அது "புரட்சித்திருவிழா!"
தேர்தலைத் "திருவிழா" என்றதன் அர்த்தம் என்னவோ? திருவிழாக்கள் பெரும்பாலும் கூடிக் கலைவதே! அப்படியா தேர்தல்? மக்களின் உச்சபட்ச ஜனநாயக உரிமையை பயன்படுத்து தேர்தல்! இது மக்களின் "தலைவிதி" ஐந்தாண்டுகளுக்கு நிர்ணயம் செய்யும் ஒரு வரலாற்று நிகழ்வு!
ஆனால், திருவிழாவில் "தலைவிதி" மாறுமா? என கோவிலில் கும்பிட்டுவிட்டு வந்துவிடும் ஒரு சடங்கு! அப்படியான சடங்காத் தேர்தல்?! இல்லை; நிச்சயமாக இல்லை!
அனைத்து மக்களும் பங்கேற்று, ஆளும் முதலாளி வர்க்கத்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கி, உழைப்பாளி வர்க்கம் ஆட்சியைப் பிடிப்பதை "புரட்சி" என்றும், அது "மக்களின் திருவிழா" என்றும் மாமேதை லெனின் சொல்வார்!
ஆம்! லெனின் கனவை நனவாக்கவே தமிழ்நாட்டில் இடதுசாரிகள் உள்ளிட்டு "மக்கள் நலக் கூட்டணி" உருவாக்கப்பட்டு உள்ளது! இதை ஆதரித்து ஆட்சி அதிகாரத்தில் மக்கள் அமரவைத்தால்... அது "புரட்சித்திருவிழா!" அதைத்தான் தாங்கள் "தேர்தல் திருவிழா" என்று குறிப்பிட்டு உள்ளீரென நான் நம்புகிறேன்!
இன்று 6.1.16 News 7 ?கேள்வி நேரம்!
----\\\\
மல்லுக்கட்டு நன்றாகவே நடக்கிறது!
ஜல்லிக்கட்டு நடக்கிறதோ இல்லையோ மல்லுக்கட்டு நன்றாகவே நடக்கிறது! இதை தமிழக மக்கள் பார்த்து ரசிக்கலாம்!
ஆனால் ஜல்லிக்கட்டு நடப்பதற்கான எந்தவித நம்பிக்கை வெளிச்சமும் தெரியவில்லை!
ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மத்திய அரசை நம்புவதுதான் வேடிக்கையாக இருக்கிறது!
இன்று 4.1.16 PTTV மக்கள் மேடை!
------\\\\\
சட்டரீதியாக எதிர் கொண்டிருக்க வேண்டும்!
ஜல்லிக்கட்டுக்கு இன்று மத்திய அமைச்சர் அனுமதி அளித்திருப்பது மாநில உரிமையை மதிப்பதல்ல; மாநில தேர்தலை சந்திப்பது! அடுத்த ஆண்டு வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிக்கொள்ளும்! காரணம் இது மத்திய அரசின் முடிவல்ல, மத்திய அமைச்சரின் முடிவு! இரண்டும் வேறுவேறு!
மாநில உரிமையை மத்திய அரசு மதிப்பதாக இருந்தால், ஜல்லிக்கட்டு பிரச்சனையை சட்டரீதியாக எதிர் கொண்டிருக்க வேண்டும்! அதாவது மத்திய அமைச்சரவையிலோ, பாராளுமன்றத்திலோ முடிவு செய்து, "தமிழக மக்களின் பாரம்பரிய உரிமை இது" என உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சொல்லி, "புரிய வைத்து", "மிருகவதை ஒன்றும் இதில் இல்லை" என்று உச்சநீதி மன்றமே "உத்தரவு" போட்டிருந்தால், "ஆதாயமற்ற அரசின் செயல் இது" எனலாம்!
மத்திய அமைச்சரின் இந்த உப்புசப்பற்ற ஆணையை உயர்நீதி மன்றம் ஏற்காது! அப்படி ஏற்றால் இதுநாள் வரை உச்சநீதி மன்றம் சட்டரீதியாகதான் செயல்பட்டதா? தடை எதற்கு வழங்கியது? போன்ற கேள்விகளுக்கு அது, தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்! அல்லது "குருட்டாம் போக்கில்" ஜல்லிக்கட்டுக்கு தடை வழங்கியதாகவே மக்கள் கருத இடமிருக்கிறது!
இன்று 8.1.16 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றமாகி உள்ளது!
---\\\
கை வந்த கலை!
