித்து ருசிப்பவர்களில் நானும் ஒருவன் என பதிவிட்டிருந்தேன்! 

சபாஷ்... சமஸ்..!

(நன்றி: இன்று 25.12.15 தி இந்து தமிழ்)
----\\\\
"திராவிட இயக்க" பரிணாமம் என்பதா? 
எம்ஜிஆர் க்கு நினைவு அஞ்சலி செலுத்திய ஸ்டிக்கர் முதல்வர்... பெரியார் க்கு நினைவு அஞ்சலி செலுத்தியதாக தெரிவில்லையே.. ஏன்? இதற்கு பெயர்தான் "திராவிட இயக்க" பரிணாமம் என்பதா? 

 எம்ஜிஆர் நாமம் வாழ்க! என்றால்... பெரியார் நாமம்...?! பற்றி ஸ்டிக்கர் முதல்வருக்கு தேவையில்லை போலும்..!? 

ஓ.. மனச்சாட்சி சுடுகிறதோ..? ஒருவேளை பெரியாருக்கு நாமம் சொன்னால், எச்.ராஜா கட்சி கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்பதாலோ..? 

எதிர்கால கூட்டணிக்கு அச்சாரமோ..?!
----\\\\
ஜல்லிக்கட்டு: இன்று மட்டுமல்ல...
ஜல்லிக்கட்டு: இன்று மட்டுமல்ல... என்றுமே இந்த வீர விளையாட்டு அரசியல் விளையாட்டுத்தான்! தேர்தல் நெருங்குவதால் "சத்தம்" கொஞ்சம் அதிகமாக கேட்கிறது! 

மத்திய  பாஜக அரசை, அவசர சட்டம் போடச் சொல்லும் அதிமுக மாநில அரசு அவசர சட்டமன்றம் கூட்ட மறுக்கிறது இது குறித்து விவாதிக்க! 

இப் பொழுது உண்ணாவிரதமிருக்க போவதாக சொல்லும் திமுகவின் செய்கை இலங்கை தமிழர்களுக்கு உண்ணாவிரதம் இருந்ததைத்தான் நினைவு படுத்தி தொலைக்கிறது! 

பாஜக தலைவர்களும் ... மகாராஷ்ராவிலும், இது போன்று ஒரு மிருகவதை விளையாட்டு இருக்கிறதாம்... அதற்கும், இதற்கும் சேர்த்து சட்டம் போட போடுகிறோம் என நா கூசாமல் பேசுகிறது ஜனவரிக்குள் சட்டம் வந்துவிடும் என்று! 

தமிழ்மக்கள் போன்ற ஏமாளிகள் இந்தியாவில் ஏதென அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் நினைக்கின்றன என்றே தோன்றுகிறது! 

இன்று 25.12.15 PTTV மக்கள் மேடை! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
-----\\\\\
சிம்பு தியாகி ஆகிவிடுவார் போலிருக்கு! 
போகிறப் போக்கைப் பார்த்தால், சிம்பு தியாகி ஆகிவிடுவார் போலிருக்கு! 
சரத்குமாரும், சிவசேனாவும் சிம்புக்கு சொம்பு தூக்குகின்றன போலும்! 

ஒரே ஒரு வார்த்தை "சாரி (Sorry) என சொல்லி இருந்தால், பிரச்சனை மறைந்து அந்த இடத்தில் புல் முளைத்திருக்கும்! 

அதை விடுத்து, "என் பெட்ரூமில் நுழைய யாரையும் அனுமதிக்கவில்லையே" என சிம்புவின் திமிரான பதிலே சிக்கலாக்கியது! 

சிக்கலை சுமூகமாக்க ராசேந்திரர் முயற்சித்த போது, "நாங்கள் தமிழகத்தை விட்டே வெளியேறுவோம்" என மிரட்டி சுமூக சூழல் வருவதை கெடுத்தார். 

ஆக சேய்யும், தாய்யும் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கக் காரணம்! 

இன்று 25.12.15 PTTV நேர்படபேசு!
----\\\\
கைவிட்டார் கலைஞர்!
இன்று 26.12.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் பிற்பகுதிதான் பார்க்க நேர்ந்தது. அய்யநாதன், திமுக ஜெயராஜ், ஜென்ராம் ஆகியோர்... அன்று சிதம்பரம் மற்றும் பிரணாப் வாக்குறுதியா நம்பி, இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பதான உண்ணாவிரதத்தை "பாதி"யிலேயே கை(கழுவி)விட்டார்! 

இன்று பொன்னார் (சுஷ்மாவோ, ராஜ்ராத்சிங் கோ வாக்குறுதி தரவில்லை) உறுதிமொழியை நம்பி ஜல்லிக்கட்டு உண்ணாவிரதத்தையே கைவிட்டார் கலைஞர்! 

ஆனாலும் என்ன...! நம்புவோம் கலைஞரை... அன்று இலங்கை நலனை காத்ததைப்போல், இன்று தமிழக பாரம்பரியத்தைக் காக்கப்போகிறார்... ராமானுஜன கலைஞர்...! கேழ்விரகுகில் நெய் வடியுதாம் ஜெயராஜ் சொல்லுகிறார் நம்புங்கள்...! 

சட்டமன்ற தேர்தல்2016க்கு கதவு, ஜன்னல், வெண்டிலேட்டர் என "எல்லாவற்றையும்" திறந்துபோட்டு தனது "ராஜதந்திரம்" அஸ்திரத்தை ஏவுகனையை "ஏவி" காவியின் அருள்வாக்குக்கு "அஸ்திவாரம்" போட்டுள்ளார் என்றால் மிகையல்ல என்பதை நிகழ்ச்சியின் விவாதம் உணர்த்திச்சென்றது!
-----\\\\
"போலி தேசபக்தர்கள்" புரிந்துக் கொண்டால் சரி..!
🙌🙌🙌 
ஒருபக்கம் ராமர் கோயில் கட்ட, பாபர் மசூதியில் கட்டுமான பொருட்கள் உள்ளிட்டு, கொண்டு அடுக்கி அச்சுறுத்தல்... இன்னொரு பக்கம் ஸ்பைடர் மேன்போல் திடீரென பாக்கிஸ்தான் பயணம்... 

மோடியும்-நவாஸும் கட்டித் தழுவல்! இதற்கு பெயர்தான் "பிள்ளையையும், கிள்ளி விடுதல், தொட்டிலையும் ஆட்டி விடுதல்" என்பதோ..? 

எப்படியோ...! பீகார் தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டு போடாதவர்கள் பாக்கிஸ்தான் போய்விடனுமென்று கூறிய கட்சியின் தலைவரே, இவ்வளவு விரைவாக போய் "அதிர்ச்சி" தருவாரென யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்தான்! 

