ஏபி.பரதன் காலமானார்!
சிபிஐ மூத்த தலைவரும், முன்னாள் பொதுச்செயலாளரும்,
இந்திய உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற தலைவரும், சமத்துவ இந்தியாவை சமைக்க பொழுதளந்தவருமான அருமை தோழர் ஏபி.பரதன் (92) புதுதில்லியில் இன்று 2.1.2016 இல் காலமானார்.
அன்னாரது மறைவுக்கு சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழு செங்கொடி தாழ்த்தி, அஞ்சலி செலுத்துகிறது!
அவர் விட்டு சென்ற பணியை தொடர்ந்திடவும், செங்கொடியை தாழவிடோமெனவும் சூளுரைக்கிறது! அன்னாரை இழந்து வாடும் தோழர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலை உரித்தாக்குகிறது!
ஏபிபி புகழ் வாழ்க!
----\\\\
நாஞ்சிலாருக்கு...கல்தா...!
அஇஅதிமுக கொபதுசெ கோவிந்தா..!
🐒🐒🐒
நேற்று 1.1.15 தந்தி டிவி, "கேள்விக்கு பதில் என்ன?" இன்று 2.1.16 புதிய தலைமுறை டிவி, "அக்னி பரிட்சை" ஆகிய நிகழ்ச்சியில் முறையே நெறியாளர்கள் பாண்டே, குணா கேள்விகளால்...
அவர்களின் கைங்கரியத்தால்... நாஞ்சில் சம்பத் க்கு... அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பொறுப்பு... கோவிந்தா... கோவிந்தா...!
விரைவில் வெளியேற்றவோ... வெளியேறவோ... நடந்தாலும் நடக்கலாம் என்றே தோன்றுகிறது அந்த இரு நேர்காணல்..!
-----\\\\
"மானே, தேனே, பொன்மானே' எல்லாம் இடையிடையே போடல..!"
🐒🐒🐒 🙈🙉🙊
தரமற்ற பேச்சுக்காக அவரை நடவடிக்கை எடுத்ததாக கருத முடியவில்லை! தாங்கள் சொல்வது மிகவும் சரி! சட்டசபை ரசித்தவர்தான்!
ஆம், இவரின் இந்த இரு நேர்காணல்களிலும் உற்று பார்த்தோமேயானால், "அம்மா" "புரட்சித்தலைவி" இதெல்லாம் போதுமான அளவுக்கு சேர்க்கப்பட வில்லை; அவைகள் தித்திக்கும் அளவுக்கு இல்லை!
அடுத்து, சில விசியங்களில் துடுக்காக "சுயமரியாதை" காரன் போல் கருத்து சொன்னார்.
குறிப்பாக, 'பாமக தமகா போன்றவைகளை கூட்டணியில் சேர்க்கலாம்' போன்ற பொருள் பட, யாருமே அதிமுக அடிமைகள் இதுவரை டிவி யில் சொல்லாத ஒன்றிரண்டு "வாய் தவறி" சொல்லி தொலைத்துவிட்டார்!
ஆகவே 'மானே, தேனே, பொன்மானே' எல்லாம் இடையிடையே போட்டு ராகம் கூட்டி பாடவில்லை. அதுதான் வினை. மற்றப்படி ஒன்றும் அம்மா அருவருக்கத்தக்க அளவில் எதுவும் பேசவில்லை! பாமக வை தூக்கியும், தூற்றியும் பேசினார்! ஏற்கனவே உண்ட வீட்டை ரெட்டை நாவில் யேசினார்!
அதிமுக வின் துணை கொள்கை பரப்பு செயலாளர் என்கிற 'கர்வம்' கொஞ்சம் தலைத் தூக்கியதைப்நேர்காணலில் காண முடிந்தது! அம்மா காணம் கானல் நீராகவே காண முடிந்தது!