திமுக காங்கிரஸ் அன்று வெட்டிக் கொண்டார்கள்; இன்று ஒட்டிக் கொள்வார்கள்! கேட்டால் உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்பார்கள்! திமுகவும் காங்கிரஸும் அடிப்பது போல் அடித்துக் கொள்வதும், அழுவது போல் அழுவதும் இவர்களுக்கு கை வந்த கலை!
தமிழத்தில் நடக்கும் "நாடக அரசியலுக்கு" உண்மையான மாற்றாக குறைந்தபட்ச செயல் திட்டத்துடன் மக்கள் நலக் கூட்டணி களம் இறங்கி உள்ளது. இது திமுக அதிமுக வுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை சமீபத்திய இக்கட்சிகளின் நிகழ்ச்சிப்போக்கு காட்டுகிறது!
சாதி-மத சார்பற்ற ஜனநாயக கட்சிகளை கொண்ட அணியை, திமுக அதிமுக க்கு மாற்றாக தேமுதிக, தமாகா கட்சிகளை வெளிப்படையாக மக்கள் நலக் கூட்டணி அணுகுவது ஒரு ஆரோக்கியமான அரசியலின் திறவுகோல் தானே!
இன்று 4.1.16 PTTV நேர்பட பேசு! இதன் ஒரு பகுதி பதிவேற்றமாகி உள்ளது!
------\\\\\
காட்டுக்கூச்சல் தேவையற்றது
இன்று 5.1.16 PTTV புதுப்புது அர்த்தங்களில் அணுஉலை தேவை, அதன் பாதுக்காப்பு குறித்து சமன் வாதம் சரியே! என்றாலும் காட்டுக்கூச்சல் தேவையற்றது. அதே சமயத்தில் உதயகுமார் அச்சம் ஆயிரம் அர்த்தம் பொதிந்தது! இதற்கான பொறுப்புகளை அரசுகள் தட்டிக்கழித்து விடமுடியாது! இது சேவை என்கிற தளத்தில் இருந்து வர்த்தகம் என்கிற தளத்திற்கு சென்றுவிட்டது! அதன் லாபத்திற்கு அரசுகள் துணைபோவதுதான் தற்போதைய சோகம்!
------\\\\\\
உதயகுமார் சொன்னது நச்!
இன்று 5.1.16 PTTV புதுப்புது அர்த்தங்களில் சுமன் பேசும்போது, அடித்து நொறுக்கு ன்னு கோவன் பாட்டு ஏற்க முடியாது என்கிறார். அது தேச துரோகம் வழக்கு போடுவாங்கலாம்! அது வன்முறையை தூண்டற மாதிரி இருக்காம்! அதுசரி, அடறா அவள ஒதடா அவள கொல்றா அவள ன்னு பாட்டு எழுதுனா, பாடுனா அவங்கள ஏன் தேசதுரோக வழக்கு போடல? அப்படி என்றால், பாரதி, பாரதிதாசன் எல்லோரையும் போட வேண்டியதுதான் என்று உதயகுமார் சொன்னது நச்!
----\\\\
பாதுகாப்பு துறையில் உள்ள தோல்வியையே!
பதன் கோட் (டை) விமானத் தளத்தில் பாதுகாப்பில் ஓட்டை இருந்திருக்கிறது என்றால், "வீரர்கள் மரணத்தைக் கொச்சைப் படுத்துவது" என்பது எங்கே வருகிறது? என்னமோ பாஜக தான் தேசத்தின் ஒட்டு மொத்த மனசாட்சி போல் அலருவதுதான் அசிங்கமாக இருக்கிறது!
ஸ்பைடர் மேன் மாதிரி திக் விஜயம் பிரதமர் பாகிஸ்தான் பேய் வந்த, பத்து பதினைந்து நாட்களுக்குள் இந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பதன் கோட் விமானத் தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடக்கிறது ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் அமெக்காவின் பென்டகனை தாக்கியதுபோல்! இந்நேரம் ராணுவ மந்திரி ராஜினாமா செய்திருக்க வேண்டும்!
பதன் கோட் விமானத் தளத்தின் மீதான தீவிரவாதிகள் தாக்குதலுக்கு மோடி அரசு பொறுப்பேற்பதை விட்டு விட்டு, எதிர்கட்சிகள் மீது "ராணுவ வீரர்கள் தியாகத்தை கொச்சப்படுத்து" என குற்றம் சுமத்தி புலம்புவது, மோடி அரசின் பாதுகாப்பு துறையில் உள்ள தோல்வியையே காட்டுகிறது!
இன்று 5.1.16 PTTV மக்கள் மேடை!
----\\\\
கண்துடைப்பும்கூட!
