சவாலான பணி!
மழை குறித்த அச்சமற்ற வாழ்வை மக்களுக்கு அரசாங்கம்தான் உத்தரவாதம் செய்ய வேண்டும்! அதுதான் இனி வரும் அரசுகளுக்கு சவாலான பணி!
சுகாதார பாதிப்பை தவிர்ப்பதென்றால், நகரில் ஒரு சொட்டு மழைநீர் விழுந்தாலும் தடையின்றி அது சென்று ஏரியிலோ, ஆற்றிலோ, கடலிலோ கலந்திடும் வகையில் வடிகால் கட்டமைப்பு இருந்துவிட்டால், அல்லது இனியாவது அமைத்தால் மட்டுமே அது சாத்தியம்!
மழை சொல்வதென்ன? என்றால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் ஆதாரங்களை உயிர் போகும் நிலை வந்தாலும், அவற்றை மனிதகுலம் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது; அழிக்கக்கூடாது என்பதைத்தான்!
இன்று 7.12.15 News 7 ?கேள்வி நேரம்..!
கொடி பிடித்தே வசூலித்தோம்!
Mahesh Raja அவர்களே!
கொடி பிடித்தே வசூலித்தோம்; கொடி பிடித்தே கொண்டு சென்றோம்; கொடிபிடித்தே மக்களுக்கு வினியோகம் செய்கிறோம்!
துண்டறிக்கை, பேனர் போட்டு, ஒலிபெருக்கி வைத்து ஊரறிய உலகறிய வசூலித்து, வழிபறி கொள்ளையில் இருந்து தப்பித்து சென்று வினியோகம் செய்கிறோம்! வேட்டியை மடித்து கட்டி களத்தில் பணியாற்றுபவர்கள் கம்யூனிஸ்ட்கள்!
காரில் வந்து, காலில் வெள்ள நீரில் கால் பதியாமல், வழியில் மடக்கி பிடித்து, அம்மா ஸ்டிக்கர் ஒட்டி, சத்தியம் பெற்று அரசு பணத்தையும், தொண்டு நிறுவன பொருள்களை மடக்கி பிடித்து, கரை வேட்டிகளோடு, அரசியல் செய்யவில்லை!
ஊரிலே வசூலித்தோ, தங்களின் சொந்த பொறுப்பில் யாரும் நிவாரண உதவி செய்யலாமே!
வழிபறி செய்து, அதில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டியதுதானே "அம்மா அரசியல்!"
(முகநூல் நண்பர் மாதேஷ் என்பவர், செங்கொடி பிடித்து கொண்டு நிவாரண பொருகள் அருகில் நின்று புகைப்படம் பிடித்துக் கொண்ட இமேஜ் பார்த்து, நக்கலடித்ததற்கு பதில் பதிவு!)
செய்யுமா? மத்திய-மாநில அரசுகள்!
கனமழையால் குழந்தைகள், மாணவர்கள் நலன் பாதிப்புத்தான் உச்சம்! அதை எப்படி ஈடு செய்ய போகிறோம் என்பதுதான் மிகப் பெரிய சவால்!
இந்த சவாலை அரசு மட்டுமே எதிர் கொள்ள முடியும்; அதை தற்போதைய மத்திய-மாநில அரசுகள் இணைந்து மனமாச்சரியமற்ற முறையில், எதிர்கால தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் சிற்பிகளான இவர்களை நெஞ்சுறுதியுடன் வார்த்தெடுக்க வேண்டும்!
செய்யுமா? மத்திய-மாநில அரசுகள்!
இன்று 8.12.14 PTTV மக்கள் மேடைக்கு!
மனிநேயமே முன் நின்றது!
நிவாரண பணிகளில் அரசியலைவிட மனிநேயமே முன் நின்றது!
ஆம், நாட்டுக்கே முன்மாதிரியாக சிறுபான்மை மக்கள் சார்ந்த (இந்து, கிருத்துவம் போன்ற) அமைப்புகள், காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள் பணிகள் வியக்கும்படி இருந்தது!
அதுபோல் அரசியல் அமைப்புகளில் இடதுசாரிகள் உள்ளிட்டு மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் (சிபிஐஎம், சிபிஐ, விசிக, மதிமுக) நிவாரணப் பணிகள் மற்ற கட்சிகளைக் காட்டிலும்,
கைமாறு கருதாமல், அதனதன் சக்திக்கு மீறிய அளவில் இருந்தது; அதில் அரசியலைவிட மனிதநேயமே மேலோங்கி இருந்தது!
இன்று 8.12.15 News 7 ?கேள்வி நேரம்..!
விவாதம் எல்லாம் சரிதான்...! ஆனால்..!
இன்று 9.12.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் நெறியாளர் ஜென்ராம், வெல்ஃபர் பார்ட்டி ஆப் இந்தியா சிக்கந்தர், பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி...
விவாதம் எல்லாம் சரிதான்...!
ஆனால் அரசியல் கட்சியின் "சக்தி" களை மட்டம் தட்டினதுதான் ஏற்க முடியவில்லை! அதுவும் சிக்கந்தர் சத்தம் கொஞ்சம் "ஓவர்". அதிமுகவின் அடாவடி அரசியலால், சிக்கந்தர் போன்றவர்களால்... "சாக்கடை நீரில் குடிநீர் கலக்காமல் பார்த்துக் கொள்வதுபோல் இதிலும் பார்த்துக்கொள்ள வேண்டும்" என திருவாய் மலர்ந்திருக்கிறார்!
இவரின் அடையாளமாக வரும் அமைப்பில் 'பார்ட்டி' என்று எதற்கு வருகிறது என்று தெரியவில்லை. ஒரு விசியம் தற்போது மேலோங்கி வருகிறது காட்சி, அச்சு ஊடகங்களில்... அதாவது தொண்டு நிறுவனங்கள் எல்லாம் "சுத்தம் சுயப்பிரகாசம்" போலவும், "அசுத்தம் அரசியல்" போலவும் ஊதி பெரிதாக்கும் ஆபத்து இந்த பேரிடர் நிவாரண பணிகளில்!
அரசு சட்டமன்றத்தைக் கூட்டி, மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக அனைத்துக்கட்சி குழுவும், அரசும் துணை நிற்கிறது என ஒரே ஒரு தீர்மாணம் போட்டிருந்தால், 'மழைநீர் வந்தவுடன் வரும் தவளை சத்தம்' அதிகரித்திருக்காது!
அரசு சட்டமன்றத்தைக் கூட்டி, மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக அனைத்துக்கட்சி குழுவும், அரசும் துணை நிற்கிறது என ஒரே ஒரு தீர்மாணம் போட்டிருந்தால், 'மழைநீர் வந்தவுடன் வரும் தவளை சத்தம்' அதிகரித்திருக்காது!
மனிதநேய பணி என்பது வேறு! தொண்டு நிருவனங்கள் பணி வேறு! அதையும், இதையும் இணைத்து முடிச்சு போடக்கூடாது; சுத்தமாக மனிநேயத்துடன் செயல்படும் தொண்டு நிருவனங்கள் போல், கட்சிகளும் இருக்கின்றன என்பதை அங்கீகரிக்கும், வெளிபடையாக அடையாளப்படுத்தும் துணிவும், நேர்மையும் ஊடகங்களுக்கும், அதில் உரையாடுவோருக்கும் இருக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பாகுபலி அம்மா அரசியலை, சூராதிசூரி போல் காப்பேன் என சர்வாதிகாரியாக செயல்படும் ஜெயலலிதாவையும், மற்ற கட்சிகளின் பணியையும் பொதுமை படுத்தாமல் இருப்பதே மக்களுக்கு நம்பிக்கை பயக்கும்! இவ்விதம் விவாதம் நகருமென பார்த்தேன்; லேசா ஜென்ராம் தலையிட்டார்! அவ்வளவே!
இடதுசாரிகளும், மக்கள் நலக் கூட்டணி கட்சிகள், அதன் சார்பு அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் டிச 2ஆம் தேதி முதல் இந்த நிமிடம் வரை ... பாதித்த பகுதியில் நிவாரண உதவியையும், இதர பகுதிகளில் பொருள், நிதி சேகரித்து அனுப்பியும், தங்களது அனைத்து வேறு அரசியல் பணிகளை ரத்து செய்தும் களப்பணி ஆற்றி வருவது ஊடகங்கள் கண்களுக்குத் தெரியாமல் போனதும் சோகமே; வெள்ளப் பாதிப்பு மட்டுமல்ல..!
