தீபாவளி தமிழகத்தில்...!
வெலதான் அதிகமா இருக்கு! நான் எப்பவுமே தீபாவளி, பொங்கல் ன்னு புது டிரஸ் போட்ட நியாபகம் இல்லை. இன்றைக்கு பழைய லுங்கி, பழைய டீ சர்ட்.
ஆபீசில் இருந்து வீட்டுக்கு இரவு 8.30 மணிக்கு அப்படியே நடந்து போனேன் புகை மண்டலத்தில் ! மூச்சு புடிக்க முடியல பட்டாசு பொக! இவ்வளவு நாளா பேரூர் நகரல இருந்தேன். தெரிவிக்கல. சிட்டிக்கு வந்து 2 வருசம் ஆகுது. போன வருசம்கூட இப்படி மூச்சு புடிக்காம போகல.
ஒருபக்கம் இப்படி. இன்னொரு பக்கம் கடலூருல 22 பேர் பேய் மழையில சாவு. கணக்கில்லாத சேதாரம். இதுதான் இந்தாண்டு தீபாவளி தமிழகத்தில்.
டாஸ்மாக் ஒரு நாள் வசூல் 300 கோடியாம். தூங்காவனம், வேதாளம் ஒரு நாள் வசூல் தலா 20 கோடியாம். யாருக்கு தீபாவளி பட்டாசு விற்றது எத்தன கோடியோ? துணி, நகை விற்றது எத்தன கோடியோ?
(ஒரு தோழர் தான் 3 செட் டிரஸ் ரூ5,500 க்கு தீபாவளிக்கு எடுத்து, அதை நன்றாக இருக்கிறதா? என முகநூலில் போட்டிருந்தார். அவருக்கு எனது கமெண்ட்ஸ்!)
-----\\\\
இந்த தீபாவளி "டிப்ஸ்!"
😥😌😌
தங்கம் விற்பனை 5300 கிலோ.
1 கிலோ 125 பவுன்; 1 பவுன் ரூ19,456. மொத்த விற்பனை ரூ1,288 கோடியே 96 லட்சம்; இது தமிழகத்தில் விற்பனை.
பட்டாசு ரூ4,800 கோடி.
டாஸ்மாக் ரூ350 கோடி.
துணிமணிகள் விற்பனையை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதிலே தங்க வியாபாரிகளுக்கு முதலிடம்;
பட்டாசு வியாபாரிகளுக்கு இரண்டாம்;
அனேகமாக துணிமணிகள் மூன்றாமிடம் இருக்கலாம். நான்காம் இடம் வியாபாரி அம்மா டாஸ்மாக்.
இதிலிருந்து தெரிவதென்ன?
"ஒளிரும் தமிழகம்!"
"மிளிரும் தமிழகம்!"
------\\\\\
அனைவருக்கும் நீதிக்கிடைக்க..!அனைவருக்கும் நீதிக்கிடைக்க ஆற்றல்மிகு நீதிதுறை அவசியமே! இதில் இரு கருத்துக்கு இடமில்லை!
மோடி சொல்லும் அந்த "அனைவருக்கும்" என்பவர்கள் யார்?கார்ப்ரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் நீதிதுறையா? கடைகோடி இந்தியனுக்கும் நீதி வழங்கும் நீதி துறையா?
சுருக்கமாக சொன்னால் ஏழைகளுக்கா? ஏய்ப்பவர்களுக்கா? யாருக்கு என்கிறார் மோடி?
மோடியின் ஆட்சி பரிபாலணத்தில் அனுபவம் ஏழைகள் நலனுக்கானதாக இல்லை!
ஏற்கனவே போராட்ட உரிமைகளை வழங்குவதில் ஆயிரமாயிரம் தடைகளை ஏற்படுத்தும், இந்திய நீதிதுறையை ஆற்றல்மிகு என்கிற பெயரில் ஏதாவது செய்யப்பட்டால், அது பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகளுக்குச் சாதகமாகத்தான் இருக்கும்! சந்தேகம் வேண்டாம்!
இன்று 10.11.15 PTTV மக்கள் மேடைக்கு!
----\\\\
தமிழகம் கண்ட பயன்!
ஒரு நாளில் ஓராண்டு மழை என்பது கேட்க நன்றாக இருக்கிறது; ஆம் நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை என்பதுபோல்!