மக்கள் நலக் கூட்டணி கடந்த 30 ந் தேதியே இதே கோரிக்கையை (விசாரணை ஆணையம்) முன் வைத்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டது. காப்பி அடிப்பதே கலைஞரின் வாடிக்கை ஆகிவிட்டது!
வேடிக்கை என்ன என்றால் பேரிடர் காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி படுத்தாத திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவது அபத்தமும் அரசியலும் மட்டுமல்ல, கண்துடைப்பும்கூட!
நீதிவிசாரணை முறையாக விருப்பு வெறுப்பு இன்றி நடந்தால், நிச்சயம் பயன் தரும்! தற்போதைய அரசின் செயலற்றத் தன்மை வெளிப்படும்! அதோடு ஆக்கிரமிப்புகளுக்கு நியாயமான தீர்வும், ஏழை எளிய மக்களுக்கு உரிய பாதுகாப்பும் ஏற்படும்!
இன்று 5.1.16 PTTV நேர்படபேசு!
-----\\\\
"வியாபாரக் காந்தம்"
வேட்டி தினம், புடவை தினம் எல்லாம் கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா? அவரவர்களுக்கு வசதிக்கு தகுந்த மாதிரி உடை உடுத்திக் கொள்கிறார்கள்! அதுக்கு எதுக்கு இந்த "பில்டப்!" எல்லாம் "வியாபாரக் காந்தம்" என்றால் கோபித்துக் கொள்வீர்கள் அல்லவா? இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லையே!
உலக அங்கீகாரம் கிடைத்து என்ன செய்வது? அண்டை மாநிலம் கேரளாவில் வேட்டி அணிவதற்கும், தமிழனின் அடையாளம் என பெருமை பாடும்... இங்கே வேட்டி அணிவதற்கும் ஏதாவது சம்மதம் உண்டா தோழரே? வட இந்தியாவில் வேட்டி அணிந்து சென்ற போது, பல சமயங்களில் "நீங்கள் மலையாளியா" என்று என்னை பார்த்து கேட்டவர்கள்தான் அதிகம்! மதராஸா என்று கேட்ட பாவி யாரும் இல்லையே!
----\\\\
மன உறுதியை பாதிக்கும்!
தேர்தலும், தேர்வுகளும் ஒரே நேரத்தில் வருவதால், உறுதியாக மாணவ-மாணவிகளின் மன உறுதியை பாதிக்கும்! ஆகையால் தேர்வு தேதிகளில் மாறுதல் அவசியமே! கனமழையாலும், தேர்தல் மழையாலும் பாதிப்பு என்னவோ மாணவ-மாணவிகளுக்குத்தான் போலும்!
இன்று 6.1.16 PTTV நேர்படபேசு! இது முழுவதும் பதிவேற்றமாகி உள்ளது!
----\\\\
மிருக குணம் படைத்தச் சட்டமே அது!
பேரறிவாளன் உள்ளிட்ட நால்வர் வழக்கில்... விடுதலை செய்ய அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கா? இல்லையா? என்பதைவிட ஒரு குறிப்பிட வருடத்திற்கு மேல் அனைவரையும் விடுதலை செய்திடும் சட்டம் இயற்ற வேண்டும்!
இன்னொரு முறை மனிதன் மனிதனாக நிச்சயம் பிறக்கப் போவதில்லை; சந்தர்ப்ப சூழ்நிலையால் மனிதன் தவறிழைத்து விட்டால், அவனை தூக்கில் போடுவதும், சாகும்வரை சிறையிலேயே சாகடிப்பதும், மிருக குணம் படைத்தச் சட்டமே அது! அதை மனித முகம்-குணம் கொண்ட சட்டமாக மாற்றிடல் வேண்டும்.
இன்று 6.1.16 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றமாகி உள்ளது!
----\\\\
இது எளியோனின் அன்பு எச்சரிக்கை!
😈😈😈
"சேலமே குரல் கொடு!" என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் "தொண்டு(?!)" சேலம் மக்கள் அறிவர்! அந்த அமைப்பின் நிறுவனர் ஃபீயூஸ் யார்? அவரின் நோக்கம் என்ன? அவர் உண்மை சொரூபமென்ன? என்று தெரிந்துதான் நடிகர் கார்த்தி வந்தாரா? அவரின் அகரமும், புதிய தலைமுறை டிவி மற்றும் இந்து குழுமமும் "எல்லாம் தெரிந்துதான்" கைக்கோர்க்கின்றனவா?
