சேலம் மாநகர காவல் துறையின் கொலைவெறித்தனமானத் தாக்குதலும்,
சிபிசிஐடி விசாரனைக்கு உத்திரவிட கோருதலும், கொலையான எஸ்.வெங்கட்ராஜ்
குடும்பத்திற்கு நீதியும், நியாயமும், நிவாரணமும் கோருதலும், கொலையை நேரில்
பார்த்த அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு கோருதலும்.
கடந்த 17.7.16 இரவு 11 மணி அளவில் சேலம்
மாநகரத்தில் மரவனேரி பகுதியில் சேலம் மாநகர அஸ்தம்பட்டி போலீசு குணச்சீலன்,
ஊர்காவல் படை காவலர் பெலிங்ராஜா உள்ளிட்டோர்
ஆகியோர் ஹெல்மெட் அணியாதவர்களைப் பிடித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்பொழுது சேலம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட
அய்யோத்தியாப்பட்டிணம் வீராணம் என்ற ஊரைச் சார்ந்த எஸ்.வெங்கட்ராஜ்
(வயது 25) த\பெ சுபாஷ் இருச்சக்கர
வாகணத்தில் சேலம் ஜங்ஷனில் உறவினரை ரயிலேற்றிவிட்டு, வீட்டுக்கு வந்துள்ளார்.
அவரை ஊர்காவல் படை
காவலர் பெலிங்ராஜா லத்தியை காட்டி நிறுத்தி உள்ளார்; எஸ்.வெங்கட்ராஜ் பைக்கை நிறுத்துவதற்குள் அவரது தலையின் பின்புறம் ஓங்கி
லத்தியால் அடித்துள்ளார்; நிலை தடுமாறி நிற்கிற சமயத்தில்
முகத்தில் மூக்கின் மீது தனது லத்தியால் போலீசு குணச்சீலனும் அடித்து உள்ளார்.
இருவரும் பலம் கொண்டு லத்திகளால் தாக்கியதால், பைக்கோடு
விழுந்து, அதே இடத்தில், அந்த
நிமிடத்திலேயே உயிர் பிரிந்துள்ளது. இரு போலீசுகார்களும் தனது லத்திகளால் கண்மூடித்தனமாக
தாக்கியதாலேயே அவர் மரணம் அடைந்துள்ளார்.
அதுமட்டுமல்ல, உயிருக்கு
போராடிய நிலையில் உரிய முறையில் அவர் உயிரை பாதுக்காக்க, அங்கிருந்தவர்கள்
கெஞ்சிக கேட்டும் மிகவும் மெத்தமாகவே இருந்து உள்ளனர். அதன்பின்
மிகவும் சகவாசமாக ஒர ஆட்டோ மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் "வேகத்தடையில் விழுந்து செத்துவிட்டான்" என வழக்கை ஜோடித்து விட்டார்கள். இந்த கொலைபாதக
செயலுக்கு போலீசின் கையாளான ஆட்டோ ஓட்டுனர் கணேசன் (வயது 40) த\பெ மாணிக்கம் உதவி உள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனமாக கொலைவெறிக் கொண்டு தாக்கியச் செயலை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது!
இந்நிலையில் 22.7.16 மதியம் எஸ்.வெங்கட்ராஜ் பெற்றோரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் என்.பிரவீண்குமார், மாவட்ட பொருளாளர் வி.வெங்கடேஷ் உள்ளிட்ட தோழர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியபோதுதான் மறைக்கப்பட்ட இந்த அதிர்ச்சியான உண்மை வெளியே தெரிய வந்துள்ளது.

மறைந்த எஸ்.வெங்கட்ராஜை போலீசு தங்களது லத்தியால் அடித்தே கொன்று உள்ளார்கள்
என்பதற்கான வலுவான ஆதாரங்கள் கீழே தரப்படுகிறது.
1. 18.7.16 அன்று ஏற்கனவே பல பிரேதங்கள் பரிசோதனைக்கு இருந்த நிலையில் இதை மட்டும் அவசர அவசரமாக பிரேதப்பரிசோதனை செய்து காவல்துறை வாங்கியது ஏன்?
2. பெற்றோரிடம் பிரேதத்தை தராமல் காவல்துறையே எரித்ததேன்?
3. வீராணம் மயாணத்தில் சொந்த ஊரில் பிரேதத்தை அடக்கம் செய்யாமல் சுமார் 15 கிமீ தொலைவில் உள்ள சேலம் காக்காயன்காடு எரியூட்டு மயாணத்தில், சேலம் மாநகரத்தில் காவல்துறையே கொண்டு வந்து எரியூட்டியதேன்?