ஆனால் கள நிலவரம் கலவரமாகத்தான் இருக்கிறது.
நிவாரணபணிகள் ஆமை வேகத்தில் கூட நடப்பதாக தெரியவில்லை. அரசு இயந்திரம் என்று இருக்கிறதா? அது இயங்குகிறதா? எல்லாம் தீபாவளியில் 'இயங்கி'க் கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் பாதிக்கும் மேல் ஆக்கிரமிப்பில் (அரசு மற்றும் தனியார்) உள்ளது. ஏரிக்கு ஏரி போகும் வாய்க்கால் சுத்தமாக அடைப்பட்டு கிடக்கிறது. எங்கே நீரை சேமிப்பது? எங்கே நதிகளை இணைப்பது? தென்னக நதிகளை இணைக்கப்படுமோ, படாதோ... தமிழக நதிகளை இணைக்க வேண்டும்.
ஆனால் 50 ஆண்டு கால தமிழக ஆட்சியாளர்கள் ஆறுகளையே விலைக்கு வாங்கும் அளவுக்கு சொத்துடமையாளர்கள் ஆனதுதான் தமிழகம் கண்ட பயன்!
இன்று 10.11.15 PTTV நேர்பட பேசுக்கு!
----\\\
தமிழகத்தில் அடுத்த தீபாவளியில் ஒரு நல்லாட்சி மலர வேண்டும்; அந்த ஆட்சி மக்கள் நலக் கூட்டணி ஆட்சியாக இருக்க வேண்டும்; ஊழலாட்சி அகற்றப்பட வேண்டும்!
இன்று 10.11.15 News 7 TV கேள்வி நேரம் நிகழ்ச்சிக்கு!
-----\\\\
உலகமயத்தின் ஊழ்வினை!
அன்னிய முதலீடு என்பது, உள்நாட்டு தொழிலைப் பாதிக்கும் என்றனர் கம்யூனிஸ்ட்கள் அன்று. இன்று பாதுகாப்பு துறைக்கே அது வந்துவிட்டது. அன்று கம்யூனிஸ்களை அனைவரும் ஏளனம் செய்தனர்.
தற்போது 15 துறையில் தளர்த்தப்பட்டுள்ளது. அதில் ஊடகத்துறையும் ஒன்று. இப்படி பல துறைகள் 100 % அன்னிய முதலீட்டில் ஆலிங்கனம் ஆகிவிட்டது.
அன்னிய முதலீட்டை அதிகரிப்பதுபோல் ஒரு மாயத்தோற்றம் தெரியும். அதனால் எந்தவித பயனும் கிடையாது.
வேலைவாய்ப்புகூட பெருகாது. மாறாக அன்னிய கம்பெனிகளின் சுரண்டல் பெருகும். உள்நாட்டு வர்த்தகம் உரு குலைந்து போகும் ஊடக துறை உள்ளிட்டு!
மொத்தத்தில் இந்தியா அன்னியக் கம்பெனிகளின் வேட்டைக்காடாகிப் போகும்! இதுதான் உலகமயத்தின் ஊழ்வினை!
இன்று 11.11.15 PTTV மக்கள் மேடைக்கு!
----
SAR: அன்னிய முதலீடு என்பது, உள்நாட்டு தொழிலைப் பாதிக்கும் என்றனர் கம்யூனிஸ்ட்கள் அன்று. இன்று பாதுகாப்பு துறைக்கே அது வந்துவிட்டது. அன்று கம்யூனிஸ்களை அனைவரும் ஏளனம் செய்தனர்.
தற்போது 15 துறையில் தளர்த்தப்பட்டுள்ளது. அதில் ஊடகத்துறையும் ஒன்று. இப்படி பல துறைகள் 100 % அன்னிய முதலீட்டில் ஆலிங்கனம் ஆகிவிட்டது.
அன்னிய முதலீட்டை அதிகரிப்பதுபோல் ஒரு மாயத்தோற்றம் தெரியும். அதனால் எந்தவித பயனும் கிடையாது.
வேலைவாய்ப்புகூட பெருகாது. மாறாக அன்னிய கம்பெனிகளின் சுரண்டல் பெருகும். உள்நாட்டு வர்த்தகம் உரு குலைந்து போகும் ஊடக துறை உள்ளிட்டு!
மொத்தத்தில் இந்தியா அன்னியக் கம்பெனிகளின் வேட்டைக்காடாகிப் போகும்! இதுதான் உலகமயத்தின் ஊழ்வினை!