தமிழக அரசின்...
பேரிடர் குழுவின் மீட்பு பணியும் சும்மாதான்!
இடதுசாரி மற்றும் மக்கள் நலக் கூட்டணி, மற்றும் அன்பு பாலம் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின், சிறுபான்மை அமைப்புகளின் நிவாரணப் பணிகளோடு ஒப்பிடும்போது அரசுகளின் பணி சும்மா!
மத்திய அரசின் பேரிடர் குழுவின் மீட்பு பணியோடு ஒப்பிடும் போது, தமிழக அரசின் பேரிடர் குழுவின் மீட்பு பணியும் சும்மாதான்!
இன்று 9.12.15 News 7 ?கேள்வி நேரம்!
மெகா ஊழல்!
சேலம் மாவட்டத்தில் மெகா ஊழல்! குளோரின் மாத்திரை ரூ700 விற்கிறபோது, ரூ1440 கொடுத்து வாங்கப்பட்டதாக இன்று அதிர்ச்சி தரும் செய்தி சேலத்தில் இருந்து வெளியாகும் காலைக்கதிர் 10.12.15 வெளியிட்டு உள்ளது! சேலம் ரூ 2கோடி, வேலூர் 1.5கோடி ஊழல் என பட்டியல் நீளுகிறது. இதை ஏஜன்சி எடுத்த ஓம் சக்தி நிறுவனத்திற்கு 16 மாவட்டங்களில் கிளை உள்ளதாம்! இன்னும் எதில் எதில் எல்லாம் வெளிப்படுமோ வெள்ளம்போல!
வெள்ளம் பாதித்த பகுதிகளை ஒருவழியாக கோபாலபுர கோமான் 9வது நாள் வந்து பார்வையிட்டுவிட்டு போய்விட்டார். அம்மாவைபோல் காரில் இருந்துக்கொண்டு, நீரில் கால் வைக்காமல்! அதுவும் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களும், தொண்டர்களும் களம் புகுந்ததால், இவரும் வேறுவழியில்லாமல் வந்துள்ளார். எப்படியோ வந்தார். நன்று.
ஆனால் வந்தவர் அந்த 4 பேருக்கு மட்டும் கொடுத்துவிட்டு போய்விட்டார். அதுகூட ஓகே. ஆனால் ஒலிபெருக்கியில் சொன்னாங்களாம்... "உங்கள் வீடு தேடி நிவாரணம் வரும்!" என்று. "நாங்களே வீட்டை இழந்துவிட்டு, அதைதேடிதான் ரோட்டில் நிற்கிறோம்; வீடு தேடி வேற நிவாரணம் வருதா?" என்று மக்கள் பேசினராம். இதுதான் கோபாலபுரம் நிவாரணம் லட்சணம் போலும்! இதுகூட இல்லையே போயாஸ் தோட்டம் என்று கேட்பதும் புரிகிறது!
ஆனால் வந்தவர் அந்த 4 பேருக்கு மட்டும் கொடுத்துவிட்டு போய்விட்டார். அதுகூட ஓகே. ஆனால் ஒலிபெருக்கியில் சொன்னாங்களாம்... "உங்கள் வீடு தேடி நிவாரணம் வரும்!" என்று. "நாங்களே வீட்டை இழந்துவிட்டு, அதைதேடிதான் ரோட்டில் நிற்கிறோம்; வீடு தேடி வேற நிவாரணம் வருதா?" என்று மக்கள் பேசினராம். இதுதான் கோபாலபுரம் நிவாரணம் லட்சணம் போலும்! இதுகூட இல்லையே போயாஸ் தோட்டம் என்று கேட்பதும் புரிகிறது!
"வெல்லும் லெனினியம்!"
👀👀👀👆👆👆👆😌😌😌😌
"...முதலாளித்துவ முறைதான் வாழ்வியல் நெருக்கடிகளுக்கு அடிப்படை காரணம்; அதனை தூக்கி எறிய வேண்டும் என்பதுதான் தத்துவ போதனை; முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களை அகற்ற உரிய நடைமுறைகளை வகுத்திட வேண்டும்.
தத்துவம், நடைமுறை என்ற 2 உலகிலும், இடையறாமல் சஞ்சரித்து, இடையறாமல் பயணம் செய்யும் கட்சிதான் புரட்சியை சாதிக்கும். அப்படிப்பட்ட கட்சியைக் கட்ட வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்துவதே லெனினியம்" (நன்றி: மார்க்சிஸ்ட் நவம்பர் 2015)
இவ்விதழ் 'நவம்பர் புரட்சி' இதழாக வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் தனி சிறப்பு! அவசியம் படிக்க வேண்டிய இதழிது!
என்.குணசேகரன், வெங்கடேஷ் ஆத்ரேயா, பேரா. சந்திரா, வே.மீனாட்சி சுந்தரம், ஜி.செல்வா ஆகியோர் நவம்பர் புரட்சியின் பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து உள்ளனர்.
'தமிழர் வளர்த்த தத்துவங்கள்' என்கிற தேவ.பேரின்பன் நூலை வீபா.கணேசன் அறிமுகமும், இடது ஜனநாயக அணி பற்றிய கேள்வி பதிலும் இடம் பெற்றிருப்பது கூடுதல் பயன்!
ஏகதேசத்திற்கு மட்டம் தடுவது!?
என்னை பொறுத்த வரை எந்த சார்பும் அற்ற தன்னார்வலர்கள் என்று யாரும் எதுவும் இல்லை; அனைவருக்கும் ஒரு நோக்கம் உண்டு; அது மறைமுகமாகவோ, அல்லது நேர்முகமாகவோ நிச்சயம் இருக்கிறது!
சிலவற்றில் பொது நோக்கு சற்று கூடுதலாக இருக்கலாம்! ஆம் ஆத்மி கட்சியின் பிறப்பிடம் தன்னார்வ நிருவனம் என்பதை யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது அல்லவா?
இன்று 10.12.15 PTTV மக்கள் மேடைக்கு!
இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
[12/10/2015, 20:35] Praven: 👏👏👏👏😫
[12/10/2015, 20:41] KannenG: முற்றிலும் உண்மை
ஈடு செய்திட வேண்டியது அரசுகள்தான்!
மழை, வெள்ள பாதிப்பால் தொழில் முனைவோருக்கு ஈடு செய்திட வேண்டியது அரசுகள்தான்!
வங்கி மூலம்தான் உதவிடல் வேண்டும். தொழில் முனைவோரிடம் பணியாற்றிய தொழிலாளர்களுக்கும் உரிய ஈடு வழங்கிட வேண்டும்.
இதுபோல் வீடு, உடமை போன்ற அனைத்தையும் இழந்து உடுத்திய உடையோடு இருக்கும் மக்களுக்கும், அவர்களின் இழப்புக்கு ஏற்ற ஈடு அரசு வழங்கிட வேண்டும்!
இன்று 10.12.15 PTTV நேர்படபேசு!
தேவை உணவு, உடை, இருப்பிடமே!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடமே!
அதோடு, "நீங்கள் தனித்து விடப்படவில்லை உங்களின் துயரங்களை எங்களின் தோள்கள் மீது சுமந்திடுவோம்" என்கிற நம்பிக்கையை ஊட்டுவது தான்!
அதற்குத்தான் சட்டமன்றத்தைக் கூட்டி ஒரு தீர்மாணம் போடலாம் என்றால், "பாகுபலி ஆக நான் இருக்கிறேன் உங்களை காக்க" என அரக்கத்தனமாக தமிழக முதல்வர் செயல்படுவதுதான் வெள்ளப் பாதிப்பைவிட சோகமாக தோன்றுகிறது!
இன்று 10.12.15 News 7 ?கேள்வி நேரம்!
நிகழ்ச்சியில்... நெறியாளர் செந்தில் பயன் படுத்திய அந்த ஒரு வார்த்தைத் தான் நம்மை தூக்கி வாரிப் போட்டது! ஆம், 'அன்பு பாலம்' மூலம் முழுவீச்சில், மூச்சுகூட விடாமல், செயலாற்றிய... செயலாற்றிவரும் செந்தில் சொல்லுவதில் அர்த்தம் இல்லாமல் இருக்குமா? ஆம், அவர் இந்த பேரிடரை "செயற்கை பேரிடர்" என அழைக்கிறார்!