இருந்தாலும் சிபிஐஎம், சிபிஐ வரவேற்று இருப்பதுதான்  முக்கிய விசியம்! "நல்லது" நாட்டுக்கு யார் செய்தாலும் ஆதரிப்பவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்பதை கம்யூனிஸ்ட்கள் மீது விஷம் கக்கும்  "போலி தேசபக்தர்கள்" புரிந்துக்
கொண்டால் சரி..!
----\\\\
தமிழ் கலாச்சாரக் காவலர்கள் எங்கே?
🙍🙍🙍 
நடிகர் சிம்புவின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட லவ் தோல்வியால், பெண் பிறப்பு உறுப்பை எவ்வளவு ஆபாசமாக அசிங்கப் படுத்தனுமோ,
அந்தளவுக்கு அசிங்கப்படுத்தி பீப் பாடல் உருவாக்கி உள்ளார்!

இதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இவரின் "பெண்கள் மீதான வக்கிரத்தை, அம்பலப்படுத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க" கோரினர். அதை தமிழக அரசு தனதாக்கிக் கொண்டது; ஆம்!  இதை  அரசியலாகிக் கொண்டு, வெள்ளச்சேத விவகாரத்தில் இருந்து தப்பிக்க கேடயமாகிக் கொண்டது! அது (அதிமுக) நினைத்திருந்தால், ஒரே இரவில் சிம்புவை பிடித்து விசாரித்திருக்க முடியும். ஆனால் அது செய்யவில்லை. அது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை "பெண் முதல்வர்" இதுவரை  விடவில்லை.

சரி, அதிமுகதான் அப்படியென்றால், திமுக எப்படி? அது தனக்கு வேண்டுமென்றால், அறிக்கை ஒன்று விடும் அல்லது அந்தர் பல்டி அடித்துவிடும்! 

தற்போது இந்த பீப் பாடல் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது. இதை ஆதரித்தும், எதிர்த்தும் விவாதம் சூடு பறக்கிறது! பெருமாள்மணி என்பவர் இது "நவீனத்தை விரும்பா பழமைவாதிகளின் பொறுமல்" என்று ஏர்ழுவனைப்போல் தோள்மீது துண்டு போட்டுக் கொண்டு தமிழ் காலாச்சாரத்தை, அடுத்த (ஆபாச) தளத்திற்கு கொண்டு போகிறாராம்... வெட்கமில்லாமல் வாதிடுகிறார்! 

வீரலட்சுமி என்ற ஒரு பெண்மணி சிம்புக்கு வீம்பாக வக்காலத்து போடுகிறார்... இவருக்கு பெண் இனத்தின் மீது என்ன கோபமோ... தெரியவில்லை; ஈழ பெண்களுக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு குமுறல் இவர்களிடம் ஏன் இல்லை என சொத்தை வாதத்தை முன்வைக்கிறார்! இவரின் வாதம் தமிழ் மக்களுக்கு அவமானம்! அசிங்கம்!

இது, இதை ஆதரித்த இரு பெண்மணிகள் ஒருவர் உஷா (சிம்புவை ஈன்ற தாய்; இதுதான் தாய்பாசம் கண்களை மறைக்கிறது என்பதோ!). இன்னொருவர் நடிகை ராதிகா; அவரது கணவர் சரத்குமார்! இவர் நடிகர் சங்க முன்னாள் தலைவர் என்பதுதான் வெட்ககேடு! இவர்கள் இதை ஆதரிப்பதன் அர்த்தம் புரிந்து கொள்வது எளிது... அதாவது சீனா பழமொழி ஒன்றுண்டு... "ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவரின் நண்பர் யார் என்று தெரிந்து கொள்!" என்பதே அது!

இதிலே திமுகபேச்சாளரும், எழுத்தாளருமான மனுஷ்புத்திரன், புதிய தலைமுறை நெறியாளர் குணா, நியூஸ் 7 நெறியாளர் செந்தில், நடிகர் சங்கம், சிம்பு அப்பா ராஜேந்திரன், இடதுசாரி அமைப்புகள் எதிர்த்திருப்பது ஆறுதல்! 

ஆனால் தமிழர் கலாச்சாரத்தைக் காக்க வந்தவர்கள் என்று பெருமை பேசும்... திமுக தலைவர் கலைஞர் இன்றுவரை மவுனம் காக்கிறார்; திமுகவின் மகளிர் அடையாளம் கனிமொழி இருக்கிற இடமே தெரியவில்லை! எல்லாவற்றிக்கும் மேலாக தமிழ்நாட்டின் பெண் முதல்வர்... இவரின் மனம் திறந்தமடல் எதுவும் இதுவரை வரவில்லை! 

(புகார் கொடுத்ததால், தேடுவதைபோல் பாவலா செய்கிறது தமிழக அரசின் போலீஸ்; அவ்வளவே! முதல்வர் பெண் மீது ஆபாசம், அசிங்கமான பாடல் பாடினார் என்று இரவோடு இரவாக கோவனை பிடித்த போலீசுக்கு சிம்பு இருக்கிற இடம் தெரியாதா? சம்மன் கோவனுக்கு அனுப்பிதான், தனிபடை அமைத்தா பிடித்தது?) 

இதிலே பிரதான எதிர்கட்சி (திமுக), சட்டமன்ற எதிர்கட்சி (தேமுதிக இதன் பெண் தலைவர் பிரேமலதா), காங்கிரஸ் ஆளும் கட்சி (அதிமுக) அல்லது இக்கட்சிகளின் மகளிர் அமைப்புகளோ... இதுவரை அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து கருத்தேதும் சொல்லவில்லையே! ஏன்? இதுதான் தமிழ் கலாச்சாரத்தை பாதுக்காக்கும் லட்சனமா? 

இந்துத்துவா அமைப்பான சிவசேனா இதற்கு ஆதரவு தெரிவிப்பது புரிகிறது! இவர்கள் பெண்களை போகப்பொருளாக பாவிப்பவர்கள்..! இதற்கும் ஆர்எஸ்எஸ் க்கும், பாஜகவுக்கும் இருக்கும் "தொடர்புகள்" ஊரறியும்! 

கனமழை-வெள்ளம் பாதிப்பு பணியில் ஓடி ஓடி பணியாற்றிய இதர சிறுபாண்மை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டதனால், இவர்களின் பெண்னுரிமை மீதான தங்களின் "முகவிலாசம்" எங்கே? எங்கே? எங்கே?
----\\\\
"ஸ்பைடர் மேன்" போல்...
ஒருபக்கம் ராமர் கோயில் கட்ட, பாபர் மசூதியில் கட்டுமான பொருட்கள் உள்ளிட்டு, கொண்டு அடுக்கி அச்சுறுத்தல்... இன்னொரு பக்கம் "ஸ்பைடர் மேன்" போல் திடீரென பாக்கிஸ்தான் பயணம்... 