இன்று 11.11.15 PTTV மக்கள் மேடைக்கு!
-----\\\\
அதில் ஒன்றும் தவறில்லை!
உள்கட்சி பிரச்சனை உள்கட்சிக்குள் இருப்பது; அது வெளியே வந்து விவாதிக்கிப்படுகிறபோது, அது பொதுப்பிரச்சனையாகி விடுகிறது; ஆதலால் மக்களும், எதிர்கட்சிகளும் கருத்து சொல்லலாம்; அதில் ஒன்றும் தவறில்லை!
மோடி-அத்வானி மோதல் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. பீகார் சட்டமன்ற தேர்தல், உபி., கேரளா உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் பாஜகவுக்கு கிடைத்தப் பெருத்த அடியை மக்களிடமிருந்து திசைத்திருப்ப போடும் நாடகம் இது.
தோல்விக்கு பொறுப்பு ஆர்எஸ்எஸ்., அதன் வழிக்காட்டுதல் இன்றி துரும்புக்கூட அசையாது பாஜகவில்! ஆர்எஸ்எஸ் இமேஜ் பாதுக்காக்கவும், சங் பரிவாரத்தின் சமீபத்திய சிறுபான்மை மற்றும் தலித் விரோத விஷமப்பிரச்சாரத்தை மறைக்கவுமே மோடி-அத்வானி மோதலாக காட்டப்படுகிறது. அவ்வளவுதான்!
இன்று 11.11.15 PTTV நேர்பட பேசுக்கு! இதன் ஒருபகுதி பதிவேற்றமாகியது!
(விவாதத்தில் மார்க்சிஸ்ட் அருணன், பாஜக நாராயணன், காங்கிரஸ் மாணிக் தாகூர், ஓய்வு ஐஏஎஸ் முருகன், இவர்களுடன் நெறியாளர் கார்த்திகைச்செல்வன்..!
நாராயணன் மோடி உள்ளிட்டு பாஜகவினர் அனைவரும் ஆர்எஸ்எஸ்தான் என்றதற்கு நன்றி!
அத்வானி வகையறா கிளப்புவதற்கு பதில் கூறு என்றால், சோமநாத் ஐ நீக்கிய உங்களுக்கு கேட்க என்ன யோகியதை என்கிறார். உண்மையிலேயே அத்வானி வகையறாவை நீக்கி இருந்தால், கேட்பதற்கு யாருக்குமே யோகியதை இல்லை! கட்சி கட்டுப்பாட்டை மீறினார் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம். அதுதான் சோம்நாத்க்கு நேர்ந்தது! கட்சி முடிவை மீறியவர் மீது கட்சி விதிபடி நடவடிக்கை எடுத்தது தப்பா? தாஜா செய்வது தப்பா? இதுதான் பாஜக ஜனநாயகமோ?)
------\\\\\\
அது என்றும் இருப்பதுதான்!
பாஜக வில் உள்பூசல், மேல்பூசல் என்பதெல்லாம் ஒன்றும் புதுசல்ல! அது என்றும் இருப்பதுதான்!
தற்போது பீகார் சட்டமன்ற தேர்தல், உபி, கேரளா உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் விழுந்த அடியில் இருந்து மக்களைத் திசைத்திருப்பும் முயற்சி இது.
தோல்விக்கு மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி ஆகியோர் உத்தி என்று பார்த்துவிட முடியாது; அது ஆர்எஸ்எஸ் உத்தி!
எப்படி மன்மோகன்சிங் நடவடிக்கையை அவ்வப்போது ராகுல் விமர்சித்தாரோ, அதுபோல் தான் இதுவும்!
அதிருப்தியாகும் மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் கலையின் வடிவமே இது! வேறொன்றுமில்லை!
இன்று 11.11.15 News 7 TV கேள்விக்குப் பதில் நிகழ்ச்சிக்கு!
(விவாதத்தில் பாஜக சேகர், காங்கிரஸ் சுதா, பத்திரிக்கையாளர் முராரி, ஆம்ஆத்மி வர்ஸன், இவர்களுடன் நெறியாளர் செந்தில்..!
சேகரிடம் செந்தில்,
'பீகார் தோல்விக்கு காரணம் கூட்டு தலைமையா? மோடியா?' "கூட்டு தலைமைதான்" 'அப்படியால் மோடி அலை என்றது பொய்யா?'