இதற்கு தமிழக அரசின் அல்லது ஆளும் கட்சியின் சார்பில் யாரும் இல்லை பதிலளிக்க! என்றாலும் வரும் செய்திகள்... "செம்பரபாக்கம் ஏரியை எச்சரிக்கை விட்டு திறக்காததுதான் இவ்வளவு சேதாரம்" என்பதைத்தான் இப்படி சொல்கிறார் போலும்!
சபாஷ்! துணிச்சலான வார்த்தை பிரயோகம் இது!
"சிலரது விருப்பத்துக்காக வளைவதல்ல ஜனநாயகம்!"
😈😈😈😚😚😚😢😢😢
'ஜனநாயகம் என்பது தேர்தலுடனும், அரசு நிர்வாகத்துடனும் முடிந்துபோகும் விஷயமல்ல. மக்களின் பங்கேற்பு மூலமே ஜனநாயகம் வலுவடையும்!'
இவ்வாறு மெய் சிலிர்க்கும் ஜனநாயக சிற்பி யார்?
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சும்மா வெறும் ரூ25,000 கோடி தனக்கு மட்டுமே செலவை செய்த ஒரு டீ மாஸ்டர்தான்!
'சுதந்திரத்திற்காக மக்களை ஒன்று திரட்டி மகாத்மா காந்தி எவ்வாறு போராடினாரோ, அதேபோல், நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்கள் அணிதிரள வேண்டும். இந்த தேச பக்தர், மக்களை போராட தூண்டிவிடும்!'
போராளி யார்? அதுவும் காந்திஜிபோல் போராட அழைப்பவர் யார்? சுதந்திரம் பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க விடாமல் காந்திஜியை 'போட்டு' தள்ளிய நாதுராம் கோட்சேவை தனது குருநாதராக வணங்கி வரும் நரேந்திரமோடிதான்!
'ஏழைகளுக்குப் பயனளிக்கும் எந்த சட்ட மசோதாக் களையுமே நிறைவேற்ற இயலவில்லை. இதனால் அவர்கள் தங்களது உரிமைகளை பெற முடியாமல் உள்ளன!'
ஓரிரு நிமிட ஒரு நிகழ்ச்சியில் கூட ரூ10 லட்சம் மதிப்பில் உடை அணிந்த, தொடர்ந்து அணிந்து வருகிற ஏழைப்பங்காளன்தான் இப்படி பேசுகிறார்!
ஆம்! இப்படி எல்லாம் பேசுவது, எதனால்? எதனால் என்றால்... பன்னாட்டு முதலாளிகளுக்கு அவர்களின் ஆசைப்படி, அல்லது 'விருப்பப்படி' எதுவும் செய்ய முடியவில்லையே என்ற விரக்தியின் அல்லது பன்னாட்டார் விரட்டலில் இருந்துதான் மோடியார் "வீர் வீரென்று" விளாசுகிறார்; அல்லது அலறுகிறார்!
மோடியின் ஜனநாயக அக்கரை..!?
இன்று 11.12.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் மூத்த பத்திரிக்கையாளர்கள் ஞானி, மணி, ஜென்ராம்...
ஜிஆர் அறிக்கை, அரியானா உள்ளாட்சி தேர்தல் கல்வி தகுதி குறித்த உச்சநீதி மன்ற தீர்ப்பு, ஜனநாயகம் பற்றிய மோடி பேச்சு பற்றியதாக இருந்தது!
தோழர்ஜிஆர் அறிக்கையை வரவேற்றது நன்று! உச்சநீதி மன்ற தீர்ப்பு சரியாக இல்லை; மணி வாதம் சரி! எழுத்த படிக்க தெரிந்தால் போதும் என்பதுதான்; நீதி மன்ற தீர்ப்பு வெள்ளையார் கால... படித்தவருக்கு வாக்குரிமையை நோக்கி நகர்ந்துவிடும் ஆபத்துக்கு அச்சாரம் போட்டுவிடும்.
மோடியின் ஜனநாயக அக்கரை சைத்தான் வேதம் ஓதுவதுதான்! இது குறித்த எனது பதிவு தனியே உள்ளது! என்றாலும் நெல்லுக்கு பாய்யும் தண்ணி பில்லுக்கும் என்பதுபோல் தொழிலாளர் நலன் குறித்த பில் பற்றி மோடி பேசுவதாகும்!
ஆனால் இந்த மூவரும் இதை கவனமாக தவிர்த்துவிட்டதுதான் ஆச்சரியம்!
நூல் அறிமுகம்:
இளைய தலைமுறைக்கு எழுச்சியூட்டும்..!
களப்பணியாளர்களுக்கு களிப்பூட்டும்..!
கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களின் தியாகமிகு வரலாறுகளையும், மாவட்ட வரலாறுகளையும் எழுதி சாதனைப் படைத்துள்ள எழுத்தாளர் தோழர் என்.ராமகிருஷ்ணன் அவர்களின் மகத்தான மற்றுமோர் படைப்புதான் “தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (1964-2014)”
இந்நூல் அய்ந்தாண்டுகளில் தயாரிக்கப்பட்டதென்பது இன்னொரு சாதனையே! 117 தலைப்புகள்; 592 பக்கங்கள் நகர்ந்ததே தெரியவில்லை. இதுவரை நான் படித்த நூல்களிலேயே இவ்வளவு விரைவாக, வாசித்து முடித்த நூல் எதுவுமில்லை. ஆம்! ஒரே மூச்சில் வாசித்த நூல்களில் இதுவும் ஒன்று.
நான் விச அரங்கில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தோழர்… காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவர். விச வில் மாவட்ட நிர்வாகி அளவுக்கு வந்தவர். தற்போது அவர் கம்யூனிஸ்ட இயக்கத்தில் இணைந்துக் கொண்டார் என்பது வேறுவிசயம். ஆனால் அவர் அடிக்கடி என்னை அடிக்கடி ஓன்றை விடாமல் கேட்டுக் கொண்டே இருப்பார்…
“தோழரே, நாம் என்னா செஞ்சியிருக்கோம்? சும்மா சும்மா போய் உறுப்பினர் சேரு; உறுப்பினர் சேரு அப்படீங்கிறீங்களே!” உழவர்களுக்கு நேரடியாக நலன் போய் சேருகிற அளவுக்கு நாம் என்ன செய்தோம் ? என்பதே அவரின் ஆதங்கத்தின் வெளிப்பாடு. அவரிடம் நான், “தனிபட்ட முறையில் தனிநபருக்கென்று ஏதும் கிடைக்காது; நாட்டில் ஒட்டுமொத்த மாற்றம் வரும்போது உங்களுக்கும், எனக்கும், எல்லோருக்கும் கிடைக்கும்” என்பன போன்றவற்றைச் சொல்லி சமாளித்து வந்தாலும், என் மனதில் ஒரு சிறு பொறி இருந்துக்கொண்டே இருந்தது… “அவரின் கேள்வியில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது” என்று.
இந்நூலை வாசித்தப்பின்தான் தெரிந்தது இவ்வளவு வேலைகளா? இவ்வளவு தியாகங்களா? இவ்வளவு போராட்டங்களா? இவ்வளவு அர்ப்பணிப்புகளா? என மலைக்க வைக்கிறது. எல்லாம் தொகுத்து பார்க்கிறபோதுதான் பிரமித்து போகிறது. மேற்காணும் தோழரின் விலைமதிப்பற்ற கேள்விக்கு இந்த விலைமதிப்பற்ற நூல் தனது பதிலை ஏந்தி வந்திருக்கிறது. நான் சேம்பள்க்கு அவரை இங்கு குறிப்பிட்டேன். அவர்போல் ஆயிரமாயிரம் உள்ளங்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பை இந்நூல் எடுத்தக்கொண்டதுதான் இந்நூலின் தனி சிறப்பாக அமைந்து விட்டது; அப்படி இந்நூல் பெருமைக்குரிய ஒன்றாக அமைந்து விட்டதுதான் நான் எதிர்பார்க்காத ஆச்சரியம்.
இந்த 50 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கால் பதிக்காத களம் உண்டோ? என்று கேள்வி எழுப்பினால், கண்களை மூடிக்கொண்டு சொல்லலாம் “இல்லைவே இல்லை!” என்று!றால் அது மிகையல்ல.
