அன்று பிஆர் சொன்னதுக்கும், இன்று ஜிஆர் சொன்னதுக்கும் வித்தியாசம் இல்லையே"
இன்று 18.12.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் சுபவீ., மணிக்குமார், இவர்களுடன் ஜென்ராம்...
"எப்பொழுது நீ தாக்கப்படுகிறதோ? அப்பொழுது நீ வளர்கிறாய் என்று பொருள்..!" இது ஒரு புகழ் பெற்ற வாசகம். அதுதான் இன்றைக்கு மக்கள் நலக் கூட்டணிக்கும், சிபிஐஎம் க்கும் பொறுந்துவதாக உள்ளது.
"மதிமுக தவறான முடிவு (மக்கள் நல கூட்டணி அணியிலிருப்பது) எடுத்ததுதான் அதன் தலைவர்கள் திமுகவுக்கு போறதாம்; தேர்தலுக்கு பின் மதிமுக காணாமல் போய்விடுமாம்; மதிமுகவை சிபிஎம் இயக்குதாம்; மமக வை அழைப்பவர்கள் எஸ்டிபி ஐ எதிர்க்கிறார்களாம், காரணம் சிபிஎம்க்கு கேரளாவில் அது எதிரியாம்!" இப்படி அடுக்குகிறார் சுபவீ., இவரை திமுக பின்னிருந்து இயக்குகிறதென்றால் ஒத்துக் கொள்வாரா? தெரியவில்லை!
இவரிடம் ஒரே ஒரு கேள்வி... சென்ற தேர்தலில் கடைசி நேரத்தில் போட்டிப்போடவே முடியாத நிலை எடுத்த சூழலைவிடவா, பலவீனமான அல்லது தவறான முடிவு மக்கள் நலக் கூட்டணி யில் மதிமுக இடம்பெறுவது? அப்பொழுது போகாதவர்கள் ஏன் இப்பொழுது திமுகவுக்கு போகிறார்? இந்த தேர்தலில் திமுக வெற்றியை பாதிக்கும் முடிவை அல்லது மதிமுகவை வலுப்படுத்தும் முடிவை எடுத்ததால், திமுக எரிச்சலில் வலைவிரிப்பதை சுபவீ ஏன் பார்க்க மறுக்கிறார்? காரணம் சுபவீ யின் திமுக ஆதரவு நிலையேதான் இன்றைய அவரின் சிபிஎம், மதிமுக மீதான தவறான குற்றசாட்டு காட்டுகிறது!
ஜென்ராம் கேட்டாரே... "வெற்றிப் பெற்ற போதும் திமுகவுக்கு போனார்களே" என்றதற்கு சுபவீ நைசாக நழுவிக்கொண்டார். மணிக்குமார்... 1973 தேர்தலுக்கு சென்று, " அன்று எம்ஜிஆர் கொள்கை என்ன என்று கேட்டு, தன் வேட்பாளளரை திரும்ப பெற்று, அதிமுகவை ஆதரித்தது... ஆனால் இன்று தேமுதிக தமாக கொள்கையை தெரிந்தா அல்லது அதுபோல் கேட்டா மக்கள் நலக் கூட்டணிக்கு இவர்களை அழைக்கிறது?" என சம்மந்தமில்லாமல் குழப்புகிறார்?
"அன்றும், இன்றும் அரசியல் சூழல் ஒன்றா? அன்று பிஆர் சொன்னதுக்கும், இன்று ஜிஆர் சொன்னதுக்கும் வித்தியாசம் இல்லையே" என சரியாக ஜென்ராம் பதிலளித்தது நன்று!
