Saturday, 23 January 2016

அத்துமீறித் தாக்குதல்! மார்க்சிஸ்ட் கண்டனம்!
டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்திட கோரிய வாலிபர்-மாதர் சங்கத்தினர் மீது சேலம் மாநகர காவல் துறையின் அத்துமீறித் தாக்குதல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

சேலம் மாநகரம் அஸ்தம்பட்டியில் மருத்துவமனை, கோவில்,  மாணவிகள் விடுதி போன்றவை இருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதை மக்கள் நெரிசல் இல்லாத, இடையூறு இல்லாத பகுதியில்மாற்றி அமைத்திட, தொடர்ந்து வாலிபர்-மாதர்  அமைப்பு போராடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (17.1.16) காத்திருப்பு  போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

நேற்று சேலம் தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இன்று காலை காத்திருப்பு போராட்டத்திற்கு வாலிபர் மாதர் சங்கத்தினர் டாஸ்மாக் கடைமுன் கூடினர். 

அப்பொழுது அஸ்தம்பட்டி காவல் உதவி ஆய்வளரும், உதவி ஆணையாரும் தோழர்களை தகாத வார்த்தைகளில் திட்டி, (துணை ஆணையர் உதயகுமார் உதிர்த்த முத்துக்கள்... அப்படிதான் அடிப்பேன்; மயிரு மூடிகிட்டு போங்கடா; உதவி ஆய்வாளர் மிதுன்... நீங்களெல்லாம் பொம்பளைங்களா?)

இழுத்து  போட்டு உதைத்து, வேனில் அராஜகமான முறையில் தூக்கிப் போட்டு அத்துமீறி அராஜகம் செய்துள்ளனர். இதில் மாதர் சங்க மாநில செயலாளர் கே.ஜோதிலட்சுமி, மாநகர நிர்வாகி ரம்யா மற்றும் வாலிபர் சங்க மாநகர நிர்வாகிகள் வெங்கடேஸ், சக்திவேல்,  ஈஸ்வர், சேகர்உள்ளிட்டோர்  பாதிப்படைந்துள்ளனர்!  

காவல் துறையின் இந்த காட்டுமிராண்டி செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம்மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அத்துமீறி தாக்குதல் தொடுத்த காவலர்கள்மீது மாவட்டஆட்சித்தலைவரும், தமிழக அரசும் உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது! 
----\\\\
குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்! 
நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், அவரை ஆதரிப்பதாக காங்கிரஸ் இளங்கோவன் கூறுவது... மக்கள் நலக் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்! 

மக்கள் நலக் கூட்டணி மேலும் பலப்படாமல் பார்த்துக் கொள்கிற திமுக வின் குரலாகவே தோன்றுகிறது; காரணம்... திமுகவின் கூட்டணிக்கு அழைத்த கருணாநிக்கு நன்றி தெரிவித்துவிட்டு இப்படி கூறுவதன் பொருள் என்ன?

மக்கள் நலக் கூட்டணியின் செயல்திட்டத்தை ஏற்றுக் கொண்ட கட்சிகள், அக்கூட்டணி சார்பில் நல்லகண்ணு வை யோ அல்லது அக்கூட்டணியில் உள்ள வேறொருவரையோ தேர்தலுக்குப் பின் முன்மொழிவதே சரியாக இருக்கும்! 

முதல்வர் வேட்பாளர் அறிவிப்பே வெற்றியை தீர்மாணிக்கிற காலமல்ல, தற்போதைய காலம்! அந்த கனவில்தான் பாமக இருக்கிறது! அது இந்த தேர்தலுக்கு ஒத்து வராது!

இன்று 11.1.16 PTTV மக்கள் மேடைக்கு! இதன்பகுதி பதிவேற்றமாகி உள்ளது!
----\\\\
எல்லாம் தமிழக தேர்தல் அரசியல்!
பாராளுமன்ற சட்டம் இயற்றி இருந்தால்,  ஜல்லிக்கட்டு தடைநீக்கம்... நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக, பார்க்க முடியாது! ஆனால், ஒரு மந்திரியின் உத்தரவு மூலம் தடைநீக்கம் அவமதிப்புத்தான்!

நாளையோ, நாளை... நாளை... மறுநாளோ இனி நடக்கப்போவது ஜல்லிக்கட்டுதான்! நீதிமன்றத்தில் மல்லுக்கட்டுவோர் பில்லுக்கட்டோடு வந்து ஜல்லிக்கட்டு காளைகளுக்குத் தீணிபோடுவர்! கோர்டு வழக்கம் போல் மல்லுக்கட்டுவோர் பெட்டிசன்களை பொங்கலுக்குப் பிறகு தள்ளி வைத்துவிடும்!

சுப்ரீம் கோர்ட்டின் கடைக்கண் பார்வை கிடைக்காமல், மந்திரி உத்தரவு போட்டிருக்க மாட்டார்! ஏனென்றால் இது அரசியல் ஜல்லிக்கட்டு; ஆம்! இந்தாண்டு மோடி-லேடி-டாடி களின் அரசியல் ஜல்லிக்கட்டு! 

திமுக உண்ணாவிரதத்தை ஏன் தள்ளி வைத்தது? ஜெயலலிதா கடிதம் எழுதிவிட்டு கம்முன்னு இருந்துவிட்டு, தற்போது கேவிட் ஏன் போட்டார்? சென்ற வருடம் மோடியின் அமைச்சர் தடைநீக்காமல், இந்த வருடம் ஏன் நீக்கினார்? எல்லாம் தமிழக தேர்தல் அரசியல்!