பாலர் சங்கம் முதல் ஓய்வூதியர் சங்கம் வரை… வாலிபர் சங்கம் முதல் மாதர் சங்கம் வரை… கிராமம் முதல் மாநகரம் வரை… கைத்தறி முதல் கம்யூட்டர் தொழில் வரை… ஆதிவாசிகள் முதல் தலித் சமூகம் வரை… சமுதாயத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளில் தலையிட்டு எத்தனை எத்தனை இயக்கங்களை கண்டிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் சார்பு அமைப்புகளும்! கூலி பிரச்சனை முதல் சமூகநீதி பிரச்சனை வரை.. கலை-இலக்கியம்-பண்பாடு தளத்தில்… மாணவர்-வாலிபர்களின் கல்வி-வேலை பிரச்சனை… விவசாயி, விவசாயத் தொழிலாளிகள் பிரச்சனை..
மீனவர்கள் முதல் விஞ்ஞானிகள் வரையிலான பிரச்சனை… தொழிலாளர்கள், சிறுகுறுநடுத்தர உற்பத்தியாளர்கள் போன்றவர்களின் பிரச்சனை.. என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கால் பதித்த்தில் கால்வாசி பகுதிகளின் தொகுப்புத்தான் இந்நூல். இன்னும் முழுமையாக தொகுத்திருந்தால் பக்கங்கள் எத்தனை ஆயிரம் தேவைப்படுமோ தெரியவில்லை. ஆம்! மக்கள் பிரச்சனைகளில் போராடியதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அன்றும், இன்றும் முதலிடமே தமிழகத்தில் என்பதை இந்த நூல் ஆதாரங்களுடன் அடுக்குகிறது.
மீனவர்கள் முதல் விஞ்ஞானிகள் வரையிலான பிரச்சனை… தொழிலாளர்கள், சிறுகுறுநடுத்தர உற்பத்தியாளர்கள் போன்றவர்களின் பிரச்சனை.. என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கால் பதித்த்தில் கால்வாசி பகுதிகளின் தொகுப்புத்தான் இந்நூல். இன்னும் முழுமையாக தொகுத்திருந்தால் பக்கங்கள் எத்தனை ஆயிரம் தேவைப்படுமோ தெரியவில்லை. ஆம்! மக்கள் பிரச்சனைகளில் போராடியதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அன்றும், இன்றும் முதலிடமே தமிழகத்தில் என்பதை இந்த நூல் ஆதாரங்களுடன் அடுக்குகிறது.
ஆம்! இந்த வரலாற்று பெட்டகத்தில் இந்த இடம் மட்டும் காலியாக இருப்பதாக தெரிகிறது… அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பொறுப்புகள்… அவற்றில் ஆற்றிய பணிகள்… சட்டமன்றம், உள்ளாட்சி மன்றம், நாடாளுமன்றம் என பணிகள் பங்களிப்புகள் விடுபட்டுவிட்டது; அதே போல் இன்னொன்றும் பதிவாகாமல் விடுப்பட்டுள்ளது; அதுதான் இலங்கை தமிழர் பிரச்சனையில் நமது பணி. அது மகத்தானது. 1983 முதல் நாம் மேற்கொண்ட இயக்கம் மலையளவானது. அது இன்றைய இளம் தலைமுறையினருக்கு கொஞ்சமும் தெரியவில்லை.
ஓருநாள் இன்சூரன்ஸ் அரங்க இளம் ஊழியர் ஒருவர் என்னிடம் கேட்டார் சமீபத்தில்… “தோழர் இலங்கை தமிழர் பிரச்சனையில் நாம் எதுவுமே செய்யவில்லையே… ஏன்?” போர்குற்றம் சம்மந்தமாக சர்வதேச விசாரணை குறித்த பிரச்சனை எழுந்தபோது. அதன்பின் நான், அப்பிரச்சனையில் நம் நிலைபாடு, செயல்பாடு குறித்து விளக்கம் அளித்தேன். “ஓ… அப்படியா? இவ்ளோ செஞ்சி இருக்கோமா?” என்று விபரம் பெற்று போனார் எனபது ஒரு உண்மையான நிஜம். அதுவும் இடம் பெற்றிருந்தால் இன்னும் இந்நூல் சிறப்பு சேர்த்திருக்கும் என்றே தோன்றுகிறது.
எப்படியிருப்பினும் இன்றைய இளம் தலைமுறைக்கு இதொரு திசைக்காட்டி. களப்பணியில் இருப்போருக்கு இதொரு கையேடு; தெம்பூட்டி! 117 தலைப்புகளும், 117 போர்களத்தைப் பேசுகிறது என்பது மட்டுமல்ல; அதோடு கிளைக்கிளைத்து வந்திருக்கும் ஆயிரமாயிரம் போர் பரணியையும் பாடுகிறது; இதுதொரு வரலாற்று பெட்டகமாக மிளிருகிறது இந்நூல்.
முன்பின் அட்டைகளில் சமீபத்தில் சென்னையில் நடந்த 21வது மாநில மாநாட்டு செந்தொண்டர்களின் அணிவகுப்பு; தலைவர்களின் உறுதிமொழியேற்பு; முன்புறம் பாட்டாளிகளின் படைதளபதியாம் மறைந்த பி.ராமமூர்த்தி படம்; பின்புறம் ஆணுக்குப் பெண் சளைத்தவர்கள் அல்ல தியாகத்தில் என பாட்டாளிகளின் நெஞ்சங்களில் வீற்றிருக்கும் மதுரை வில்லாபுரம் வீராங்கனை லீலாவதி படம்.. என உணர்ச்சியூட்டும் வடிவமைப்பு. நேர்த்தியான அச்சாக்கம்.
எல்லாவற்றிக்கும் மேலாக தோழர் என்.ராமகிருஷ்ணன் அவர்களின் தெளிந்த நீரோடை போன்ற எழுத்துநடை; களப்பணிகளை மட்டுமே தொகுத்து அறிக்கைபோல் அளிக்காமல், ஆங்காங்கே தேவையான அரசியல் சித்தாந்த தெளிவுடன் கூடிய மார்க்சிய கருத்துக்களின் கோர்ப்பும் சேர்ப்பும் வாசிப்புக்கு மேலும் விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு புகைப்படமும் ஒருநூறு அர்த்தம் சொல்லும் வண்ணம் அமைந்திருப்பது அருமை; புதுமை.
இந்நூலில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், தமிழ்மாநிலக்குழு செயலாளருமான தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்…
“ஏகாதிபத்திய எதிர்ப்பு, முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ சுரண்டல் எதிர்ப்பு, தீண்டாமை கொடுமை உள்ளிட்ட சமூக ஒடுக்குமுறையை எதிர்த்து போராடுவதோடு, நவீன தாராளமய பொருளாதார கொள்கை எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு இயக்கங்களையும் நமது கட்சியும், வர்க்க-வெகுஜன அமைப்புகளும் நடத்தி வருகின்றன…” “… கட்சியின் கடந்த கால வரலாற்றை பயில்வது எதிர்காலத்தில் உறுதியாக போராடுவதற்கு, இன்றைய தலைமுறையினர் நமது இயக்கத்தின் 50 ஆண்டு கால வராலாற்றைத் தெரிந்துக் கொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும் என்பது உறுதி” என்பது சத்திய வார்த்தைகளே!
இந்த நூலாசிரியர் தோழர் என்.ராமகிருஷ்ணன் அவர்களின் 5 ஆண்டு உழைப்பு வீண் போகவில்லை. மாநிலம் முழுவதுமான போர்பரணி தழும்புகளை ஒருங்கே தொகுத்தளித்துள்ளார். இது இமாலய பணி என்றால் மிகையாகாது. இதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்நூலை மலிவு பதிப்பில் கொண்டு வந்திருந்தால் இன்னும் மிக பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. அதுபோல் வர்க்க-வெகுஜன அமைப்புகளின் பணிகளே இதில் தூக்கலாக இருக்கிறது; இது தவிர்த்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. இரண்டும் கலந்ததுதான் வரலாறு என்றாலும், சார்பு அமைப்புகளுக்குத் தனித்தனியே வரலாறுகளை பதிவு செய்து ‘ஆப்ஷன்’ இருக்கவே செய்கிறது. ஆனால் கட்சி வரலாறு பதிவுக்கு இனி மிக அருகாமைக்கு அப்படியொரு வாய்ப்பு இருக்குமா? தெரியவில்லை.