பீகார் தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டு போடாதவர்கள் பாக்கிஸ்தான் போய்விடனுமென்று கூறிய கட்சியின் தலைவரே, இவ்வளவு விரைவாக போய் "அதிர்ச்சி" தருவாரென யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்தான்! 

இது இரட்டை வேடத்தைத் தவிர வேறென்ன? அதுமட்டுமல்ல...
மோடியும்-நவாஸும் கட்டித் தழுவல்! இதற்கு பெயர்தான் "பிள்ளையையும், கிள்ளி விடுதல், தொட்டிலையும் ஆட்டி விடுதல்" என்பது!

(காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதில் பாஜகவிடம் என்றோ தோற்றுவிட்டது பாக்கிஸ்தான் விசயத்தில் என்றுதான் சொல்லவேண்டும்!)

இருந்தாலும் சிபிஐஎம், சிபிஐ வரவேற்று இருப்பதுதான்  முக்கிய விசியம்! நாட்டுக்கு யார் "நல்லது" செய்தாலும் ஆதரிப்பவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்பதை கம்யூனிஸ்ட்கள் மீது விஷம் கக்கும்  "போலி தேசபக்தர்கள்" புரிந்துக் கொண்டால் சரி..! 

'ராஜதந்திரமும் கிடையாது' 'ராணி தந்திரமும் கிடையாது' முழுக்க முழுக்க திசைத்திருப்பல்! இதன்மூலம் அயோத்தியில் நிகழப்போகும் மதவெறியாட்டத்தை மூடி மறைக்க நடக்கும் 'ஓட்டுத்தந்திரம்!' 
இன்று 26.12.15 PTTV நேர்படபேசு!
----\\\\

வஞ்சனையும், அலச்சியமும் தான்!" 
20 ஆண்டுகள் கடந்த பின்னும் மண்டல் கமிஷன் பரிந்துரை முழுமையாக அமலாகாமல் வெறும் 12% மட்டுமே அமலாகியிருப்பதற்கு  முக்கிய காரணம்...  "அமலாகக் கூடாதென்ற வஞ்சனையும், அலச்சியமும் தான்!" 

இதற்கு பொறுப்பேற்க வேண்டியவைகள் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக,  பாமக உள்ளிட்டு மத்தியில் ஆட்சியில் 20 ஆண்டுகளாக இருந்த கட்சிகளே! 

ராமருக்கு கோவில் கட்டுவதில் காட்டும் ஆர்வத்தில்... ராமர் பாலம் என்று சேதுசமுத்திரத் திட்டத்தை நிறுத்தியதில் காட்டிய ஆர்வத்தில் ஆயிரத்தில் ஒருமடங்கு அக்கரையை இதில் பாஜக  காட்டியிருந்தாலே போதும், மண்டல் பரிந்துரை அமலாகி இருக்கும்! 

இன்றைக்கு 'மேக் இன் இந்தியா' உள்ளிட்ட புதுப்புது கூப்பாடு இல்லாமல் போயிருக்கும்!

இன்று 28.12.15 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\\
எதுக்கு போனாரு..? என்னா பேசினாரு..?
பிரதமரின் பாக்கிஸ்த்தான் பயணம் யதார்த்தமானதல்ல! அது ஏற்கனவே திட்டமிடாமல் இப்படி போக முடியாது! இது மக்களை முட்டாளாக்கும் செயல்! 

இந்திய நாட்டுக்குள்ளேயே நமது பிரதமர் இது மாதிரி பயணம் மேற்கொள்ள முடியாதபோது, அயல் நாட்டுக்கு, அதுவும் பாக்கிஸ்தானுக்கு போய் வருவது மலிவான விளம்பரமே தவிர வேறென்ன சொல்ல..! 

அனேகமாக பீகார் தேர்தலில் இவரின் கட்சித் தலைவர்கள் செய்த பிரச்சாரம்... "பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களும், மாட்டு இறச்சி சாப்பிடுவர்களும் பாக்கிஸ்தான் போகவேண்டும்" என்றதற்காக, இவர் "முதல் ஆளாக" போய்விட்டு வந்திருப்பாரோ..?

எதுக்கு போனாரு..? என்னா பேசினாரு..?  இவர் போய் சாதித்தது என்ன..? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களே மக்களே..!

இன்று 28.15.15 News 7 ?கேள்வி நேரம்! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\\
"அரசியலற்ற அரசியல்" 
கட்சிகள் போடும் கூட்டணி கணக்குக்கு பதிலாக வேறொரு கணக்கு... "அரசியலற்ற அரசியல்" தமிழகத்திற்கு ஒத்துவராது! 

கூட்டணியின் பலமும், மக்களின் மனமும்தான் வெற்றியை தீர்மாணிக்கிறது. அத்தகைய பலமும், மனமும் மக்கள் நலக் கூட்டணிக்குத்தான் இருக்கிறது. 

அதிமுக, திமுக, பாஜக ஆகிய கூட்டணிகள் பண பலத்தை மட்டுமே நம்பி இருக்கின்றன. பணபலம் வரும் தேர்தலில் செல்லாது என்பது உறுதி! 

தமிழக மக்களின் மனங்களில் திமுக, அதிமுக வின் பிடியில் இருந்து, தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டுமென்ற கனல் வீசுகிறது! 

இன்று 28.12.15 PTTV மக்கள் மேடை..!
-----\\\\
இடதுசாரி பாதையே தேவை! 
10 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு மான்யம் ரத்து என்பது... அவ்வண்ணம் அரசுக்குக் கிடைக்கும் தொகை, எதற்கு யாருக்கு செலவழிக்கப் படுகிறது என்பதை பொறுத்தே ஆதரவும், வருத்தமும் சொல்ல முடியும்! 

ஆம்! நடுத்தர மக்களிடமிருந்து பிடுங்கி, அதானிக்கும், அம்பானிக்கும், அன்னிய முதலாளிகளுக்கும் அள்ளி அள்ளி கொடுத்தால்... அதை எப்படி வரவேற்க முடியும்? 

மோடி ஆட்சி கார்ப்பரேட் முதலாளிகள் ஆதரவு ஆட்சித்தான், அது இந்திய மக்களுக்கான ஆட்சி இல்லை என்பதை இப்பொழுதாவது நடுத்தர மக்கள் புரிந்து கொண்டால்... அது அவர்களுக்கும் நாட்டுக்கும் நன்று! 

அதற்காக பேய்க்கு (பாஜக) பயந்து மீண்டும் பிசாசுக்கு (காங்கிரஸ்) தாவிடக்கூடாது; ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வு மலர ஒரே வழி இடதுசாரி பாதையே தேவை! 

இன்று 29.12.15 PTTV மக்கள் மேடை..!
----\\\\
 "மக்கள் நலக் கூட்டணி" மட்டுமே!
கூட்டணியில் கோட்பாடுடன் "செயல்திட்டம்" ஒன்றை வெளியிட்டு, வெளிப்படையாக செயல்படுவது... "மக்கள் நலக் கூட்டணி" மட்டுமே! 