சீன பழமொழி ஒன்று உண்டு... ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவரின் நண்பன் யார்? என்று தெரிந்துக் கொண்டால் போதும் என்பதே அது! அந்த பழமொழி போல் இன்றைய 7.1.16 நடிகர் கார்த்தியின் விஜயம் ஆகிவிடுமோ? என்பது கவலையாக இருக்கிறது!
இந்த ஃபியூஸ் ஆல் "ஃப்யூஸ்" போனது எவ்வளவு? அவரின் மர்ம வாழ்க்கையை அறிந்துதான் வந்தாரா நடிகர் கார்த்தி? ஊடகங்களுக்கு (PTTV, The Hindu) இதெல்லாம் "செய்தி!" நடிகர் கார்த்திக்கும் அப்படிதானா? "நீர்..!" வருத்தப்படும் காலம் தொலைவில் இல்லை கார்த்தி அவர்களே..! இது எளியோனின் அன்பு எச்சரிக்கை!
-----\\\\\
இதொரு வருத்தம் தோய்ந்த பதிவே!
🐒🐎🐘
நானும் சிறு வயது முதல் ஏறக்குறைய அரை நூற்றாண்டு வரை எங்கள் சொந்த ஊரில் வருடா வருடம் நடக்கும் "எருதாட்டம்" எனப்படும் விழாவில் ஒரு நரி யுடன், ஏராளமான இளம் மாடுகளுடன்... நரி மற்றும் மாடுகளின் கழுத்தில் மிக நீண்ட வடகயிறு கட்டி, கூக்குரலிட்டு இரு புறமும் ஏராளமான இளைஞர்கள் ஓடுவார்கள் குறிப்பிட்ட திசையை நோக்கி!
மாடும், நரி மிரண்டு தலைதெறிக்க ஓடும்! இதிலே நான் குறிப்பிட விரும்புவது, மருந்துக்கூட இதில் அந்த ஊரில் வசிக்கும் ஊரிந்த தலித் எனப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள் வடம் பிடிப்பதில்லை! (சமீப சில ஆண்டுகளாக நான் பணி சுமை நிமித்தமாக போவதில்லை)
தமிழனின் எந்த திரு விழாவிலும் "சமத்துவம்" இருக்கிறதென்பது "பொதுவிதி" அல்ல! எங்காவது ஏதாவது ஒரு மூலையில் "சமத்துவ சல்லிக்கட்டு" அரிதினும் அரிதாக இருக்கலாம்; அவ்வளவே..! தாழ்த்தப்பட்டவர்கள் விவசாயிகளாக இருப்பவர் சிலர்,
அவர்களது காட்டில் (தோட்டம்) மாட்டுப்பொங்கல் வைத்து கொள்வார்கள்; தாழ்ப்பட்டவர்கள் அல்லாதவர்கள் அதில் கலந்திட மாட்டார்கள்! ஆகவே சமத்துவம் திருவிழாவில் இருக்கிறது என்பது "சும்மா!" இதொரு வருத்தம் தோய்ந்த பதிவே!
(முக நூல் நண்பர் ஒருவரின் பதிவுக்கு...\\ சமத்துவம் சிலது தவிர பலது நிலவுகிறது \\ பதில் பதிவு!)
-----\\\\
நெகிழ்வு! அருமை!
இன்று 8.1.16 PTTV புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சி... 3 நிறைகுடங்கள் (பேராசிரியர்கள் அருணன், சுபவீ., மற்றும் ஜென்ராம்) விவாதித்தன...
மக்கள் நல கூட்டணி, திராவிட இயக்கம் சிறப்புமிகு பங்களிப்பு, இடதுசாரிகளின் அர்ப்பணிப்பு என விவாதம் உண்மையிலேயே அர்த்தம் உள்ளதாக, பயனுள்ளதாக அமைந்து விட்டத்தில், இதுவும் ஒன்று!
மார்க்சீயவாதிகள் "விஞ்ஞான நாத்தீகவாதிகள்" என்பதை, நாராயண குரு விழாவில் யெச்சூரி கலந்து கொண்டது குறித்த விவாதத்தில்...
வள்ளலார், வைகுண்டசாமி ஆகியோர் போல் ஆன்மீக வழியில் "சமூக சமநிலைக்கு" குரல் எழுப்பியவர் நாராயண குருவும் என அவரது பங்களிப்பைக் குறிப்பிட்டு அருணன் அவர்கள் அருமையாக அடுக்கினார்.
யெச்சூரின் "நாராயண குரு விழா" பேச்சை சுபவீ., அவர்கள் வெகுவாக சிலாகித்து ஆதரித்து பேசியது... நெகிழ்வு! அருமை! பெருமைக்குரியது! மகிழ்வு! நன்றி!