இந்நூலின் கடைசி வரிகள் கூறுகின்றன… “தமிழக மக்களின் சமூக வாழ்வில் புகுந்துள்ள பிற்போக்கு மற்றும் பழமைவாத, சாதிய சக்திகளை வேரறுக்க கடந்த 51 ஆண்டுகளாக தொடர்ந்த போராடி வருகின்றன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் சார்பு அமைப்புகளும்! வரும் ஆண்டுகளில் அப்போராட்டம் புது உத்வேகத்துடன் கூடுதல் வேகத்துடன் நிச்சயம் தொடரும்!”. ஆம்; தொடரும்! அதற்கு இந்த நூல் நிச்சயம் உதவிடும்! உரமூட்டும்! ஊக்கப்படுத்தும்! உத்வேகமூட்டும் என்பது திண்ணம்!
-பி.தங்கவேலு.
11.12.2015.
படித்ததில்..!🙋🙋🙋🙇🙇🙇
☝ புராண இலக்கியங்களின் அடிப்படையில்தான் கூறப்பட்டன. வேதங்களில் இதற்கெல்லாம் இடமில்லை. ஏன் "ஹிந்து" எனும் பதமே வேத இலக்கியங்களில் இல்லை. பிராமணிய கருத்து பரவலுக்கும், அதன் கலாச்சாரம் பரவுவதற்கும் புராண இலக்கியங்கள்தான் அதிகம் பயன்பட்டுள்ளன.
👀👀👀
👉 இங்கு உள்ளூர் சிறுதெய்வங்களை பிராமணிய இந்துமதம் உள்வாங்கியது போல இந்தியாவின் பிறபகுதிகளில் நடந்ததா?
👆 நிறைய உள்வாங்கப்பட்டுள்ளன. நமக்கு அதிகம் விவரங்கள் தெரியவில்லை. பூரி ஜெகனாதர், பலராமர், சுமத்திரை ஆகியோர் இனக்குழு தெய்வங்கள்தான். முருகன் தூய தமிழ் கடவுள்தான். ஆனால் அவர் சுப்பிரமணியன் ஆனவுடன் பெரிய முக்கியத்துவம் பெற்றுவிட்டார். இன்றைக்கு அவர் லேசுப்பட்ட கடவுள் அல்ல.
-டாக்டர் சம்பகலக்ஷ்மி. (டிசம்பர் 2015., புதிய புத்தகம் பேசுது)
குறிப்பிட்ட சமூகத்திற்கென்று
நேந்துவிட்ட பணியா?
மழை வெள்ளம் வட்ட மேஜை விவாதத்திற்கு வாழ்த்துக்கள்! வட்டமேஜையில் மட்டுமே சிலரை பார்க்கிற போது வருத்தங்கள்! இன்று சென்னை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது; சுத்தம், சுகாதாரம் வேண்டுமென கோருகிறது!
அரசோ மாநிலம் முழுவதுமுள்ள சுகாதார பணியாளரை அழைத்து துப்புரவு பணியில் இறக்கிவிட முயற்சிக்கிறது! ஏன் சென்னையில் உள்ள ஒவ்வொருவரும் துப்புரவு பணியாளராக மாறக்கூடாது? அது என்ன குறிப்பிட்ட சமூகத்திற்கென்று நேந்துவிட்ட பணியா? அல்லவே!
இன்றுகூட 11.12.15 இல் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்களுடன் இணைந்து மலம், ஜலம் கலந்துபோகும்... அல்லது பரவி கிடக்கும் அசுத்தங்களைச் சுத்தம் செய்துள்ளாரே..!
மற்றவர்களும் குறிப்பாக சென்னைவாசிகள் அனைவரும் இறங்கினால் ஒரு நொடியில் ரெடியாகி விடுமே சென்னை..! அதற்கு இந்த வட்டமேஜை விவாதம் உதவினால், பயனுள்ளதாக இருக்கும்! அல்லவா?
இன்று 11.12.15 PTTV மக்கள் மேடைக்கு! நேரலை அல்லாமல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் சார்பில் தோழர் அ.சவுந்திரராசன், சிபிஐ சார்பில் சி.மகேந்திரன், விசிக சார்பில் ஆளூர் ஷானவாஸ், மதிமுக சார்பில் அந்திததாஸ் உள்ளிட்டு அனைத்து கட்சிகளும் விவாதித்துள்ளன.
அரசியல் கட்சிகள் கூடி, ஆளும், ஆண்ட கட்சிகளின் கொள்கையை தோலுறித்துக் காட்டாமல், அதிகாரிகளை குறை சொல்லும் விவாதமாக போய் கொண்டு இருப்பதால்... அனைத்துக் கட்சி வட்டமேஜை மக்கள் மேடை... சாரமில்லை; சலிப்பையே விதைக்கிறது!
இதற்கு பெயர்தான் கோயாபல்ஸ் என்பதா?
😜😜😝
முழங்காலுக்கும், மொட்டத்தலைக்கும் முடிச்சு போடுவதைக் கற்றுக்கொள்ள வேண்டுமா?
உடனடியாக தொடர்பு கொள்க... திருவாளர் நாராயணன் பாஜக தொலைக்காட்சிகளில் தோற்றமளிப்பவர்!
இன்று 11.12.15 இரவு தந்தி டிவி "ஆய்த எழுத்து நீட்சி" யில் மேற்கண்டவருடன் மார்க்சிஸ்ட் அருணன், நெறியாளர் அரிகரன்...
விவாதம்: அரியானா மாநிலத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாதென்ற அரசின் முடிவை உச்சநீதி மன்ற ஆதரிப்பதைப் பற்றியது...
அருணன்... "இது எளிய மக்களுக்கு எதிரானது; இன்று நிற்க கூடாது என்பர்; அடுத்து ஓட்டு போடக் கூடாதென்பார்கள்" என்றார்.
இதற்கு நாராயணன்... "கம்யூனிஸ்ட் கல்வியை எதிர்க்கிறார்; மேற்கு வங்கத்தில் இவர்கள் என்ன செய்தார்கள்; நெக்கட்டிவ் வா பேசுவதே இவர்கள் வேலை; இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் எங்கே இருக்கிறார்கள்? இல்லவே இல்லை!" என சம்மந்தமில்லாமல் பேசி, திசைத்திருப்பி விட்டார்;
இன்று மட்டுமல்ல; என்றுமே இவர் இப்படித்தான்! காது காது என்றால் வேது வேது என்பதுதான் இவரின் வேலையாக இருக்கிறது! இதற்கு பெயர்தான் கோயாபல்ஸ் என்பதா?
போட்டு எடுப்பது என்பதற்கு அர்த்தம் !?
போட்டு எடுப்பது என்பதற்கு அர்த்தம் தெரிய வேண்டுமா? இன்று 11.12.15 இரவு 9-10.30 மணி News 7 ?கேள்வி நேரம் பார்த்திருந்தால் தெரிந்திருப்பீர்! பாவம் அதிமுக ஆவடி குமார்; பாஜக சேகர்..! நெறியாளர் செந்தில், இவருடன் வலைத்தள செயல்பாட்டாளர்கள்... மேற்காணும் இருவரையும் போட்டு எடுத்துவிட்டார்! சபாஷ்!!
ஜட்டியில் ஸ்டிக்கர் ஒட்டியவரை பிடித்த வேகம்... கமலஹாசனுக்கு பதில் தந்த வேகம்...மீட்பு, நிவாரண பணிகளில் ஏன் காட்டவில்லை? அப்படி காட்டியிருந்தால்... அவற்றை அடுக்குங்கள் என்று ஆவடியாரை வாயடைக்க வைத்துவிட்டனர்!
தூய்மை இந்தியா சென்னையை உள்ளடக்கியதா? இல்லையா? எங்கே உங்களின் தூய்மைப் பணி? வெள்ள சேதம் பார்த்த பிரதமர் வானூர்தி பயணம் புகைபடத்தில் செய்த குளோனிங் எதற்கு? என்றெல்லாம் சேகரை கேட்டப்போது... என்னைப் போன்ற சேவாதள தொண்டர்கள் பணியை பார்க்கவில்லையா? பசவி விட்டு பறந்துவிட்டார்!
அதிமுக, பாஜக வை இதற்குமேல் அம்பலப்படுத்த முடியுமா? அவர்கள் மீட்பு, நிவாரணம், தூய்மை போன்ற பணிகளில் என்று தெரியவில்லை! மீண்டும் ஒரு சபாஷ்! மறு ஒளிபரப்பு இருந்தால் (இருக்கா? அதன் நேரம் தெரியவில்லை! தெரிந்தவர்கள் தெரிவியுஙங்கள்) அவசியம் பாருங்கள்!
தேச பக்தர்களின் கூட்டமைப்பா ஆர்எஸ்எஸ்..!