அம்மாவுக்கு அவர் கட்சியின் தொண்டர்கள் செயலும், சொல்லும் அருவருப்பாக இருந்திருக்குமே யானால்.... இவிகேஎஸ்இ., கோவன்., விஜய்காந்த் இவர்களுக்கு எதிராக அம்மாவின் விசுவாசிகள் செய்யாத அருங்கூத்தா? அதை எல்லாம் அம்மா ரசித்துக் கொண்டுதானே இருந்தார்!
அந்த மாதிரியான அடிமை விசுவாசம் இவ்விரு நேர்காணல்களிலும் இல்லை நாஞ்சிலிடம் என்பதுதான் "நெறிஞ்சி" யாக அம்மாவை குத்திருக்க வேண்டும் அதுதான் இந்த நடவடிக்கை என்று தோன்றுகிறது!
எதுவும் நடக்கலாம்! முன்னாள் போலீஸ் அதிகாரி நடராஜ்ஐ நீக்கிய 24 மணி நேரத்தில் மீண்டும் சேர்த்தது போல!
(தோழர் ஜிஆர் அவர்களின் fb பதிவுக்கு எமது Comments!)
---\\\
"தொங்கு சட்டமன்றம் வந்தால்..."
காது காதுன்னா.. வேது வேதுங்கிற கத தெரியுமா? உங்களுக்கு! இன்று 31.12.15 PTTV புதுப்புது அர்த்தங்களில் நெறியாளர் ஜென்ராம் கேள்விக்கு சமூக ஆர்வலர் பானுகோம்ஸ் பதில் தான் அது! தேமுதிக MLA க்கள் சட்டமன்ற கூட்டம் முடிந்த பின், அதிமுகவில் சேர்க்கபடுவர் போல் தெரிகிறது என்றதற்கு... அதற்கு தோழர் குமரேசன், "நேர்மற்ற செயல்" என்றார். இதற்கு... பானுகோம்ஸ், "கூட்டணிக்கு போய் பேசுவது உட்பட எல்லாமே நேர்மையற்ற செயலே" (முரளிதரராவ் உள்ளிட்ட சொல்கிறா? என்று தெரியவில்லை!) என சம்மந்த மில்லாமல் பேசி, "எல்லாம் மோசம், தன்னைத் தவிர" தனது மேதாவிதனத்தை வெளிபடுத்திக் கொண்டார்!
ஜல்லிக்கட்டு...விவாதம் கேட்டு கேட்டு புளித்துபோய்விட்டது. அதில் பாஜக அடிக்கிற பல்டிக்கு நேர்மையாளர் பானுகோம்ஸ், "இன்னும் 14 நாட்கள் இருக்கிறது" என்று பாஜகவுக்கு வக்காலத்து போட்டார்! அதிலும் வில்லங்கம் செய்தார்... "குமரேசன் கருத்து ஜல்லிக்கட்டுக்கு எதிராக தனிப்பட்ட கருத்து சொல்வதுபோல், பாஜக தமிழகதலைவர்களுக்கு ஒரு கருத்து இருக்கலாம்" என்று சமாளித்தார் பானு!
பாஜக தலைவர்கள் விஜய்காந்தை சந்தித்து பற்றி...ஆணவ கொலையை எதிர்த்து சட்ட கோருகிறபோது, அதற்கு எதிராக குறிப்பிட்ட சாதி மக்களின் ஆதரவு தளம் பாதிக்கும் என்று செயல்படுவதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நேர்மையும், மக்கள் நலன் என்பதும், மற்ற கட்சிகளுக்கும், மார்க்சிஸ்ட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்று குமரேசன் கூறியதை பானு ஏற்றுக்கொண்டது நேர்மைக்கு நன்றி!
தேர்தல் முடிவு "தொங்கு சட்டமன்றம் வந்தால், மக்கள் நலக் கூட்டணி திமுக அதிமுக வை ஆதரிக்கக் கூடாது" என்ற பானு கோரிக்கை நிராகரிக்க முடியாதுதான்! அதற்காக, அதை "அரசியல் துறவரம் கொள்ள முடியாது" என்ற தோழர் அகு கருத்து நெருடல்! ஆம், எது எதெல்லாம் ஆபத்து, அதுவெல்லாம் வரக்கூடாது என சொல்லி வந்தோமோ, அதுவெல்லாம் வந்துவிட்டதும், ஆட்சியை பிடித்து விட்டதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்!