----\\\\
"பாஜக என்ன அரசியலுக்காக இருக்கிறது?"
🐫🐘🐛
இம்..! ஒருவழியாக "ஒரு அரசியல் ஜல்லிக்கட்டு", 'அரசியல் ஆக்காதீர்; அரசியல் ஆக்காதீர்' என ஒரு மாதமாக கூவிய பாஜகவும் பொன்னாரும் நடத்திய நாடகம் முடிவுக்கு வந்துள்ளது!
ஆனால் ஒன்று...
ஏன் இதற்கு சட்ட வடிவம் கொடுக்கும் உருப்படியான நடவடிக்கையை எடுக்காமல், (மக்களவையில்...
மந்திரி சபையில்... முடிவெடுக்காமல்) இப்படி ஒரு அறிவிக்கை மூலம் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது? இதுபோல் இமாலய கேள்விகள் உண்டு!
அடுத்து "அந்த மிருக வதை தடுப்பு ஆணையமும், மிருகவதை தடுப்பாளர்களும்" இனி என்ன செய்யப் போகிறார்கள்? குச்சி ஐஸ் வாங்கி சாப்பிடுவார்களா? ஆம், உச்சநீதி மன்றமும் தான்!
உச்சநீதி மன்ற உத்தரவை ஒரே ஒரு மந்திரியின் அறிவிக்கையால், அதற்கு அணை கட்டும் "ஆணை" பிறப்பிக்க முடியும் என்றால், பேரறிவாளன் வழக்கு விசியத்திலும் முடியும் அல்லவா?அதையும் பொன்னாரும், பாஜகவும் செய்து விட்டீர்களென்றால், தமிழகத்தின் அடுத்த சட்டபேரவை தேர்தலில் பொன்னார் தான் முதல்வர்! செய்வீர்களா?
இதை எல்லாம் யாராவது எதிர்கட்சிகாரர்கள் "அரசியல் அரசியல் என்பார்கள் முட்டாள் தனமாக!" பாஜக என்ன அரசியலுக்காக இருக்கிறது? இல்லவே! அவர்கள் சொல்லிவிட்டு போகிறார்கள் "அரசியல் வாதிகள்!"
அடஅடா... இன்னொன்று முக்கியமானது... மறந்தே போய்விட்டது! ஆம், அதுதான் சேதுசமுத்திரக் கால்வாய் திட்டம்! அதன்மீதும் தங்களின் கடைக்கண் காட்டுங்கள்! இதெல்லாம் அரசியல் கிடையாது; ஆனால் நீங்கள் தமிழகத்தில் ஆட்சியை பிடித்திடலாம் ஈஸியாக! செய்வீர்களா?
----\\\\
🔨 ஆடாதே! ஆடாதே! அன்புமணியே! 🔨
"கம்யூனிஸ்கள் தமிழ்நாடு முழுவதும் வாங்கிய ஓட்டுகள் மொத்தமே 4 லட்சம் தான்! நான் என் தொகுதி தர்மபுரியில் மட்டும் வாங்கிய ஓட்டு 4 லட்சத்திற்கும் மேலே..!"
இப்படி தனது திருவாய் திறந்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ்!
மத்திய அமைச்சராக இருந்தபோது சுகாதார துறையில் அடித்த கொள்ளைக்கு தலைக்குமேல கத்தி தொங்கி கொண்டு இருக்கிறது. இவர் பேசுகிறார் இவ்வாறு புளிப்பாக! ஆம், வாய் புளித்ததா? மாங்காய் புளித்ததா? என்று தெரியாமல்! முதலில் இவர் திண்டிவனத்தில் நின்று டெப்பாசிட் வாங்கிடட்டும் பார்க்கலாம்!
தலித் மாணவன் இளவரசன் உயிரை குடித்து, அவன் பிணத்தின் மீது நின்று பெற்ற ஒரு வெற்றியா? இந்த பீத்த வெற்றியை கம்யூனிஸ்ட்கள் அழிந்தே போனாலும் விரும்பவோ, பெறவோ மாட்டார்கள்! பிரதமர் பதவி தேடி வந்தபோது, வேண்டாமென்று வீறுநடை போட்டவர்கள் கம்யூனிஸ்ட்கள்!
மக்களை சந்திக்காமல், புறவழியில் போய் சுகாதாரத்துறையை அசுத்தம் செய்தவர்கள் அல்ல கம்யூனிஸ்ட்கள்! சாதிவெறியை மதவெறியை தூண்டி அதில் ருசி பார்க்கும் ஈனப்புத்திக் காரர்கள் அல்ல கம்யூனிஸ்ட்கள்! ஓட்டுக்காக வீட்டிற்கோ, நாட்டிற்கோ நெருப்பு வைப்பவர்கள் அல்ல கம்யூனிஸ்ட்கள்! நாவடக்கம் வேண்டும் முதல்வர் கனவில் பேய் பிடித்தாடும் அன்புமணிக்கு!