😈😈😈😁😁😁
"... RSS (ராஷ்ட்ரிய சுய சேவக்) பாகிஸ்தான் ஐஎஸ்எஸ் உளவு அமைப்பு போன்றதல்ல. தேசபக்தர்களின் கூட்டமைப்பு. நான் முழுமையான ஆர்எஸ்எஸ் பணியாளன். தேச நலனுக்கு சிறை சென்றுள்ளேன். நமது பிரதமரும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்தான். நாங்கள் தேசபக்தர்கள்.."
"... நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எந்த சமூகத்திற்கோ அல்லது எந்த மதத்துக்கோ எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.."
"... நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எந்த சமூகத்திற்கோ அல்லது எந்த மதத்துக்கோ எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.."
(தினமணி: 12.12.15)
இப்படி முத்துக்களை உதிர்த்திருப்பவர் யார்? அரசு பொறுப்பில் இல்லாத ஒரு வழிப்போக்கர் அல்ல! மத்திய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து அமைச்சரும், முன்னாள் பாஜக தலைவருமான நிதின் கட்கரி.
இவர்கள் தேசபக்தர்கள் என்றால்... தேசப்பிதா அண்ணல் காந்தியை கொன்றவரும் தேசபக்தரா? அவரை அவரின் புகழ்பாடுவது ஏன்? எதற்கு? அல்லது அண்ணல் காந்தி தேசவிரோதியா? அவரை ஏன் நாதுராம் கோட்ச் சுட்டுக் கொன்றார்?இதுதான் தேசபக்தியா?
அடுத்து, "நாங்கள் ஆட்சிக்கு வந்த எந்த சமூகத்திற்கும், மதத்திற்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றால்... இதற்கு முன் அவ்வண்ணம் செய்தார்களா? அவ்வாறு செய்ததற்கான வாக்குமூலம் இதுவா?
அத்வானி தலைமையில் பாபர்மசூதியை இடித்து நிரவியதும், நரேந்திர மோடி தலைமையில் முஸ்லீம் மக்களை நரவேட்டை ஆடியதும் தேசபக்தி செயல்களா? இதையெல்லாம் இன்று 12.12.15 PTTV பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி சொன்னதை எச்சில் தொட்டு அழித்துவிடக்கூடியதா?
தமிழகத்தில் தற்போதைக்கு,
"மக்கள் நலக் கூட்டணி"யே..!
👆👇👈👉
இரண்டும்தான்! அதற்குமேல் இந்த சொத்துடமை சமுதாயமும் பிரதான காரணி ஆகிறது. மனிதன் வாழ அடிப்படை தேவை... உண்ண உணவு; இருக்க இருப்பிடம்; உடுக்க உடை! இவை மூன்றும் என்று அவனுக்கு உறுதிப்படுகிறதோ, அல்லது உறுதிப்படுத்தப்படுகிறதோ...
அன்று மனிதன் வாழ்வு அர்த்தப்படுகிறது! அதுவரை இதுபோல் மனிதனும், சுரண்டல் அரசுகளும் இயற்கைச் செல்வங்களைச் சூரையாடுவர்! அதனால் இதுபோன்ற இயற்கை சீற்றமோ, செயற்கை சீற்றமோ மனிதன் எதிர் கொண்டுதான் ஆக வேண்டும்.
அன்று மனிதன் வாழ்வு அர்த்தப்படுகிறது! அதுவரை இதுபோல் மனிதனும், சுரண்டல் அரசுகளும் இயற்கைச் செல்வங்களைச் சூரையாடுவர்! அதனால் இதுபோன்ற இயற்கை சீற்றமோ, செயற்கை சீற்றமோ மனிதன் எதிர் கொண்டுதான் ஆக வேண்டும்.
அப்படி என்றால் மனிதனை நெறிப்படுத்த வேண்டியது அரசுதான். அந்த அரசு, அதன் கொள்கையை பொறுத்தே இயற்கையை பாதுகாப்பதும், சீற்றத்தை எதிர் கொள்வதும், வகையில்அமைகிறது! பொதுச்சொத்தை பாதுகாக்கும் அரசாக அதன் கொள்கை இருந்தால், இருந்திருந்தால் தற்போது ஏற்பட்டிருக்கும் பாதிப்பு இருந்திருக்காது; ஆனால் நமது தேசம் இதுவரை கண்ட அரசுகள் அப்படி அமையவில்லை என்பதுதான் சோகம்!
அப்படி ஒரு அரசு அமைய, அமைக்க இன்றைக்கு இருக்கக்கூடிய ஒரே வாய்ப்பு பொதுவுடமை தத்துவத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் பொதுவுடமை கட்சிகள்தான்!
அப்படி ஒரு அரசு அமைய, அமைக்க இன்றைக்கு இருக்கக்கூடிய ஒரே வாய்ப்பு பொதுவுடமை தத்துவத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் பொதுவுடமை கட்சிகள்தான்!
அந்த வகையில் சிபிஐஎம், சிபிஐ உள்ளட்ட கட்சிகள்தான் நம் கண்களுக்குத் தெரிகின்றன. தமிழகத்தை பொறுத்த வகையில் திமுக, அதிமுக விடம் அத்தகைய கொள்கையை இனி எதிர்பார்க்க முடியாது; எனவே பொது சொத்தைப் பாதுகாக்க, பராமரிக்க ஒரே மாற்று... தமிழகத்தில் தற்போதைக்கு, "மக்கள் நலக் கூட்டணி"யே..!
நாளை 13.12.15 PTTV உரக்கச் சொல்லுங்கள் நிகழ்ச்சிக்கு..!
மிரட்டலா? நாடகமா?
🙈🙉🙊
ஜிஎஸ்டி சேவை வரி மசோதா சட்டமானால்... இந்தியாவில் இருக்கும் 56 கெக்கோ கோலா, பெப்ஸி கம்பெனிகளில் பெரும்பகுதி மூடப்படும் என்கிற மிரட்டிலில் இருந்து பார்த்தால், "இது முதலாளிகளுக்கு எதிரானது; இந்திய மக்களுக்கு ஆதரவானது" என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது!
இதே நிருவனம் ஏற்கனவே அரசு விதித்த வரிக்கு, வேறு வழியின்றி விலையை ரூ10 இல் இருந்து ரூ12 க்கு உயர்த்தியதாக உயர்த்தியதாகவும் இதே அறிக்கையில் கூறியுள்ளது!
ஆக, இது... "அடிப்பது போல் அடிக்கிறேன்; அழுவது போல் அழு" என மத்திய அரசும், ஆலை நிர்வாகமும் ஆடும் நாடகமாகவே தெரிகிறது.
ஆம், தற்போதைய 250 கோடி டாலர் முதலீடு இன்னும் 4 வருடத்தில், 2020இல் 500 கோடி டாலராக முதலீடு உயரும் என்பதில் இருந்தே இவர்களின் (அரசு, ஆலை) நாடகம் உறுதியானது என்றுதான் கருத நேரிடுகிறது!
மகிழ்ச்சி..! வாழ்த்துக்கள்..!
இன்று 13.12.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் 1500 நிகழ்ச்சி என்பதில் மகிழ்ச்சி..! வாழ்த்துக்கள்..! இந்த நிகழ்ச்சியை 90% க்கும் மேல் பார்த்து, அவைகள் குறித்த கருத்துக்களை நிர்வாகத்திற்கும், சமூக வலைத்தளங்களில் பதிந்தவன் என்கிற முறையில் இன்னொரு மகிழ்ச்சி!
இன்று மூத்த எழுத்தாளர் ஞானி, திமுக மனுஷ்புத்திரன், இவர்களுடன் நெறியாளர் ஜென்ராம்... அரசியலில் தடித்த தோல் அவசியமா? என்ற கேள்வி ஆயிரம் அர்த்தம் கொண்டது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்; காங்கிரஸ்; கம்யூனிஸ்ட் அமைப்புகளின் "தியாகம்" பற்றிய விவாதத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் களுக்கு உரிய அந்தஸ்து தந்தது நன்று!
அஇஜமாதர் சங்கம் சமூக நலப் பணிக்கு... சிம்பு-அனிரூத் ஆபாச பாடலை கண்டித்தது விவாதம் இருந்தது; திசைத்திருப்பலா? என்ற கோணத்திலும் போனது யோசிக்க வைக்கிறது!? இவ்வளவு விரைவாக வழக்கு போட்டது "அக்கரை" அடிப்படையிலா அரசும் போலீசும் செயல்பட்டது?