48 ஆண்டுகள் தமிழகத்தில் ஆண்ட திமுக அதிமுக தங்களின் பூர்வீக சொத்தாக "தமிழக அரசாட்சியை" உரிமை கொள்வதை எதிர்த்தும், தமிழக மக்கள் நலன் சார்ந்தும் கம்பீரமாக உருவாகி உள்ள மக்கள் நலக் கூட்டணியை வரவேற்க வேண்டும்; சிறு உளிதான் பெரும் பாறையை தகர்க்கும்! அதுதான் இன்றைய மக்கள் நலக் கூட்டணி! அதைத்தான் அதற்கு பெருகிவரும் ஆதரவு காட்டுகிறது! அதுதான் சுபவீ., மணிகுமார் உரையாடலும் காட்டுகிறது! நன்று!
இதுபோன்று நிறைய விவாதம் வரட்டும்; மக்கள் தீர்மாணிக்கட்டும்; திமுகவா? அதிமுகவா? மக்கள் நலக் கூட்டணியா? என்று!
உதார் எல்லாம் தேவையில்லை;
உருப்படியான பணியே தேவை'
இன்று 16.12.15 PTTV புதுப்புது அர்த்தங்களில்...
சிபிஎம் மார்க்சிஸ்ட் அ.பாக்யம், அதிமுக ஆவடிகுமார், நெறியாளர் ஜென்ராம்...
மதிமுகவை உடைக்கும் திமுக... பாஜகவுடன்
கூட்டு சேர்ந்தபோது உடைக்காத திமுக இப்ப ஏன் உடைக்குது? அதனால், திமுக ஆட்சி வரும் வாய்ப்பு தட்டி பறிக்கும் அரசியல் சூழல் இல்லை; இப்ப இருக்கு... அதனால் திமுக தனது "தேசபக்த" பணியை துரிதப்படுத்துகிறது; இது ஒரு வகையான ஏதேசாதிகார குணத்தின் வெளிப்பாடே!
தேர்தல் கமிஷன் ஓய்வு அதிகாரி கூறுவது ஒன்றும் ஆச்சரியமில்லை; உண்மையே! இதுதான் தேர்தல் சட்ட நெறிமுறையில் அடைக்கப்பட வேண்டிய ஓட்டை! இதுபோன்ற ஓட்டைகளை அடைப்பதற்கு தேவை தேர்தல் சீர்திருத்தம் என்று பாக்யம் சரியாகவே சொன்னார். ஊடகங்கள் பணம் பெற்று சாதகமான தேர்தல் செய்தியை வெளிடவும், வாக்காளர்களுக்கு காசு பணம் கொடுப்பதும் முதலாளித்துவ கட்சிகளே! இடதுசாரி அல்லவே! இதை அந்த அதிகாரி ஏன் சொல்லல? அதுதான் அவரின் அரசியல் போலும்!
ஜெயலலிதா வாட்ஸ்அப் வாய்ஸ் பற்றியது... "நான் சுமக்கிறேன்" என்ற 'வார்த்தை உதார் எல்லாம் தேவையில்லை; உருப்படியான பணியே தேவை' என்பதை அருமையாக பாக்யம் அம்பலப்படுத்தினார்! அதோடு ஜென்ராம் விடுவதாக இல்லை; "ஏன் அனைத்து கட்சியை கூட்டி அனைவரும் உங்களுடன் இருக்கிறோம் என்றுஏன் சொல்லவில்லை?" என்றுகேள்வி போட்டார்...
ஆனால் ஆவடியார் ஆடிபோய்... "1000 கட்சிகள் இருக்கு; யாரை கூட்டி பேசுவது?" என்று திணறி போனார்! திமிராக பேசினார்! இருந்தாலும் "நான்" என்ற வார்த்தை ஜென்ராம் விடுவதாய் வில்லை. இது விவாதத்தில் ஆவடியார் அம்மா அறிக்கைபோல் பச்சையாக அதிமுக அரசியலே மேலோங்கி இருந்தது!
----\\\\
சொல்வதல்ல ஆணையரின் தேசபக்தி!
பாவம் தலைமை தேர்தல் ஆணையர்! வேதனை பட வேண்டியது அவரல்ல; மக்கள்!