மற்ற கட்சிகள் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பதை சொல்ல முடியாமலே இருக்கிறது! 

ஒன்று உறுதியாக தெரிகிறது... 

ஜெயலலிதாவை எதிர்ப்பதைவிட, தான் அல்லது தன் மகனோ, மகளோ முதல்வர் ஆவதில், ஆக்குவதில்... கருணாநிதி எந்த கோட்பாடும், கொள்கையும் இன்றி யாருடன் சேருவதற்கு கதவு, ஜன்னல் என எல்லாவற்றையும் திறந்து வைத்து உள்ளார். 

சுருங்க சொன்னால், 'ஜெயலலிதா என்ற ஏகாதிபத்தியத்தை எதிர்க்க, தமிழனை பாதுக்காக்க' எந்த "நாயோடும் பேயோடும்  கூட்டணி சேர தயார்" நிலையில் இருக்கிறார் என்பது கடந்த ஒரு வாரத்தில் தமிழக மக்கள் தெளிவாக தெரிந்து கொண்டனர். 

அதிமுகவை தவிர (ஒரு வேளை அதிமுகவே கலைஞர்தான் முதல்வர் என்று சொல்லிவிட்டாலே ஒழிய) அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து திமுகவை ஆதரித்தால் "ஓகே" சொல்லும் கொள்கைக்குன்று, தானைத்தலைவர், அரசியல் சாணக்கிய(ன்)ர் கலைஞர் கருணாநிதியே!

இன்று 29.12.15 News 7 ?கேள்வி நேரம்! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\\
இருவருமே வரம்பு மீறலாகாது!
அரசியல் தலைவர்கள் பத்திரிக்கையாளர்கள் இருவருமே வரம்பு மீறலாகாது! 

பத்திரிக்கையாளர்கள் அனைவருமே நடுநிலையாளர்கள் அல்லர்; அவர்கள் சார்புநிலையில் இருந்து எடக்குமடக்கான கேள்விகளை கேட்கிறபோது, சில நேரங்களில் விரும்பத்தகா நிகழ்வு நடந்து விடுகிறது! 

விஜய்காந்தின் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு "தூ" வை இந்தளவுக்கு "ஊத" வேண்டியதில்லை!

எப்படியோ "பீப்" ஐ பின்னுக்கு கொண்டு சென்றுவிட்டது "த்தூ". எல்லாம் சினிமாகாரர்கள் மயமாகி விட்டது ஊடக உலகம்! 

சிம்பு குடும்பம் விஜய்காந்த் க்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளார்கள் என்றே தோன்றுகிறது! 

இன்று 29.12.15 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
-----\\\\
அருண்ஜெட்லியின் அருள்வாக்கு
ஊடகங்கள் கருத்துக்களைத் திணிக்கக் கூடாது... இது நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் அருள்வாக்கு இது! 

அய்யா ஜெட்லியே... 
இதை நீங்க ஆட்சி வருமுன், குறிப்பாக பிரதமர் வேட்பாளர் நரோந்திர மோடி ன்னு ஊடகங்களில் போட வைத்து உளவியலாக மக்களை, குறிப்பாக இளைஞர்களை, அவர்களின் மனங்களை திருடி ஓட்டாக மாற்றினீர்களே... அப்பொழுது இது தெரியவில்லையோ..? 

இம்... ஊருக்குத்தான் உபதேசம்.. அது உமக்கு இல்லையோ..!
---\\\
ஜல்லிக்கட்டு
மத்திய அரசு தாமதிக்கிறதா? என்கிறீர்களா! 

அது தாமதிப்பதே "பட்டை நாமம்" போடத்தான்! இல்லையென்றால் எதற்கு தற்போது அமைச்சரவை கூடியது? சிற்றுண்டி அருந்தவா? 

பாவம்! பொன்னார்..! வேறென்ன சொல்ல..! இவரு பேச்சக் கேட்டு பழுத்த அரசியல்வாதிவேறு உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டாரே!

இன்று 30.12.15 PTTV மக்கள் மேடை!
-----\\\\
அருகிலேயே மாற்று இடம் கோருவது சரிதான்!
அருகிலேயே மாற்று இடம் கோருவது சரிதான்! அந்த ஏழை எளிய மக்கள் பிழைப்புக்கு என்ன செய்வார்கள் பல கிலோமீட்டர் தள்ளி இடம் கொடுத்தால்..! 

ஆக்கிரமிப்பை எதிர்ப்பதும், ஆதரிப்பதும் அவரவர் புரிதலில் இருந்துதான் வெளிப்படுகிறது! ஆதரிப்பவருக்கு மாற்று வழி இருக்கும் பிழைப்புக்கு!  பிழைப்புக்கு வழியில்லாதவர் எதிர்ப்பது இயல்பு. 

அரசு எந்த சாய்மானமும் இல்லாமல் மாற்று பிழைப்பும், இடமும் உறுதிப்படுத்தினால், எல்லாரும் ஏற்பர் ஆக்கிரமிப்பில் இருந்து நீர்நிலையை பாதுக்காக்க! 

ஆகவே அரசு ஒரு கண்ணுக்கு (பணக்காரர்களுக்கு) வெண்ணையும், இன்னொரு கண்ணுக்கு (ஏழைகளுக்கு) சுண்ணாம்பும் வகைக்கும் போக்கை கைவிட்டாலே போதும்... எல்லாம் சரியாகிவிடும்!

பிழைப்படியாக ரூ30,000 தரவில்லை அரசு... பிச்சையாக தருவதுபோல் தெரிகிறது! இது கொடுமையிலும் கொடுமை! ஒவ்வொரு குடும்பத்திற்கு என்ன சேதாரம் என கணக்கெடுத்து, அதைபோல் இன்னொரு மடங்கு இழப்பீடு தரவேண்டும்!

இன்று 30.12.15 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.!
------\\\\\
வாழ்க்கை தரம் உயர்வும், உத்தரவாதமும் இல்லாததுதான்! 
புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆதரவுக்கு அதிகரிப்புக்குக் காரணம் வாழ்க்கை தரம் உயர்வும், உத்தரவாதமும் இல்லாததுதான்! 

ஆம், அன்று ஒரு நாளாவது சந்தோசமாக இருக்கலாம் என்ற உந்துதலில் இருந்துதான் அதிகரிக்கிறது! ஆதரவு பெருகுகிறது!

எப்படி தெய்வத்தை நம்பினால் பிரச்சனை தீர்ந்து என்றாவது ஒருநாள் வாழ்வில் ஒளிவீசும் என நம்புகிறார்களோ... அதுபோலத்தான் இந்த ஒருநாள் (கூத்தும்) கொண்டாட்டமும்!