என்ன திமிர்! நீரேத்தம்!
நான் அந்த "தேசபக்த" பாடலை சற்று முன்னர் தான் கேட்டேன். கோவன் பாடல் ஆபாசம் என்று புடித்து உள்ளே போட்ட தமிழக அரசு, இன்னும் யாருக்காக காத்திருக்கிறது என்று தெரியவில்லை இவர்களை பிடித்து உள்ளே போட! இப்படிப்பட்ட வக்ரபுத்தி சிகாமணிகளை நாட்டில் நடமாடவிடவே கூடாது! என்ன திமிர்! நீரேத்தம்!
ஒரு வேளை தமிழக முதல்வர் அந்த பாடலை கேட்க வில்லையோ!?
எழுத்தாளர் சுதந்திரம், இசை அமைப்பாளர் சுதந்திரம், பாடகர் சுதந்திரம் என பேசுவதெல்லாம் அர்த்தமே இல்லை!
சுத்த அபத்தம் சுதந்திரம் என்று பேசுவதெல்லாம்! இதைவிட மலிவான விளம்பரம் தேவையென்றால், "எனது மலத்தையும், ஊரார் மலத்தையும் தின்ன போகிறேன்" என்று அறிவித்துவிட்டு, அந்த இடத்திற்கு "அனைவரும் தங்களின் மலத்தை கொண்டு வாருங்கள் நாங்கள் இருவரும் சாப்பிடுகிறோம்" என்று சாப்பிட்டால் விளம்பரமும் கிடைக்கும் கலைசேவையோடு, சுகாதார சேவையும் செய்த மாதிரியும் இருக்கும்!
இதிலே சிம்பு என்கிற காமுகன் அதாவது காமவெறி பிடித்தவன் "என் படுக்கை அறையில் இவர்கள் நுழைந்து கொண்டு, 'அது அப்படி இருக்கு; இது இப்படி இருக்கு' என்று பேசுவதற்கு இவர்கள் யார்?" என்று வேறு இன்று அவரி(னி)ன் தீமிரான பேட்டி வேறு வெளியாகி உள்ளது! இதைவிட தமிழர்களுக்கு தலைகுனிவு, அவமானம் எதுவும் இருக்க முடியாது!
இந்த காமுகர்களுக்கு அவர்களின் வீட்டில் அம்மா, அக்கா, தங்கை எல்லாம் இருக்கிறார்களா? தெரியவில்லை! அவன் எழுதிய, அவன் இசைஅமைத்த, அவன் பாடிய மாதிரிதான் அனைத்து பெண்களையும் பார்ப்பார்களோ? தெரியவில்லை! இவர்களின் இனி எந்த பெண்களும் சென்று விடாதீர்கள்! இவன்களின் கண் பட்டால் கற்பம் உண்டாகிவிடும்! (இது இவனை ஈந்த அப்பனின் புகழ்மிக்க வாசகம்; வசனம்!)
இந்த காமுகர்களுக்கு அவர்களின் வீட்டில் அம்மா, அக்கா, தங்கை எல்லாம் இருக்கிறார்களா? தெரியவில்லை! அவன் எழுதிய, அவன் இசைஅமைத்த, அவன் பாடிய மாதிரிதான் அனைத்து பெண்களையும் பார்ப்பார்களோ? தெரியவில்லை! இவர்களின் இனி எந்த பெண்களும் சென்று விடாதீர்கள்! இவன்களின் கண் பட்டால் கற்பம் உண்டாகிவிடும்! (இது இவனை ஈந்த அப்பனின் புகழ்மிக்க வாசகம்; வசனம்!)
(விவாதத்தில் பெருமாள்மணி என்பவர் எடுத்து வைத்த வாதம் அபத்தம்! அபத்தம் என்பதுகூட நாகரீகமாக இருக்கிறது. "பு...க்கு" என்று சொல்வதே காமவெறியில் இருந்துதான் வருகிறது; வக்கிர புத்தியில் இருந்துதான் வருகிறது!
"இவர்கள் இருவரும் (சிம்பு-அனிரூத்) கக்கூஸ் அறைகளில் ஆபாசமாக, அசிங்கமாக, முகம் சுளிக்கும் விதமாக எழுதும், வரையும் மனநநோயாளிகளோ.. அல்லது வக்கிர புத்தியின் வெளிபாடு என்றோ சொல்லலாம்" என்று மனநிலை மருத்துவர் கூறியது கவனிக்கத்தக்கது! அதோடு பெருமாள்மணி வாதம் கண்டிக்கத்தக்கது!
கவிஞர் பிறைசூடன், எழுத்ததாளர் சாரு, சமூக ஆர்வலர் நித்தியானந்தம், பெண்ணீயவாதி சுந்தரவள்ளி, நெறியாளர் விஜயன் எல்லோருமே அந்த மிருகங்களை (சிம்பு-அனிரூத்; அனிரூத் இசை அமைக்கவில்லை என்ற ஒரு தகவலும் பகிரப்பட்டது) கண்டித்தது ஆரோகியமே! "இது அவர்களது குடும்பத்துக்கு பொருந்துமா?" என விஜயன் முடித்தது ஆறுதல். (இது பெருமாள்மணி உள்ளிட்டு நவீனம் என்ற வாதத்தை முன்வைத்து இதை ஆதரிப்போருக்கும் பொருந்தும்)
படித்ததில்..!✒🙆
"திண்டுக்கல்லில் சங்கமிப்போம்!"
👪👊👪
"... அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற முழக்கத்தோடு எழுந்ததுதான் DYFI என்ற தாரகை மந்திர வார்த்தை!""...இன்று 10.50 லட்சம் இளைஞர்களையும், 4800 கிளைகளையும், 375 இடைக்குழுக்களையும்,10,000க்கு மேல் Dyfi இளைஞர் முழக்கம் இதழ் விற்பனை என வளர்ந்து வருகிறோம்!"
"... மறந்துக் கொண்டே இருப்பது மனித இயல்பு; அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது நமது கடமை!"
"...வேலை அல்லது நிவாரணம்; வேலைக்கு உணவுத்திட்டம்; 18 வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை; வேலை உரிமையை அடிப்படை உரியாக்கு என 1980களில் புதிய வெளிச்சத்தோடு தமிழக வீதிகளில் வலம் வந்தது DYFI; அதன் முதன் மறியலில் 12 மாவட்டங்களில், 4598 இளைஞர்கள் 114 மையங்களில் கைது செய்யப்பட்டு, 22 நாள் முதல் 30 நாட்கள் தமிழக சிறைகளை நிரப்பினர். இது முதல் முத்திரை!"
"...சேலம் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை உள்ளிட்டு மருத்துவனைகள், ரேசன் கார்டு, இயற்கை வளம் கொள்ளை உள்ளிட்டு பிரச்சனைகளுக்கு போராடுவதோடு...ரத்த தானம் செய்வதில் தனிபெரும் சாம்பியனாக, 18 லட்சம் யூனிட் குருதிதானம் செய்து, விலை மதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்றி வருகிறது!".
"...உயிர் இருந்தால் வலி இருக்கும்; வலி இருக்கும்வரை போராட்டம் இருக்கும்; வலிக்கு நிவாரணம் சோசலிசமே! அதற்கான விதைகளை விதைக்கவே திண்டுக்கலில் 2015 டிச 31 முதல் 2016 ஜன 03இல் சங்கமிப்போம்!"
(நன்றி: இளைஞர் முழக்கம்-டிசம்பர் 2015)
பச்சைப் பொய்!
செம்பரபாக்கம் அணை திறந்ததில் விதி மீறல் இல்லை என அரசு கூறுவது ஏற்புடையதும் இல்லை; நழுவலுமில்லை; பச்சைப் பொய்!
விதிபடி அணை திறக்காததால், ஏற்பட்ட விளைவுகளுக்கு (உயிர் சேதம், பொருள் சேதம்) தமிழக அரசு பொறுப்பேற்று, முதல் அமைச்சர் பதவி விலக வேண்டும்!
அதோடு, விதிக்கு புறம்பாக அணையை திறக்காமலோ, அல்லது திறந்தோ இவ்வளவு உயிர் மற்றும் பொருள் தேசத்திற்கு காரணமான உயர் அதிகாரிகள் (தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை) உடனடியாக அவர்களை பணியை விட்டு விலக்கி, சட்டப்படி நடவடிக்கை அவர்கள் மீது எடுத்திட வேண்டும்!