ஒரு ஷேசனைப்போல் வழியை கண்டு பிடிப்பதுதான் தேர்தல் கமிசனரின் பணியாக இருக்க முடியும்!
தேர்தலில் பணம் பாய்வதை தடுக்க வழியில்லை சட்டத்தில் என்று சொல்வதல்ல ஆணையரின் தேசபக்தி!
அவரின் அனுபவம், உலக அனுபவம் ஆகியவற்றை இணைத்து ஒரு ஆலோசனையை வழங்குவதே இன்றைய தேவையே ஒழிய வேதனையல்ல!
இடதுசாரிகள் உள்ளிட்டு ஜனநாயக சக்திகள் விகிதாச்சார ஓட்டுமுறையை வலியுறுத்துகிறார்கள்! ஆனால் அதிலும் பணம் பாய்வதைக் கட்டுப்படுத்த வாய்ப்பு இருக்குமா? என்பதும் கேள்வி குறியே!
இருந்தாலும் இந்தளவுக்கு மோசம் இருக்காதென்றே தோன்றுகிறது!
இன்று 16.12.15 PTTV மக்கள் மேடை! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
-----\\\\
உயர்நீதி மன்றமா? உச்சிகுடுமிய மன்றமா?
ஆகம விதிப்படித்தான் அர்ச்சகர் நியமனம் என்பது வர்ணாசிரமத்தின் அல்லது பார்ப்பனியத்தின் அதன் வெறியின் நீட்சியே!
உயர்நீதி மன்றமா? உச்சிகுடுமிய மன்றமா? தெரியவில்லை! இப்படிப்பட்ட தீர்ப்புக்கு துணிச்சலே ஆர்எஸ்எஸ் இன் மறுஉருவமான பாஜக ஆட்சியே!
பார்ப்பனியத்தின் ஊடுருவல் அடி முதல் உச்சி வரை நீக்கமற பரவி உள்ளதன் உதாரணமே உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எனலாம்!
இது முற்றிலும் சமூகநீதிக்கு எதிரான, சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் தீர்ப்பு என்றால் மிகையன்று!
இன்று 16.12.15 News 7 கேள்வி நேரம்!
இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
-----\\\\\
தோழர் எஸ்பி.ராமன்
சேலம் சிறைத்தியாகி தோழர் எஸ்பி.ராமன் (94) இன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்!
அன்னாரின் மறைவுக்கு சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழு ஆழ்ந்த இரங்கலையும், அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாற்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது!
வாழ் நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக வாழ்ந்த, சுதந்திரப்போராட்ட வீரர் மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பேரிழப்பு.
அன்னாரின் இறுதி இரங்கல் நிகழ்ச்சி நாளை 17.12.15 மதியம் 1.00 மணியளவில் திருசெங்கோடு அருகில் உள்ள எலச்சிபாளையம் ஒன்றியம் குமாரமங்கலத்தில் நடைபெறும் என சிபிஐஎம் நாமக்கல் மாவட்டக்குழு செயலாளர் ஏ.ரங்கசாமி தெரிவித்து உள்ளார்!
--------\\\\\
யார் தெய்வம்?
"செய்த தவறுக்கு தெய்வம் தந்த தண்டனையே மழை வெள்ளம்!"
-இசைஞானி இளையராஜாவின் அருள்வாக்கு இது!
செய்த தவறு ஜெயலலிதாவை முதல் அமைச்சர் ஆக்கியதுதான் என்கிறாரா?
அல்லது ஜெயலலிதாவை அவரது "பிள்ளைகள்" சொல்வதுபோல்... "என்னை வாழ வைத்த தெய்வம் ஜெயலலிதா" என்கிறாரா?
அல்லது தெய்வமே ஜெயலலிதாதான் என்கிறாரா?
எது? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களே..! பிளீஸ்..!
------\\\\\
-----\\\\
Go... Go.. Go..!
இவரு முதுகுல சொமப்பாரு..