இன்று 30.12.15 News 7 ?கேள்வி நேரம்!
-----\\\\

Sunday, 20 December 2015

அன்று பிஆர் சொன்னதுக்கும், இன்று ஜிஆர் சொன்னதுக்கும் வித்தியாசம் இல்லையே"
இன்று 18.12.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் சுபவீ., மணிக்குமார், இவர்களுடன் ஜென்ராம்...

"எப்பொழுது நீ தாக்கப்படுகிறதோ? அப்பொழுது நீ வளர்கிறாய் என்று பொருள்..!" இது ஒரு புகழ் பெற்ற வாசகம். அதுதான் இன்றைக்கு மக்கள் நலக் கூட்டணிக்கும், சிபிஐஎம் க்கும் பொறுந்துவதாக உள்ளது.

"மதிமுக தவறான முடிவு (மக்கள் நல கூட்டணி அணியிலிருப்பது) எடுத்ததுதான் அதன் தலைவர்கள் திமுகவுக்கு போறதாம்; தேர்தலுக்கு பின் மதிமுக காணாமல் போய்விடுமாம்; மதிமுகவை சிபிஎம் இயக்குதாம்; மமக வை அழைப்பவர்கள் எஸ்டிபி ஐ எதிர்க்கிறார்களாம், காரணம் சிபிஎம்க்கு கேரளாவில் அது எதிரியாம்!" இப்படி அடுக்குகிறார் சுபவீ., இவரை திமுக பின்னிருந்து இயக்குகிறதென்றால் ஒத்துக் கொள்வாரா? தெரியவில்லை! 

இவரிடம் ஒரே ஒரு கேள்வி... சென்ற தேர்தலில் கடைசி நேரத்தில் போட்டிப்போடவே முடியாத நிலை எடுத்த சூழலைவிடவா, பலவீனமான அல்லது தவறான முடிவு மக்கள் நலக் கூட்டணி யில் மதிமுக இடம்பெறுவது? அப்பொழுது போகாதவர்கள் ஏன் இப்பொழுது திமுகவுக்கு போகிறார்? இந்த தேர்தலில் திமுக வெற்றியை பாதிக்கும் முடிவை அல்லது மதிமுகவை வலுப்படுத்தும் முடிவை எடுத்ததால், திமுக எரிச்சலில் வலைவிரிப்பதை சுபவீ ஏன் பார்க்க மறுக்கிறார்? காரணம் சுபவீ யின் திமுக ஆதரவு நிலையேதான் இன்றைய அவரின் சிபிஎம், மதிமுக மீதான தவறான குற்றசாட்டு காட்டுகிறது!

ஜென்ராம் கேட்டாரே... "வெற்றிப் பெற்ற போதும் திமுகவுக்கு போனார்களே" என்றதற்கு சுபவீ நைசாக நழுவிக்கொண்டார். மணிக்குமார்... 1973 தேர்தலுக்கு சென்று, " அன்று எம்ஜிஆர் கொள்கை என்ன என்று கேட்டு, தன் வேட்பாளளரை திரும்ப பெற்று, அதிமுகவை ஆதரித்தது... ஆனால் இன்று தேமுதிக  தமாக கொள்கையை தெரிந்தா அல்லது அதுபோல் கேட்டா மக்கள் நலக் கூட்டணிக்கு இவர்களை அழைக்கிறது?" என சம்மந்தமில்லாமல் குழப்புகிறார்? 

"அன்றும், இன்றும் அரசியல் சூழல் ஒன்றா? அன்று பிஆர் சொன்னதுக்கும், இன்று ஜிஆர் சொன்னதுக்கும் வித்தியாசம் இல்லையே" என சரியாக ஜென்ராம் பதிலளித்தது நன்று! 

48 ஆண்டுகள் தமிழகத்தில் ஆண்ட திமுக அதிமுக தங்களின் பூர்வீக சொத்தாக "தமிழக அரசாட்சியை"  உரிமை கொள்வதை எதிர்த்தும், தமிழக மக்கள் நலன் சார்ந்தும் கம்பீரமாக உருவாகி உள்ள மக்கள் நலக் கூட்டணியை வரவேற்க வேண்டும்; சிறு உளிதான் பெரும் பாறையை தகர்க்கும்! அதுதான் இன்றைய மக்கள் நலக் கூட்டணி! அதைத்தான் அதற்கு பெருகிவரும் ஆதரவு காட்டுகிறது! அதுதான் சுபவீ., மணிகுமார் உரையாடலும் காட்டுகிறது! நன்று! 

இதுபோன்று நிறைய விவாதம் வரட்டும்; மக்கள் தீர்மாணிக்கட்டும்; திமுகவா? அதிமுகவா? மக்கள் நலக் கூட்டணியா? என்று!

உதார் எல்லாம் தேவையில்லை;  
உருப்படியான பணியே தேவை' 
இன்று 16.12.15 PTTV புதுப்புது அர்த்தங்களில்... 
சிபிஎம் மார்க்சிஸ்ட் அ.பாக்யம், அதிமுக ஆவடிகுமார், நெறியாளர் ஜென்ராம்...

மதிமுகவை உடைக்கும் திமுக... பாஜகவுடன்
கூட்டு சேர்ந்தபோது உடைக்காத திமுக இப்ப ஏன் உடைக்குது? அதனால், திமுக ஆட்சி வரும் வாய்ப்பு தட்டி பறிக்கும் அரசியல் சூழல் இல்லை; இப்ப இருக்கு... அதனால் திமுக தனது "தேசபக்த" பணியை துரிதப்படுத்துகிறது; இது ஒரு வகையான ஏதேசாதிகார குணத்தின் வெளிப்பாடே!

தேர்தல் கமிஷன் ஓய்வு அதிகாரி கூறுவது ஒன்றும் ஆச்சரியமில்லை; உண்மையே! இதுதான் தேர்தல் சட்ட நெறிமுறையில் அடைக்கப்பட வேண்டிய ஓட்டை! இதுபோன்ற ஓட்டைகளை அடைப்பதற்கு தேவை தேர்தல் சீர்திருத்தம் என்று பாக்யம் சரியாகவே சொன்னார். ஊடகங்கள் பணம் பெற்று சாதகமான தேர்தல் செய்தியை வெளிடவும், வாக்காளர்களுக்கு காசு பணம் கொடுப்பதும் முதலாளித்துவ கட்சிகளே! இடதுசாரி அல்லவே! இதை அந்த அதிகாரி ஏன் சொல்லல? அதுதான் அவரின் அரசியல் போலும்!

ஜெயலலிதா வாட்ஸ்அப் வாய்ஸ் பற்றியது... "நான் சுமக்கிறேன்" என்ற 'வார்த்தை உதார் எல்லாம் தேவையில்லை;  உருப்படியான பணியே தேவை' என்பதை அருமையாக பாக்யம் அம்பலப்படுத்தினார்! அதோடு ஜென்ராம் விடுவதாக இல்லை; "ஏன் அனைத்து கட்சியை கூட்டி அனைவரும் உங்களுடன் இருக்கிறோம் என்றுஏன் சொல்லவில்லை?" என்றுகேள்வி போட்டார்... 