"அப்ப அலைவீசியது உண்மை"
'இப்ப வீசலையா?' "இப்பயும்தான் மோடி அலை இருக்கு"
'அப்ப ஏன் தோத்தது?'
தினறினார் சேகர்! தினற வைத்தார் செந்தில்! சூப்பர்!
பாவம் சுதா...! காங்கிரஸ் குறித்த சேகர் கேள்விக்கு சுதாவைவிட முராரி பதில் சொன்னார்; அவரைகூட சுதா பேசவிடல!)
-----\\\\\
கமலின் கண்டுபிடிப்பு!
மத நம்பிக்கை அவரவர் சொந்த விசயம் என்று மதவாதியுடன் அமர்ந்து கமல் பேசுவது அவரது தைரியமா? ஆதாயமா?
அய்யா நீங்க தலாலாமாவை சந்தித்து ஆன்மீக சந்திப்பல்ல; நீர் பகுத்தறிவாளர்; காந்தியவாதி! சரி, அக்கா கவுதமியுடன் சந்தித்ததற்கு என்ன அர்த்தம்? ஆன்மீகமா? பகுத்தறிவா? வரவர உம் போக்கு ரொம்ப பேடா இருக்கு..! சொல்லிப்புட்டேன்..!
-----\\\\
மாநில அரசை மாநகராட்சிகளாக்கும் வேலை இது!
பாஜக ஆட்சிக்கு வந்ததும் முதலில் கைவைத்ததே திட்டக்கமிசனில்தான்!
அதை கலைத்தப்போதே தெரிந்துவிட்டது இதுபோல் மாநில அரசுகளின் தலையில்தான் கைவைக்கும் என்று!
நிச்சயம் இது மாநில அரசுகளின் நிதி சுமையை அதிகப்படுத்தும்!
பொருளாதார சிக்கனம் என்றால் மத்திய அரசின் ஊதாரி செலவுகளை, பிரதமர் வெளிநாடு பயணம் உள்ளிட்டு, குறைத்தாலே போதும்!
மாநில அரசுகளை மாநகராட்சிகளாக்கும் வேலை இது.
இன்று 12.11.15 PTTV மக்கள் மேடைக்கு!
-----\\\\
கடலூரை கரைபுரள வைத்த மழை..!
கடலூரை கரைபுரள வைத்த மழையில் அரசின் முன்னெச்சரிக்கை எதுமே இல்லை!
இப்படி வரும் என்று நினைக்கவில்லை என்று ஆளும் அதிமுக பிரமுகர்களே டிவி யில் சொல்கிறார்களே!
அதைத்தான் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இதிலே உள்நோக்கம் எங்கே இருக்கிறது?
40 க்கும் மேற்பட்ட உயிர்கள் போய் உள்ளது. கோடிகணக்கில் சேதாரம் ஏற்பட்டு உள்ளது.
தொலைநோக்கில்லாத அரசுகளும், அரசியல்வாதிகளும் அய்ம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் அமைந்ததே முக்கிய காரணம்!
இதற்கு தற்போதைய சரியான மாற்று 'மக்கள் நலக் கூட்டணியே!'
இன்று 12.11.15 PTTV நேர்படபேசுக்கு!
-----\\\\
கடலூர் கண்ணீரைத் துடைத்திட...!
🚀🚀🚀
கடலூரை கரைபுரள செய்தது பேய்மழை! ஆளும் அதிமுக அரசு ஆமை வேகத்தில் நிவாரண பணிகளை முடுக்கி விடவே மக்கள் நலக் கூட்டணி போராட வேண்டியதாயிற்று.50 ஆண்டுகளாக ஆண்ட திமுக அதிமுக அரசுகளின் தொலைநோக்கு திட்டங்கள் இல்லாததால், இன்று கடலூர் கண்ணீரில் மிதக்கிறது.
48 உயிர்களை யும், பல்லாயிரம் கோடி நட்டமும் அதிமுக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் இழந்து தவிக்கிறது தமிழகம்.
தற்போது தலைநகரம் சிங்கார சென்னையும் மழையால் தத்தளிக்கிறது.