இன்னொருத்தரு கட்டுமரமா மெதப்பாரு...
இவருக்கு புள்ளக்குட்டி இல்ல...
இன்னொருத்தருக்கு புள்ளக் குட்டியால தொல்ல...
இந்த படமெல்லாம் இனிமே ஓடாதுங்கோ... கோ... கோ...!
ஆமாங்க...
நீங்க ரெண்டு கட்சியும்
இனிமே...
Go... Go.. Go..!
(முதல்வரின் வாட்ஸ்அப் மெசேஜ் க்கு தோழர் ஜிஆர் பதிலடிக்கான கமெண்ட்ஸ்)
------\\\\\
Raaj Kumar பதிவு நச்!
இளையராஜா திமிரின் உச்சம் அது!
இளையராஜா திமிரின் உச்சம் அது! இவரு என்ன வேலைக்கு போய் இருந்தாரு; இடம், பொருள், ஏவல் தெரியாமல் கேள்வி கேட்டுப்புட்டாங்க..?
அப்படியே சிங்கமா கர்ஜிக்கிறார்? இவரு ஒன்னும் ஓக்கியம் ஒன்ரக்காசு இல்ல; இன்னிக்கு சிம்பு போட்ட அந்த பீப் பாட்ட, அன்னிக்கி இந்த மேதையும் போட்டவருதான்!
சகலகலா வல்லவன்ல... "இம்.... இம்.... இம்....சீசீசீ... " ன்னு தேசபக்தி பாட்டு போட்ட ஆளுதானே இவரு! இதுக்கு பேருதான் "எனம் எனத்தோட சேருமிங்கிறது!"
இதாவது வலைதளம்..!
அது திரைத்தளம்..!
(இளையராசா ஒரு நிருபரை அறிவு இருக்கா என்றதற்கு, ஸ்ரீரங்கன் கோவில் முன் கச்சேரி நடத்த அனுமதி மறுத்த அந்த பார்ப்பனியத்தின் "தீண்டாமைக் கொடுமை... தீண்டாமை தீட்டு" மீது ஏன் கோபப்பட வில்லை என பதிவு போட்ட நண்பருக்கு கமெண்ட்ஸ்!)
-----\\\\
இப்படியொரு பேரிடியா?
மாணவர்களும் தற்கொலையா? அதிலும் தமிழகம் இரண்டாம் இடமா? விவசாயிகள் தற்கொலையில் இருந்தே நாடு மீளாத சூழலில் இப்படியொரு பேரிடியா?
இளம் சமுதாயம் தற்கொலை பாதையை தேர்ந்தெடுக்கிறதென்றால், நாடும் தற்கொலை செய்வதற்கு ஒப்பாகும்!
கல்வியும், வேலையும் கடைசரக்கு ஆனதால், காசில்லாதவர்கள் தற்கொலை பாதையை நாடுகிறார்கள் போலும்!
தற்கொலையை தடுக்க வேண்டுமானால், அனைவருக்கும் கல்வி-வேலையை தனியார் பிடியில் இருந்து விடுவிடுத்து, மத்திய மாநில அரசுகளின் பிடிக்குள் கொண்டு வர வேண்டும்!
இதுவே மாணவர்-வாலிபர் களை பாதுகாக்கும் வழி! தனியார் மயமும் தோல்வியை தழுவுகிறதென்பதே மாணவர் தற்கொலையின் மூலம் நிருபணம் ஆகிறது!
இன்று 18.12.15 PTTV மக்கள் மேடை! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
------\\\
உச்சநீதிமன்றம்
தீர்ப்பு வழங்கி இருப்பதும் கவனிக்க தக்கது!
மாணவி நிர்பயா வழக்கில் சிறார் குற்றவாளி மூன்றாண்டு தண்டனையில் இருந்தப் பின்தான் விடுதலை ஆகி உள்ளான்.
இதுபோன்ற வழக்குகளில் சிறாராக (மைனர்) இருந்தாலும், அதை காரணம் காட்டி விடுதலை கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதும் கவனிக்க தக்கது!