4. காவல்துறை அடித்துக்கொன்ற சம்பவத்தை நேரில் பார்த்த திரு.அருண்குமார் என் இளைஞனின் வாக்குமூலம் நேரில் அன்றிரவே அஸ்தம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு. விதுன்குமார் அவர்களிடம் கூறியும் ஏன் அதை எடுத்துக் கொள்ளவில்லை?
5. நேரில் பார்த்த திரு அருண்குமார் 19.7.16 அன்று எஸ்.வெங்கட்ராஜ் பெற்றோருடன் சேலம் மாநகர அஸ்தம்பட்டி காவல் உதவி ஆணையரியிடம் நேரில் தந்த வாக்குமூலம் மற்றும் புகாரை காவல்துறைக் கண்டு கொள்ளாததேன்?
6. காவலர்கள் திரு.குணசீலனை ஆயுத படைக்கு மாற்றியதும், ஊர்காவல் படை காவலர் திரு.பெலிங்ராஜாவை நீக்கம் செய்ததும் ஏன்?
7. நேரில் பார்த்த திரு அருண்குமார் காலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சம்மந்தப்பட்ட போலீகாரர்கள் திருவாளர் குணசீலன், பெலிங்ராஜா ஆகியோர் ‘எங்களை காப்பாற்று, காட்டிக் கொடுத்துவிடாதே’ என்று காலில் விழுந்து கதறியதேன்?
8. நடந்தது விபத்தென்றால், பிரேத பரிசோதனை முதல் எரியூட்டும் வரை நூற்றுக்கும் மேற்பட்ட போலீசு வீராணம் கிராமத்திலும், மருத்துவமனையிலும், சேலம் காக்காயன் சுடுக்காட்டிலும், பிரேதத்துடனும் இருந்ததேன்?
9. பெற்றோரின் விருப்பப்படி சமூக வழக்கப்படி சொந்த ஊரில் புகைக்க அனுமதிக்காததேன்?
10. வேகத்தடையில் நிலை தடுமாறி மின் கம்பத்தில் மோதி அடிபட்டதாக போலீஸ் கூறுகின்றனர்; அப்படியானால் வேகத்தடைக்கும் அடிபட்ட மின் கம்பத்திற்கும் 125 அடி தூரம் உள்ளபொழுது எப்படிஅப்படிஅடிபட்டுசாகமுடியும்?
11. கொலையை நேரில் பார்த்த இளைஞர் திரு.அருண்குமார் கொடுத்த புகாரை பதிவு செய்யாமல் விபத்து என்று போலீஸ் எந்த அடிப்படையில் முடிவுக்கு வந்தது?
இப்படி பல மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. கொலையை மூடி மறைத்து, கொலையாளிகளைப் பாதுக்காத்திட மாநகர காவல் உயர் அதிகாரிகள் உட்பட அனைவரும் அரசுக்கும், போலீசுக்கும் அவப்பெயர் வந்துவிடக்கூடாது என திட்டமிட்டு மறைத்துள்ளனர் என்பதுதான் உண்மை!
சம்பவம் நடந்த பகுதி ஆர்எஸ்எஸ் அலுவலகம் இருப்பதாலும், பாலமந்திர் பள்ளிக்கூடம் நுழைவாயில் என்பதாலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது; இந்த கேமராக்களையும், சேலம் அரசு மருத்துவமனை கேமராக்களையும், அஸ்தம்பட்டி காவல்நிலைய கேமராக்களையும் சோதித்தால், நேரில் பார்த்துவிட்டு, பதறிபோய் போராட்டிய திரு. அருண்குமார் அவர்களையும் விருப்பு வெறுப்பின்றி முறையாக விசாரித்தால் உண்மை தெரிந்துவிடும்!
ஆகவே-
1. சிபிசிஐடி விசாரணைக்கு உத்திரவிட்டு, முழுமையான விசாரணை நடத்தி, கொலைக் குற்றவாளிகள் மீதும், அதற்கு உடைந்தையாக இருந்தவர்கள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைத் தண்டனைக்கு உள்ளாக்கிட வேண்டும்!

2. நேரில் பார்த்த திரு அருண்குமார் அவர்களுக்கும், அவரது
குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
3. தங்களது ஒரே மகனை போலீசின் தாக்குதல்களுக்கு பலி கொடுத்துவிட்டு,
பரிதவிக்கும் சுரேஷ் குடும்பத்திற்கு நீதியும், நியாயமும், நிவாரணமும் வழங்கிட வேண்டும்.
-பி.தங்கவேலு
No comments:
Post a Comment