இதோ... எங்களால் ஆன சிறுதுளி உதவியென்று... கடந்த இரண்டு நாள்களாக சேலம் டீஒய்எப்ஐ சேகரித்த ரூ1லட்சம் மதிப்பில் மருந்து, நோட்டு புத்தகங்கள், பிஸ்கட் என கடலூர் கண்ணீரை துடைக்க இன்று இரவு 8 மணி அளவில் நிவாரணப் பொருட்களைத் தாங்கிய வாகணம் கடலூரை நோக்கி பயணமாகிக் கொண்டிருக்கிறது.
துயர் துடைக்கும் பணியில் துள்ளிக்குதித்துள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் மாநகரம் மற்றும் சகோதர அமைப்புகளை நெஞ்சாரப் பாராட்டுகிறோம். நிவாரணப் பொருள் மற்றும் வாகண உதவி நல்கிய நல் இதயங்களுக்கும் நன்றி!
------\\\\
நெருப்பாற்றில் எதிர்நீச்சலில்...!
👍👍👍 👊👊👊 ✌✌✌ ☝☝☝
"நாம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லையெனில் நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய கடமையில் தவறிழைத்தவர்களாவோம் என்பதில் எனது சிந்தனை தெளிவாக உள்ளது.சீனாவின் கருவியாக உள்ள ஒரு கட்சியை, ஆக்கிரமிப்பை எதிர்க்கும் மக்களின் உறுதியை பலவீனப்படுத்தி நமது பாதுகாப்பு முயற்சிகளை தடம்புரளச் செய்து, பொதுவாக பொருளாதார வாழ்வை சீர்குலைக்கச் செய்யும் கட்சியை நாம் அனுமதிக்க முடியாது"
இப்படி முத்துக்கள் உதிரித்தவர் யார்?
எந்த கட்சியை எதிர்த்து?
ஆம், 1965 இல் அன்றைய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா...
1964 இல் உதயமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகத்தான்..!
அன்று முதல் இன்றுவரை நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டுவரும் கட்சியே சிபிஐஎம்...!
இப்படியான அறிய தகவல்களை 117 தலைப்புகளில், 592 பக்கங்களில்...
வீரவரலாறுகளை தாங்கி வந்துள்ள நூல்தான்...
'தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (1964-2014).
-என்.ராமகிருஷ்ணன்...
Vemala Vitha Nkl: 👍👏
நூல் தேவைக்கு பாரதி புத்தகாலயம் 044 24332924 thamizhbooks.com
-----\\\\
எதிர்வினை..!
SAR: பாஜகவுக்குள் ஒலிக்கும் சில எதிர்குரல்களை பெரிது படுத்த வேண்டாம் ;ஏனெனில் ஆர் எஸ் எஸ் தலைமை ஆணையிட்டதும் அடங்கிப் போகிறவர்களே அங்கு குப்பை கொட்ட முடியும் ? மேலும் பாஜக ஜனநாயக அமைப்பல்ல பாசிச ஆர் எஸ் எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு அவ்வளவே .
ஆட்டுவிக்கும் அந்த ஆர் எஸ் எஸ் கொடுங்கரங்கள் உச்சத்தில் மதவெறியையும் - சமூகநீதிக்கு எதிரான வன்மத்தையும் - பத்தாம்பசலி சனாதன பார்வையையும் - பிராமணிய ஆணவத்தையும் - சாதிய ஆதிக்கத்தையும் - நயவஞ்சக செயல் திட்டத்தையும் - அறிவியல் எதிர்ப்பையும் கொண்ட நாசசக்தியே !
இப்போதும் பீகார் தேர்தலில் தோற்றிருக்கிற போதிலும் அதன் விஷக் கொடுக்குகள் நீண்டபடியே இருக்கிறது . அடிப்பட்ட பாம்பு அது . மிகுந்த எச்சரிக்கை தேவை . வெற்றிக் களிப்பைவிட அறிவார்ந்த விழிப்பை வலுப்படுத்த வேண்டிய தருணம் இது .
----
ஆம்! அதே நேரத்தில் அது (பாஜக குரூப்) தோற்கடிக்க முடியாத 'சக்தி' என்ற பிம்பத்தை துடைத்து தூளாக்கியதை (பிகார் சட்டமன்றம், உபி., உள்ளாட்சி மன்றம், கேரளா தனி..) எப்படி கொண்டாடாமல், அணிகளுக்கு நம்பிகையை ஏற்படுத்தாமல் இருப்பது? தாங்கள் குறிப்பிடுவதுபோல் விழிப்புணர்வு தேவை என்பதுபோல் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும் தேவை அல்லவா? நன்றி தோழர் எஸ்ஏஆர்...