சட்டம் ஏறினால் கடிக்குது; இறங்கினால் உதைக்குது! என்ன செய்வது? "சட்டம் ஒரு இருட்டறை" அண்ணா சொன்னார்... அறிஞர் அண்ணா சொன்னார்! அல்லவா? ஏற்றக்தக்கதோ, கொடூரமானதோ இல்லையோ... விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும் உரியது!
இன்று 18.12.15 PTTV நேர்படபேசு. இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
------\\\\\\
ஜல்லிக்கட்டு ஒரு கேடா?
தை நெருங்குவதால்... ஜல்லிக்கட்டு நடக்குமா? என்ற பீதி பிடித்தாடுக்கிறது தமிழர்களை என்பது சரியாக தெரியவில்லை!
வரலாறு காணா கனமழை, வெள்ளம் பாதிப்பு சென்னை, கடலூர் உள்ளிட்டு 6,7 மாவட்டம் நிர்மூலம்! இந்த சூழலில் ஜல்லிக்கட்டு ஒரு கேடா?
இது எப்படி இருக்கிறதென்றால் ரோம் பற்றி எரிகிறபோது பிடில் வாசித்த மன்னர் கதைபோல் இருக்கிறது!
இன்று 18.12.15 News 7 ?கேள்வி நேரம்!
-----\\\\
சரமாரியாக கேள்வி!
"எனக்கென்று எதுவுமில்லை என்றால், இந்த சொத்தெல்லாம் எதற்கு? யாருக்கு?"
சிபிஐஎம் தமிழ்நாடு மாநில செயலாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன்...
தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு...
17.12.15 சேலம் செய்தியாளர்கள் சந்திப்பில் சரமாரியாக கேள்வி!
----\\\\
தலித் ஆகம விதி படித்து வந்தால்...
"ஆகம விதிபடித்தவர் அச்சகர் ஆகலாம்..!"
"ஆகம விதிகளை அனைவரும் படிக்க தடை இல்லையே..!"
அதுசரி,
ஒரு தலித் ஆகம விதி படித்து வந்தால்... அனுமதிப்பாங்களா?
ஓ...
படிக்க விட்டால் தானே..! என்கிறீர்களா..?
"இது கொக்கு தலையில் வெண்ணையை வைத்து பிடிப்பதுபோல் தெரிகிறது!"
இம்ம்...
பார்ப்போம்... பொறுத்திருந்து..!
----\\\\
"ஓட்டு வங்கி; நோட்டு வங்கி" என்பது அசைக்க முடியாத, ஆட்ட முடியாத "அயன்கம்பி" அல்ல!
👍👍👍
இன்று 19.12.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சி காலை 9 மணி பார்க்க நேர்ந்தது. பத்திரிக்கையாளர் நெய்வேலி பாலு, மணி, இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்..!
திமுகவின் அதன் தலைவரின் குதூகலம், எகத்தாளம் போன்ற அசிங்கமான,அருவருக்கத்தக்க "அரசியலை" அம்பலப்படுத்தியது. பாலு அவர்களின் வாதம் அருமை! திமுகவை இதற்குமேல்அம்பலப்படுத்த முடியுமா? அதன் சுயநலவெறி அரசியலை என்பது தெரியவில்லை!
இதற்கும், மக்கள் நலக் கூட்டணி க்கு 'நல்ல இடம்' தந்ததற்கும் சபாஷ்!
மணி கவலை அர்த்தமற்றதாகவே தோன்றுகிறது. ஒரு பொருள் அழிவில் தான் இன்னொரு பொருள் உருவாகும். திமுக, அதிமுக இரண்டுமே தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர கூடாது என்ற மையப்புள்ளியில் மக்கள் நலக் கூட்டணியின் இயங்குதளம்இருக்கிறபோது, இந்த இரண்டில் ஒன்று வீழ்வது இயற்கை! இரண்டும் வீழப்போகிறது என்பது வேறு விசியம்!