ஆனால் ஆவடியார் ஆடிபோய்... "1000 கட்சிகள் இருக்கு; யாரை கூட்டி பேசுவது?" என்று திணறி போனார்! திமிராக பேசினார்! இருந்தாலும் "நான்" என்ற வார்த்தை ஜென்ராம் விடுவதாய் வில்லை. இது விவாதத்தில் ஆவடியார் அம்மா அறிக்கைபோல் பச்சையாக அதிமுக அரசியலே மேலோங்கி இருந்தது!
----\\\\

சொல்வதல்ல ஆணையரின் தேசபக்தி! 
பாவம் தலைமை தேர்தல் ஆணையர்! வேதனை பட வேண்டியது அவரல்ல; மக்கள்!  

ஒரு ஷேசனைப்போல் வழியை கண்டு பிடிப்பதுதான் தேர்தல் கமிசனரின் பணியாக இருக்க முடியும்! 

தேர்தலில் பணம் பாய்வதை தடுக்க வழியில்லை சட்டத்தில் என்று சொல்வதல்ல ஆணையரின் தேசபக்தி! 

அவரின் அனுபவம், உலக அனுபவம் ஆகியவற்றை இணைத்து ஒரு ஆலோசனையை வழங்குவதே இன்றைய தேவையே ஒழிய வேதனையல்ல! 

இடதுசாரிகள் உள்ளிட்டு ஜனநாயக சக்திகள் விகிதாச்சார ஓட்டுமுறையை வலியுறுத்துகிறார்கள்! ஆனால் அதிலும் பணம் பாய்வதைக் கட்டுப்படுத்த வாய்ப்பு இருக்குமா? என்பதும் கேள்வி குறியே! 

இருந்தாலும் இந்தளவுக்கு மோசம் இருக்காதென்றே தோன்றுகிறது!

இன்று 16.12.15 PTTV மக்கள் மேடை! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
-----\\\\
 உயர்நீதி மன்றமா? உச்சிகுடுமிய மன்றமா?
ஆகம விதிப்படித்தான் அர்ச்சகர் நியமனம் என்பது வர்ணாசிரமத்தின் அல்லது பார்ப்பனியத்தின் அதன் வெறியின் நீட்சியே! 

உயர்நீதி மன்றமா? உச்சிகுடுமிய மன்றமா? தெரியவில்லை! இப்படிப்பட்ட தீர்ப்புக்கு துணிச்சலே ஆர்எஸ்எஸ் இன் மறுஉருவமான பாஜக ஆட்சியே! 

பார்ப்பனியத்தின் ஊடுருவல் அடி முதல் உச்சி வரை நீக்கமற பரவி உள்ளதன் உதாரணமே உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எனலாம்! 

இது முற்றிலும் சமூகநீதிக்கு எதிரான, சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் தீர்ப்பு என்றால் மிகையன்று!

இன்று 16.12.15 News 7 கேள்வி நேரம்!
இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
-----\\\\\
தோழர் எஸ்பி.ராமன் 
சேலம் சிறைத்தியாகி தோழர் எஸ்பி.ராமன்  (94) இன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்! 

அன்னாரின் மறைவுக்கு சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழு ஆழ்ந்த இரங்கலையும், அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாற்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது! 

வாழ் நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக வாழ்ந்த, சுதந்திரப்போராட்ட வீரர் மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பேரிழப்பு. 

அன்னாரின் இறுதி இரங்கல் நிகழ்ச்சி நாளை 17.12.15 மதியம் 1.00 மணியளவில் திருசெங்கோடு அருகில் உள்ள எலச்சிபாளையம் ஒன்றியம் குமாரமங்கலத்தில் நடைபெறும் என சிபிஐஎம் நாமக்கல் மாவட்டக்குழு செயலாளர் ஏ.ரங்கசாமி தெரிவித்து உள்ளார்!
--------\\\\\

யார் தெய்வம்?
 "செய்த தவறுக்கு தெய்வம் தந்த தண்டனையே மழை வெள்ளம்!"

-இசைஞானி இளையராஜாவின் அருள்வாக்கு இது!

செய்த தவறு ஜெயலலிதாவை முதல் அமைச்சர் ஆக்கியதுதான் என்கிறாரா? 

அல்லது ஜெயலலிதாவை அவரது "பிள்ளைகள்" சொல்வதுபோல்... "என்னை வாழ வைத்த தெய்வம் ஜெயலலிதா" என்கிறாரா?

அல்லது தெய்வமே ஜெயலலிதாதான் என்கிறாரா?

எது? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களே..! பிளீஸ்..!
------\\\\\

-----\\\\
Go... Go.. Go..! 
இவரு முதுகுல சொமப்பாரு.. 

இன்னொருத்தரு கட்டுமரமா மெதப்பாரு... 

இவருக்கு புள்ளக்குட்டி இல்ல... 

இன்னொருத்தருக்கு புள்ளக் குட்டியால தொல்ல... 

இந்த படமெல்லாம் இனிமே ஓடாதுங்கோ... கோ... கோ...!

ஆமாங்க... 
நீங்க ரெண்டு கட்சியும் 
இனிமே... 

Go... Go.. Go..! 

(முதல்வரின் வாட்ஸ்அப் மெசேஜ் க்கு தோழர் ஜிஆர் பதிலடிக்கான கமெண்ட்ஸ்)
------\\\\\
Raaj Kumar பதிவு நச்! 

இளையராஜா திமிரின் உச்சம் அது!
இளையராஜா திமிரின் உச்சம் அது! இவரு என்ன வேலைக்கு போய் இருந்தாரு; இடம், பொருள், ஏவல் தெரியாமல் கேள்வி கேட்டுப்புட்டாங்க..? 

அப்படியே சிங்கமா கர்ஜிக்கிறார்? இவரு ஒன்னும் ஓக்கியம் ஒன்ரக்காசு இல்ல; இன்னிக்கு சிம்பு போட்ட அந்த பீப் பாட்ட, அன்னிக்கி இந்த மேதையும் போட்டவருதான்! 

சகலகலா வல்லவன்ல... "இம்.... இம்.... இம்....சீசீசீ... " ன்னு தேசபக்தி பாட்டு போட்ட ஆளுதானே இவரு! இதுக்கு பேருதான் "எனம் எனத்தோட சேருமிங்கிறது!" 

இதாவது வலைதளம்..! 
அது திரைத்தளம்..! 