இன்று 11.1.16 PTTV நேர்படபேசு!
----\\\\
இந்த டுமீயிலு எல்லாம் வேண்டாம்!"
"இந்தியாவின் வலியை உணர்த்த சரியான பதிலடி கொடுக்க வேண்டும்!" 
-பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆவேசம். (இந்து தமிழ் 12.1.16)

"எப்டி அப்பிடியே ஸ்பைடர் மேன் மாதிரி பாகிஸ்தான் போயி ஜாலி இருந்திட்டு வந்து, திடீருன்னு பேச்சு வார்த்தய ரத்து பண்றதா? உருப்புடியா எதவாது பண்ணத பாருங்க! இந்த டுமீயிலு எல்லாம் வேண்டாம்!"
-----\\\\

உதட்டளவு பேச்செல்லாம் ஏன்? எதற்கு?
"பாமக தலித்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை!" 
-அன்புமணி ராமதாஸ். (தினமணி 12.1.16 சேலம்)

இந்த ஆண்டின் முதல் காமெடியாக எடுத்துக் கொள்ளலாமா? தலித் எதிர்ப்பை ஊதி, எம்பி யான தர்மபுரி எம்பி தொகுதியில் நின்று கொண்டு இவ்வாறு கூறுகிறார்!  இன்னும் என்ன என்னவெல்லாம் சொல்லுவாரோ? 

இப்படியும் சொன்னாலும் சொல்லவார் என எனக்கு தோன்றுகிறது... 

"பாமக வில் வன்னியர்களே கிடையாது; இதர கட்சிகள்தான் எங்கள்மீது வன்னியர் கட்சி என்று அபாண்டமான பழிபோடுகிறார்கள்!" என்று. 

"தலித் எதிரான கட்சி அல்ல பாமக..!" என்பதை நடைமுறையில் செய்து காட்டட்டும்! அதை விடுத்து இதுபோன்ற உதட்டளவு பேச்செல்லாம் ஏன்? எதற்கு?
----\\\\\
ஜல்லிக்கட்டு நடக்கப் போவதில்லை!
ஜல்லிக்கட்டு உண்மையிலேயே நடத்த அதிமுக பாஜக நினைத்திருந்தால், மாநில சட்ட மன்றத்திலும், மத்திய பாராளுமன்றத்திலும் சட்டம் நிறைவேற்றி, அதன்மூலம் உருப்படியான சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு உச்சநீதி மன்ற தடையை நீக்கி இருக்க முடியும்!

இனி, இந்த பொங்கலில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மட்டுமல்ல புல்லுக்கட்டு... தமிழக வாக்காளப் பெருமக்களுக்கும்தான்!

இனி தமிழ்நாட்டில் அதிமுகவும், டெல்லி மத்திய ஆட்சியில் பாஜகவும் இருக்கும் வரை ஜல்லிக்கட்டு நடக்கப் போவதில்லை!

மத்திய அரசு தமிழக மக்களை முட்டாளாக்க நாடகம் ஆடியது; அதற்கு மாநில அரசு துணை நின்றது! தற்போது இவர்களின் முகமூடியை உச்சநீதி மன்றம் கிழித்துள்ளது!

இன்று 12.1.16 PTTV சிறப்பு நேர்பட பேசு வில் இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
----\\\
தடையை எப்போது நீக்கியது?
ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடையா? உச்சநீதி மன்றம் தடையை எப்போது நீக்கியது? தற்போது மீண்டும் தடைவிதிக்க? 

மத்திய அரசு தமிழக மக்களை முட்டாளாக்க நாடகம் ஆடியது; அதற்கு மாநில அரசு துணை நின்றது! தற்போது இவர்களின் முகமூடியை உச்சநீதி மன்றம் கிழித்துள்ளது!

இன்று 12.1.16 News 7 ?கேள்வி நேரம்!
----\\\\
கோட்டை விட்டது மத்திய மாநில அரசுகளே!
ஜல்லிக்கட்டு அதிமுக-திமுக- காங்கிரஸ்-பாஜக போன்ற கட்சிகளின் அரசியல் விளையாட்டாக  ஆனதுதான் இதன் இன்றைய தோல்விக்கு காரணம்!

ஜல்லிக்கட்டை எதிர்க்கிற கட்சிகள் ஏதுமில்லாத போது, இப்படி கோட்டை விட்டது மத்திய மாநில அரசுகளே! 

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென்ற எண்ணம் மத்திய மாநில அரசுகளுக்கு கிடையாது! அவைகள் ஒற்றைக் கலாச்சாரத்தை விரும்பும் கட்சிகள்  பாஜக அதிமுக ! 

பாஜக அதிமுக கையில் மேலேயும், கீழேயும் ஆட்சி அதிகாரம் இருப்பதே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமைக்கு காரணம்!
----\\\
இப்படி நெறையா சொல்ல முடியுமிய்யா..!
வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம் 
-பிரதமர் நரோந்திர மோடி பெருமிதம்! (இந்து தமிழ் 13.1.16)

அடே சாமி..! எப்படியப்பா... உங்களால இப்படி பேச முடியுது? 

அப்புறம் எதுக்கு மாட்டுக்கறி சாப்புடுகிற தலித் மற்றும் முஸ்லீம் பாகிஸ்தான் போங்கன்னு பீஹார் எலெக்சனில பேசி பேசி விளாசினீங்க அய்யா? 

இப்படி நெறையா சொல்ல முடியுமிய்யா..!
----\\\
ஜெயலலிதா அரசின் தீண்டாமைக் கொடுமை! 
PCR வழக்கில் போலீசுகளை சிறையில் அடைத்திடு!
😈😈😈 
நாகை: தலித் முதியவர் செல்லமுத்து (82) பிணம், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவையும் மீறி, பொதுபாதையில் எடுத்துச் செல்லாமல், தலித்க்கான பாதையில் போலீஸே எடுத்து சென்று அராஜகமாக அடக்கம்! 