----
SAR: கண்டிப்பாக ஹிட்லரையே வெற்றி கொண்ட இயக்கம் தான் எனினும் கொண்டாட்டத்தில் முயற்சிகள் தேங்கிவிடாமல் விழிப்புடன் தொடரவேண்டும்💐
----\\\\\
உலக மக்களை ஏமாற்றவே!
இந்தியாவில் மத சகிப்புயின்மைக்கு இடமில்லை என மோடி லன்டனில் பேசியது உலக மக்களை ஏமாற்றவே! அதை இந்தியாவில் செய்து காட்டியிருந்தாலே போதும், உலக நாடுகளில் போய் உளற வேண்டிய அவசியம் வந்திருக்காது.
மோடியும், அவரின் அரசியல் வழிக்காட்டி பாஜகவும், சித்தாந்தக் குருபீடம் ஆர்எஸ்எஸ் ஸும் "படிப்பது ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்..." என்கிற பழமொழியைப் போல்தான் போக்கும் நோக்கும் இருக்கிறது.
இன்று 13.11.15 PTTV மக்கள் மேடைக்கு!
(விவாதத்தில் இன்று 2 பேர் பாஜக வினர் அமர்ந்துக் கொண்டு இந்துத்துவாக்கு தீவிர பிரச்சாரம் செய்தனர். எழுத்தாளர் வே.மதிமாறன் ஒருவராக நெத்தியடி கொடுத்தார். சபாஷ்.
பாஜக நாராயணன், ஆடிட்டர் பிரபாகரன் இருவரும் மிகவும் திமிராக பேசிக் கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நெறியாளர் கார்த்திகேயன் கேள்வி எதற்கும் பதில் சொல்லாமல், பாஜக நாராயணனும், பிரபாகரனும் அவர்கள் ஏற்கனவே தயாரித்து வந்ததைப் பேசி, தங்களின் பிரசாரமேடையாக 'மக்கள் மேடை" ஆக்கிரமித்துக் கொண்டார்கள் எந்தவித "சகிப்புதன்மை"யுமின்றி!
மேலும் "இது நீதிமன்றம் அல்ல; நீங்க நீதிபதி அல்ல" என்ற நாராயணன் நாவில் நரம்பின்றி எதிர்கட்சிகளையும், ஊடகங்களையும் திட்டித்தீர்த்தார்!
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விவாதத்தில் சென்னை அரங்கில் சமநிலை வரும்படி பார்த்துக் கொள்வது நன்று!)
----\\\\
தேசபக்த புனிதச்செயல்!
அன்னிய முதலீடு என்பதும், விதிமுறைகளை மாற்றியது கொள்ளையடிக்க என்பதும் நாம் எதிர்நோக்கி உள்ள ஆபத்தை குறைத்து மதிப்பிடுவதே; அதுபோலத்தான் அடகு வைப்பதென்றும்!
சரியாக சொன்னால் நாட்டின் அனைத்து பொதுத்துறை மற்றும் அனைத்து செல்வங்களையும், வளங்களையும் 90% விற்றாகிவிட்டது.
இதற்கான 'பெருமை' சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம் என்கிற காங்கிரஸுக்கும், சுந்திரத்திற்கு ஒரு துரும்பும் எடுத்துப்போடாத பாஜகவுக்குமே சேரும்!
அன்னிய முதலீட்டை கண்மூடித்தனமாக அமலாக்குவதை எதிர்ப்பதென்பது, அரசியல் அல்ல;
அதையும் தாண்டி நாட்டையும், மக்களையும் காக்கும் தேசபக்த
புனிதச்செயல்!
இன்று 13.11.15 PTTV நேர்படபேசுக்கு!
✈✈✈
அன்னிய முதலீடு நம் நாட்டின் பாரம்பரிய தொழில்களை விவசாயம் உள்ளிட்டு அழிக்காமல், புதிய புதிய தொழில் நுட்பங்களையும், வேலை வாய்ப்புகளையும் கொண்டு வந்து குவிக்குமேயானால்...
அது வளர்ச்சி!
ஆனால் அனுபவம் அவ்வாறு இல்லை என்பதால், அதை ஆபத்தாகவே பார்க்க நேரிடுகிறது.