----\\\\
"சுரண்டலற்ற பூமியாக..."
👪👫👊✌
இன்று 31.12.15 திண்டுக்கல் Dyfi மாநில மாநாட்டு பேரணி-பொதுக்கூட்டம் பார்க்க நான், என் மகன் அருண், பேத்தி காவ்யா(10), பேரன் பரத் (4) மற்றும் தோழர்களுடன் சென்றேன்.
ஊர்வலம் புறப்படும் இடத்தில் நின்று, ஆரம்பம் முதல் கடைசி வரை பார்த்தேன். 34 வருடங்களுக்கு முன் இதே திண்டுக்கலில் அரும்புமீசை இளைஞனாக... இன்று...?!
பசுமையான மலரும் நினைகளை அசைப்போட்டுக் கொண்டு, வீடு வந்து சேர்ந்தோம்!
என் பேரக் குழந்தைகளுடன் ஒரு புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டேன்! முடியல..!
நான்... அன்று திண்டுக்கல் மாநாடு பிரதிநிதியாக பங்கேற்றேன்; எனது வாரிசுகள் இதே திண்டுக்கலில் இன்று... பார்வையாளர்களாக அறிமுகம் செய்தேன்; ஆம், அவர்களும் பங்கேற்ற மாதிரிதானே!
மகிழ்ச்சியோடு, நம்பிக்கையோடு இந்த பகிர்வு! அந்த இளம் தோழர்களின் போர் பரணி, இந்த தரணியை நிச்சயம் புரட்டி போட்டும்! சுரண்டலற்ற பூமியாக தங்கத் தமிழகம் மாறும்! உறுதி!
----\\
"சிபிஐஎம் கொல்கத்தா பிளீனம்... "மகுடம்"
இன்று 1.1.2016 PTTV புதுப்புது அர்த்தங்களில் நெறியாளர் ஜென்ராம், அதிமுக பேரா தீரன் (எ) ராசேந்திரன், திமுக கண்ணதாசன்... இருவரையும் போதுமான அளவுக்கு துளைத்து எடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.
கட்சிக்குள் ஜனநாயகம் இரு கட்சிகளின் "தலைவர், தலைவி க்கு அதிகாரம்" கொடுக்கும் ஜனநாயக மாகத்தானே இருக்கிறது என்று கூறி, ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு "சிபிஐஎம் கொல்கத்தா பிளீனம் திருத்தங்களை ஏற்று, தீர்மாணம் நிறைவேற்றியது, அதன் வழிபடி செயல்படுதானே ஜனநாயகம்" என சிபிஐஎம் க்கு, அதன் ஜனநாயக செயல்பாடுக்கு ஒரு "மகுடம்" சூட்டிய நெறியாளருக்கு நன்றி!
"எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்" என்று பேசியவர், தற்போது "சரியான நேரத்தில், சரியான முடிவு எடுப்பேன்" என்றதன் பொருளின் அர்த்தம் என்ன? என்று ஒட்டு மொத்த விவாதத்தையும் ஒரே வார்த்தையில்... Right Decision Right Time என்பதில் வரும் வார்த்தைகளில், Right என்பதற்கு 'சரியான' என்ற பொருள் வந்தாலும் 'வலது' என்ற பொருளும் வரும், அது மாதிரியான முடிவும் எடுக்கப்படலாம் என்று ஒரு போடு போட்டார் நெறியாளர்... அருமை!
என்றாலும், அதிமுக திமுக விடம் இருந்த இடது கருத்துக்கள் மறைந்து, அது புதைக்கப்பட்ட இடத்தில் புல் முளைத்து, மரமாகி விழுதுகள் விட்டு கிடக்கின்றன என்பதுதான் உண்மை. அடுத்து இக்கட்சிகளுக்கு இடதுசாரி அடித்தளம் என்றுமே கிடையாது; ஓட்டு அரசியலில் நிலைத்து நிற்க சில சேம நலத்திட்டங்களை அமலாக்கி இருப்பார்கள் அரசில் இருந்தபோது... அவ்வளவே!