8 நாட்கள் பேரன் கார்த்திக் போராடியும், பொதுபாதையில்  எடுத்து செல்ல ஹைகோர்ட் உத்தரவு போட்டும், நயவஞ்சகமாக தமிழக போலீஸ்  தீண்டாமை கொடுமையை 
கடைபிடித்துள்ளது! வேலியே பயிரை மேய்வதா?

ஜெயலலிதா அரசே தீண்டாமையை வளர்ப்பதா? ஜெயலலிதா அரசின் தலித் விரோதப் போக்கைக் கண்டிப்போம்! 

ஹைகோர்ட் உத்தரவுக்கு விரோதமாக செயல்பட்ட, தீண்டாமை கொடுமையை கடைபிடித்த காவல்துறையினர் அனைவர் மீதும் வன்கொடுமை சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திடுக!

!!!!!!!!எதுஎதற்கோ ஒப்பாரி வைக்கும் ஊடகங்களே, இந்த வன்கொடுமை உங்கள் கண்களில் படவில்லையா???????
----\\\\

ஜல்லிக்கட்டுக்கு அவசரச்சட்டம் இனி தீர்வல்ல!
ஜல்லிக்கட்டுக்கு அவசரச்சட்டம் இனி தீர்வல்ல; அதுவும் மீண்டும் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்! மத்திய அரசு இனி எதுவும் செய்யாது! சட்டி சுட்டதடா; கை விட்டதடா! ன்னு கதையை முடித்துக் கொள்ளும்!

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறிவிட்டார்... 'மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், அதற்கு உதவுவோம்' என்று கள்ளனை குள்ளன் தட்டுவதும், குள்ளனைக் கள்ளன் தட்டுவதுமான நாடகம் இனி முடிந்துவிட்டது! தமிழக மக்களை முட்டாள் ஆகியதுதான் மிச்சம்; வேறொன்றுமில்லை!

போதும் இந்த ஜல்லிக்கட்டு விவாதம்! நாகை மாவட்டம் செல்லமுத்து (82) தலித் பெரியவர் பிணத்தை பொதுப்பாதையில், எடுத்து செல்லாமல், மீண்டும் தலித்க்கான பாதையில், ஹைக்கோர்ட் உத்தரவையும் மீறி எடுத்து சென்று, தீண்டாமை கொடுமை செய்த தமிழக அரசின் காவல்துறை மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க விவாதியுங்கள்! புண்ணியம் கிடைக்கும்! வேலியே பயிரை மேய்ந்திருக்கிறது!

இன்று 13.1.16 PTTV மக்கள் மேடை மற்றும் நேர்பட பேசுக்கு..!
----\\\\
ஆழ்ந்த அஞ்சலி
சுதந்திரப் போராட்ட வீரரும், ஜனதா தள தலைவரும், ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தின் மூத்த அரசியல் தலைவருமான ஜிஏ.வடிவேலு (92) 13.1.2016 இல் சிகிச்சை பலனின்றி  சேலம் தனியார் மருத்துவனையில் காலமானார்!


அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலியை சிபிஐஎம் சேலம் மாவட்டக்குழு செலுத்துகிறது. அன்னாரை இழந்து வாடும் ஜனதா தள கட்சிக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது!
----\\\\
 "வறுமையின் கொடுமை..!"
🌻🌿🌹🌾🌴 
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் கருமாபுரம் விவசாயின் 20 கிலோ எடையுள்ள அதிசய பூசணி...! இதை உண்ண கொடுத்து வைத்தவர்கள் யாரோ...!? அவர்களுக்கு வாழ்த்துக்கள்..! ஆம், இதனை விளைவித்த விவசாயின் குடும்பத்திற்கும் தான்!

இதிலே இன்னொரு சோகம் சூல் கொண்டிருப்பதை என்னால் புறம்தள்ள முடியவில்லை! 

ஆம்! இந்த அதிசய பூசணியை விளைவித்த குடும்பம், இந்த பொங்கலில்... அக்கம் பக்கம் உள்ள உற்றார், உறவினர், நண்பர் குடும்பங்களுடன் பகிர்ந்து கொண்டு இந்த உழவர் திருநாளைக் கொண்ட முடியவில்லையே..! 

இது வாழப்பாடி சந்தைக்கு வந்துவிட்டதே! இதுதான் விவசாயின் வறுமையின் கொடுமை..! இதுவே சுதந்திர இந்தியாவின், தமிழகத்தின் சாதனை..!?
-----\\\\
"ஜல்லிக்கட்டு: சதிகாரர்களும் சரியாசெய்யாதவர்களும்!"

இன்று 14.1.16 PTTV புதுப்புது அர்த்தங்களில் சுமன் சி ராமன், அய்யநாதன், ஜென்ராம்... 

முதல் பகுதியில், புத்தகங்கள் வாசிப்பு குறித்த ஜென்ராம் பதிவு அருமை! பெரும்பாலான 'அந்த' கால இளைஞர்களான இக்கால சில, பலருக்கு ஆரம்பத்தில்... "ஆன்மீக கவ்வியது; அதன்பின் ஈரோடு தாடிக்காரர் தொட்டு, ஜெர்மனி தாடிக்காரால் கவரப்பட்டவர்களின் நானும் ஒருவன்" என ஜென்ராம் பதிவு நச்! 

இன்றைய இளைஞர்கள் அவ்வண்ணம் இல்லை என்று சொல்லிவிட முடியாது! இருக்கிறார்கள்; அதுவும் அன்றைய திசைத்திருப்பலைவிட ஆயிரம் மடங்கு இருக்கும் சூழலில் இருக்கவே செய்கிறார்கள்! 

பிற்பகுதி ஜல்லிக்கட்டு... மத்திய மாநில அரசுகளின், அவர்களின் பாஜக, அதிமுக கட்சிகளின் தேர்தல் ஆதாயத்தில் போட்ட கணக்குகளில் பரிதாபமாக தோல்வியை தழுவி உள்ளார்கள்! இதுதான் தேர்தலில் நடக்கப்போகிறது! நேற்று முதல் "சட்டம் என்ன சட்டம்? பொடலங்காய் சட்டம்,  பொடலங்காய் கோர்ட்?" என்றெல்லாம் முத்துகள் உதிர்த்து வருகிறார்கள்! 