இன்று 14.12.15 PTTV நேர்படபேசுக்கு!
இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று 14.12.15 News 7 ?கேள்வி நேரம்! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா...
ஓய்வு போலீஸ் DIG நடராஜன் மீது எடுத்த நடவடிக்கையை, நீக்கத்தை ரத்து செய்து விட்டார்!
செம்பரபாக்கம் ஏரி திறந்து விட்டதில் முன்னுக்கு பின் முரண் வந்துள்ள அறிக்கையும் அரசின் தோல்வியை காட்டுகிறது.
ஆகவே அரசு தலைமைக்கும் லாய்க்கில்லை! அல்லவா? என்பது நிரூபணம் ஆகிவிட்டது!
அதனால், நிரந்தர பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் எப்பொழுது ராஜினாமா செய்யப்போகிறார்?
மீண்டும் அடுத்த முதல்வர்...?!
"ரிப்பீட்டு (திருப்பிப்போடு)!"
👀👀👀
" துரதிருஷ்டவசமாக கேரள அரசியலில் 2 கூட்டணிகளே மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றன. மக்களை கொள்ளை அடிக்கின்றன" "முதலில் ஒரு கூட்டணி ஆட்சிக்கு வரும்; கொள்ளை அடிக்கும்! அடுத்த கூட்டணி ஆட்சிக்கு வரும்; கொள்ளை அடிக்கும்!" "கேரளத்தில் 3ஆவது அரசியல் சக்தி உருவெடுத்து விட்டது; அது, சிவனின் 3ஆவது கண் போன்றது!"
இப்படி கொள்ளையைப் பற்றியும், 3 ஆவது அணி-3ஆவது கண் பற்றியும் பேசி கேரளா மீது "ஒரு கண்" வைத்து பேசியது யார் தெரியுமா? பிரதமர் நரேந்திர மோடிதான்!
ஆனால் அது ஒன்றும் நடக்கப் போவதில்லை; அதோடு இன்னும் பீகாரில் தேர்தலில் இருந்து இவர்கள் பாடம் கற்கவில்லை என்பதற்கு இதுவே சாட்சி!
மத்தியில் ஆட்சியில் உள்ள அரசியல் சூழலில் 3ஆவது அணிக்கு இவர் தனது "வேதவாக்கை" பொறுத்திடலாமா?
இதையே அடுத்த தேர்தலில் பாஜக "ரிப்பீட்டு (திருப்பிப்போடு) என்று கூறலாமா? அதை துரதிருஷ்டம் என்றும் வர்ணிக்கலாமா? சிவனின் 3ஆவது கண் என்று இதே ரிக்கார்டைத் திருப்பிப்போடலாமா?
அப்பொழுது காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி தான் ஆளும் சக்தி படைத்தது; 3வது சிவன் கண் வரும்போது ஏகடியம் பேச மாட்டீரோ?
நம்பலாமா? பிரதமரே! ஏன்தான் இப்படி பிதற்றல் பேசில் மூழ்கி போய்விட்டீர்? "ஓ...! ஒரே இந்தியா! ஒரே ஆட்சி! ஒரே மக்கள்!" என்கிற உங்கள் உன்னத கொள்கையாம் ஆர்எஸ்எஸ் கொள்கையில் இருந்து, அப்படியே மடைதிறந்தாற்போல், இடத்திற்கு தகுந்த மாதிரி பேசி, மக்களை ஏமாற்றும் வித்தை அல்லவா இது? இது கேரளாவில் எடுபடாது நமோ அவர்களே! எடுபடாது!
மிக பெரிய வரவேற்பு
இன்று 15.12.15 PTTV புதுப்புது அர்த்தங்கள் மறுஒளிபரப்பு காலை 9.30 மணிக்கு பார்க்க நேந்தது. நெறியாளர் ஜென்ராம், பத்திரிக்கையாளர் வெங்கடேஷ், விசிக ஆளூர்ஷாநவாஸ்...!மக்கள் நலக் கூட்டணி பற்றிய விவாதம்... இதில் ஷாநவாஸ் கருத்து ஒரு பக்கம் இருப்பினும், வெங்கடேஷ் கருத்துதான் முக்கியமானதாக, அதுதான் மக்களின் மனநிலையாக பார்க்கலாம்!
ஆம் அவர் கூறுகிறார் ... "மக்கள் நலக் கூட்டணி மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர் மத்தியில் மிக பெரிய வரவேற்பு இருக்கிறது; இது மாற்றத்தை ஏற்படுத்த முடியும்!" என்பதே! இதுதான் கள எதார்த்தம்! இதைதான் மிக சரியாக எதிரொலித்தார்! நன்று! நன்றி!
வரலாறு-யதார்த்தம்!
மனிதனின் முதல் பயன்பாட்டு கருவி கல் என்பர். இந்த கல்லின் கூர்மை ஆக்கத்திற்கும், அழிவுக்கும் பயன்பட்டது என்பதுதான் வரலாறு.அதன் தொடர்ச்சிதான் இன்று அணுசக்தி. இது ஆக்கத்திற்கும், அழிவுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் யதார்த்தம்!
இது யார் கையில் இருக்கிறது? அது எதற்கு பயன் படுகிறது என்பதுதான் முக்கியம்!
இதன்மூலம் சுரண்டல் விரிவாக்கம் செய்யப்படுவது ஏற்கதக்கதல்ல!
அதுபோல் மனிதனின் அடுத்தக்கட்ட முன்னேற்றம் ஏற்படாமல் தடுப்பதும் ஏற்கதக்கதல்ல.
இன்று 15.12.15 PTTV மக்கள் மேடைக்கு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அடக்கி, பணிய வைக்கும் அஸ்திரமே!
கெஜ்ரிவால் மற்றும் சோனியா சம்மந்தப்பட்டதில் நடக்கும் நடவடிக்கைகள் முழுக்க முழுக்க ஆளும் பாஜக, எதிர்கட்சிகளை அடக்கி, பணிய வைக்கும் அஸ்திரமே!இது இந்தியாவில் உள்ள அனைத்துக்கட்சிகளும், அதாவது கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் செய்யும் ஒரு கேடுகெட்ட அரசியலின் வெளிப்பாடே!
ஆளும் கட்சிகளாக இருக்கிறபோது, தங்களின் நலனுக்கு எதிர்கட்சிகளை அடக்க நினைப்பதும், எதிர்கட்சியாக இருக்கிறபோது கூக்குரலிடுவதும் முதலாளித்துவ கட்சிகளின் நிரந்தர வாடிக்கையும், வேடிக்கையும்!
ஆகவே ஏற்புடையதென்றோ, எதிர்க்கக்கூடியதென்றோ சொல்லுவதற்கு இதில் ஒன்றுமில்லை; இவர்களுக்கு இதெல்லாம் சகஜம்; பொழுதுபோக்கு!
மக்களை திசைத்திருப்பும் உத்தியின் ஒருபகுதி! திரைமறையில் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாகிவிடும்!
இன்று 15.12.15 PTTV நேர்படபேசுக்கு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆபத்தான ஒப்பந்தம் இது!
ஆம்! உயர் கல்வி இனி உலக வர்த்தக கல்வியாக மாறும்! ஏற்கனவே இங்கு கலைமகள் விலைமகளாக உள்ளாள்!இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், அதில் நாமும் சிக்கிக்கொண்டால்... மாணவர்கள் நுகர்வோர் ஆவர், கல்வி நுகர் பொருளாகும்! ஆக சேவைக்குப் பதிலாக சந்தைப் பொருளாக மாறும்; காசு உள்ளவர்களுக்கு கல்வி என்பதையும் தாண்டி நமது பாரம்பரியம், உள்நாட்டு இறையாண்மை போன்றவை பன்னாட்டு முதலாளிகளால், சூரையாடப்படும்!
சுதந்திர உணர்வுகளை சுக்குநூறாக்கி, மீண்டும் அடிமைபுத்தியை விதைத்து, தானாக நாட்டை ஏகாதிபத்தியம் விழுங்கிவிடும்!
மீண்டும் பன்னெடுங்காலம் போராடிதான் சுதந்திர காற்றைச் சுவாசிக்க முடியும்! மிகப் பெரிய ஆபத்தான ஒப்பந்தம் இது!
இன்று 15.12.15 News 7 ?கேள்வி நேரம்!



































No comments:
Post a Comment