இன்று 13.11.15 News 7 TV... ? கேள்விக்கு பதில் நிகழ்ச்சிக்கு!
-----\\\\\
"முன்னாள் தீண்டதகாத நபருக்கு...
பெரிய அளவில் விழா"
"முன்னாள் தீண்டதகாத நபருக்கு பெரிய அளவில் விழா" "பலத்த பாதுகாப்பு மற்றும் வரவேற்க தகாத நபருக்கு கேமரூனின் புகழுரை" இப்படிப்பட்ட அர்ச்சனைகள் யாருக்கு? சாசாட்த் நம்ம பிரதமரு மோடியாருக்குத்தான்!
இலங்கையில் மனித உரிமை மீறல், போர் குற்றம் தொடர்பாக, இலங்கை தமிழர்கள் வாழ் பகுதியில் போய் நீலிகண்ணீர் வடித்து சென்றவர்தான் இந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூமன். இவரை அன்றைக்கு, 'இலங்கை தமிழர் துயர் துடைக்கச் சென்ற முதல் உலக பிரதமர் கேம்ரூன்' என்று 'ஆஹா ஊஊ' என்று அவருக்கு மனித நேயர் பட்டம் கொடுக்காத குறைதான்!
அன்று 2002இல் குஜராத் தில் 3000 க்கும் மேலான சிறுபான்மை முஸ்லீம்களை கொன்று குவித்து, "நான் தான் இந்துக்களின் பாதுகாவலன்" என்று கொக்கரித்தவர் தான் இந்த மோடி; ஆம், தேசபிதா காந்தியை கொன்ற கூடாரத்தில் ஆர்எஸ்எஸ் சில் இருந்து வந்தவர்தான் மோடி.
இந்த மோடியை வரவேற்று, கேமரூன் பேசுகிறார்... "நரேந்திர மோடியின் கடந்த கால மனித உரிமை மீறல்களையும் கடந்து பிரிட்டன் இந்தியாவுடன் வலுவான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது இங்கிலாந்து அரசு" என்று.
அவர் பேசிய இடமும், இவர் கலந்துக் கொண்ட இடமும் எது தெரியுதுங்களா? இங்கிலாந்து முதலாளிமார்கள் மத்தியில்! அவர்கள் மீண்டும் இந்தியாவை அடிமைப் படுத்த அங்கு சென்று அழைப்பு கொடுத்துள்ளார் மோடி.
இது ஒருபக்கம்... இன்னொரு பக்கம் நாம் கூற வந்த முக்கிய விடயம் என்னவென்றால்... ஒரு வேளை இலங்கை தேர்தலில் மகிந்திர ராஜபட்சே வென்றிருந்தால்... அவரையும் அழைத்து முதலாளிகள் சபையில் அமர வைத்து, "அனைத்தும் மன்னிக்கப்பட்டது மிஸ்டர் மோடி" என்று சொன்னதைபோல் "அனைத்தும் மனிக்கப்பட்டது மிஸ்டர் ராஜபட்சே" என்று சொல்லியிருப்பாரா? மாட்டாரா? இங்கிலாந்து பிரதமர்!
ஆக மோடியாக இருந்தாலும், மன்மோகன்சிங்காக இருந்தாலும், கேரூமனாக இருந்தாலும், ராஜபட்சேவாக இருந்தாலும.. இவர்கள் யாவரும் "முதலாளிகளின் நலக் கூட்டணியே!" இவர்களுக்கு மனித உரிமைமீறல் என்பதெல்லாம் வெறும் பசப்பு வார்த்தைகளே! மனித நேயர்கள் மார்க்சீய-பெரியாரிய- தலித்தியவாதிகளாம் "மக்கள் நலக் கூட்டணியே!"
------\\\\\
குற்றச்சாட்டு மிக சரியானது..!
ஆர்எஸ்எஸ் மீது நேரு பிறந்த நாளில் சோனியா வைத்த குற்றச்சாட்டு மிக சரியானது.
விடுதலை போரில் சங் பரிவாரம் இந்து மகாசபை என இருந்தது; இதன் பரிணாமம்தான் ஆர்எஸ்எஸ்! விடுதலைப்போரில் ஒளிந்து கொண்டது மட்டுமல்ல, விடுதலை நாயகன் காந்தியை கொன்ற பெருமையும் ஆர்எஸ்எஸ் ஐயே சாரும்!