----\\\
#அறுக்க முடியாதவன் இடுப்புல...
ஆயிரம் அறுவாள்#
🙅🙅🙅
"மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி மக்களவையை முடக்குகிறது"
இப்படி சொல்வது பாஜக பிரதமர் வேட்பாளரல்ல; நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியார்தான்!
மக்களவை தேர்தலில் என்னமோ 99% வாக்குகளை பெற்று விட்ட மாதிரி "பீலா வுடுறதல" மட்டும் குறைச்சல் இல்ல! இந்த தேர்தல் முறையில் இருக்கிற ஓட்டையில் "31% ஓட்டு வாங்கி, 70% சீட்டு" பிடித்துக் கொண்டு ஆடாத அருங்கூத்து ஆடுகிறார்கள்!
இதைத்தான் சிபிஐஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி... "பிரதமர் இன்னும் தேர்தல் பிரச்சார மனநிலையில் இருந்து வெளியே வரவில்லை" என சரியாக சொல்லி வருகிறாரோ?
பிரதான எதிர்கட்சி அந்தஸ்த்து கூட இல்லாத (அதற்கு தராத 'பெருந்தன்மை' யை என்னவென்பது) காங்கிரஸ எப்படி முடக்க முடியும்! மூச்சு முன்னூறு முறை காங்கிரஸ் செய்ததைத்தான் நாங்கள் செய்கிறோம் என இவர்களின் மக்கள் விரோத போக்குக்கு காங்கிரஸை துணைக்கு அழைப்பது ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் முட்டுக்குகிறார்கள் என "எடக்குமொடக்கு" பேசுவது!
வேறு வார்த்தைகளில் சொன்னால்... அறுக்க முடியாதவன் இடுப்புல ஆயிரம் அறுவாள் என்பது இதுதானோ? மக்களுக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுகிறபோது, ஆளும் கட்சிகள் எதிர்கட்சிகளை மீது வீசும் துருப்பிடித்த ஆயுதம் இது; ஆம், அதுதான் "முடக்கு" வாதம் பேசுவதும், அதனூடே தப்பிப்பதும்!
-----\\\
பிறப்பும், இறப்பும் கொண்டாடப்பட வேண்டியதா?
\\பிறந்தநாள் கொண்டாடுவது சிலரது மூட நம்பிக்கை \\
பதிவு சரியாக தெரியவில்லை! பிறந்த நாள் பலதுக்கும் தேவை என்பதால், அதை கொண்டாடனுமா என்ன? அப்படி என்றால், இது ஒரு வாதத்திற்காக... ஜாதி, மதம் கூட பலதுகளுக்கு கேட்கப்படுகிறது... அப்படி என்றால், அவற்றை கொண்டாடலாமா?
ஒரு மனிதனை அவன் இறந்தப்பின் அவனது நிறைகுறைகளை ஆராய்ந்து, அவனது பிறப்பும், இறப்பும் கொண்டாடப்பட வேண்டியதா? அவன்/அவள் வாழ்நாளில் உழைப்பாளிகளுக்கு, இந்த பூமி பந்து உய்ய செய்த அரும்பணியை நிச்சயம் போற்றப்பட வேண்டும் என்கிற பட்சத்தில் கொண்டாடப்படுவதே பொருத்தம் என்பதே என் கருத்தும்கூட!
இதில் மூட நம்பிக்கை ஏதுமிருப்பதாக தெரியவில்லை!
(ஒரு முகநூல் தோழரின் பதிவுக்கு... எம் பதிவு..!)
----\\\
#எங்கே இருக்கிறது நடுநிலை?#
👍👍👍
முதலாளி வேறு;
முதலாளி மகன் வேறா? நல்ல தமாஷ்!
இதுதான் தனியார் மயத்தின் "மாயம்" என்பது!
வேண்டுமென்றால் "தூக்கலாம்!" வேண்டாமென்றால் "தூக்கி எரியலாம்!"