கோடிகால் பூதம் கம்யூனிஸ்ட்கள் ஜாக்கிறதை! சட்டமன்ற தேர்தலுக்கு பின் சுண்டல் விற்க போகிறாயோ..! திகார் ஜெயிலில் கம்பி எண்ண போகிறீரோ..! தெரியவில்லை! அதற்குள் எதற்கு இந்த அருங்கூத்தெல்லாம்..!? ஆடாதே! ஆடாதே! அன்புமணியே!
-----\\\\
இது கூட நட்பு!
நா.கோவிந்தன்... வேலுபிள்ளை பிரபாகரன் ஆதரவு (தமிழன் என்கிற வகையில்) பாஜக ஆதரவு உள்ளவர்போல் தெரிகிறது!
(இதே சிம்பு-அனிரூத் பீப் பாடல் விவகாரத்தில்... தமிழர் விடுதலை கழகம் செருப்பால் அடிக்கும் போராட்டத்திற்கு பெரியாரை யார் செருப்பால் அடிக்கிறது என கேட்டு உள்ளார்; இது
பாஜக எச்.ராஜா குரல்; இன்று 8.1.16 ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி கிடைத்தற்கு பொன்னாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்!)
இவர் குடியிருப்பு ஊர் சென்னை அம்பத்தூர் என பதிவிட்டு, நல்லாம்பட்டி நா.கோவிந்தன் பெயரில் விலாசம் பதிந்துள்ளார்! என்னிடம் 'நட்பு' கேட்டு, என்றோ அதை காத்திருப்பில் போட்டுள்ளேன்.
தோழர் வாசுகி அவர்கள், சிம்பு மன்னிப்பு கேட்டால், வழக்கு வாபஸ் பெறுவோம் என்றதை... இவ யாரு, இவ பல குடும்பத்த பிரித்தவ, அதுக்கு இவ மன்னிப்பு கேட்பாளா? "அவ இவ" என "ஏகவசனம்" பதிவு செய்து உள்ளார்! ஆக, "தமிழன், இந்துத்துவன்" என்கிற வகையில் (இரண்டுமே நேர் எதிரானது) இவரது நட்பு வட்டம் இருக்கு; இது கூட நட்பு!
அதன் விளைவு இப்படியான... பெண்மையை இகழும் மைன்செட் இவரிடம் தற்போது உள்ளது. ஆக இவர் இப்படி பதிவு போடுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை!
"கள்ளு குடித்தவன் ஏப்பம் விட்டால், புளித்த நாத்தமே வரும்; சென்ட் வாசணை வராதல்லவா? அது போலத்தான் இவருக்கும்! சிம்பு-அனிரூத் மறுபதிப்பு இவரும்! அவர்கள் மீது முற்போக்கு உலகம், பெண்விடுதலை இயக்கம் வைக்கும் அத்தனை விமர்சனமும் இவருக்கும் பொருந்தும்! அவ்வளவே!"
----\\\\
களத்தில் நிற்கும் முதல் வெற்றிக் கூட்டணி!
இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் தலைவர், தலைவி களை முன்நிறுத்தியே செயல்படுவதால்தான் இதுமாதிரி முடிவுகள் எடுக்கின்றன; இதற்கு தேமுதிக மட்டும் விதிவிலக்கா?
அதுசரி, இவர்கள் எல்லாம் இதுவரை கட்சியில் அதிகாரம் இல்லாமல், டம்மி யாகத்தான் இருந்தார்களா? அல்லது இருப்பார்களா? இதெல்லாம் ஜனநாயக நடைமுறையா? செயல்முறையா? கட்சிக்குள் ஜனநாயக நடைமுறையை கடைப்பிடிக்காத இவர்களா நாட்டின் ஜனநாயக உரிமையை காக்கப் போகிறார்கள்?
யாருடன் யார்? என்றால்... மக்கள் நலக் கூட்டணி தான் உறுதியான ஒன்று! இதுதான் செயல்திட்டம் அறிவித்து, அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக கட்சிகளுக்கு இக்கூட்டணியில் இடம் இல்லை எனவும் அறிவித்து, களத்தில் நிற்கும் முதல் வெற்றிக் கூட்டணி!