சதிகாரர்களும் சரியாசெய்யாதவர்களும் பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக வே! இதை ஜல்லிக்கட்டு ரசிகர்கள் புரிந்துக் கொள்வதை விடுத்து, "வெளிநாட்டு சதி, பீட்டா,  ரீட்டா" என கோபம் திசைமாறல் சரியா? அதற்கு ஊடகங்கள் வெளிச்சமிடுவதேன்?
-----\\\\
நிச்சயம் மாறுதல் வேண்டும்! 
"தமிழர்" வாழ்வியலில் தைத்திருநாள் என்று குறுக்காமல், அல்லது சுருக்காமல், "உழவர்" வாழ்வியலில் தைத்திருநாள் திருநாள் என்றே பரந்துப்பட்டு கொண்டாடுவோம்! 

மக்களின் வாழ்வியல் பண்பாடு என்பதே ஆளும் வர்க்கத்திற்கு அடிமையாக இருப்பதுதான்! இன்னும் சொல்லப்போனால், ஆண்டான் அடிமையின் அடையாளமே பண்பாடு என்பது! 

மக்களின் வாழ்வியல் இன்றைய விஞ்ஞான தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நிச்சயம் மாறுதல் வேண்டும்! 

பழைய பண்பாடான ஆண்டான் அடிமை பண்பாட்டை உடைத்தெறிந்து, ஜாதி-மதம்- மொழி-இனம்-பிரதேசம் பாகுபாடற்ற சமத்துவ பண்பாடாக அது உருமாறிட வேண்டும்!

இன்று 14.1.16 PTTV மக்கள் மேடை! இதன் ஒருபகுதி பதிவேற்றம் ஆகி உள்ளது!
----\\\
கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல்
ஜல்லிக்கட்டு தடைப்பட்டதற்கு காரணம் பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் கொள்கைகளே! 

காங்கிரஸ்-திமுக நினைத்திருந்தால், சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தீர்வு கண்டிருக்கலாம்! அதுபோல் பாஜக-அதிமுக உருப்படியாக செயல்பட்டிருந்தால், தற்போது இதற்கு தீர்வு கண்டிருக்கலாம்! 

பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் ஆவேசப்படுவது அக்கரையில் அல்ல; அரசியல் லாபத்தின் கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் கணக்கே தவிர வேறென்ன?

இன்று 14.1.16 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் ஆகி உள்ளது!
-----\\\\\
பழையன கழிய வேண்டியவை... 
பழையன கழிய வேண்டியவை... அரசியல் வானில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளும், அவர்களின் மக்கள் விரோத கொள்கைகளும்! 

மதவாத-பன்னாட்டு ஆதரவு பாஜகவும், காங்கிரஸின் பன்னாட்டு ஆதரவு கொள்கைகளும் பழைய பட்டியலில் இருப்பவையே!

தமிழகத்தில் புதியன புக வேண்டியது, புதுப் பொலிவுடன் களம் புகுந்துள்ள "மக்கள் நலக்கூட்டணியும், அதன் குறைந்தபட்ட செயல்திட்டங்களும்!"

சாதி-மதவாதம்-ஊழல்- பன்னாட்டு சுரண்டல் போன்றவை ஒழிய வேண்டிய பழயன..! 

மக்கள் ஒற்றுமை, சமூக பாதுகாப்புடனான வேலை, தீண்டாமை ஒழிப்பு, பாலின சமத்துவம் போன்றவை புக வேண்டிய புதியன..!

இன்று 14.1.16 News 7 ?கேள்வி நேரம்!
----\\\\
வந்திரிச்சய்யா... வந்திரிச்சி..
"நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி ராமர் கோயில் கட்டி முடிக்க வேண்டும்!" -விஎச்பி தலைவர் தொகாடியா. (இந்து தமிழ் 15.01.16).

😽😽😽 வந்திரிச்சய்யா... வந்திரிச்சி... பூனக்குட்டி வெளிய வந்திரிச்சய்யா... வந்திரிச்சி..! இதுக்குத்தான் ஆசைபட்டாயா... தொகாடியா...? 😽😽😽
----\\\\
எந்தவித பேதமும் பார்க்க முடியாது!
உழவர்களின் மனநிலை இன்றல்ல, என்றுமே ஒரே மனநிலைதான்; இதைத்தான் அவர்கள் இயற்கையிடமும், ஆள்வோரிடமும் எதிர்ப்பார்கள்!


"முப்போகமும் மழை பெய்ய வேண்டும்;  முப்போகமும் விவசாயம் செய்ய வேண்டும்; தான் விளைவிக்கும், அல்லது உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு கட்டுபடியான விலை வேண்டும்; அதன்மூலம் தன் குடும்பமும் இந்த வையகமும் வாழ்வாங்கு வாழ வேண்டும்!" என்று!

அதனால்தான் அவர்கள் பொங்கலோ பொங்கல் என்று உணர்வுபூர்வமாக உரக்க உற்சாகம் பொங்க குரல் எழுப்புகிறார்கள்! அதிலே எந்தவித பேதமும் பார்க்க முடியாது! கிடையாது!  

இன்று 15.1.16 PTTV மக்கள் மேடை..!
-----\\\\
வீரியம் குறைந்து வருகிறது!
உழவை தமிழ்ச்சமூகம் இன்றுவரை போற்றித்தான் வருகிறது; ஆனால் அதன் வீரியம் குறைந்து வருகிறது என்பதையும் காணமுடிகிறது! 