பொதுதுறை ஊடகமும் அப்படித்தான்... அது ஆளும் கட்சிக்கு "லாலி" பாடுவதே அதன் பிறவி பயன் என்றாகிவிட்டது!
பாவம்!
இந்த மார்க்சீய-அம்பேத்கரிய-(திமுக, அதிமுக) அல்லாத பெரியாரிய கட்சிகள்!
அதுசரி...
எங்கே இருக்கிறது நடுநிலை?
அப்படி ஒரு ஊடகமே உலகத்தில் கிடையாது! இருந்தால்...
சொல்லுங்கள் உரக்க..! அதை கேக்க; பாக்க..!
#
(இன்று 1.1.16 புத்தாண்டு வாழ்த்து செய்தியில் புதிய தலைதலைமுறை டிவி fb இல் ரோசய்யா, ஜெயலலிதா, விஜய்காந்த், கருணாநிதி, இவிகேஎஸ்இ., பாரிவேந்தர், வைகோ, ராமதாஸ் புகைபடங்கள் மட்டுமே இருந்தது.
இதில் ஒரு முகநூல் நண்பர் "lJK பெரிய கட்சியா? முதலாளியின் அப்பா என்பதாலா? திருமா-இடதுசாரி தலைவர்கள் போடலியே! உங்க நடுநிலை ஊர் சிரிக்கும்..!" என்பன போன்று வெகுளியாக பதிவிட்டிருந்தார்... அவரின் பதிவுக்கு எம் பதிவு..!)
----\\\\
ஊழல், லஞ்சம், ரவுடிசம், அராஜகம் இல்லாத...
2016 மக்கள் எதிர்பார்ப்பு... தமிழகத்தில் ஊழல், லஞ்சம், ரவுடிசம், அராஜகம் இல்லாத நேர்மையான நல்லவர்கள் ஆட்சியில் அமர்வதுதான்!
அதோடு அனைவருக்கும் அரசு கல்வி, அனைவருக்கும் சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை; தீண்டாமை கொடுமை ஒழிப்பு உள்ளிட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கிற ஆட்சி!
எளிதில் அணுகக்கூடிய எம்எல்ஏ க்கள், அமைச்சர்கள் உள்ள ஆட்சி! அதற்கு தற்போதைக்கு ஒரே வழி மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வருவதுதான்!
இன்று 1.1.16 PTTV மக்கள் மேடை! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\\
கட்டுப்பாடு இருபாலருக்கும்தான்!
கோவில்களில் மட்டுமல்ல எங்கும் தேவை... ஆடைக்கட்டுப்பாட்டையும், சுயக்கட்டுப்பாட்டையும் வளர்த்தெடுக்கும் வின்ஞானபூர்வ கொள்கை, கோட்பாடு கொண்ட அரசின் செயல்பாடு!
சினிமாவிலும், தொலைகாட்சிகளிலும் ஆடைக்கட்டுபாடு வேண்டும்; அதோடு போக்கிரித்தனமான உடை, சிகை அலங்காரங்களுக்கும் வேண்டும் கட்டுப்பாடு!
ஆம், இந்த கட்டுப்பாடு இருபாலருக்கும்தான்!
அதைவிடுத்து "தும்பைவிட்டுவிட்டு வாலைப் பிடிக்கும்" கதையாக அரசும், நீதிமன்றங்களும் "விதி"ப் போட்டுக் கொண்டிருக்கிறது "வீதி"யிலே!
இன்று 1.1.16 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
---\\\
"ஜல்லிக்கட்டு ஓட்டுகள்..!"
அதா வந்திரும்...
இதா வந்திரும்... ன்னாரு... பொன்னாரு...!
அதையும் நம்பி உண்ணாவிரதத்த தள்ளி வச்சாரு...
கலைஞரு..!
இப்ப என்னடான்னா... "கோர்ட் தடை" இருக்குதுங்கிறாரு... பொன்னாரு...!