இன்று 9.1.16 PTTV நேர்படபேசு! இதன் ஒருபகுதி பதிவேற்றமாகி உள்ளது!
----\\\\
நன்றி நன்றி நன்றி!
இன்று 10.1.16 PTTV புதுப்புது அர்த்தங்களில் மார்க்சிஸ்ட் கண்ணன், பானுகோம்ஸ், ஜென்ராம்... பல்வேறு விசயங்கள் பரிமாறிக் கொண்டனர்! முக்கியமான ஒன்றுக்கு... அதுதான் பிரதான விவாதம்... கட்சிகள் எல்லாம் பொதுக்குழு, செயற்குழு என கூடி தலைவருக்கு அதிகாரம் கொடுத்துவிட்டு, உள்கட்சி சனநாயகம் இல்லாமல், தலைமையை கேள்வி கேட்க முடியாமல் இருக்கின்றன இடதுசாரிகள் உள்ளிட்டு என்ற குற்றச்சாட்டுக்கு...
ஒரே வார்த்தையில் நச் என பதில் அளித்தார் பாருங்கள்... நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை... போட்டார் பாருங்கள் ஒரு போடு... "அப்படி என்றால் ஜோதிபாசு பிரதமர் ஆகி இருக்க வேண்டும்" என்று! அதற்குமேல் அரங்கில் பேச்சு மூச்சே இல்லை போங்கள்! நன்று தோழர் கண்ணன்! சூப்பர்! இடதுசாரிகளின் தனிதன்மையை எடுத்தக்காட்ட அந்த சூழலை நோக்கிய விவாதத்தை நகர்த்திய ஜென்ராம் பாங்கும், அதற்கான ஒரு இடத்தை தர காரணமாக இருந்த பானுகோம்ஸ் க்கும் நன்றி நன்றி நன்றி!
----\\\\
தமிழக முதல்வர் தனது சொத்துக்களை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் இவிகேஎஸ்இ., கேட்கிறார்... அய்யா, அம்மாதான் "என் உள்ளமும் இல்லமும் தமிழகம்" ன்னு சொன்னாரே புரியலையா உங்களுக்கு? தமிழகமே அவர் இல்லமாம்...! அவரா சொத்தை ஏழைகளுக்கு வழங்க போகிறார்? தமிழகத்தில் ஏதாவது மிச்சம் மீதி வைத்துவிட்டு போவாரான்னு பாருங்கள்! கேளுங்கள்!
----\\\\
எடப்பாடி வட்டார 10,000 விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம் வெற்றி!
🙆🙏🙌
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக நடந்து வந்த சுமார் 10,000 விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. இன்று 10.1.16 சங்ககிரி கோட்டாட்சியர் முன்னிலையில் ஒப்பந்தம் ஏற்பட்டது!
ஒப்பந்தம் வருமாறு: "...எடப்பாடி வட்டார விசைத்தறி மற்றும்ஜவுளி உற்பத்தியாளர்கள் இடையே ஏற்ப்பட்ட கூலி நிர்ணய ஒப்பந்தம் 2013 யை 2015-2016 ஆண்டிற்கு ஏற்படுத்தப்பட்ட 21.10.2015 முதல் 20.10.2016 முடிய உள்ள காலத்திற்கு பதிலாக எதிர்வரும் 01.03.2016 முதல் 20.10.2016 முடிய உள்ள காலத்திற்கு நடைமுறைப்படுத்தி உத்திரவிடப் படுகிறது"
இந்த ஒப்பந்தம் மற்றும் ஆர்டிஓ உத்தரவுபடி நாளை முதல் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புகிறார்கள் என விசைத்தறி சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கே.வீராசாமி, வட்டார சங்க தலைவர்கள் மாதேஷ்வரன், சின்னத்தம்பி ஆகியோர் தெரிவித்தனர்!
இதில் ஒற்றுமையுடன் கலந்துக் கொண்ட தொழிலாளர்களுக்கும், சுமூக உடன்பாடு காண உதவி அரசு அதிகாரிகளுக்கும், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
Kannan Chennai: Thanks com. P T
-----\\\\
ஆர்எஸ்எஸும், பாஜகவும்
"மதவாதத்தை இந்தியா உலகுக்கு அளிக்கவில்லை" என்கிறார் பிரதமர்! அதுசரி, மக்கள் யாரும் அப்படி சொல்லவில்லை!
மக்கள் சொல்வது என்றால்... "இந்தியாவுக்கும், உலகுக்கும் மதவாதத்தை அளிப்பது ஆர்எஸ்எஸும், பாஜகவும் இதன் துணை அமைப்புகளும்தான்!" என்று!