சொந்த மண்ணைத் தேடி போவது வேர்களைத் தேடிதான்; என்றாலும் நகர வேதனைகளில் இருந்து, சற்றே சில நாட்களாவது நிம்மதி பெருமூச்சு விடவும்தான்!

ஆள்வோரின் கொள்கையால் தான் பாரம்பரிய கிராம வேர்களைத் துண்டித்துக் கொண்டு, உழவர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்! அதற்கு காரணம் இரண்டு... ஒன்று-- இயற்கை பொய்த்து போய் துன்பத்தில் ஆழ்த்துவது; மன்றொன்று-- ஆட்சிகளின் விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பாதுக்காக்காமல் தட்டிக் கழித்து கொண்டிப்பது!

இன்று 15.1.16 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது!
-----\\\\
மக்களின் பக்தி பரவசம்! 
"755 ஃபேர்பாட்ஸ்சில ஓடாத வண்டி... இந்த இத்திலியூண்டு எலுமிச்ச பழத்திலாடா ஓடுது..?" 
- இது சின்ன கலைவாணன் விவேக் கின் புகழ்பெற்ற காமெடி! 

தற்போது (16.1.16) ஒரு டிவிஎஸ் 50 மொஃபட் பார்த்தேன்; அதில் ஒரு திஷ்டி எலுமிச்சை "பிளாஸ்டிக்" கில் "அடிவாங்கி" இருந்தது! இதுதான் நமது மக்களின் பக்தி பரவசம்! 

தினமோ, வாரமோ ஒரு பழம் வாங்குவதற்கு கூட வசதியில்லாமல் தான் வாழ்க்கை ஓடுகிறதா? "சமுதாயத்தின் எல்லா உறவுகளும் பொருளாதார உறவுகளே!" என்பார் மாமேதை மார்க்ஸ்! அதுதான் இதுவோ..?!
----\\\\
🌴🌴 அந்த நினைவுகளில் ஒன்று..! 🌴🌴 

அதே காலக்கட்டத்தில் ஆர்மோனியம், தபாலா போன்றவைகளை கற்றுக்கொள்ள முயற்சித்து முடியாது போனவர்களில் அடியேனும் ஒருவன்! ஆம், முருக விஜயம், முற்றுப்புள்ளி போன்ற தெருமுனை நாடகம் காவிரிக்குழு (மேட்டூர்) சார்பில், நடத்தியபோது இந்த முயற்சி நடந்தது! இதற்கு தோழர் ராமசாமி மில் தொழிலாளி ஆர்கஸ்ட்ரா நடத்தி வந்தார்; அவர்தான் நாடகத்திற்கு இசை அமைத்தார்! 

1980-81 னோ நினைவில்லை; சேலம் நேரு கலையரங்கில் கூட்டுறவு சங்க ஊழியர் சிறப்புக் கூட்டமோ, மாநாடோ நடந்தது; அதில் இந்த நாடகத்தில் முருகனாக நடித்தேன்; முற்றுபுள்ளியில் என்ன ரோல் என்று நினைவில்லை; திரை இசையில் அன்று புகழ்பெற்ற ராஜா-ஜிக்கி பாட்டுக் கச்சேரி! இவர்களும் இதை பார்த்து ரசித்து பாராட்டினார்கள்! 

சுமார் 2000 க்கும் மேலானோர் கலந்துக்கொண்டனர். மறைந்த விபி.சிந்தன் கலந்துக்கொண்டதாக நினைவு; மறைந்த மோளிப்பள்ளி வி.ராமசாமி அன்று நட்சத்திரப் பேச்சாளர் சேலம் மாவட்டத்தில் அன்று! அவர்களும் பாராட்டினார்கள்! இப்படியான அன்றைய நினைவுகளை கிளறிய இந்த பதிவாளர் தோழர் துருவன் பாலா க்கு நன்றி!
----\\\\
🎸 இசைஞானியா?இசைபோனியா?🎻
 🎼 🎶 
கட்சி அலுவலகத்தில் வாடகைக்கு ரூம் தராதது இளையராஜாவிற்கு நேர்ந்தகொடுமையாமாம்..! இதை ஐமாபா செய்துவிட்டாராமாம்..! இது நடந்திருந்தால், அதுஅவரது மனதை புண்படுத்தி இருந்தால், அதை எல்லாம் சொல்கிற காலமா இது? இதிலிருந்தே இவர் எவ்வளவு பெரிய சுய நலவாதி என்பது தெரிந்துவிட்டது அல்லவா? இவரு வாடகைக்கு கேட்டாராம்தரவில்லையாம்! இதைவிட பெரிய பித்தலாட்டம் வேறெதுவும் இருக்காது! 

இன்றைக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் யாராவது மாறுவேடம் போட்டுகிட்டுபோய்பார்த்தால் தெரியும் எத்தனை எத்தனை இளைஞர்கள் இலவசமாக தங்கி தங்களது உயர்கல்வியை படித்து வருகிறார்கள் என்று! இதுமாதிரி ஆயிரமாயிரம் மாணவர்கள் இன்று தமிழகம் முழுவதும் நல்ல உத்தியோகத்தில் இருப்பதை நாடு அறியும்! இந்த மவராசன் குடும்பம் "தன் மக்கள்" முன்னேற்றத்திற்கு செய்ததை சொல்லுவாரா? சுய நல மனிதனின் உலறலை விட்டு தள்ளுவதே சால சிறந்தது!

ஏரிய ஏணியை எட்டி உதைப்பதுதானே தமிழன் மன்னிக்கவும் மனிதன் பண்பாடு! அதற்கு இந்த குடும்பம் மட்டும் விதிவிலக்காக இருப்பார்களா? என்ன! எல்லாம் காசு பணம் துட்டு மணி மணி மயம்..! வேறென்ன? விடுங்க..! பாவலர் தனி..! இளையராசா பக்திமான்... கங்கைஅமரன் பாஜக அய்க்கியம்..! எல்லாம் நன்றி கெட்ட உலகம்..! 