(இளையராசா ஒரு நிருபரை அறிவு இருக்கா என்றதற்கு, ஸ்ரீரங்கன் கோவில் முன் கச்சேரி நடத்த அனுமதி மறுத்த அந்த பார்ப்பனியத்தின் "தீண்டாமைக் கொடுமை... தீண்டாமை தீட்டு" மீது ஏன் கோபப்பட வில்லை என பதிவு போட்ட நண்பருக்கு  கமெண்ட்ஸ்!)
-----\\\\
இப்படியொரு பேரிடியா? 
மாணவர்களும் தற்கொலையா?  அதிலும் தமிழகம் இரண்டாம் இடமா? விவசாயிகள் தற்கொலையில் இருந்தே நாடு மீளாத சூழலில் இப்படியொரு பேரிடியா? 

இளம் சமுதாயம் தற்கொலை பாதையை தேர்ந்தெடுக்கிறதென்றால், நாடும் தற்கொலை செய்வதற்கு ஒப்பாகும்!

கல்வியும், வேலையும் கடைசரக்கு ஆனதால், காசில்லாதவர்கள் தற்கொலை பாதையை நாடுகிறார்கள் போலும்!

தற்கொலையை தடுக்க வேண்டுமானால், அனைவருக்கும் கல்வி-வேலையை தனியார் பிடியில் இருந்து விடுவிடுத்து, மத்திய மாநில அரசுகளின் பிடிக்குள் கொண்டு வர வேண்டும்! 

இதுவே மாணவர்-வாலிபர் களை பாதுகாக்கும் வழி! தனியார் மயமும் தோல்வியை தழுவுகிறதென்பதே மாணவர் தற்கொலையின் மூலம் நிருபணம் ஆகிறது! 

இன்று 18.12.15 PTTV மக்கள் மேடை! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
------\\\
உச்சநீதிமன்றம் 
தீர்ப்பு  வழங்கி இருப்பதும் கவனிக்க தக்கது! 
மாணவி நிர்பயா வழக்கில் சிறார் குற்றவாளி மூன்றாண்டு தண்டனையில் இருந்தப் பின்தான் விடுதலை ஆகி உள்ளான். 

இதுபோன்ற வழக்குகளில் சிறாராக (மைனர்) இருந்தாலும், அதை காரணம் காட்டி விடுதலை கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதும் கவனிக்க தக்கது! 

சட்டம் ஏறினால் கடிக்குது; இறங்கினால் உதைக்குது! என்ன செய்வது? "சட்டம் ஒரு இருட்டறை" அண்ணா சொன்னார்... அறிஞர் அண்ணா சொன்னார்! அல்லவா? ஏற்றக்தக்கதோ, கொடூரமானதோ இல்லையோ... விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும் உரியது! 

இன்று 18.12.15 PTTV நேர்படபேசு. இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
------\\\\\\
ஜல்லிக்கட்டு ஒரு கேடா? 
தை நெருங்குவதால்... ஜல்லிக்கட்டு நடக்குமா? என்ற பீதி பிடித்தாடுக்கிறது தமிழர்களை என்பது சரியாக தெரியவில்லை! 

வரலாறு காணா கனமழை, வெள்ளம் பாதிப்பு சென்னை, கடலூர் உள்ளிட்டு 6,7 மாவட்டம் நிர்மூலம்! இந்த சூழலில் ஜல்லிக்கட்டு ஒரு கேடா? 

இது எப்படி இருக்கிறதென்றால் ரோம் பற்றி எரிகிறபோது பிடில் வாசித்த மன்னர் கதைபோல் இருக்கிறது!

இன்று 18.12.15 News 7 ?கேள்வி நேரம்!
-----\\\\
சரமாரியாக கேள்வி!
"எனக்கென்று எதுவுமில்லை என்றால், இந்த சொத்தெல்லாம் எதற்கு? யாருக்கு?"

சிபிஐஎம் தமிழ்நாடு மாநில செயலாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன்...

தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு...

17.12.15 சேலம் செய்தியாளர்கள் சந்திப்பில் சரமாரியாக கேள்வி!
----\\\\
தலித் ஆகம விதி படித்து வந்தால்... 
 "ஆகம விதிபடித்தவர் அச்சகர் ஆகலாம்..!" 

"ஆகம விதிகளை அனைவரும் படிக்க தடை இல்லையே..!" 

அதுசரி, 
ஒரு தலித் ஆகம விதி படித்து வந்தால்... அனுமதிப்பாங்களா? 

ஓ... 
படிக்க விட்டால் தானே..! என்கிறீர்களா..? 

"இது கொக்கு தலையில் வெண்ணையை வைத்து பிடிப்பதுபோல் தெரிகிறது!" 

இம்ம்... 
பார்ப்போம்... பொறுத்திருந்து..!
----\\\\
 "ஓட்டு வங்கி; நோட்டு வங்கி" என்பது அசைக்க முடியாத, ஆட்ட முடியாத "அயன்கம்பி" அல்ல! 
👍👍👍 
இன்று 19.12.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சி காலை 9 மணி பார்க்க நேர்ந்தது. பத்திரிக்கையாளர் நெய்வேலி பாலு, மணி, இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்..!

திமுகவின் அதன் தலைவரின் குதூகலம், எகத்தாளம் போன்ற அசிங்கமான,அருவருக்கத்தக்க "அரசியலை" அம்பலப்படுத்தியது. பாலு அவர்களின் வாதம் அருமை! திமுகவை இதற்குமேல்அம்பலப்படுத்த முடியுமா? அதன் சுயநலவெறி அரசியலை என்பது தெரியவில்லை! 

இதற்கும், மக்கள் நலக் கூட்டணி க்கு 'நல்ல இடம்' தந்ததற்கும் சபாஷ்! 

மணி கவலை அர்த்தமற்றதாகவே தோன்றுகிறது. ஒரு பொருள் அழிவில் தான் இன்னொரு பொருள் உருவாகும். திமுக, அதிமுக இரண்டுமே தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர கூடாது என்ற மையப்புள்ளியில் மக்கள் நலக் கூட்டணியின் இயங்குதளம்இருக்கிறபோது, இந்த இரண்டில் ஒன்று வீழ்வது இயற்கை! இரண்டும் வீழப்போகிறது என்பது வேறு விசியம்! 

ஆனால், இங்கே வாதத்திற்காக... ஏன் அதிமுக தோற்காது?  "ஓட்டு வங்கி, நோட்டு வங்கியை வைத்தா?" இதெல்லாம் யாருக்கும் நிரந்தரம் கிடையாது! இப்பொழுது, மணி போன்றவர்களிடம் கேட்க விரும்புவது... "அந்த நாலு பேரை கண்டு தானைத்தலைவர் நடுங்குவதேன்?"  

பாலு கேட்டதைப் போல் தமிழகம் இவர்களின் (அதிமுக, திமுக) குல சொத்தா? சீப்பை ஒளித்து வைப்பதனால், திருமணம் நின்றுவிடவா போகிறது? இந்த ஈனச்செயல் (மதிமுகவில் ஆட்களைப் பொறுக்குவது) இந்த வயதில் இவருக்கு (கலைஞர்) தேவையா? 