ஆனால், இங்கே வாதத்திற்காக... ஏன் அதிமுக தோற்காது? "ஓட்டு வங்கி, நோட்டு வங்கியை வைத்தா?" இதெல்லாம் யாருக்கும் நிரந்தரம் கிடையாது! இப்பொழுது, மணி போன்றவர்களிடம் கேட்க விரும்புவது... "அந்த நாலு பேரை கண்டு தானைத்தலைவர் நடுங்குவதேன்?"
பாலு கேட்டதைப் போல் தமிழகம் இவர்களின் (அதிமுக, திமுக) குல சொத்தா? சீப்பை ஒளித்து வைப்பதனால், திருமணம் நின்றுவிடவா போகிறது? இந்த ஈனச்செயல் (மதிமுகவில் ஆட்களைப் பொறுக்குவது) இந்த வயதில் இவருக்கு (கலைஞர்) தேவையா?
இதனால் திமுக ஆட்சிக்கு வந்துவிட போகிறதா? இருக்கிற மானம், மரியாதை கெடுமே ஒழிய மனக்காது!
-----\\\\\
பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு!
☝☝☝☝
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும், மக்களைப் பிளவுபடுத்தும், பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு!
19.12.15 காலை 11 மணிக்கு, சேலம் நேரு கலையரங்கத்தில், உயர்நீதி மன்ற அனுமதியோடு (கருத்துச்சுதந்திரம் வாழ்க!) பலத்த போலீஸ் பாதுகாப்போடு நடந்துக் கொண்டிருக்கிறது.
தபோல்கர்-பன்சாரே-கல்புர்கி நினைவரங்கில் தற்போது கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிகழ்வு...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ச.தமிழ்ச்செல்வன் நெறியாளுகையில்...
-----\\\\
பாஜக வும், காங்கிரஸும்
ஊழலில் ஊறிப்போனவர்களே!
சோனியா-ராகுல் மீதான நேசனல் ஹெரால்டு வழக்கு ஜாமீன்...
காழ்ப்புணர்ச்சியாக தொடரப்பட்ட வழக்கு என்பதில் இருவேறு கருத்தில்லை; ஆனால் காங்கிரஸ் ஒன்றும் முற்றும் துறந்த முனிவருமல்ல; (ஊழலற்ற கட்சியல்ல) பாஜக ஒன்றும் படித்தாண்டா பத்தினியும் அல்ல! பாஜக வும், காங்கிரஸும் ஊழலில் ஊறிப்போனவர்களே!
அதே சமயத்தில் எதிர்கட்சிகள் மீது ஆளும் கட்சியாக வருபவர்கள் இதுமாதிரி... தோண்டி, துருவி எதையாவது கண்டுபிடித்து, மீண்டும் "பிரேத பரிசோதனை" செய்வதும், வழக்குப் போடுவதும், நெருக்கடிக் கொடுப்பதும் இவர்களின் வாடிக்கை!
இதன்மூலம் ஆளும்கட்சி தன், மக்கள் விரோத நடவடிக்கைகளை, லாவகமாக திசைத்திருப்பிக் கொள்வர்; அதோடு தனக்கு சாதகமாக எதிர்கட்சிகளை வளைத்து போட்டும் கொள்வர்; இடதுசாரிகளைத் தவிர!
இன்று 19.12.15 PTTV நேர்படபேசு! இதன்ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
------\\\\
இடதுசாரிகள் மட்டுமே
கரைபடியா கரங்களுக்குச் சொந்தக்காரர்கள்!
காங்கிரஸும், பாஜக வும் ஊழலற்ற கட்சிகள் அல்ல! இடதுசாரிகள் மட்டுமே கரைபடியா கரங்களுக்குச் சொந்தக்காரர்கள்!