கம்யூனிச இயக்கம் தனிநபரை பயன்டுத்திக் கொண்டதா? தனிநபர்கள் கம்யூனிச இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டனரா நானறிந்த வகையில் தனிநபர்கள் தான் கம்யூனிச இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்! சிலர் கம்யூனிச இயக்கத்தை பயன்படுத்தி, தவறான வழியில் சென்றதனால், வெளியேற்றப்பட்டு உள்ளனர்! சந்திரன் எந்த ரகம்? இளையராஜா எந்த ரகம்? வாலிதாசன் விபரம் வழங்குவாரா?
----\\\\
அராஜகமாக அடக்கம் கண்டிக்கத்தக்கது!
நாகை: தலித் முதியவர் செல்லமுத்து (82) பிணம், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவையும் மீறி, பொதுப்பாதையில் எடுத்துச் செல்லாமல், தலித்க்கான பாதையில் போலீஸே எடுத்து சென்று அராஜகமாக அடக்கம் கண்டிக்கத்தக்கது!

8 நாட்கள் பேரன் கார்த்திகேயன் போராடியும், பொதுபாதையில்  எடுத்து செல்ல ஹைகோர்ட் உத்தரவு போட்டும், நயவஞ்சகமாக தமிழக போலீஸ் தீண்டாமை கொடுமையை கடைபிடித்துள்ளது! வேலியே பயிரை மேய்வதுபோல்தான்! 

ஜெயலலிதா அரசே தீண்டாமையை வளர்ப்பதா? ஜெயலலிதா அரசின் தலித் விரோதப் போக்கைக் கண்டிப்போம்! 

ஹைகோர்ட் உத்தரவுக்கு விரோதமாக செயல்பட்ட, தீண்டாமை கொடுமையை கடைபிடித்த காவல்துறையினர் அனைவர் மீதும் வன்கொடுமை சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திடுக!

எதுஎதற்கோ ஒப்பாரி வைக்கும் ஊடகங்ககளுக்கு மத்தியில் இந்த வன்கொடுமை உங்கள் கண்களில் பட்டதற்கு சந்தோசம் நன்றி!

காவல்துறையை தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் கண்டிப்பு வரவேற்க தக்கது! தொடரும் ஜாதிய வேறுபாடுகளுக்கு  நிலப்பிரபுத்துவமும், வர்ணாசிரம சித்தாந்தமுமே காரணம்!

இன்று 16.1.16 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது!
----\\\\
மனித நேயம் மலந்திட... பொங்கல் விழா..!
###சேலம் மாநகரம் மேற்கு, பிள்ளையார் நகர் A,B கிளைகள் சார்பில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி DYFI... 10 ஆம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது!  நிகழ்ச்சியின் ஒரு நிகழ்வாக மாலை கருத்தரங்கம் நடைபெற்றது!  

"அரசின் இலவசங்கள் மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்துமா?" என எழுத்தாளர் சுபொ.அகத்தியலிங்கம்; "இன்றைய சினிமாவும் யதார்த்த நிலையும்" என திரைப்பட விமர்சகர் பி.தங்கவேலு ஆகியோர் கருத்துரை வழங்கினர்! நிகழ்வு... பி.கணேசன் மாநகர செயலாளர் (மே), தலைமையில் நடைபெற்றது!
----\\\\
முழுக்க முழுக்க அரசியல்..!
அவதூறு வழக்கில் கருணாநிதி ஆஜரானது முழுக்க முழுக்க அரசியல் ரீதியானது! சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், தான் சட்டத்தை மதிப்பவன் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியின் ஒருபகுதி இது! 

கட்சி சார்பற்ற முறையில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பது புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என்மீது படுத்துக்கொள்ளுங்கள் என்கிற கருணாநிதியின் "நரித்தந்திரமே!" 

இது தான் அல்லது தன் மகன் முதல் அமைச்சர் ஆக வேண்டும் என்கிற உரிய "பொதுநலனே" தவிர, இதில் மக்கள் நலன் ஒன்றும் எள்ளளவும் இல்லை!

இன்று 18.1.16 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றமாகி உள்ளது.
----\\\
மது அரக்கனை விரட்டி அடிப்போம்! 
👹👺👾 
சேலம் அஸ்தம்பட்டி டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி... 17.1.16 இல் நடத்திய ஜனநாயக ரீதியான போராட்டத்தில், வாலிபர்-மாதர் சங்க தலைவர்கள் மீது கண்மூடித்தனமான, காட்டுமிராண்டித்தனமான தடியடி தாக்குதல், தகாத கெட்ட வார்த்தைகள் தாக்குதல்... 

இதனைக் கண்டித்தும், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட பொய்வழக்கை வாபஸ் பெற கோரியும், இன்று 18.1.16 நங்கவள்ளி, தாரமங்கலம், அயோத்தியாப்பட்டிணம் ஆகிய இடங்களில் மாதர்-வாலிபர் ஆவேச ஆர்ப்பாட்டம்!