அதேசமயத்தில் தற்போது நேருவை பற்றி பேசுவது கொள்கை சார்ந்து அல்ல; அரசியல்தான்!
ஆம், நேருவின் கொள்கை எல்லாவற்றையும் 1991 முதல் அடகு வைத்தும், விற்றும் விட்டார்கள்! குறிப்பாக பொதுதுறைகளை நவீன கோவில்கள் என்றார் நேரு! அந்த கோவில்கள் எல்லாம் எங்கே இருக்கிறது?
காங்கிரஸ் பெரும்பகுதியை அன்னிய-இந்திய பெரும் பெரும் முதலாளிகளுக்கு விற்றது; மீதியை தற்போது பாஜக விற்று வருகிறது. நேருவின் கொள்கைகளுக்கு அவரின் வாரிசுகளே சமாதிக்கட்டி விட்டார்கள்!
இதன் ஒருபகுதி பதிவேற்றம் ஆகி உள்ளது PTTV... FB & WhatsApp இல்!
-----\\\\
மாற்றத்தை நோக்கி..!
🚥🚥🚥
தோழர் பிரகாஷ். இளைஞன். இருபத்தைந்தைத் தாண்டியிருக்கலாம். என்ன ஆற்றல்; என்ன அறிவு; பிரகாசமான எதிர்காலம் இவருக்கு காத்திருக்கு எனலாம். ஆம், மாற்றத்தை நோக்கி என்கிற பத்து சிறு கட்டுரைகளைத் தொகுத்து நூல் வடிவில் வெளியிட்டுள்ளார்.அவரே கூறுகிறார்.... "அனைத்திற்கும் மாற்றம் என்பது நிச்சயம் உண்டு என்ற நம்பிக்கையை என்னுள் தோற்றுவித்தது 'மார்க்சீயம்' என்னும் உயிருள்ள தத்துவமே" என்று. இது இவருக்கு மட்டுமே பொருந்தக்கூடியது மட்டுமல்ல... இன்றைய இந்திய சூழலில், இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும்தான்!
அதைத்தான் இந்தியாவில் சிபிஐஎம் உள்ளிட்டு இடதுசாரிகள் செய்து வருகின்றன. அத்தகைய பணிக்கு உதவக்கூடிய வகையில், இளமை துள்ளலுடன், அர்த்த செரியுடன் இந்த சிறுநூல் செய்கிறது. பாராட்டுக்கள்!
இந்நூலில் சில துளிகள்....
"ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தால் அடக்கி ஆளப்படுவதற்கு ஏதுவாய், அறியாமை என்னும் வேர் சமூகம் முழுவதும் படரவிடப்பட்டுள்ளது. அறியாமை என்னும் இந்த இராட்சச வேரே மதம் என்ற பீடத்திற்கு ஆணிவேராகவும், அஸ்திவாரமாகவும் மாறியுள்ளது"
"சாதி, மதம், இனம் இவற்றின் அடிப்படையில் நடத்தப்படும் புரட்சியாலோ, கலவரத்தாலோ மாற்றம் என்பது சாத்தியம் இல்லை; தவறான அமைப்பை மாற்றி, துன்பத்தில் இருந்து உழைக்கும் மக்கள் தங்களை மீட்டெடுக்க வேண்டுமெனில்... ... அதன் இயக்கப்போக்கில் அரங்கேறும் போராட்டங்களால் மாற்றம் நிச்சயம் நிகழும்"
இப்படி மாற்றமும் போராட்டமும், அது மார்க்சிய வழியில் அமைக்கப்பட வேண்டும் என்பதை மிக நேர்த்தியாக நிறுவி உள்ளார்.
இதற்கு அணிந்துரை வழங்கிய டீஒய்எப்ஐ சேலம் மாவட்டச் செயலாளர் கூறுவதுபோல்... "எதிர்காலம் இளைஞர்கள் கையில்! சோசலிசத்தின் மடியில்! அதற்கான விதைகளை இந்நூல் தூவியுள்ளது" என்பதே நானும் கூற விழைவது!
வாழ்த்துக்களுடன்! -தாரைப்பிதா...
தொடர்புக்கு: பிரகாஷ்... 99528 46218
------\\\\\


























No comments:
Post a Comment