ஆம், "ஆன்மீகம்" என்கிற முகமூடி அணிந்து மதவாதத்தைத்தான் வெறித்தனமாக பரப்புகிறது RSS ம் BJP ம் என்பதுதான் மறைக்க முடியாத "மலை!" போன்றது! அதன்மூலம் அரசியல் ஆதாயம் அடைகிறது என்பதுதான் வரலாறும்!
----\\\
சொல்லு ராசா சொல்லு..!
"திமுக ஆட்சிக்கு வந்தால் சுகாதாரத் துறை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்" -திமுக முன்னாள் துணைமுதல் அமைச்சர் ஸ்டாலின்!
அட மவராசா... நீங்களும் துணைமுதல் அமைச்சராக இருந்தீங்க; உங்க அப்பா கலைஞர் கருணாநிதியும் ஐந்து முறை முதல் அமைச்சராக இருந்தாரு; அதுக்கு முன்னாடி அண்ணாதுரை அமைச்சரவையிலும் இருந்தாரு... அப்பெல்லாம் சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு ஏன் மேம்படுத்தப்படல? அதையும் கொஞ்சம் சேத்து சொல்லு ராசா சொல்லு..!
----\\\\
இன்று 11.1.16 PTTV புதுப்புது அர்த்தங்களில் தியாகு, கருணாநிதி (ஓய்வு காவல்), ஜென்ராம்...
"பிறவி திருடர்கள்" என்றுண்டா?
விவாதத்தில் ஓரிடம்... குற்றவாளிகள் சிறையில் திருந்திட முடிகிறதா? காவல்-சிறை துறைகளில் தேவையான சீர்திருத்தம் பற்றிய விவாதத்தில்... கருணாநிதி "பிறவி திருடர்கள்" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்; ஜென்ராம் தலையிட்டு அந்த வார்த்தையை திரும்ப பெற்றால் நன்றாக இருக்கும் என்கிறார்; அதற்கு அவர் எதேதோ சொல்கிறாரே ஒழிய, ஒரே வயிற்றில் பிறந்தவர்களில் நல்லவனும் உண்டு, கெட்டவனும் உண்டு என்று சமாளித்தாரே தவிர அந்த வார்த்தையை திரும்ப பெற முன் வரவே இல்லை!
இதுதான் இவரின் அல்லது நமது காவல்துறையின் குற்றவாளிகள் பற்றிய மதிப்பீடும், கருத்தும் என்றும், "குற்ற பரம்பரை" என்று ஒன்று இருப்பதாக சொல்லும் இந்துத்துவா-ஜாதிய சக்திகளின் குரலின் பதிவாகும் இது என்றும் எண்ணுவதற்கு இடமேற்படுத்தி சென்றார் கருணாநிதி!
----\\\\
"என்னடா நடக்குது இங்க...?!"
"பதான் கோட்டில் தாக்குதல் நடந்திருந்தாலும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்!" -பிரதமர் மோடி! (தி இந்து தமிழ் 11.1.16)
தற்போது பிரேக்கிங் நியூஸ்... (11.1.16 காலை 8.30 மணி)
"பாகிஸ்தான், இந்தியா இடையிலான வெளியுறவு செயலாளர்கள் பேச்சுவார்த்தை ரத்து!"
"என்னடா நடக்குது இங்க...?!"
----\\\\
ஏபி.பரதன் மறைவு! சேலத்தில் இரங்கல் ஊர்வலம்!
##
இன்று 3.1.16 ஞாயிறு மாலை 4 மணி சேலம் போஸ் மைதானத்தில் இரங்கல் ஊர்வலம் புறப்பட்டது. அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் இரங்கல் நிகழ்ச்சி கோட்டை மைதானத்தில் நடைபெற்றது!
##
சிபிஐ மாவட்டசெயலாளர் மோகன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் சிபிஐஎம் மாவட்டச் செயலாளர் பி.தங்கவேலு, திமுக மாநகர மாவட்ட செயலாளர் ராசேந்திரன், காங்கிரஸ் மாவட்டத்தலைவர் நாராயணன், தமாகா மாவட்ட தலைவர் சுசீந்திரக்குமார், மதிமுக மாநகர மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், விசிக மாவட்டச்செயலாளர் நாவரசு, சிபிஐஎம்எல் மோகனசுந்தரம், எஸ்யூசிஐசி மோகன், யூசிபிஐ மணி, சிபிஐ மாநில குழு உறுப்பினர் பரமசிவம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் துரைமாணிக்கம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து பேசினர்.
##
-----\\\\\









No comments:
Post a Comment