டாஸ்மாக் "அம்மா" வின் அராஜக ஆட்சிக்கு ஆணி அடிப்போம்! மக்கள் நலன் பேணும் மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைப்போம்! மது அரக்கனை விரட்டி அடிப்போம்! மக்களை காப்போம்!
----\\\\
நின் நினைவை...நெஞ்சில் ஏந்தியே...!
🌹🌷🌹 
ரோஹித் வெமுலா..! 
நீ முழு நிலவா ஜொலிக்க வேண்டியவன்!  
உன்னை அந்த பார்ப்பனியம் தீண்டிவிட்டது! 
இங்கேயும்...
அதன் கிளை வேர்கள் இளவரசன் 
கோல்குராஜ் போன்றவர்களையும் தீண்டி இருக்கிறது!  அவ்வளவு ஏன்..?மாயணம்கூட இங்கே பொது கிடையாது! 
இந்த இந்துத்துவா பார்ப்பனியத்தை இடுக்காட்டுக்கு அனுப்ப சபதம் ஏற்கிறோம்! 
ஆம், 
தலித்தியமும், மார்க்சியமும் கைகோர்த்து 
கணக்கு தீர்க்கும் காலம் வெகுதொலைவில் இல்லை! 
உம் பெயர் எங்களுக்கு ஆதர்சனம் ஊட்டிக்கொண்டே இருக்கும் சனாதனத்தின் ஊட்டி யை (குரல்வளை) அறுக்கும் வரை!
பார்ப்பனியத்தை வேரறுப்போம்! இந்துத்வாவை இந்தியாவில் இருந்து விரட்டியடிப்போம்! இதுதான் ஒரே தீர்வு! மார்க்சீயமே அதற்கான ஒரே மார்க்கம்!
அந்த தீர்வை நோக்கி... எங்கள் பயணம் 
நின் நினைவை 
நெஞ்சில் ஏந்தியே...!
----\\\\
டாஸ்மாக் பொங்கலா? 
தை பொங்கலா? 
தமிழர் திருநாளா? 
எது? எது? எது? 
யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்..!  
உழவர் திருவிழாவை ஒட்டி, ஜனவரி 14,15,17 ஆகிய 3 நாட்களில் மட்டும்  அம்மா அரசின் மது விற்பனை ரூ365 கோடி! 
ஏய்..! 
தமிழகமே... 
நீ எங்கே சென்று கொண்டு இருக்கிறாய்...!? 
இதற்காகத்தான் 
இந்த அடி அடித்து 
தமிழனுக்காக உழைக்கிறதா தமிழ்நாட்டின் அம்மா அரசு..?
----\\\\
ஜாதி பாடுகள் என்றும்..
உயர் கல்வி நிறுவனங்களில் ஜாதி பாடுகள் என்றும் நிலவிக் கொண்டுதான் இருக்கிறது! அது, தற்போது ஜாதியத்தை போற்றும் இந்துத்துவா ஆதரவு பாஜக ஆட்சி மத்தியில் மிருக பலத்தில் இருப்பதால், அதன் மிருக குணம் வெடித்து கிளம்புகிறது வெட்கி தலைகுணியும் வண்ணமாக!

ரோஹித் வெமுலா..! உன்னை அந்த பார்ப்பனியம் தீண்டிவிட்டது! 
இங்கேயும்... அதன் கிளை வேர்கள் இளவரசன் கோல்குராஜ் போன்றவர்களையும் தீண்டி இருக்கிறது!  அவ்வளவு ஏன்..? மாயணம்கூட இங்கே பொது கிடையாது! 

இந்துத்வாவை இந்தியாவில் இருந்து விரட்டி அடித்தால் மட்டுமே சாதிபாகுபாடு ஒழியும்! அதற்கு ஒரே வழி தலித்திய பெரியாரிய மார்க்சிய வழியே இதற்கு தீர்வாக அமையும். 

இன்று 19.1.16 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது!
----\\\\
மக்கள் நலக் கூட்டணி:மதுரை மாநாட்டில்...
மக்கள் நலக் கூட்டணியின் சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று 19.1.16 அன்று மாலை சிபிஐஎம் அலுவலகத்தில் ஆ.ஆனந்தராஜ் மாநகர மாவட்டப் பொறுப்பாளர் தலைமையில் நடைப்பெற்றது! இதில் விசிக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கோ.ஜெயசந்திரன் மாநகரம், அ.வசந்த் வடக்கு, சிக.முத்து கிழக்கு, அய்யாவு மேற்கு, சிபிஐ மாவட்டச்செயலாளர் ஏ.மோகன், சிபிஐஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு ஆகியோர் கலந்துக்கொண்டு பேசினர். 

ஜனவரி 26 மதுரை பொதுவெளி மாநாட்டில் பல்லாயிரவர் பங்கேற்பது என்றும், பிப்ரவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடத்திடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது! மக்கள் நலக் கூட்டணியின் வெற்றிக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது!
----\\\\
முன்னோடி மாநிலம்...!
தமிழகம்  முன்னோடி மாநிலம் என்பது உண்மையே! எதில்? மதுவிற்பனையில்..! 
ஆளுனர் உரை ஏற்கதக்கதல்ல; விமர்சனத்திற்கு உள்பட்ட தேர்தல் உரை என்பதில் சந்தேகமில்லை!

எதிர்கட்சிகளின் வெளிநடப்பு  சரியானதே! ஆனால் அதற்கு திமுக பொருந்தாது என்பதே உண்மை; அதன் வெளிநடப்பும் தேர்தலை மனதில் கொண்டுதான்! 

இடதுசாரிகளின் வெளிநடப்பு மட்டுமே விவேகமானது;  நியாயமானது; பொருத்தமானது!
ஆளுனர் உரைதான் வெற்று அரசியல்!

இன்று 20.1.16 PTTV நேர்பட பேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது!
----\\\\
சேலத்தில் த.தீ.ஒ.மு கண்டன ஆர்ப்பாட்டம்! 
👊👊👊 
நாகை: தலித் முதியவர் செல்லமுத்து (82) பிணம், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவையும் மீறி, பொதுபாதையில் எடுத்துச் செல்லாமல், தலித்க்கான பாதையில் போலீஸே எடுத்து சென்று அராஜகத்தைக் கண்டித்தும்.....

ஹைகோர்ட் உத்தரவுக்கு விரோதமாக செயல்பட்ட, தீண்டாமை கொடுமையை கடைபிடித்த காவல்துறையினர் அனைவர் மீதும் வன்கொடுமை சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திட வலியுத்தியும்...