இதனால் திமுக ஆட்சிக்கு வந்துவிட போகிறதா? இருக்கிற மானம், மரியாதை கெடுமே ஒழிய மனக்காது!
-----\\\\\
பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு! 
☝☝☝☝ 
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும், மக்களைப் பிளவுபடுத்தும், பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு!  

19.12.15 காலை 11 மணிக்கு, சேலம் நேரு கலையரங்கத்தில், உயர்நீதி மன்ற அனுமதியோடு (கருத்துச்சுதந்திரம் வாழ்க!) பலத்த போலீஸ் பாதுகாப்போடு நடந்துக் கொண்டிருக்கிறது. 

தபோல்கர்-பன்சாரே-கல்புர்கி நினைவரங்கில் தற்போது கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இந்நிகழ்வு... 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ச.தமிழ்ச்செல்வன் நெறியாளுகையில்...
-----\\\\
பாஜக வும், காங்கிரஸும் 
ஊழலில் ஊறிப்போனவர்களே! 
சோனியா-ராகுல் மீதான நேசனல் ஹெரால்டு வழக்கு ஜாமீன்... 

காழ்ப்புணர்ச்சியாக தொடரப்பட்ட வழக்கு என்பதில் இருவேறு கருத்தில்லை; ஆனால் காங்கிரஸ் ஒன்றும் முற்றும் துறந்த முனிவருமல்ல; (ஊழலற்ற கட்சியல்ல) பாஜக ஒன்றும் படித்தாண்டா பத்தினியும் அல்ல! பாஜக வும், காங்கிரஸும் ஊழலில் ஊறிப்போனவர்களே! 

அதே சமயத்தில் எதிர்கட்சிகள் மீது ஆளும் கட்சியாக வருபவர்கள் இதுமாதிரி... தோண்டி, துருவி எதையாவது கண்டுபிடித்து, மீண்டும் "பிரேத பரிசோதனை" செய்வதும், வழக்குப் போடுவதும், நெருக்கடிக் கொடுப்பதும் இவர்களின் வாடிக்கை! 

இதன்மூலம் ஆளும்கட்சி தன், மக்கள் விரோத நடவடிக்கைகளை, லாவகமாக திசைத்திருப்பிக் கொள்வர்; அதோடு தனக்கு சாதகமாக எதிர்கட்சிகளை வளைத்து போட்டும் கொள்வர்; இடதுசாரிகளைத் தவிர!

இன்று 19.12.15 PTTV நேர்படபேசு! இதன்ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
------\\\\
இடதுசாரிகள் மட்டுமே 
கரைபடியா கரங்களுக்குச் சொந்தக்காரர்கள்! 
காங்கிரஸும், பாஜக வும் ஊழலற்ற கட்சிகள் அல்ல! இடதுசாரிகள் மட்டுமே கரைபடியா கரங்களுக்குச் சொந்தக்காரர்கள்! 

காங்கிரஸும், பாஜக வும் மாறி மாறி மக்களை ஏமாற்றுகின்றன. என்றாலும் பாஜக கண்மூடித்தனமாக எதிர்கட்சிகளை வேட்டை ஆடுகின்றது என்றே தோன்றுகிறது! ஆம் ஆத்மி உள்ளிட்டு அதன் பழிவாங்கும் படலம் நீளுகிறது. 

ஆளும் கட்சி எப்பொழுதுமே மக்களை திசைத்திருப்ப இது மாதிரி ரெய்டு, வழக்கு என்று அவ்வப்போது  கூத்தடித்துக் கொண்டிருக்கும்! அவ்வளவே! அதற்குமேல் ஒன்றும் நடக்காது! 

இன்று 19.12.15 News 7 ?கேள்வி நேரம்!
-----\\\\\
 'பீப்' பாடலா?  'ப்பீ' பாடலா?
🙈🙉🙊 
''ப்பீ வயத்துக்குள்தானே இருக்கிறது..." என்று... அதை எடுத்து சாப்பிடுவார்களா? அந்த சிம்பும், அனிரூத்தும்! 

அதை  (ப்பீயை) இவர்கள் சாப்பிடுவார்களேயானால்... 
பீப் என்கிற ப்பீ பாடல் ஓகே..! 

இதற்கும்கூட 'வேண்டுமென்பவர்கள் சாப்பிடுங்கள்; வேண்டாமென்பவர்கள் சாப்பிடாதீர்!' என்று பதிவிடுவோர் இருந்தாலும் இருப்பர்!

(இதொரு வலைத்தள நண்பருக்கான எமது கமெண்ட்ஸ்!)
------\\\\\
கல்வியில்... பாகுபாடு; எட்டாக்கனி..!
இன்று 20.12.15 புதுப்புது அர்த்தங்கள் (PTTV) சிபிஎம் இரா.சிந்தன், மமக தலைவர் ஜவஹிருல்லா இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்... மக்கள் நலக் கூட்டணிக்கு சாதகமான சிக்னல் கொடுத்த சூழலில், பாஜக தலைவர்கள் விஜயகாந்தை சந்தித்ததும், இன்று அருண்ஜெட்லியை சந்தித்ததும் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு இருவரும் ஒத்தே கருத்து தெரிவித்தனர்... ஆம், பாஜக கனவு பலிக்க வாய்பில்லை என்று! பாஜக தேர்தல் சூட்சமத்தில் இறங்கி உள்ளதை உணர முடிகிறது! அதை சரியாகவே சிந்தன் பிரதிபலித்தார்! 

அறிவாற்றலுடன் கூடிய அறிவியல் மனிதனின் அவலங்களையும் போக்க உதவ வேண்டும் என்ற ஜென்ராம் விவாதம் ஆயிரம் அர்த்தம் பொதிந்ததே! ஆம், அறிவியலை மனிதன் ஆற்றலுக்கு, முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும்; அழிவுக்கு அல்ல! விஞ்ஞானத்திலும் அஞ்ஞானம் இருப்பதுபோல் பேராசியர் வாதம் கொஞ்சம்  திசைமாறியது தெரிந்தது.

கல்வி நிலையங்களின் மாணவர்கள் கேள்வி கேட்கும் நிலையில்லை என்ற திசைநோக்கி விவாதம் நகர்ந்தது. அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனலாம்! உலகமய சூழலுக்கு ஏற்றவகையில் அது உலக சுரண்டலுக்கு ஏற்றபடி, அது அறிவுசார் கல்வியில் இருந்து,அடிமைகல்வியாகி, கேள்விகேட்கும் உரிமையை மறுக்கிறதென்று 1990க்கு முன் பின் என, கல்வியில் பாகுபாடு, எட்டாக்கனி போன்றவையை அடுக்கியதும் அருமையாக குறிப்பிட்டார் பேரா ஜவஹிருல்லா; நன்று!