அட
மூதேவிங்களா... இதத்தாண்டா
அன்னிக்கே சொன்னோம்..!
ஜல்லிக்கட்டு...
சிலருக்கு...
அது 'ஜாலி'க்கட்டு போல..!
இம்..!
பாவம்...
"ஜல்லிக்கட்டு ஓட்டுகள்..!"
----\\\\
ஜல்லிக்கட்டு பிரச்சனை என்றோ தீர்ந்திருக்கும்!
ஜல்லிக்கட்டு தாமதமாக தமிழக அரசும் காரணம்! ஏன் சட்டமன்றத்தைக் கூட்டித் தீர்மாணம் போட்டிருக்கக் கூடாது? கடிதம் எழுதும் நோக்கம் யாது? ஒருவேளை ஜல்லிக்கட்டு நடந்துவிட்டால், நானும் எனது கடிதமுமே என மார்த்தட்டிக் கொள்ளத்தான்!
திமுக அதிமுக இரண்டுமே தமிழக கட்சிகளை, மக்களை இதுபோன்ற (ஜல்லிக்கட்டு உள்ளிட்டு) மக்கள் பிரச்சனைகளில் மதிப்பதே கிடையாது! இதை தெரிந்துதான் இன்றைய பாஜக வாக இருந்தாலும், முந்தைய காங்கிரஸாக இருந்தாலும் தமிழக மக்கள் முதுகில் குதிரை ஏறி சவாரி செய்கிறார்கள்!
தமிழக அரசு ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஒன்று திரட்டி எதிர்ப்பை காட்டியிருந்தால், ஜல்லிக்கட்டு பிரச்சனை என்றோ தீர்ந்திருக்கும்!
இன்று 2.1.15 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றமாகி உள்ளது.
-----\\\\
"மொழி, இனம் என மக்களை உசுப்பிவிட்டு..!"
👀👀👀 👆👇👈👉
பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் நடத்தும்போது அண்ணா, எம்ஜிஆர், பெரியார் போன்றவர்களையே மறந்திடும் இவர்களின் (அதிமுக, திமுக) ஆட்சியில், மொழிப்போர் தியாகிகள், சுதந்திரப்போர் தியாகிகள் நினைவகங்களையும், அவர்தம் குடும்பங்களையுமா இவர்கள் கவனிக்கப் போகிறார்கள்? இதற்கு இவர்களுக்கு ஏது நேரம்?
'தமிழ்'நாட்டில் தடுக்கி விழுந்தால் ஆங்கிலப்பள்ளி, கல்லூரிகளில் தான் விழவேண்டும். தமிழ்மொழி இனி மெல்ல மெல்ல சாகத்தான் போகிறது. அல்லது தங்கிலிஷ் ஷாகத்தான் வளரப்போகிறது! இதுதான் தமிழ் மொழி, தமிழ் இனம் போற்றிய திமுக அதிமுக ஆட்சிகளின் சாதனையாக இருக்கிறது!
'தமிழ்'நாட்டில் தமிழில் "அம்மா, அப்பா" என அழைப்பதையே கேவலமாக கருதும் தமிழர்களிடம், தற்போது மொழி, இன உணர்வு மங்கி, ஜாதி உணர்வுதான் வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது அதிமுக திமுக ஆட்சிகளில்! இந்த ஆபத்தில் இருந்து காப்பதே இன்றைய தலையாயப் பணியாக இருக்கிறது!
மொழி, இனம் என மக்களை உசுப்பிவிட்டு, தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து, 48 ஆண்டு காலம் ஆட்சிக்கட்டில் மாறி, மாறி அமர்ந்த திமுக அதிமுக கட்சிகளே அவற்றிக்கு சமாதி கட்டி விட்டார்கள்! சாதி-மத வெறிகளுக்கு மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஊக்கமளித்ததே இவர்களின் சாதனைகளில் ஒன்றாக இருப்பதுதான் சோகத்திலும் சோகம்!
இன்று 2.1.15 News 7 ?கேள்வி நேரம்!
-----\\\\












No comments:
Post a Comment