ஹைதராபாத் பல்கலை ஆராய்ச்சி தலித் மாணவன் ரோஹித் வெமுலாவைப் பார்ப்பனியம் தீண்டிவிட்டத்தைக் கண்டித்தும், சம்மந்தப்பட்ட மத்திய அமைச்சர்கள், துணை வேந்தர் ஆகியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும்...

இன்று 21.1.16  சேலத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
----\\\\ 
பாராட்டு..!
சங்ககிரி ஜோதிபாசு நினைவகத்தில்   சிபிஐஎம் சேலம் மின் அரங்க இடைக்குழு  சிறப்பு பேரவை!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களிடம்...  சேலம் மின் அரங்க இடைக்குழு சார்பில் ரூ2 லட்சம் கட்சி மற்றும் தேர்தல் நிதி இலக்கை முடித்து வழங்கப்பட்டது!

மின் அரங்க இடைக்குழுவை சேலம் மாவட்டக்குழு நெஞ்சாரப் பாராட்டுகிறது!
-----\\\\
மோசடிசெயலே இது!
மதுவிலக்கு சாத்தியமில்லை என தமிழக அரசு கைவிரிப்பது மக்களை மேலும், மேலும் ஏமாளிகளாக்கி, மது மயக்கத்திலேயே வைத்து, மக்கள் விரோத பாதையில் சென்றிடும் மோசடிசெயலே இது!

மதுவிலக்கு நிச்சயம் சாத்தியமே! முடியாது என்று என்று சொல்வதல்ல ஒரு பொறுப்புள்ள அரசின் பணி! தமிழக மக்கள் இனியாவது புரிந்து கொண்டு, மக்கள் நலக் கூட்டணியை (இத் தலைவர்கள் இன்று மதுவிலக்கு சாத்தியம் என்று அறுதியிட்டு கூறி உள்ளார்கள் என்பதை கவனிக்க) ஆதரித்தால், தமிழகம் தலைநிமிரும்!

தமிழக அதிமுக வாக இருந்தாலும், திமுக வாக இருந்தாலும், தங்களால் ஆகாத ஒன்றை அல்லது தங்களுக்கு ஆதாயமாக இருக்கும் ஒன்றை எதிர்கட்சிகள் எதிர்த்தால், கொஞ்சமும் அச்சமில்லாமல் மத்திய அரசுகளின் மீது பழியை போட்டுவிட்டு, தான் தப்பித்துக் கொள்ளும் அரசியல் சதியின் வெளிப்பாடே இது; அப்படித்தான் தற்போது அதிமுக தமிழக அரசு மத்திய அரசின் மீது பழி பாவத்தைப் போடுவதுபோல் தெரிகிறது மதுவிலக்கு பிரச்சனையில்!

இன்று 21.01.16 PTTV நேர்படபேசு!
----\\\\ 
சொந்த செல்வாக்கு மீதான நம்பிக்கை குறைவே!
ஆளும் அதிமுக, ஆண்ட திமுக மற்றும் மத்தியில் ஆளும் பாஜக, ஆண்ட காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அஞ்சுவது அவர்கள் கடைபிடிக்கும் பெரும் பெரும் முதலாளிகள் ஆதரவு கொள்கைகளே காரணம்! வேறு வார்த்தையில் சொன்னால் அவர்கள் கடைபிடித்து வரும் வெகுமக்கள் விரோதக் கொள்கைகளே காரணம்! ஆனால், வளரும் கட்சிகள் தனித்து போட்டியிட அஞ்சுவது, தங்களின் சொந்த செல்வாக்கு மீதான நம்பிக்கை குறைவே!

வேட்பாளர் தேர்வு, வேட்பு மனு பெறுதல் என்பதெல்லாம் வெறும் சம்பரதாயமே! தலைமை வேட்புமனு பெறும் முன்பே வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டு ஆடும் நாடகம் இது!

அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், பாமக உள்ளிட்டு முதலாளித்துவ கட்சிகள் எல்லாம்... குறிப்பாக இடதுசாரி கட்சிகள் தவிர பெரும்பாலான கட்சிகள் ஜாதி, மதம், இனம், மொழி, பணம் போன்ற அம்சங்களை முன்வைத்தே வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கின்றன என்பதுதான் கசப்பான உண்மை! 

தற்போதைக்கு உண்மையான தொண்டர்களை கண்டுக் கொள்வது கம்யூனிஸ்ட் கட்சிகளும், விசிகவும், மதிமுகவும் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி மட்டுமே தற்போதைக்கு உண்மையான தொண்டர்களை கண்டுக் கொண்டு  வேட்பாளர்களாக தேர்வு செய்யும்!

இன்று 22.1.16 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றமாகி உள்ளது! 
----\\\\
"மிரட்டப்பட்டிருப் பார்களோ..?" 
👲👲👲 
சாகித்திய அகாடமி விருதைத் திருப்பித் தந்ததைத் திருப்பிப் பெறுதலுக்குக் கூறும் காரணத்தில் உண்மை இருப்பதுபோல் தெரியவில்லை என்றே தோன்றுகிறது! 

ஒருவேளை இவர்கள் மிரட்டப்பட்டிருப் பார்களோ..? 

அப்படி மிரட்டப்பட்டு    திரும்பப்  பெற்று இருந்தாலும், அல்லது தானாகவே திரும்பப் பெற்றிருந்தாலும்...

அது..!?

அதாவது விருதைத் திரும்பப் பெற்ற அன்றைய முடிவு அரைவேக்காடு அவசர முடிவு என்றால்... தவறாகுமா? 

தமிழக எழுத்தாளர்கள் விருதைத் திருப்பித் தராமல், எதிர்ப்பு தெரிவித்தது தான் சரி... என்பதையே இது காட்டுகிறது எனலாமா?
-----\\\\\ 

No comments:

Post a Comment