காங்கிரஸும், பாஜக வும் மாறி மாறி மக்களை ஏமாற்றுகின்றன. என்றாலும் பாஜக கண்மூடித்தனமாக எதிர்கட்சிகளை வேட்டை ஆடுகின்றது என்றே தோன்றுகிறது! ஆம் ஆத்மி உள்ளிட்டு அதன் பழிவாங்கும் படலம் நீளுகிறது.
ஆளும் கட்சி எப்பொழுதுமே மக்களை திசைத்திருப்ப இது மாதிரி ரெய்டு, வழக்கு என்று அவ்வப்போது கூத்தடித்துக் கொண்டிருக்கும்! அவ்வளவே! அதற்குமேல் ஒன்றும் நடக்காது!
இன்று 19.12.15 News 7 ?கேள்வி நேரம்!
-----\\\\\
'பீப்' பாடலா? 'ப்பீ' பாடலா?
🙈🙉🙊
''ப்பீ வயத்துக்குள்தானே இருக்கிறது..." என்று... அதை எடுத்து சாப்பிடுவார்களா? அந்த சிம்பும், அனிரூத்தும்!
அதை (ப்பீயை) இவர்கள் சாப்பிடுவார்களேயானால்...
பீப் என்கிற ப்பீ பாடல் ஓகே..!
இதற்கும்கூட 'வேண்டுமென்பவர்கள் சாப்பிடுங்கள்; வேண்டாமென்பவர்கள் சாப்பிடாதீர்!' என்று பதிவிடுவோர் இருந்தாலும் இருப்பர்!
(இதொரு வலைத்தள நண்பருக்கான எமது கமெண்ட்ஸ்!)
------\\\\\
கல்வியில்... பாகுபாடு; எட்டாக்கனி..!
இன்று 20.12.15 புதுப்புது அர்த்தங்கள் (PTTV) சிபிஎம் இரா.சிந்தன், மமக தலைவர் ஜவஹிருல்லா இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்... மக்கள் நலக் கூட்டணிக்கு சாதகமான சிக்னல் கொடுத்த சூழலில், பாஜக தலைவர்கள் விஜயகாந்தை சந்தித்ததும், இன்று அருண்ஜெட்லியை சந்தித்ததும் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு இருவரும் ஒத்தே கருத்து தெரிவித்தனர்... ஆம், பாஜக கனவு பலிக்க வாய்பில்லை என்று! பாஜக தேர்தல் சூட்சமத்தில் இறங்கி உள்ளதை உணர முடிகிறது! அதை சரியாகவே சிந்தன் பிரதிபலித்தார்!
அறிவாற்றலுடன் கூடிய அறிவியல் மனிதனின் அவலங்களையும் போக்க உதவ வேண்டும் என்ற ஜென்ராம் விவாதம் ஆயிரம் அர்த்தம் பொதிந்ததே! ஆம், அறிவியலை மனிதன் ஆற்றலுக்கு, முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும்; அழிவுக்கு அல்ல! விஞ்ஞானத்திலும் அஞ்ஞானம் இருப்பதுபோல் பேராசியர் வாதம் கொஞ்சம் திசைமாறியது தெரிந்தது.
கல்வி நிலையங்களின் மாணவர்கள் கேள்வி கேட்கும் நிலையில்லை என்ற திசைநோக்கி விவாதம் நகர்ந்தது. அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனலாம்! உலகமய சூழலுக்கு ஏற்றவகையில் அது உலக சுரண்டலுக்கு ஏற்றபடி, அது அறிவுசார் கல்வியில் இருந்து,அடிமைகல்வியாகி, கேள்விகேட்கும் உரிமையை மறுக்கிறதென்று 1990க்கு முன் பின் என, கல்வியில் பாகுபாடு, எட்டாக்கனி போன்றவையை அடுக்கியதும் அருமையாக குறிப்பிட்டார் பேரா ஜவஹிருல்லா; நன்று!




























No comments:
Post a Comment